| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 300 online users. » 0 Member(s) | 298 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| தீபாவளி திரைப்படங்கள் |
|
Posted by: yarl - 11-10-2004, 12:38 AM - Forum: சினிமா
- Replies (10)
|
 |
நிறைஞ்ச மனசு
நடிப்பு : விஜயகாந்த், சூசன், மஹிமா, மனோரமா மற்றும் பலர்
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : சமுத்திரகனி
அதிரடி சண்டைக்காட்சிகள், தீவிரவாதிகள், அரசியல் பஞ்ச் வசனங்கள் அதிகம் இல்லாத விஜயகாந்த் படம். இதில் கதைதான் ஹீரோ. அதில் அய்யனார் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறாராம் விஜயகாந்த். உன்னைச் சரணடைந்தேன் வெற்றிக்குப் பறகு அதே யதார்த்தமான கதைப் போக்கில் சமுத்திரகனி இயக்கும் படம் என்பதால் குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம் என்கிறார்கள். மனசு நிறைந்துவிடுமா?
அட்டகாசம்
நடிப்பு: அஜித், பூஜா, மகாதேவன், பாபுகண்டன், சுஜாதா மற்றும் பலர்
இசை: பரத்வாஜ்
இயக்கம்: சரண்
திரையுலகில் முதலிடத்தைப் பிடிக்கிற ரேஸில் அஜித் பெரிதும் நம்பியிருக்கும் படம். வாலி, வில்லன்படங்களை அடுத்து மீண்டும் இரட்டை வேடம். ஆனால் ஒரே ஹீரோயின் பூஜா. வில்லன்கள் அதிகமாக நடிக்கும் படமாம். எனவே அடிதடிக்கு பஞ்சமிருக்காது. தூத்துகுடி தாதா, டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர் என்ற இரு பாத்திரங்களில் அஜித்தும், ஃபாரின் ரிட்டர்ன் பெண்ணாக பூஜாவும் கலக்குகிறார்கள். அஜித் அட்டகாசப்படுத்துவாரா _ வசூலில்.
மன்மதன்
நடிப்பு : சிம்பு, ஜோதிகா, மந்த்ராபேடி, யானாகுப்தா, சிந்துதொலாணி, அதுல் குல்கர்ணி, கவுண்டமணி
கதை, திரைக்கதை, வசனம்: சிம்பு
இசை: யுவன்ஷங்கர் ராஜா
இயக்கம்: முருகன்
முதல் முறையாக சிம்பு, கதை, திரைக்கதை வசனம் எழுதி கிட்டத்தட்ட டைரக்டராக அவதாரம் எடுத்திருக்கும் படம். தீபாவளிக்கு வரும் படங்களில் பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்கிறார்கள். முதல்முறையாக சிம்புவுடன் ஜோதிகா இணைகிறார். முதல்முறையாக தமிழில் கிரிக்கெட் புகழ் மந்த்ராபேடி நடிக்கிறார். கவுண்டமணி கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கலாய்த்திருக்கிறார்.
உலகத்தில் எத்தனை விஷயங்கள் ஏமாற்றுவதற்கு இருக்கு. லவ் பண்ணி ஏமாத்தாதீங்க என்பதுதான் கதையின் கரு.
சிம்பு ஜெயிப்பாரா?
சத்ரபதி
நடிப்பு: சரத்குமார், நிகிதா, வடிவேல், மகாதேவன், இளவரசு மற்றும் பலர்...
இசை: ஷி.கி. ராஜ்குமார்
இயக்குநர்: ஸ்ரீமகேஷ்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட, காயப்பட்ட இளைஞனின் கோபம்தான் படத்தின் கரு. ஹீரோயின் நிகிதா சமையல் கலை மாணவியாக நடிக்கிறார். ஐந்து பாடல்கள். ஐந்து ஃபைட் என்று பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது சத்ரபதி. சரத்தும் நிறைய ரிஸ்க் எடுத்து உழைத்திருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஸ்ரீமகேஷ்.
கிரிவலம்
நடிப்பு : ஷாம், ரிச்சர்ட், ரோஷிணி, ரமேஷ்கண்ணா, சார்லி
இசை: தேவா
இயக்கம்: ஷிவ்ராஜ்.
