| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 355 online users. » 0 Member(s) | 352 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,639
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பெண்...! |
|
Posted by: kuruvikal - 11-11-2004, 11:11 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<img src='http://www.thatstamil.com/images25/cinema/geetha-arindum-300.jpg' border='0' alt='user posted image'>
'புன்னகைப் பூ' கீதா
<b>கீதாவின் 'அறிந்தும் அறியாமலும்'</b>
மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார் கீதா. அங்கு வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரேடியோ ஜாக்கியாக உள்ள இவரது தனது அழகிய குரலால் மலேசியத் தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர்.
குடும்பத் தொழிலின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டே தமிழ் சினிமா மீதும் ஒரு கண் வைத்தபடியே இருந்திருக்கிறார். நீண்ட யோசனைக்குப் பின் தைரியமாக களத்தில் குதித்துவிட்டார். அவ்வளவாக பிரபலமாகாத முகங்களை வைத்து ஒரு படத்தை இவரே தயாரிக்கிறார். படத்தின் பெயர் 'அறிந்தும் அறியாமலும்'.
சினிமா தயாரிப்பில் இறங்குவது இவரது நெடுநாள் கனவாம். இப்போது நிறைவேறுவதில் மகிழ்ச்சியோடு கோடம்பாக்கத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டும் அங்குள்ள ஆட்களும் புதுசு என்றாலும் சிரித்தே எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.
இவரை 'புன்னகைப் பூ' கீதா என்று தான் அழைக்கிறார்கள்.
'அறிந்தும் அறியாமலும்' படத்தின் ஹீரோயின் சம்யுக்ஷா. இவர் தெலுங்கில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஒன் போர் த்ரீ' (ஆங்கிலத்தில் ஐ லவ் யூ என்பதன் சுருக்கம் !) என்ற படத்தில் நடித்தவர்.
ஹீரோ நவ்தீப். இவர் ஏற்கனவே ஜெய்ராம் என்று சரியாக போணியாகாத ஒரு படத்தில் நடித்தவர் தான். இவரைத் தவிர ஆர்யா, அனில் மேனன், பைவ் ஸ்டார் படத்தில் நடித்த கிருஷ்ணா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இவர்களைத் தவிர பிரகாஷ் ராஜ் இருக்கிறார்.
இதை யுவன்சங்கர் ராஜா. விஷ்ணுவர்த்தன் கதை எழுத (குறும்பு படத்தை இயக்கியவர்), படத்தை இயக்குவது நீலன்கோபிநாத் ஆகிய இருவர்.
வழக்கமான இளமை கலாட்டாவை வயலன்ஸ் அண்ட் அழகிய பாடல்களில் சொல்கிறார்களாம். சென்னையில் கடந்த மாதம் படத்தின் துவக்க விழாவுடன் சூட்டிங்கும் தொடங்கிவிட்டது.
உயர்ந்த தொழில்நுட்பத்துடன் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
படத்தின் தயாரிப்பாளர் 'புன்னகைப் பூ' கீதாவைப் பார்த்தால் அவரே ஒரு ஹீரோயின் மாதிரித்தான் இருக்கிறார். பேசாம நீங்களே ஹீரோயினா நடிக்கலாமே என்று அவரிடம் சொன்னால், அதற்கும் சிரிப்பைத் தான் பதிலாகத் தருகிறார்.
படத்தில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்க உள்ள இந்த டீம், பாடல் காட்சிகளுக்கு வழக்கம்போல் வெளிநாடுகளுக்குப் பறக்கும் திட்டத்தில் இருக்கிறது.
புதுமுகங்களை வைத்து எடுத்தாலும், சிக்கனம் பார்க்காமல் படத்தை ரிச்சாகக் கொண்டு வரும் முடிவில் இருக்கும் கீதா, பணத்தை கஞ்சத்தனம் இல்லாமல் எடுத்துவிட்டு வருகிறார்.
மலேசியத் தமிழ் பெண்ணின் முதல் பட முயற்சி இது. நல்ல படமா வந்தா சரி...!
thatstamil.com
|
|
|
| புதிய வைரஸ் |
|
Posted by: yarlmohan - 11-11-2004, 05:55 PM - Forum: கணினி
- Replies (11)
|
 |
புதிய வைரஸ் ஒன்று மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்பினைத் திறப்பதன் மூலம் பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உங்களுக்கு உங்களது credit cardல் இருந்து 175 டொலர் paypal நிறுவனம் மூலம் கழிக்கப்பட்டுள்ளதாக ஒர் மின்னஞ்சல் வரும். அந்த மின்னஞ்சலுடன் ஓர் இணைய முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ் இணைய முகவரியில் நீங்கள் சுட்டினால் (click செய்தால்) அவ் வைரஸ் உங்கள் கணணிக்கும் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
பின்வரும் தரவுகளுடன் வரும் மின்னஞ்சல்களை அழித்துவிடுங்கள்
<!--c1-->CODE<!--ec1-->Hi! I am looking for new friends. I am from Miami, FL. You can see my homepage with my last webcam photos!<!--c2--><!--ec2-->
<!--c1-->CODE<!--ec1-->Hi! I am looking for new friends.
