| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 361 online users. » 0 Member(s) | 359 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| வணக்கம்..... |
|
Posted by: kanavulakan - 11-05-2004, 04:15 PM - Forum: அறிமுகம்
- Replies (16)
|
 |
[size=18]தமிழில் சலசலத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தமிழில் அன்பான வணக்கம். நான் இலங்கையின் தலை நகரிலிருந்து ஈழதேச தமிழ் அன்பனாக உங்களுடன் இணைவதில் புளங்காகிதமடைகின்றேன்.என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துகொள்வீர்களென நம்புகின்றேன்
,நன்றி.-கனவுலகன்.
|
|
|
| ஏன் பூட்டினீர்கள்? |
|
Posted by: Nellaiyan - 11-05-2004, 03:51 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (34)
|
 |
மோகனுக்கு,
நான் எழுதிய தமிழ்நாதத்துக்கோர் மடல் பக்கத்தில் தங்களது பதில் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பின் அப்பக்கம் எழுத முடியாதவாறு மூடிவிட்டீர்கள். காரணம் புரியவில்லை!!!!!
நான் எழுதியதிலிருந்து
தாங்கள் தமிழ்த் தேசியத்திற்காக செய்துவரும் அப்பளுக்கற்ற சேவையின் மூலம் பயன் பெறும் புலம் பெயர் இலட்சோப ஈழத்தவர்களில் நானும் ஒருத்தன்.
இப்படி தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய ஊடகங்களை ஓர் குடையில் ஒண்றினைத்த இப்பெருந்தளத்தில்.............
நான் மேற்குறிப்பிட்டது போல் இவ்விணையத்தளம் மேல் அபிமானம் இருந்ததே தவிர தனிப்பட்ட்ட ரீதியில் எவ்வித வெறுப்புமில்லை.
முன்பொருதரம் நீங்கள் யாழ் களத்தில் எழுதியது போல் "இத்தளத்தில் கருத்தெழுத எவருக்கும் உரிமையுண்டு, அதற்கு மறுப்பறிக்கையோ விளக்கமோ சம்பத்தப் பட்டவர்களினால் வெளியிடப்படலாம்" இற்கு அமையவே எனது கருத்தை எழுதினேன். மாறாக ஒரு பொய்மையான கருத்தையோ அல்லது வேண்டுமென்று அவதூறுக் கருத்துக்களை எழுதவில்லை.
தமிழ்நாதமென்ன யாழ், தமிழ்நெற், .... போன்ற
எல்லாத் தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் பலனை எதிர்பாராது, ஓரிருவரின் கஸ்டப்பட்டு உழைத்த பணங்களிலேயே வந்து கொண்டிருப்பது எல்லோரும் அறிவர், நாம் அதற்கு நன்றி உடையோம்.
அதற்காக பிழைகள் நடை பெறும்போது அவற்றை சுட்டிக்காட்டத் தயங்கமாட்டோம். "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"
|
|
|
| தமிழ்நாதத்திற்கோர் மடல் |
|
Posted by: Nellaiyan - 11-04-2004, 09:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
அன்புடயீர்
தாங்கள் தமிழ்த் தேசியத்திற்காக செய்துவரும் அப்பளுக்கற்ற சேவையின் மூலம் பயன் பெறும் புலம் பெயர் இலட்சோப ஈழத்தவர்களில் நானும் ஒருத்தன்.
இப்படி தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய ஊடகங்களை ஓர் குடையில் ஒண்றினைத்த இப்பெருந்தளத்தில்.............ஈராக்கில் கடத்தப்பட்ட எம்மிரத்த உறவின் மீட்புக்கு குரல் கொடுக்கிறோம் எனக் கூறி மிகப் பெரும் ஒர் துரோக நாடகம் நடந்தேறி முடிந்துள்ளது. இந் நாடகம் முடிபுக்கு வந்துவிட்டாலும் எம்முள் எழும் சில கேள்விகளுக்கு உங்கள் மூலம் பதிலைத் தேடுகின்றேன்..........
1) முகமோ, முகவரியோ அற்ற அத்தளமானது, தமிழ்நாதமெனும் பெருந்தளத்தில் எப்படி இணைக்கப்பட்டது ?
2) இது உணர்வு, உணர்சிகளின் பால் நடைபெற்ற தவறா? இல்லை உள்வீட்டு சதியா?