ஷாம், ரிச்சர்ட், ரோஷிணி ஆகிய மூன்று பேரைச் சுற்றிலும் விறுவிறுப்பாக த்ரில்லிங்காக நகரக் கூடிய கதை. ரோஷிணியிடம் ஒரு ரகசியம் இருக்கிறது. ரிச்சர்ட் அந்த ரகசியத்தை மறைக்கிறார். ஷாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்கிறார். இந்த மூவரும் ஒருவரையருவர் பழிவாங்கத் துடிப்பது கதையாம். கிரி என்பது ரிச்சர்ட்டின் கேரக்டர் பெயர். அவரைச் சுற்றி கதை வலம் வருவதால் கிரிவலம் என்பது தலைப்பு. அடிதடி படத்தை இயக்கிய ஷிவ்ராஜ் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
ட்ரீம்ஸ்
நடிப்பு: தனுஷ், தியா, பாரு, பிரமிட் நடராஜன், ராஜேஷ் மற்றும் பலர்
இசை: பரத்வாஜ்
இயக்கம்: கஸ்தூரி ராஜா
சக்தி என்ற பெயரில் தனுஷ் கல்லூரி மாணவனாக களம் இறங்கி இருக்கும் படம். அவர் சந்திக்கும் காதல், கனவுகள், அனுபவங்கள்தான் படத்தின் கதை. மார்டன் ஹீரோயினாக தியாவும், ஹோம்லி ஹீரோயினாக பாருவும் வலம் வருகிறார்கள். இதுவரை கிராமத்துக் காதல்கதையைச் சொல்லி வந்த கஸ்தூரிராஜா, தன் மகன் மூலம் நகரத்து காதல் கதையைச் சொல்லும் படம். கோர்ட், கேஸ் என்று பல பிரச்னைகளைத் தாண்டி தீபாவளிக்கு வருகிறது. கல்லூரி வாழ்க்கை தரும் பாடங்கள்தான் படத்தின் கரு.
இவை தவிர சத்யராஜ் கலக்கலாக நடித்திருக்கும் ‘மகாநடிகன்’, புதுமுகங்கள் இணைந்திருக்கும் ‘அயோத்தியா’, ‘ஜனனம்’ ஆகிய படங்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் என்று கோலிவுட் செய்திகள் கூறுகின்றன.
_ வீ. மீனாட்சிசுந்தரம்
படங்கள்: சித்ராமணி
kumudam.com
|
|
|
| இவர்கள் எப்போது திருந்துவார்கள் |
|
Posted by: Maramandai - 11-09-2004, 10:34 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (9)
|
 |
தமிழ்த் திரையுலகம் ஐயலலிதாவுக்கு விழா எடுக்கிறதே இது தேவையா??? இந்த தறுதலைகள் எப்போது திருந்தப் போகிறார்கள்??? சினிமாக்காரர்கள் இருக்கும் வரை தழிழுக்கும் தழிழ்நாட்டிற்கும் விடிவே இல்லை என்பது நிச்சயம். இவர்களைக் கலைத்தால் தான் நாடு உருப்படும்.
|
|
|
| தெரிந்தவர்கள் கூறுங்களேன் |
|
Posted by: shobana - 11-09-2004, 06:01 PM - Forum: கணினி
- Replies (4)
|
 |
வணக்கம்
என்னுடைய Pழஉமநவ Pஉ ஐ ளுஞடு ளுநுசுஏநுசு உடன் இணைக்க விரும்புகிறேன்.. அதற்கு ளுஞடு ளுநுசுஏநுசு ளுநு னுழறடெழயன செய்ய வேண்டுமாம்... எங்கு? எப்படி இணைப்பது என விபரம் தொிந்தவா்கள் கூறுங்களேன்
நன்றி
தெரிந்தவர்கள் கூறுங்களேன்
|
|
|
| HELP |
|
Posted by: MEERA - 11-09-2004, 04:36 PM - Forum: அறிமுகம்
- Replies (14)
|
 |
<b><i>Quote:<!--c1-->CODE<!--ec1-->
[/list]<!--c2--><!--ec2-->
</i></b>
|
|
|
| சமாதானமும் தமிழ் ஊடகங்களும் |
|
Posted by: Kanani - 11-09-2004, 04:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>சமாதானமும் தமிழ் ஊடகங்களும் - ஈரூடக தன்மை</b>
<i>நிலாந்தன் </i>
அண்மையில், இலக்கிய காரரான ஒரு நண்பர் கேட்டார்? ?எமது தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை கையாண்டு வரும் விதம் திருப்திகரமானதாக உள்ளதா?? என்று. ?சில குறிப்பிட்டபத்தி எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலான அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சமாதானத்தைப் பற்றிமயக்கம் தரும் விதத்திலேயே எழுதிவருகிறார்களே.. ஏன்?? என்று. உண்மைதான் சமாதானத்தைப்பற்றி சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சித்திரம் அதிகம் கலங்கலானதாகவே காணப்படுகிறது. என்பதால்தான் சமூகத்திற்கு சரியானதை எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு மிக்க படைப்பாளிகளே சமாதானத்தைப்பற்றிய சரியான விளக்கமின்றி ஆளுனர் விருது, சாகித்திய விருது போன்றவற்றைப் பெறும ஒரு நிலை காணப்படுகின்றது.
