![]() |
|
இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ? (/showthread.php?tid=6531) Pages:
1
2
|
இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ? - shanmuhi - 10-30-2004 இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ? நான் தான் யாப்;பாணத்திலை இருந்து உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச சுப்பைய வாத்தியார்தான் இந்த கடிதத்தை எழுதிறன். லண்டனிலை இருக்கிற எங்கடை சனத்தோடை ஓருக்கா கதைக்க வேணும் என்று பலநாள் யோசிச்சு கொண்டு இருந்தனான் இப்பதான் சரியான நேரம் கிடைசிருக்குது. என்ன யோசி;க்கிறியள்? இவர் யார் எங்களோடை கதைக்க என்றுதானே? நீங்கள் யோசிக்கிறது சரிதான் புள்ளையள். என்ன செய்யிறது மனம் கேக்குது இல்லையே நீங்கள் உங்கை இருந்து செய்யிற விளையாட்டை கேக்கேக்க தம்பியவை ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோ இங்கை இருக்கிற பெடியள் எல்லாம் அடுத்ததா ஒரு பொங்கு தமிழை யாப்பாணத்திலை நடாத்துவம் என்று யோசித்து கொண்டிருக்கிறாங்கள். நீங்கள் என்னடாப்பா செய்யிறியள்? உங்களை மாதிரி பெடியங்கள் தானே கனடாவிலையும் ஓடியாடி செய்தவங்களாம். தம்பியவை உங்களை மாத்திரம் குறை சொல்லேல உங்கை இருக்கிற எல்லாருக்குந்தான் சொல்லுறன். போன கிழமை தான் என்ர பாலிய சினேகிதன் ஒருத்தன் உங்கை இருந்து இங்கை வந்தவன். ஒரு எட்டு அவனைப்போய் சந்தி;ச்ச பிறகுதான் உங்கை என்ன நடக்குது என்று தெரியுது. எங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது போலதான் கிடக்குது. இருக்கிற இடத்திலாவது நிம்மதியா இருங்கோவன் புள்ளையள். எதுக்கெடுத்தாலும் போட்டி. எதுதில போட்டியா இருக்கிறது என்று ஒரு வரமுறை தெரியாமல் எல்ல இருக்கிறியள் போல கிடக்கு. நான் என்னத்தை சொல்லுறன் என்று விளங்கேலையே? அதுதான் உங்கை இருக்கிற கோயில்களை தான் சொல்றன். கடவுள் என்ன பாவம் செய்தவர் அவற்றை பேரை சொல்லி அடிபடாதைங்கோ. அவர் ஒன்றை செய்தா நானும் அதிலையும் பாக்க கூட செய்ய வேணும் என்டு யோசிக்காதைங்கோ? அவர் கோயிலை சுத்தி தேர் இழுத்தா நான் றோட்றோட்டா இழுப்பன் எண்டு வெளிக்கிடாதைங்கோ. உங்கடை இந்த போட்டியலை நல்ல விசயத்திலை காட்டுங்கோ. அதுதான் தம்பியவை கனடாவிலை செய்த பொங்கு தமிழிலும் பாக்க பெரிசா செய்ய வேணும் என்று யோசிங்கோ? அடுத்தது தம்பியவை உந்த பேப்பர்- இரண்டு முண்டு பேர் சேர்ந்தோனை இலவசமா பேப்பரை தொடங்கறியளாம். நல்ல விசியம் தான் புள்ளையள் பேப்பர் தொழில் தம்பி புனிதமானது. உதுக்காவே தம்பி நிமலராசன் நடேசன் எல்லாம் உயிரைக் கொடுத்திருக்கினம். நீங்கள் என்;னண்டா யாரோ கஷ்டபட்டு எடுத்த செய்தியை இருந்த இடத்திலை இருந்து கொண்டு இந்தியாவிலை இருந்து வாறா புத்தகத்திலை இருந்தும் எதாவது கொஞ்சத்தை எடுத்து பத்தாததுக்கு