![]() |
|
சந்தனக்காட்டை சரித்தது முந்திரிக்காடா? வீரப்பனைப் பற்றி..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சந்தனக்காட்டை சரித்தது முந்திரிக்காடா? வீரப்பனைப் பற்றி..... (/showthread.php?tid=6545) |
சந்தனக்காட்டை சரித்தது முந்திரிக்காடா? வீரப்பனைப் பற்றி..... - ஜீவன் - 10-26-2004 http://www.tamiloosai.com/oosai.asp?id=2893&catID=0 - hari - 10-27-2004 3 நாள் சித்திரவதைக்கு பின் வீரப்பன் கொலை? தர்மபுரி: உண்மை கண்டறியும் குழு வீரப்பனை பொறி வைத்துப் பிடித்தோம், ஆம்புலன்சில் வந்தபோது கொன்றோம் என்று அதிரடிப்படை கூறிக் கொண்டிருக்க, இது குறித்து விசாரிக்கச் சென்றுள்ள உண்மை அறியும் குழுவுக்கு பல திகீர் விவரங்கள் கிடைத்து வருகின்றன. தமிழக அதிரடிப் படையினரிடம் ஏற்கனவே வீரப்பன் சிக்கிவிட்டதாகவும், அவனை 3 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அடித்து, உதைத்து கடும் சித்திரவதை செய்த பின்னரே பாடி கிராமத்தில் வைத்து அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் அப் பகுதியினர் உண்மை அறியும் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். இந்த 19 பேர் கொண்ட குழுவில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட இடம், பாடி, பாப்பாரப்பட்டி கிராம மக்கள், வீரப்பன் மனைவி, தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் என பலரிடமும் இந்தக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிரடிப்படை அதிகாரிகளை சந்திக்க சத்தியமங்கலம் சென்ற இவர்களை அதிகாரிகள் சந்துக்க மறுத்து விட்டனர். இதனால் அதிரடிப்படையினரின் கருத்தை இவர்களால் அறிய ¬முடியவில்லை. அதே போல வீரப்பன் கும்பல் சுட்டுக் கொல்லப்பட்ட ஆம்புன்ஸையும் பார்வையிட இந்தக் குழுவுக்கு அனுமதி தரப்படவில்லை. இந் நிலையில் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 3 கோணங்களில் எங்களது சந்தேகங்களை நாங்கள் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று குழுவின் தலைவரான சேஷய்யா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தற்செயலாக நடந்தது போலத் தெரியவில்லை. அவனது சாவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவே தெரிகிறது வீரப்பன் சுடப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை அதிகம் இல்லை என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பலமாக நம்புகிறார். இது தவிர 3 நாட்களுக்கு முன்பே வீரப்பனை அதிரடிப்படையினர் பிடித்து விட்டதாகவும், தங்களது காவலில் வைத்து அவனை சித்திரவதை செய்ததாகவும், அதன் பின்பே வீரப்பனை சுட்டுக் கொன்றதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விரிவாக நாங்கள் விசாரித்து வருகிறோம். வீரப்பன் பிணத்தை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துவோம். விசாரணை தொடர்பான விரிவான விவரங்கள் இன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படும் என்றார் சேஷய்யா. இந்தக் குழுவினர் சென்ற இடங்களில் எல்லாம் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உளவுப் பிரிவினரும், அதிரடிப்படையின் உளவுப் பிரிவினரும் ஏராளமான அளவில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இந்தக் குழுவினரின் விசாரணைகளைக் கண்காணித்தனர். அதிமுகவினர் தகராறு: இந்தக் குழுவினரை பல இடங்களில் அதிமுகவினர் வழிமறித்தும் தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக மலைப் பகுதி மக்கள் பேச முன் வந்தபோது அவர்களையும் அதிமுகவினர் தடுத்தனர். இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. thatstamil.com |