இப்பந்தியின் வாசகரும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த வரும் இப்பொழுது வர்த்தருமான ஒருவர் என்னிடம் கேட்டார்? ?ஏன் எப்பொழுதும் சமாதானத்தைப் பற்றியே எழுதிவருகிறீர்கள்?? என்று.
அண்மையில், இலக்கிய காரரான ஒரு நண்பர் கேட்டார்? ?எமது தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை கையாண்டு வரும் விதம் திருப்திகரமானதாக உள்ளதா?? என்று. ?சில குறிப்பிட்டபத்தி எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலான அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சமாதானத்தைப் பற்றிமயக்கம் தரும் விதத்திலேயே எழுதிவருகிறார்களே.. ஏன்?? என்று. உண்மைதான் சமாதானத்தைப்பற்றி சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சித்திரம் அதிகம் கலங்கலானதாகவே காணப்படுகிறது. என்பதால்தான் சமூகத்திற்கு சரியானதை எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு மிக்க படைப்பாளிகளே சமாதானத்தைப்பற்றிய சரியான விளக்கமின்றி ஆளுனர் விருது, சாகித்திய விருது போன்றவற்றைப் பெறும ஒரு நிலை காணப்படுகின்றது.
முன்பு, யுத்தம் செய்த நாட்களில் சாகித்திய விருது, ஆளுனர் விருது போன்ற விருதுகளை நிராகரிக்கும் ஒரு போக்கே தமிழ்படைப்பாளிகள் மத்தியில் காணப்பட்டது. இந்தவிருதுகளை நிராகரிப்பது என்பது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் கருதப்பட்டு வந்தது. ஆனால், இப் பொழுது இத்தகைய விருதுகளைப் பெறுவது தவறிவல்லை என்பதான ஒரு சிந்தனை காணப்படுகின்றது. ஏன் என்று கேட்டால் ?இப்பொழுது சமாதான காலம்தானே எனவே மேற்படி விருதுகளைப் பெறுவதில் தவறென்ன?? என்ற தொனிப்பட பதில் வருகிறது.
அதாவது நிலவும் சமாதானத்தைப்பற்றிய ஒரு தெளிவான தரிசனம் தமிழ் படைப்பாளிகள் பலரிடமும் இல்லை. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த ஹீரு கலைக் கூடத்திலும் இது தெரிந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாகக் கூடிவாழ்ந்த ஒரு பொற்காலத்தைப்? பற்றிச் சில தமிழ் படைப்பாளிகள் அங்கே உரையாற்றியதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
படைப்பாளிகளின் கதியே இதுவென்றால் சாதாரண சனங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
இதற்கெல்லாம் காரணம் இம்முறை யுத்தநிறுத்தம் அசாதாரணமாக நூதனமாக நீடித்து நிற்பதே. அதிலும் குறிப்பாக அது ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதலையும் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் தாங்கி முறியாது ஜீவித்திருப்பதே. ஒப்பீட்டளவில் இது ஒரு பலமான சமாதானம் தான். இதுதான் சமாதானத்தைப் பற்றிய சரியான ஒரு சித்திரத்தை பெறுவதிலிருந்து கணிசமான அளவு சாதாரண தமிழர்களையும் ஏன் சில ஊடகவியலாளர்களையும் கூட தடுக்கிறது எனலாம். இது காரணமாகவே சமாதானத்தைப்பற்றி சாதாரண மக்களிடம் உள்ள பொதுவான சித்திரம் கலங்கலானதாகக் காணப்படுகின்றது.
இக்கலங்கலான சித்திரத்தை தெளிய வைப்பதில் தமிழ் ஊடகங்கள் எவ்வளவு தூரத்திற்கு வெற்றி பெற்றிருக்கின்றன? அல்லது பொறுப்போடு நடந்திருக்கின்றன?