இப்பதானையாம் கொம்பிரரிலை எல்லாம் வருதாமே அதையும் எடுத்து போட்டு எங்கையாவது ஒரு இடத்திலை உங்களுக்கு வேண்டாத ஆக்களை பற்றி எழுதிவிட பேந்து என்ன குடும்பி பிடி சண்டை தானே. உங்கை இருந்து வாற பேப்பர் இரண்டு முண்டை என்ர நண்பன் பாக்க தந்தவன். அதை பாக்கேக்கை விளங்குது. தயவு செய்து இப்படி அடிபடாதைங்கோ. உங்கடை பேப்பருக்குளாலை மக்களை ஒண்டுதிரட்டி உந்த பொங்கு தமிழை ஒருக்கா நடாத்துங்கோவன். மற்றது என்ர சினேகிதன் சொன்னான். உங்கையாம் சமரோ கிமரோ அதுதான் வெய்யில் காலம் வந்த உடனேயாம் புத்துக்கிலை ஒழிஞ்சிருக்கிற சங்கம் எல்லாம் ஆண்டு விழா கொண்டாட தொடங்கிடுவியளாம்.. அதுக்கெண்டே நல்ல கலர் பக்கத்திலை புத்தகம் வேறையடிக்கிறியள் பாத்தன். அதிலை ஏதேன் நல்ல விசியம் இருக்குமெண்டால் உங்களுக்கிலேயே ஓருத்தரை ஓருத்தர் புகழ்ந்து எழுதிறியள். ஏன் ராசா இந்த வேலை. அதுதான் பரவாயில்லை எண்டு பாத்தா ஒரு பள்ளிக்கூடத்துக்கு இரண்டு சங்கம் வேறை என்னடாப்பா உதுகள். தம்பியவை. அதுமாத்திரமே! உந்த பல்கலைக்கழகத்திலை படிக்கிற பெடியள் என்ன எண்டு பாத்தாவாம் டிஷ்கோவோ குஷ்கோவோ என்று நோட்டிசு அடிச்செல்ல நிகழ்ச்சி வைக்கிறிங்களாம். தம்பியவை உங்கடை வயதுப்பெடியள் தான் இங்கை ஆமிக்காரனுக்குள்ள இருந்துகொண்டு முதலாவது பொங்கு தமிழை நடாத்தினவங்கள் தெரியும்தானே? கனடாவிலையும் இப்படி பெடியங்கள் தானாம் முன்னுக்கு நிண்டு செய்தவங்களாம். தம்பியவை அதுக்காக உங்களை டிஷ்கோவுக்கு போகவேணாம் எண்டு சொல்லலே. உந்த வயதிலை தான் எல்லாம் செய்ய வேணும். ஆனாலும் அதிலும் பாக்க பெரிய கடமை எல்ல ஒன்று முன்னுக்கு இருக்குது. சினேகிதன் சொன்னான் உங்கையாம் கிட்டத்தட்ட இருப இருபதைஞ்சு கோயில் இருக்காம். இலவச பேப்பர் என்று பார்த்தா எல்லாஞ் சேர்ந்து ஒரு பத்து வருமாம். உந்த சங்கங்கள் சின்னன் பெருசு என்று எடுத்து பார்த்தா ஒரு முப்பது நாப்பது வருமாம். இப்படி நல்ல வசதியா தான் இருக்கிறியள். நீங்கள் எல்லாரும் ஒருக்கா ஒண்டா சேந்தா இந்த பொங்கு தமிழை நல்லா நடாத்தலாம் தானே?. என்ன காசுக்கு என்ன செய்யுறது என்று யோசிக்கிறியளே? அதுக்கு கவலை படாதைங்கோ. சும்மா சும்மா யார் யாருக்கோ பாரட்டு விழா செய்யிறம். அங்கை கூழ் ஊத்திறம் இச்ச கஞ்சி ஊத்திறம் என்று வெளிக்கிட்டு திரியிறவங்களுக்கெல்லாம் காசு கொடுக்கிற எங்கடை வியாபாரிமார் பொங்கு தமிழுக்கு காசு தரமாட்டினமா? சும்மா இருந்தா நடக்காது. எல்லாரும் ஒருக்கா வெளிக்கிடுங்கோ. இலண்டனில பொங்கு தமிழை பொங்க வைச்சிடுவம் என்று பொங்குங்கோ. இந்த கட்டை கட்டையில போறத்துக்கு முதல் இலண்டன் பொங்கு தமிழ் நடந்ததாம் என்று கேட்டுட்டு போவம். சரி தம்பியவை நல்ல செய்தி கேள்விப்பட்டா மீண்டும் கடிதம் எழுதுறன். கோவிக்காதைங்கோ. ஒரு வேகத்திலை