![]() |
|
புதிய தமிழ் தேடற்பொறி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: புதிய தமிழ் தேடற்பொறி (/showthread.php?tid=6505) |
புதிய தமிழ் தேடற்பொறி - kuruvikal - 11-04-2004 [b]அண்ணா பல்கலையின் தமிழ் சர்ச் என்ஜின் 'கழுகு இன்டர்நெட்டில் தமிழில் தகவல்களைத் தேடித் திரட்ட உதவும், புதிய தமிழ் சர்ச் என்ஜினை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கழுகு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த என்ஜினை பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. தமிழ் இணையத் தளங்களில் உள்ள தகவல்களைத் தேடி, திரட்டி, பட்டியலிடும் இந்த என்ஜின். பல்வேறு இணையத் தளங்கள் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை (Font) பயன்படுத்தி வரும் நிலையில், எல்லா வகையான தமிழ் எழுத்துருக்களையும் அடையாளம் காணும் திறன் கொண்டது இந்த கழுகு சர்ச் என்ஜின். இத் தகவலை கழுகு என்ஜினை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான எஸ்.பாஸ்கர் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மொழியல் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் தகவல்களைத் தேடி, அதைத் தமிழில் மொழி பெயர்க்கும் நவீன சாப்ட்வேரையும் உருவாக்கியுள்ளனர். Trans-lingual information accessing tool என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர், பிற மொழிகளில் உள்ள மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கூடிய திறன் கொண்டது என இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் ஷோபா நாயர் தெரிவித்தார். :wink: thatstamil.com - yarl - 11-04-2004 எல்லாம் சொல்கிறாா்கள்.ஒன்றையும் கண்ணில் காட்டுகிறாா்களில்லையே.. - tamilini - 11-04-2004 தகவலுக்கு நன்றிகள் குருவி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kanani - 11-04-2004 இது பொதுமக்கள் பாவனைக்கா? அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தினருக்கா? இணைப்பு இல்லையா? - kuruvikal - 11-04-2004 பொறுங்கோ அவசரப்படாதேங்கோ மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே...! என்ன எனி மாநிலம் கடந்த திருமணங்கள் அதிகமாகப் போகுது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-04-2004 [quote=kuruvikal]பொறுங்கோ அவசரப்படாதேங்கோ மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே...! என்ன எனி மாநிலம் கடந்த திருமணங்கள் அதிகமாகப் போகுது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-04-2004 தகவலுக்கு நன்றி - kavithan - 11-04-2004 தகவலுக்கு நன்றி.... அப்ப எல்லா இடத்திலும் தேடலாமா.. - kuruvikal - 11-05-2004 நிச்சயமா....உங்கட அவசரத்தக் கண்டுதான் லிங் போடாமல் விட்டுட்டாங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- kavithan - 11-05-2004 நாங்கள் உடைச்சிடுவம் எண்டு பயந்திட்டாங்களோ என்னவோ.... - Sriramanan - 11-07-2004 Quote:நாங்கள் உடைச்சிடுவம் எண்டு பயந்திட்டாங்களோ என்னவோ....என்ன கவிதன் அதைக் கூட விட்டு வைக்க மாட்டீங்கள் போல கிடக்குது. தமிழின் முதல் தேடற்பொறி எண்டதுக்காக அதை மாத்திரம் பிளீஸ் விட்டு வையுங்கோ! உங்களுக்கு எதையாவது உடைக்க வேணும் எண்டு தோன்றினால் கூகிள், யாகூ அல்றாவிஸ்ரா எண்டெல்லாம் நிறைய இருக்கு
- Mathan - 04-23-2005 முத்துக்குளிக்க வாரீகளா? கூகுளித்து முத்தெடுத்திருப்பீர்கள்.இது வேறு...உள்ளதை வைத்து தமிழில் புதிதாக ஒரு மாபெரும் தேடி இயந்திரம் உருவாக்கியுள்ளேன். இந்த தொழில் நுட்பத்தை பாவித்து இனி தள நிர்வாகிகள்கூட தமது தளத்துக்கு ஒரு தேடியை உருவாக்கலாம். இந்தப் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக (Favorit)ஆக்கிக்கொள்ளுங்கள்.செய்திகளாகவிருந்தாலென்ன இலக்கிய அரசயல் கூற்றாகவிருந்தாலென்ன தேடி அறிந்துகொள்ள மிகவும் உதவும்.. இதன் தொடுப்பு இங்கே http://www.suratha.com/search.htm இனிமேல் இணையத்தில் தமிழ்த்தேடிஎன்பது புதிதாக தேவையில்லை என்பது தமிழிணையத்தின் பயணரான, பயனரான எனது அனுபவத்தில் உள்ள உண்மை. எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல் தமிழில் மிக முக்கியமாக உடனடியாகத் தேவைப்படும் செயலியான எழுத்து உணர்ந்து பேசும் செயலியொன்றை தயாரித்துவெளியிட்டேயார்களானால் விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும். நன்றி - சுரதா அண்ணா - tamilini - 04-23-2005 ஆகா கழுகு வாறதுக்கு முதல் யாழ் தேவி வந்திட்டா. தகவலுக்கு நன்றி மதன் சுரதா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். நல்ல நல்ல விடயங்களை வாரி வழங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 04-24-2005 நன்றி மதன்.. சுரதா அண்ணா வாழ்த்தும் நன்றிகளும் யாழ்தேவி தமிழ்தேடுபொறி சுரதாவின் மற்றுமொரு தமிழ்மென்பொருள் - வியாசன் - 04-25-2005 சுரதா இணையம் யாழ்தேவி என்னும் தமிழ்தேடுபொறியை(Beta) அறிமுகம்செய்துள்ளது அதில் ஆங்கிலத்திலும் தேடுதல் செய்யலாம் இந்த இணைப்பில் சென்று பாருங்கள் http://www.suratha.com/search.htm |