இக்கேள்விகளுக்கு விடைகாண்பது என்றால் முதலில் தமிழ் ஊடகங்கள் சமாதானத்தை எப்படி அணுகுகின்றன என்பதனைப்பார்க்க வேண்டும்.
<b>இது விசயத்தில் பொதுவாக இரண்டு பலமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது, சமாதானத்தை ஒரு விறுவிறுப்பான செய்தியாக மட்டும் பாவிப்பது. இதன் மூலம் ஒரு சந்தர்பத்தில் சமாதானத்தைப் பற்றிய நம்பிக்கைகள் உயர்ந்து கொண்டுபோகும். இன்னொரு சந்தர்பத்தில் இந்த நம்பிக்கைகள் சோர்ந்து விழும், இது சாதாரண வாசகர்களை எப்பொழுதும் திகில் நிறைந்த காத்திருப்போடு ஊசலாடும் ஒரு நிலையில் வைத்திருப்பதோடு அவர்களை முடிவெடுக்கும் சக்தியற்றவர்களாக செய்திகளின் பின்னோடிகளாக மாற்றி விடுகின்றது. </b>
<b>இரண்டாவது, சமாதானத்தை விமர்சனபூர்வமாக அணுகும் ஒரு போக்கு இதன் படி இப்பொழுது நிலவுவது சமாதானமேயல்ல இது ஒரு யுத்த ஓய்வு மட்டுமே என்பதோடு இது இதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகக்கூடிய ஒரு களயதார்த்தம் கொழும்பிலும் இல்லை இந்த பிராந்தியத்திலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் இப்போக்குரியவர்கள் இந்த சமாதானத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் கூறுகிறார்கள்.</b>
இந்த இரண்டு போக்குகளையும் மேலும் சிறிது விரிவாக பார்;பதன் மூலமே சமாதானத்துக்கான தமிழ் ஊடக தர்மம் எத்திசையில் செல்கிறது என்பதை சரியாக அடையாளம் காணமுடியும். எனவே இந்த இரண்டு போக்குகளையும் மேலும் ஆழமாகப் பார்ப்போம்.
முதலாவது போக்கின் படி, யாராவது வெளிநாட்டுத்தூதுவர்கள் வந்தால் அல்லது அரசாங்கம் ஏதாவது அறிக்கை விட்டால் அல்லது சந்திரிகாவோ அல்லது மங்கள சமரவீரவோ எதையாவது சொன்னால் அதை அண்ணாந்து பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு திருப்பம் வரப்போகின் என்று காத்திருப்பதும் பின்பு சிறிது காலம் செல்ல நம்பிக்கைகள் தளரும் போது முன்பு எழுதியதிற்கு மாறாக எழுதுவதும் பிறகு சிறிதுகாலம் செல்ல மறுபடியும் அறிக்கைகள் தூதுவர்களின் பின் இழுபடுவதுமாக வாசகர்கள் நப்பாசைகளுடன் வைத்திருக்கப்படுகின்றார்கள். சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலும் இந்தப்போக்கு காணப்படுகின்றது. குமார் ரூபசிங்க ஜெகன்பெரேரா போன்றோர் இந்தகைய ஒரு போக்கையே பிரதிபலிக்கிறார்கள்.
இந்த ஊடக்காரர்கள் அல்லது விமர்சகர்கள் ஒன்றை நன்கு விளங்கி வைத்திருக்கிறாhர்கள். அதாவது சனங்கள் யுத்தமற்ற ஒரு சூழலை விரும்புகின்றார்கள் என்பது. எனவே சமாதானத்தின் மீதான நம்பிக்கைகளை அவற்றின் விறுவிறுப்புக்கெடாமல் வைத்திருப்பது இவர்களின் வேலையாக இருக்கிறது. இது உண்மையில் சலிப்பூட்டும் ஒரு விசயமும் கூட. சொன்ன பொய்களையே திரும்பத் திரும் வேறுவிதமாக சொல்வதைப் போன்றது இது. வாசகர்களின் ஞாபகமறதிதான் இந்தப் போக்கின் பிரதான முதலீடு சில பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொகுத்துபார்த்தால் இதுதெரிய வரும். அங்கே சூடான செய்திக்கு முக்கியத்துவம் தருவது என்ற வணிகக் கோட்பாட்டுக்கும் அப்பால் வேறு எந்த ஆழமான கொள்கைகளும் இருப்பதில்லை.