எல்லாருக்கும் பேசிப்போட்டன் திரும்பவும் து}ஷணத்திலை பேச வைச்சிடாதைங்கோ. நல்ல செய்தியா பதிலை போடுங்கோ. இப்படிக்கு உங்கள் அன்புள்ள சுப்பையா வாத்தியார் நன்றி:தமிழ்நாதம் - hari - 10-30-2004 நியாயமான கடிதம், தகவலுக்கு நன்றிகள் - kavithan - 10-30-2004 நன்றி அக்கா - Nitharsan - 10-30-2004 என்ன... நல்ல விடையங்கள் பல கூறியதற்கு நன்றி கனடாவைவ் பொறுத்தவரையில் சங்கங்கள் அமைப்புக்கள் அதிகம் அதன் காரணமாக பல நல்ல சேவை செய்யும் சுயநலமற்ற சங்கங்கள் இருப்பது பலருக்கு தெரியாது...இது வரை எனக்குத் தெரிந்தவரை எந்தச் சங்கங்களைப் பற்றியும் எவரும் சிறப்பாக சொன்னது இல்லை காரணம் என்ன?? கனடா பொங்கு தமிழிழ் அனைத்து சங்கங்களும் தமக்குரிய பங்கை (ஆதரவை )வழங்கின என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம் யாராவது எந்தச் சங்கங்களைப் பற்றியாவது எதாவது சொன்னீர்களா?? இலவசப்பத்திரிகையின் வருகையால் தரமான பத்திரிகையின் மவுசு குறைந்து விட்டது தமது ஆய்வுகளை வெளியிடுவோரின் பத்திரிகைகள் நிராகரிக்கப்படுகின்றன காரணம் இலவசமாய் ஒரு பத்திரிகை கிடைக்கையில் விலை கொடத்து யார் பத்திரிகையை வாங்குவார்கள்??? பக்கத்துக்கு பக்கம் விளம் பரம் போடுவதுதான் பத்திரிகா தர்மமா?? வாசகர்களின் கருத்து என்ற பெயரிலே தமே கருத்துக்களை எழுதுவது தான் பத்திரிகா தர்மமா??? ஊடகம் என்றால் என்ன? ஊடகதுறையில் பிரவேசிக்க என்ன தகுதி வேண்டும்??? வெறும் தமிழுணர்வுடன் ஊடகம் நடத்தினால் போதுமா??என்ற கேள்விகளுக்கு பத்திரிகை (புகலிட) உலகம் விடைகண்டால் மாத்திரமே இதற்கான முடிவைக்காண முடியும் -நிதர்சன்- - kuruvikal - 10-30-2004 சுப்பையா வாத்தியார்.... உங்கள் கடிதம் நல்ல ஒரு அழைப்புத்தான்...கொஞ்சம் தாயக உணர்வாளர்களை தட்டி எழுப்ப உதவும் தான்...ஆனால் நீங்கள் லண்டன் என்று விளித்து லண்டனுக்கு வெளியே இருக்கும் பல மாணவர்களை (உண்மையாக பல திறமை வாய்ந்த பல்கலைக்கழகங்கள் லண்டனுக்கு வெளியே தான் இருக்கின்றன) அதுவும் தாயக உணர்வாளர்களைப் புறக்கணிச்சுப் போட்டியள்.... அதுவும் டிஸ்கோ கிஸ்கோ தவிர்த்து தாங்களுண்டு தங்கள்பாடென்று தமது கலாச்சார பற்றுறுதி கொண்டு வாழும் மாணவர்களையும் உங்கள் பொதுக் கருத்துக்குள் பாகுபாடின்றி அடக்கிப்போட்டியள்....பறுவாயில்லை....இதை ஏன் சொல்லுறம் என்றால் தாயகத்தில் இங்கிலாந்து என்பது லண்டன் என்றுதான் பார்க்கப்படுகிறது.... அநேகம் தமிழர்கள் அங்குதான் உள்ளனர்...ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை தாயக உணர்வுள்ள மாணவர்கள் லண்டனுக்கு வெளியே அதிகம் என்றே நாம் சொல்வோம்....! எதுஎப்படியோ பிரித்தானிய அரச சட்ட அனுமதி பெற்று ஒரு பொங்கு தமிழ் நடத்த எண்ணினால் லண்டன் வாழா மாணவர்களும் தங்கள் ஆதரவை தாயக உணர்வுடன் தந்து பொங்குதமிழை சிறப்புற நடத்தப் பின்னிற்கமாட்டார்கள்....