3) இத்தளமானது டென்மார்க்கில் தமிழ்த்தேசியத்திற்கெதிராக செயற்படும் முன்னால் த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் சகோதரரின் மகனான ரவி குமாரதுரையினால் நடாத்தப் படுவதாக கூறப்படுகிறது. உங்கள் இணைய மூலம் பெற்ற செய்தியின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான எம்மவர்கள் அத்துரோகத் தளத்தினுள், எமது மின்னஞ்சல் முகவரியையும் பதிவு செய்தோம். இவை இத்துரோகக் கும்பக்களினால் எமது தேசியத்திற்கெதிராக மட்டுமல்ல, எமக்கெதிராகவும் பயன்படுத்தப் பட மாட்டார்களா?
தாங்கள் மேற் குறிப்பிட்ட தவறுகளுக்கு மன்னிப்புக் கோரும் அதேவேளை அவ்விணையத்தளம் சம்பந்தப்பட்ட சகல விபரங்களையும் சேகரித்து அத் துரோக, ஏமாற்றுக்கார, சதிகும்பல்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
<b>தமிழ், தமிழர், தமிழ்த்தேசியத்திற்காக வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திடும் இலட்சோப இலட்ச புலம் பெயர் ஈழ்த்தவர்களில் உணர்வுகள் மதிப்பளிக்கப்படல் வேண்டும்.</b>
|
|
|
| விடியலைத்தேடும் வெண்புறாக்கள் |
|
Posted by: V.T Tamileelathasan - 11-04-2004, 05:17 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
[b]விடியலைத்தேடும்
வெண்புறாக்கள்
அழகிய அந்தி
மேற்குவானில்
சிவப்பு சாயம்
தயாரிக்கப்படுமிடம்...!
தினமும்...
அந்திநேரம்
வருகிறது
போகிறது
அந்தநேரம்
நாங்கள்
விளையாடிக்கொண்டிருப்போம்..!
ஓடிப்பிடித்து
கிந்தியடித்து
கிளித்தட்டு மறித்து
கிட்டிப்புள்ளு அடித்து
நாங்கள்
விளையாடுவதில்லை..!?
நமக்குப் பிடித்த
ஓரே ஒரு விளையாட்டு
இயக்கமும் ஆமியும்...!!
விளையாட்டில் வெற்றிதோல்லி
கானுமுன்னமே
என்
அன்னையளைக்கும் குரல்கேட்கும்
"அம்மா" இன்னும் சொஞ்சநேரம்...?
கெஞ்சினாலும் விடமாட்டாள்..!
பாடம் சொல்லித்தர வேண்டுமாம்..!!!
அவள் தினமும் அப்படித்தான்
நின்மதியாய்
விளையாட விடமாட்டாள்
எனக்கு
அம்மாவை அதிகம் பிடிக்கும்
ஆனால்...
அடிக்கடி படிக்கச்சொன்னால்தான்
ஆத்திரம் வரும்....!
விளையாட்டைவிட
அப்படியென்ன படிப்பு வேண்டியிருக்கென்று
அப்போதெல்லாம் நான்
அழுவதுண்டு...!
இரவு எட்டுமணிவரை
அல்லது
இடையில் யாரும் வரும்வரை
அன்னையின்
பள்ளிப்பாட
வாழ்க்கைப்பட
வகுப்புகள் இடம்பெறும்..!
எட்டு மணிக்குப்பின்பு
கிட்ட இருக்கும்...
ஆழக்கடல்...
இசைக்க இசைக்க
முற்றத்து மல்லி
மணக்க மணக்க
ஆனந்தம் அலைமோத
நிலாச்சோறு..!
அதில்...
எத்தனை சுகம்..!
அடடா..
அலைகள் இசைபாட
மேகம் பனி தூவ
நிலவு விளக்கேற்ற
மணலில் கால்புதைத்து
உண்டு...
உறங்கிய நாட்கள்
இவை...
மீண்டும் வரவேண்டும்
ஒரு தடவை
கனவிலாவது..!!!
வே.த. தமிழீழதாசன்
03.11.2004 (பாரீஸ்)
|
|
|
| பலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் கோமாவில்...! |
|
Posted by: kuruvikal - 11-04-2004, 02:09 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40467000/jpg/_40467863_arafat_ap203body.jpg' border='0' alt='user posted image'>
bbc.com
பலஸ்தீன அதிபர் யசீர் அரபாத் இனந்தெரியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டு சுயநினைவிழந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது...!
யசீர் அரபாத்துக்கு வயது 75 என்பதும் இவர் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக இஸ்ரேலுக்கு எதிராக போராடி வந்த பலஸ்தீன விடுதலை இயக்கத் (PLO) தலைவராக பல காலம் மக்களுக்காய் வாழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது...!