இனி இரண்டாவது போக்கை பார்ப்போம். இதில் விவகாரங்கள் நிகழ்காலத்திற்குரியவைகளாய் மட்டும் அணுகப்படுவதில்லை. அவை அவற்றுக்கேயான வராலாற்றுப் போக்கில் வைத்து விளங்கிக் கொள்ளப்படுவதோடு அந்த வரலாற்று அனுபவங்களின் படி விமர்சிக்கவும் படுகின்றன.
இதன்படி இப்பொழுது நிலவும் சமாதான முயற்சிகளை குறித்து அநேகமாக எதிர்மறையான கருத்துக்களை வைக்கும் ஒரு போக்கு இது சிங்களத்தலைவர்களை நம்ப முடியாது; அவர்கள் என்றைக்குமே திருந்தமாட்டார்கள்; எனவே இந்த சமாதான முயற்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளரப்போவதில்லை போன்ற கருத்துக்களை நிறுவுவதன் மூலம் சமாதானம் எனப்படுவது ஒரு மாயையே தவிர வேறு ஒன்றுமில்லை என்ற சித்திரத்தை உருவாக்க இப்போக்கு முயல்கின்றது.
ஆனால், இப்படி சமாதானத்தை விமர்சிப்பது அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியின்படி ஒரு கட்டத்தில் யுத்தத்திற்கு கிட்டப்போய் நிற்கிறது. அதாவது இழுபட்டுச் செல்லும் இந்த சமாதானத்தை விடவும் யுத்தம் பரவாயில்லை ? என்று கேட்கத் தோன்றும். இது போன்ற சில கேள்விகள் அண்மையில் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் வந்திருந்தன. வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் எழுதிய ஒரு பந்தியின் மீதே தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு சிவராம் கடந்த ஞாயிற்க்கிழமை வீரகேசரியில் பதில் கூறியிருந்தார். இந்த இரண்டாவது போக்கில் உள்ள பிரச்சனையே இதுதான். இந்த சமாதானம் பொய் என்றால் யுத்தத்தை ஏன் தொடங்கக் கூடாது? என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
முதலாவது போக்கின் படி சாதாரண சனங்களை கையாலாகத சமாதானத்தின் செயலற்ற பார்வையார்களாகக் காத்திருக்க வைப்பதை விடவும் இரண்டாவது போக்ன்ன படி அவர்களை என்றைக்கோ ஒரு நாள் வெடித்தெழுப்போகும் ஒரு யுத்தத்தை நோக்கி தயார்படுத்தி வைத்திருப்பதே சரி என்று கூறுகிறார்கள், மேற்படி இரண்டாவது போக்குக்குரியவர்கள்.
<b>ஆனால், சாதாண சனங்களோவெனின் இந்த இரண்டு போக்குகளுக்குமிடையே கிழி பட்டுக்கொண்டிருக்கிறார்கள். யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது. போல தோன்றிய சுமார் மூன்று தாசாப்தங்களைக் கடந்து வந்த மக்கள் இவர்கள். கடந்த முப்பது ஆண்டுகால அனுபவம் மட்டுமே அவர்களுக்குப்போதும். வேறு எந்த அரசியல் விளக்க கூட்டங்களோ அல்லது அரசியல் வகுப்புக்களோ தேவையில்லை. சமாதானத்தின் உள்ளுடனை அல்லது சமாதானத்தின் சூத்திரக்கயிறுகளை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள் இல்வைலயோ அதன் நிச்சயமற்ற தன்மையை கண்டுபிடிப்பது அவர்களுக்கு பெரியவேலையில்லை.</b>
இந்த சமாதானம் நிலைக்காது என்று அவர்களுக்கு தெரிகிறது. ஆனால், அது புத்திநிலைப்பட்ட ஒரு விளக்கம் மட்டுமே. அதே சமயம் மனமோ யுத்தமற்ற ஒரு சூழலைத்தான் விரும்புகிறது. கடந்த முப்பது ஆண்டுகால யுத்தக்களைதீர இந்த முப்பது மாதகால சமாதானம் போதுமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், விருப்பத்திற்கும் புத்திபூர்வ விளக்கத்திற்கும் இடையில் சனங்கள் கிழி படுகிறார்கள் என்பதே மெய்நிலை. சனங்களிடம் உள்ள இந்த ஈரூடக நிலையைத்தான் தமிழ் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. ஒன்றில் சமாதானத்தை குருட்டுத்தனமாக விசுவாசிக்க வேண்டும். அல்லது அதை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் யுத்தத்தை தவிர வேறு தெரிவு இல்லை என்று நிறுவவேண்டும். கட்சிசார்ந்த ஊடகங்கள் அல்லது தீர்மானம் எடுக்கும் தரப்பினரின் உணர்வலைகளை பிரதிபலிக்கும் ஊடகங்கள் இது விசயத்தில் திட்டவட்டமான கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். மாறாக, இவையல்லாத வேறு ஊடகங்கள் ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டையே எடுக்கின்றன. அதாவது அவை சாதாரண சனங்களின் ஈரூடக நிலையையே அதிகம் பிரதிபலிக்கின்றன.