என்றே குருவிகளாகிய நாம் நம்புகின்றோம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 10-30-2004 அது தானே பிரித்தானிய வாழ் மாணவர்கள் என்டால் என்ன சும்மாவா களக்கிப்போட மாட்டினம் ..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- manimaran - 10-30-2004 kuruvikal Wrote:அதுவும் தாயக உணர்வாளர்களைப் புறக்கணிச்சுப் போட்டியள்.... அதுவும் டிஸ்கோ கிஸ்கோ தவிர்த்து தாங்களுண்டு தங்கள்பாடென்று தமது கலாச்சார பற்றுறுதி கொண்டு வாழும் மாணவர்களையும் உங்கள் பொதுக் கருத்துக்குள் பாகுபாடின்றி அடக்கிப்போட்டியள்....பறுவாயில்லை.... ஏன் குருவிகாள் 'டிஸ்கோ' 'கிஸ்கோ' என்று போகாமல் இருப்பது உங்கள் கலாச்சாரத்தை உய்விக்க உதவும் என்று நம்புகின்றீர்களா? அல்லது அப்படிப் போவர்களால் உங்கள் 'கலாச்சாரம்' கெட்டுப்போய்விடும் என்று எண்ணுகின்றீர்களா? அல்லது அப்படிப் போகாமல் இருப்பவர்களால் உங்கள் 'கலாச்சாரம்' வாழவைக்கப்படுகின்றது என்று நம்புகின்றீர்களா? - kuruvikal - 10-30-2004 டிஸ்கோ கசினோ கொழும்பிலும் தான் இருக்கு... அங்க போனதுகளுக்கு உது வீண் செலவு எண்டிட்டு இருக்குதுகளாக்கும்... :wink: டிஸ்கோ கிளப் பப் தண்ணி சிகரெட்...யார் சொன்னா கேடு என்று...கேடென்றா ஏன் மூலைக்கு மூலை வச்சிருக்கினம்...விக்கினம்.....உங்க இருக்கிறவ கனக்கப் படிச்சு இல்ல கனக்க வேலை செய்து களைச்சுப் போடினம் போல...அதுதான் உதுகளில போய் களைப்பாறினம் ஆக்கும்.... களைக்காததுகள் போகல்ல... :wink: தாயக கலாசாரத்தை விரும்புறவன் தன்ர தனித்துவதை எங்கும் காப்பாற்ற அதை பின்பற்ற விரும்பிறான்...அது அவனின் சுதந்திரம்....அதுக்கும் டிஸ்கோவுக்கும் பப்புக்கும் கிளப்புக்கும் கசினோவுக்கும் தொடர்பில்லாமலும் இருக்கலாம்...இவை கலாசாரங்களா அவனுக்குப் படாததாயும் இருக்கலாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: இவை தனிமனிதன் ஒவ்வொருவனினதும் சுயம் சார்ந்து எழும் நடத்தைக் கோலங்கள்... குருவிகள் கேள்விப்பட்டதுகள் லண்டன் வாழா தாயக பற்றுறுதி மாணவர்கள் தமது கலாசாரத்தை தனித்துவத்துடன் பின்பற்றி மற்றவர்களுக்கு தங்களின் தனித்துவதைக் காட்ட விரும்புவதாக....! சில பல்கலைக்கழக விடுதிகள் கூட ஆசிய மாணவர்களுக்கு ஆண் பெண் விடுதிகள் என்று தனித்து வழங்குவதை சாதாரணமாகக் காணலாமாம்...அப்ப அவை ஏன் அதைச் செய்யினம்....???! அவைக்கு விளங்குது அவனவனுக்கு தன்ர தனித்துவத்தை காட்ட.... காட்டி வாழ அனுமதி அளிக்க வேண்டும் என்றது...