-------------------------------------
<b>Arafat in coma at Paris hospital</b>
Palestinians are nervously waiting for news from Paris
Palestinian officials say Yasser Arafat is in a coma at the intensive care unit of the Paris hospital where he is being treated for an unexplained illness.
bbc.com
|
|
|
| புதிய தமிழ் தேடற்பொறி |
|
Posted by: kuruvikal - 11-04-2004, 12:04 PM - Forum: இணையம்
- Replies (14)
|
 |
[b]அண்ணா பல்கலையின் தமிழ் சர்ச் என்ஜின் 'கழுகு
இன்டர்நெட்டில் தமிழில் தகவல்களைத் தேடித் திரட்ட உதவும், புதிய தமிழ் சர்ச் என்ஜினை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
கழுகு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த என்ஜினை பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.
தமிழ் இணையத் தளங்களில் உள்ள தகவல்களைத் தேடி, திரட்டி, பட்டியலிடும் இந்த என்ஜின்.
பல்வேறு இணையத் தளங்கள் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை (Font) பயன்படுத்தி வரும் நிலையில், எல்லா வகையான தமிழ் எழுத்துருக்களையும் அடையாளம் காணும் திறன் கொண்டது இந்த கழுகு சர்ச் என்ஜின்.
இத் தகவலை கழுகு என்ஜினை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மொழியல் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் தகவல்களைத் தேடி, அதைத் தமிழில் மொழி பெயர்க்கும் நவீன சாப்ட்வேரையும் உருவாக்கியுள்ளனர்.
Trans-lingual information accessing tool என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர், பிற மொழிகளில் உள்ள மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கூடிய திறன் கொண்டது என இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் ஷோபா நாயர் தெரிவித்தார். :wink:
thatstamil.com
|
|
|
| அடித்தாலும் அணைப்போம் |
|
Posted by: Suji - 11-04-2004, 11:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் முஸ்லீம் மதத்தவர்கள் சொந்த மதத்தவர்களால் தம்வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியெற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் காத்தான்குடிக்கு அருகிலுள்ள ஆரையம்பதியில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் காத்தான்குடியை விட்டு வெளியேறி ஆரையம்பதிக்குச் சென்ற போது இவர்களை ஆரையம்பதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் வரவேற்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைத்துள்ளனர். அனைத்துத் தென்னிலங்கை முஸ்லீம் அரசியல் தலைமைகளினாலும் கைவிடப்பட்ட நிலையில் இவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் செய்து வருகிறது. அதேநேரம் இவர்களுக்குச் சமைத்த உணவு மற்றும் நீராகாரங்கள் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களால் வழங்கப்பட்டுள்ளது
|
|
|
| மலரிடம் ஒரு மடிப்பிச்சை...! |
|
Posted by: kuruvikal - 11-04-2004, 11:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (18)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>
மனது மயக்கிய
மாய மலரின் நினைவுகள்
மனதோடு தொடரலையாய்
மனக்குகை எங்கும்
மாலைநேரப் பூகம்பமாய்
மரண அதிர்வுகள்
மலைபோல் உறுதிகள் கொள்கைகள்
மறுகணமே மடிகின்றன...!
மலரது வந்து போன
மாயத் தடமெல்லாம்
மனதோடு பொறிக்கப்பட
மறுநாள் கடமை கூட மறந்து போகுது...!
மனதோடு நோயோ
மலரது கொண்டு வந்த வைரஸோ
மலரைத் தவிர
மனதோடு நினைவுகள் "டிலீட்" ஆகின்றன...!
மலரும் நினைவுகள் தந்து
மனதோடு கட்டிவிட்டு
தான் மட்டும் சுதந்திரமாய் சுத்துது
மனது கலங்கி குருவி இயங்குது
மரணம் கூட வருத்துமோ இந்தளவு
மரணித்தும் பார்க்க முடியவில்லை
மலருக்காய் கட்டிய மாளிகை - கூடவே
மாண்டிடுமோ வருத்தம் தான்...!
மாந்தோப்பு அழகு கூட அருவருப்பாய்
மதிய உணவு கூட
மறதிக்குள் மணக்குது
மாயமாய் சுற்றும் மலரே
மயக்கமாய் வருகுது
மடிதாராயோ மயக்கத்திலாவது
மனது சொல்லிட....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
|
|
|
|