நிலவும் ஒப்பீட்டளவில் மிக நீண்ட யுத்த நிறுத்தம் இந்த ஈரூடகத் தன்மையை மேலும் பேணி வைத்திருக்கிறதே தவிர குறைக்கவில்லை. அக்காசி வந்தென்ன , பீற்றசன் வந்தென்ன ஆர்மிரேஜ் வந்தென்ன இந்த ஈரூடக நிலை பெரியளவில் மாறப்போவதில்லை. ஏனெனில், யுத்தத்தை ஒத்திவைப்பதுதான் சமாதானம் என்ற ஒரு நிலை உள்ள வரை நாட்டின் அரசியலானது ஈரூடக தன்மை பொருந்தியதாகக் காணப்படுவதே இயல்பு.
நன்றி சூரியன் இணையம்
|
|
|
| TAMIL |
|
Posted by: MEERA - 11-09-2004, 03:51 PM - Forum: அறிமுகம்
- Replies (1)
|
 |
Quote:<!--c1-->CODE<!--ec1-->- [list=][img][/img][url][/url]
[/list]<!--c2--><!--ec2-->
|
|
|
| ஜெயலலிதாவின் அதிரடிப்படை செய்த சில்மிசம்...! |
|
Posted by: kuruvikal - 11-09-2004, 11:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b>அதிரடிப்படை வீரரின் ஈவ் டீசிங்... ! - மக்கள் செருப்படி...!!</b>
வீரப்பனைப் பிடித்த சிறப்பு அதிரடிப் படையில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ. 3 லட்சம் பரிசு, வீட்டு மனை, பதவி உயர்வு, பதக்கம் வாங்கிய அதிரடிப்படை வீரர்களில் ஒருவர், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்து பொது மக்களிடம் செருப்படி வாங்கினார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர் காவலர் கண்ணன். திருச்சியைச் சேர்ந்தவர். தற்போது இவருக்கு தலைமைக் காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சொந்த ஊரான திருச்சி வந்த இவர், பஸ்ஸில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
பஸ் கரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதை அந்தப் பெண் தட்டிக் கேட்டபோது, நான் அதிரடிப்படை வீரன், என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்று வாய்ச்சவடால் பேசினார்.
மேலும் தொடர்ந்து அப் பெண்ணிடம் திமிராக சில்மிஷத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினார். கோபமடைந்த பயணிகள் ஆத்திரத்துடன் அதிரடிப்படை வீரர் கண்ணன் மீது பாய்ந்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கண்ணன், பஸ் நின்றதும் கீழே இறங்கி ஓடியுள்ளார். ஆனால், பயணிகள் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். பயணிகளும், சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் சேர்ந்து கண்ணனை அடித்து துவம்சம் செய்தனர்.
வீரப்பனை தேடுதறா சொல்லி மலைப் பகுதி பெண்களிடம் இதே வேலையைத் தான் அதிரடிப்படையினரில் சிலர் செய்தார்கள் என்று ஒரு சிலர் சூட்டைக் கிளப்பிவிட, அடிஉதை அதிகமானது. சில பெண்கள் அவருக்கு செருப்படியும் தந்தனர்.
தர்ம அடியில் நிலை குலைந்த கண்ணனை கரூர் போலீஸாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர்.
சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவின்போது பேசிய அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், அதிரடிப்படை வீரர்கள் யாரும் எந்தவித தவறான செயலிலும் ஈடுபடக் கூடாது. அதிரடிப் படையின் மாண்பை கெடுத்து விடக் கூடாது என்று அறிவுரை கூறியிருந்தார்.
அவர் சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ, அதிரடிப்படை வீரர் ஒருவர் பெண் விவகாரத்தில் பொது மக்களிடம் நாறியுள்ளார்.
thatstamil.com
|
|
|
|