பிரித்தானிய மக்கள் கூட கொப்பி கற்றை விட றியல் கற்றில மரியாதை கூடத்தானாம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- கறுணா - 10-30-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அய்யோ சுப்பையா வாத்தியார், நீங்கள் தூரத்திலை இருக்கிறதாலை உண்மையொண்டும் தெரியாது போல கிடக்குது? ஒருதருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ, ஒரு உண்மையை உங்களுக்கு மட்டும் சொல்லுகிறன்! அங்கு லண்டனிலாம் பூசாரிமாற்றை பிரட்சனைதானாம் பெரும் பிரட்சனை! பூசாரிமாருக்கு தனிப்பட்ட பிரட்சனையாட்கள், தங்களை மதிக்காத ஆட்கள், இப்படியானவருகளை கோவிலுக்கும் கடவுளுக்கும் விரோதி மாதிரி கதையைக் கட்டி எட்ட வைத்து விடுவார்களாம்! அவர்கள் மனசு வைக்காமல் உந்த பொங்கு தமிழென்ன ஒண்றும் நடவாதாம். இப்ப பிரட்சனையில்லாத படியால் கடவுளுக்கு உடனுக்குடன் செய்தி போறபடியால், இவையள் கொஞ்சம் அடக்கி வாசிக்கினம்! இல்லாட்டி? உந்தப் பூசாரிமாற்றை பிரட்சனைகள் யூரோப்பா முழுவதும்தானாம்! அங்கேயாம் ரோனி பிளையரயோ, கோடன் பிறவுனையோ சந்திக்கலாமாம்! ஆனால் இந்தப் பூசாரிமாரைச் சந்திப்பதென்றால் வலு கஸ்டமாம்! உந்தப் பூசாரிமார் கடைக் கண்திறந்தால்தான் ....... எல்லாமுமாம்...... இது என்றை இன்டலியன்ற்...தந்த ரிப்போட்டு! அங்காலை புலிப்பக்கம் சொல்லிப் போடாதையுங்கோ! இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Kanani - 10-30-2004 சுப்பயைா வாத்தியாருக்கு லண்டன் பற்றித் தெரியேல்லை இங்க பொங்குதமிழ் நடத்தமாட்டாங்கள்....பொங்கு இங்கிலிப்பிசு நடத்துவாங்கள்...அதுதான் லண்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-30-2004 லண்டனில தமிழனட்ட வழிகேட்டா சொர்க்கத்து வழிகாட்டுவான்... (எங்கினையன் ஒன்றிரண்டு நல்லதுகள் இருக்குதுகள்) அவ்வளவு கேவலம்....தமிழர்களும் அவங்கட சிந்தனைகளும்...கதையுங்கோ தங்களவிட்டா பிஸ்தாக்கள் இல்ல எண்ட மாதிரியும்.... தாங்க தான் லண்டன் பூர்வீகக் குடிகள் போலவும்தான் கதை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவைக்கு பொங்கிறதெண்டாலே என்னென்டு தெரியாது.. அதுக்க எங்க பொங்கு தமிழில பொங்கிறது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-30-2004 Quote:அவைக்கு பொங்கிறதெண்டாலே என்னென்டு தெரியாது.. அதுக்க எங்க பொங்கு தமிழில பொங்கிறது....! அப்ப குருவிக்கும் தெரியாதோ..??? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-30-2004 குருவிகள் லண்டன் இல்லையே...மாந்தோப்பு...எங்களுக்கு தெரியும்...! உங்களத்தான் கேக்க வேணும்...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 10-30-2004 அப்ப சரி.. அப்ப எப்ப தமிழ் பொங்க போகுது லண்டனனில்...! - Kanani - 10-30-2004 அவை தமிழை பொங்குfy பண்ணுவினம் பொறுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-30-2004 லண்டன் வாழ் பெருங்"குடி" மக்களுக்குத்தான் வெளிச்சம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-30-2004 குடி மக்களுக்கா..?? நல்லா கதை தான் அதுக்கு நம்ம கனடா தான் ..! :wink: - kuruvikal - 10-30-2004 மிச்சம் கவிதன் சொல்லட்டும்...