![]() |
|
தமிழ்நாதத்திற்கோர் மடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ்நாதத்திற்கோர் மடல் (/showthread.php?tid=6500) |
தமிழ்நாதத்திற்கோர் மடல் - Nellaiyan - 11-04-2004 அன்புடயீர் தாங்கள் தமிழ்த் தேசியத்திற்காக செய்துவரும் அப்பளுக்கற்ற சேவையின் மூலம் பயன் பெறும் புலம் பெயர் இலட்சோப ஈழத்தவர்களில் நானும் ஒருத்தன். இப்படி தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய ஊடகங்களை ஓர் குடையில் ஒண்றினைத்த இப்பெருந்தளத்தில்.............ஈராக்கில் கடத்தப்பட்ட எம்மிரத்த உறவின் மீட்புக்கு குரல் கொடுக்கிறோம் எனக் கூறி மிகப் பெரும் ஒர் துரோக நாடகம் நடந்தேறி முடிந்துள்ளது. இந் நாடகம் முடிபுக்கு வந்துவிட்டாலும் எம்முள் எழும் சில கேள்விகளுக்கு உங்கள் மூலம் பதிலைத் தேடுகின்றேன்.......... 1) முகமோ, முகவரியோ அற்ற அத்தளமானது, தமிழ்நாதமெனும் பெருந்தளத்தில் எப்படி இணைக்கப்பட்டது ? 2) இது உணர்வு, உணர்சிகளின் பால் நடைபெற்ற தவறா? இல்லை உள்வீட்டு சதியா? 3) இத்தளமானது டென்மார்க்கில் தமிழ்த்தேசியத்திற்கெதிராக செயற்படும் முன்னால் த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் சகோதரரின் மகனான ரவி குமாரதுரையினால் நடாத்தப் படுவதாக கூறப்படுகிறது. உங்கள் இணைய மூலம் பெற்ற செய்தியின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான எம்மவர்கள் அத்துரோகத் தளத்தினுள், எமது மின்னஞ்சல் முகவரியையும் பதிவு செய்தோம். இவை இத்துரோகக் கும்பக்களினால் எமது தேசியத்திற்கெதிராக மட்டுமல்ல, எமக்கெதிராகவும் பயன்படுத்தப் பட மாட்டார்களா? தாங்கள் மேற் குறிப்பிட்ட தவறுகளுக்கு மன்னிப்புக் கோரும் அதேவேளை அவ்விணையத்தளம் சம்பந்தப்பட்ட சகல விபரங்களையும் சேகரித்து அத் துரோக, ஏமாற்றுக்கார, சதிகும்பல்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். <b>தமிழ், தமிழர், தமிழ்த்தேசியத்திற்காக வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திடும் இலட்சோப இலட்ச புலம் பெயர் ஈழ்த்தவர்களில் உணர்வுகள் மதிப்பளிக்கப்படல் வேண்டும்.</b> - srilanka - 11-04-2004 தமிழ் நாதம் தவறுக்கு மன்னிப்பு கேட்கனும் பாருங்கோ அதே நேரம் இந்த தமிழ் நாதம் தமிழ் தேசிய ஆதரவு இனையம் ஒன்டும் இவர் தனது தளத்திலை போடமாட்டார் பாருங்கோ இவர் ஒரு சுயநலவாதி முடிந்தால் தமிழ் தேசிய ஊடகங்களை இனைக்கட்டும் பாப்பம் கழத்திலை? இன்றும் பாருங்கோ பல சிங்களவர்களுடைய ஆங்கில ஊடகங்களுக்கு இனைப்பு கொடுத்திருக்கிறார். லங்கா ருத லங்கா பேஐ; த அக்கடமிக் கோ 2 லங்கா இதக்கு எல்லாம் லிங் குடுத்திருக்கு நீங்கள் சொல்லுறியள் தமிழ் தேசிய ஊகத்தின் குடை என்டு? - yarlmohan - 11-04-2004 <b>Nellaiyan</b>, <b>srilanka</b>, தமிழ்நாதம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பது அளவுக்கதிகமான ஒன்றாகவே உள்ளது. அடுத்தது சுயநலவாதி என்று சிறீலங்கா சொல்வதும் நன்றல்ல. பலத்த சிரமத்தின் மத்தியில் எதுவித எதிர்பார்ப்புக்களும் இல்லாது அத்தளத்தினை நடாத்தி வருகின்றார்கள். உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடுகள் இருந்தால் நேரடியாக அவர்களுக்கே அனுப்பி வையுங்கள். மோகன் |