![]() |
|
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்-புதுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்-புதுவை (/showthread.php?tid=6527) |
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்-புதுவை - hari - 10-30-2004 <span style='color:red'>கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.</span> <img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Ltte/black_tigers67.jpg' border='0' alt='user posted image'> கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்... எந்தமொழியும் தோற்றுப்போகும். வார்த்தைகள் வறுமை அடையும் உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும். பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும். ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது. சமுத்திர நீரை அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா? ஓடும் முகிலை ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா? எதிரியின் எந்தவலுவும் இறுதியில் இவர்களிடம் சரணடையும். கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர். மறுநாள் வெடித்த செய்தி வெளிவரும்போது ஜாதகமும் சோதிடமும் தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும் காலால் நடந்து வாயால் மொழிந்து கையால் தலைவாரிக் கொண்டு எல்லோரையும் போலவேதான் இவர்களும். உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும் வேறுபட்டது. உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள். கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர். முதுகில் வேர்க்குரு போட்டாலே.. முந்நூறு மருந்துகள் தேடும் உலகில் சாவைத் தம் தோள்களில் சுமந்து நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள் காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது காற்றுக்கு வேர்க்கும். நீர் நெருப்பாகிவிடும். இவர்களுக்கு; சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான். பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம். கரும்புலிகள்; தலைவன் தலைவாரிவிடும் புயல்கள். தாயை நேசிக்கும் அளவுக்கு தலைவனையும் நேசிப்பவர்கள். தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள். ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம் இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை. யுலை 5.1987 கருமைக்கும் பெருமை வந்த நாள். புலியொன்று முதல் கரும்புலியான தினம் நெல்லியடியில் "மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள். "எல்லாம் சரி வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்" கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின் வாய் மூட முன்னர் செவிப்பறைகள் கிழிந்தன. சாவு நேரே ஓடிவந்து முகத்தில் சந்திக்குமென்று எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான். "உயிராயுதம்" வலுவானது. கரும்புலிகள் தேவை அறிந்து செல்பவர்களே அன்றி சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல.. இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல. இதயம் இரும்பாலானவர்களும் அல்ல. பனியாய் உருகும் நெஞ்சுக்கும் பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும் உரிமையாளர்கள். வெடித்த பின்னரும் இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான். "நடுகல் நாயகர்கள் " ஆகும் வாய்ப்பும் எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை. கல்லறை கூட இல்லாத காவியமாய் வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல் சிலருக்கு வெளியே தெரியாத வேரின் வாழ்வு. பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு கரும்புலிகளின் ஜனனம் மட்டும் மரணத்தில்தான் ஆரம்பம் கால நதியில் இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள். மற்றவர்களுக்கு இனி என்ன செய்வதுதென்று தலைவெடிக்கும் போதுதான் இந்த சுகந்த ஊதுபத்திகள் உடல்வெடித்துப் போகிறார்கள். <b><i> "ஊரறியாமலே உண்மைகள் கலங்கும் ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும் வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்"</i></b> பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல வந்தவரிகளில் வென்றவரிகள் இவை. கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன? கண்ணீரா? கல்லறையா? இல்லை. எதுவுமே இல்லை நெஞ்சின் நினைவே நெடிய கோபுரம். கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்! <b>புதுவை இரத்தினதுரை</b> ஆனி,ஆடி 1994 (தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........) முந்தைய கவிதைகள் தாயகத்தை காதல் செய் குந்த ஒரு குடிநிலம் பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது! - kavithan - 10-30-2004 அருமையான கவிதை .. கவிதையை இங்கு பிரசுரித்ததுக்கு நன்றிகள் அண்ணா - tamilini - 10-30-2004 கவிதையை இங்கு பிரசுரித்ததுக்கு நன்றிகள்..............! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 10-31-2004 தமிழினி அக்கா, கவி தம்பி இருவருக்கும் நன்றிகள். - hari - 12-06-2004 <img src='http://www.thainilam.com/blacktigers/images/prabha.jpg' border='0' alt='user posted image'> [size=16]தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள் -------------------------------------------------------------------------------- பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக்கவசங்கள்ää எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும்ää பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். ஒரு கரும்புலிவீரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்;;துக் கொண்;ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்;க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். பல கரும்புலிகள் வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும்ää அவர்களது அற்புத சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும். 'கரும்புலிகள்" என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்க்கும்ää உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிக்கும். எனவே கரும்புலி எனும் சொல் பல அர்த்தங்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது. முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்துää இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் - வெண்ணிலா - 12-14-2004 நன்றி மன்னா |