அக்கா தம்பி சண்டை பிடிக்காட்டிச் சரி...குருவிகளின் வேலை முடிஞ்சுது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- kavithan - 10-31-2004 tamilini Wrote:அது தானே பிரித்தானிய வாழ் மாணவர்கள் என்டால் என்ன சும்மாவா களக்கிப்போட மாட்டினம் ..?? <!--emo& கலக்கிடமாட்டினம் இல்லை .. கலக்கிட மாட்டோம் என்று எல்லா வரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 10-31-2004 kuruvikal Wrote:மிச்சம் கவிதன் சொல்லட்டும்...அக்கா தம்பி சண்டை பிடிக்காட்டிச் சரி...குருவிகளின் வேலை முடிஞ்சுது...! <!--emo& <span style='font-size:20pt;line-height:100%'>அட ..ஏன் என்னை இழுக்கிறியள் ... இலண்டனோ.. இங்கிலாந்தோ எப்படி எண்டு எனக்கு தெரியாது... சட்ட சிக்கலுகள் தெரியாது... சாதாரண குடிமக்கள் பற்றி தெரியாது ஆனால், அங்கிருக்கும் \"நம்மஊருகுடி மக்கள்\" பற்றி எங்கையன் காத்துவாக்கிலை கேள்விப்பட்டிருப்பன். அவர்கள் எல்லாவற்றிலும் பேமஸ் தானே, ஏன் கனடாவிலை குறைவா என்ன,..? சென்றவாரமும் யாரோ ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் 3/4 தமிழர்கள் சம்பந்த பட்டிருகிறார்கள். இங்கு எதுக்கு வந்தம்..? எப்படி வந்தம்? எப்படி இருந்தம்..? என்ற எல்லாவற்றையும் மறந்திட்டு திரியுற பலதுகள் தான் பொங்கும் தமிழின் மானத்தை கெடுக்குதுகள்... கனடாவில் தமிழ் பொங்கியது உண்மை ஆனால் அதனை எல்லா பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து செய்திகளை வெளியிட்டதும் உண்மை. இந்தியாவில் எந்த ஒரு ஊடகமும் இச்செய்தியை வெளியிடவிலையாம்..? அன்று ஒரு நாள் சண்ரீவி செய்திபார்த்தேன் \"கீயூபாவில் 10000 மக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டம், அது அமெரிக்காவுக்கு எதிராக நடந்ததாம், அதிலை அந்நாட்டு பிரதமர் கலந்து கொண்டு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுறாராம்\" என்று விலாவாரியாக ஒப்புவிக்கினம்.... ஏறத்தாள 100000 மக்கள் கலந்து கொண்ட பொங்குதமிழ் மட்டும் அவர்களின் கண்ணுக்கோ, காதுக்கோ கேக்கலையோ..? ம்ம்ம்.. எப்பதான் கேக்குது என்று பாப்பம்.. தமிழீழம் கிடைக்க வருவினம் தானே...[ சில வலைப்பதிவுகளில் மட்டும் இது குறித்து அவ் உறவுகள் கவலையையும், கருத்துகளையும் தெரிவித்திருந்தார்கள் ] இலண்டனில் விரைவில் தமிழ் பொங்கும் என்று தான் நான் நினைக்கிறேன். அவர்களும் தமிழர்கள் தானே..அவர்கள் பொங்கவேண்டும் அது நடக்கும் விரைவில்.. ஆனால் அது உலகம் எங்கும் பேசப்படவேண்டும் ... அது சரி எப்ப பொங்குதமிழ்..? ரெடியா தமிழினி அக்கா, குருவி அண்ணா,..?</span> [b][size=24]பொங்குதமிழ் |