My name is Jane, I am from Miami, FL.
See my homepage with my weblog and last webcam photos!<!--c2--><!--ec2-->
<!--c1-->CODE<!--ec1-->Congratulations! PayPal has successfully charged $175 to your credit
card. Your order tracking number is A866DEC0, and your item will be shipped
within three business days.<!--c2--><!--ec2-->
<!--c1-->CODE<!--ec1-->To see details please click this link.<!--c2--><!--ec2-->
<!--c1-->CODE<!--ec1-->DO NOT REPLY TO THIS MESSAGE VIA EMAIL! This email is being sent by
an automated message system and the reply will not be received.
Thank you for using PayPal.<!--c2--><!--ec2-->
மேலதிக விபரங்களுக்கு
http://securityresponse.symantec.com/avcen...doom.aj@mm.html
|
|
|
| யசீர் அரபாத் மரணம் |
|
Posted by: kuruvikal - 11-11-2004, 12:04 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (16)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40068000/jpg/_40068586_arafat203index.jpg' border='0' alt='user posted image'>
<b>இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தின் இரும்புக்கரங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே நிர்கதியாய் நிற்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்குரல்... யசீர் அரபாத்.. பிரஞ் மருத்துவமனையில் அடங்கிக் கிடக்கிறது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!</b>
<b>அடக்குமுறையின் கோரங்களை அனுபவித்தவர்கள் என்ற வகையில் அவ்விடுதலை இயக்க வீரனின் 40 ஆண்டுகால உறுதிமிக்க விடுதலை போராட்ட முன்னெடுப்பை வியந்து பாராட்டும் இன்னேரத்தில் அவனின் இறுதிக்காலம் சர்வதேசத் சதியின் பின்னணியில் வீட்டுக்காவலில் கழிந்தது என்பதுதான் வருந்தத்தக்க விடயம்...! எனினும் இறுதிவரை ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக குரல் கொடுத்து மக்களை வழிநடத்திய பலஸ்தீனத் தளபதிக்கு எமது வீர வணக்கங்கள்....!</b>
யசீர் அரபாத் அண்மைக் காலத்தில் இனம் புரியாத நோய் ஒன்றிற்கு ( நஞ்சூட்டல் காரணமாயும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது) ஆளாகி கடும் சுகவீனமுற்ற நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பதும் கடந்த சில நாட்களாக மூளைமயக்க நிலையில் (கோமா) இருந்தார் என்பதும் இன்றைய தினம் அதிகாலையில் பல்வேறு உறுப்புகளும் செயல் இழந்தமையால் முழு மரணத்தை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது...!
இவருடைய இறப்பை அறிந்து பலஸ்தீனதேசம் சோகத்தில் இருக்க... ஒரு மனிதாபிமான எண்ணமே இன்றி இஸ்ரேல் இது பயங்கரவாதத்தின் மரணம் என்று விமர்சித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது....!
இவருடைய வித்துடல் பலஸ்தீன தேசத்துக்கு எடுத்துவரப்பட்டு ரமல்லாவில் அடக்கம் செய்யப்படும் என்று செய்திகள் தெருவித்தாலும் தன்னுடலை ஜெருசலேத்தில் அடக்கம் செய்யவே அரபாத் விரும்பி இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது...அவருடைய இறுதி ஆசையைக் கூட நிறைவேற்ற இஸ்ரேலிய பயங்கரவாத அரசு அனுமதிக்குமா....???! :evil: :?:
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40512000/jpg/_40512999_tears-ap-203body.jpg' border='0' alt='user posted image'>
சாதாரண பலஸ்தீன மக்களின் உணர்வலைகள்...!
-------------------------------------
<b>The veteran Palestinian leader Yasser Arafat's profile...</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39462000/jpg/_39462946_arafat203bodyap.jpg' border='0' alt='user posted image'>
<b>24 Aug 1929: Born in Cairo
(Now his Age : 75)
1948: Founds Fatah
1969: Elected PLO chairman
1974: Addresses UN General Assembly
1982: Expelled from Lebanon by Israelis
1990: Supports Saddam Hussein during First Gulf War
1991: Marries Suha Tawil
1993: At the White House signs peace agreement with Israel
1994: Jointly awarded Nobel peace prize with Rabin and Peres
2001: Israel blockades him inside Ramallah headquarters </b>
Source : bbc.com
|
|
|
| முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி! |
|
Posted by: yarl - 11-11-2004, 09:34 AM - Forum: விளையாட்டு
- Replies (12)
|
 |
முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி!
புதன், 10 நவம்பர் 2004
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை கலக்கி வந்த தூஸ்ரா பந்துகளுக்கு விதித்திருந்த தடையை சர்வதேச கிரிக்கெட் பேரவை விலக்கிக்கொண்டுவிட்டது!
தூஸ்ரா வகை பந்துகளை முரளிதரன் வீசும்போது அவருடைய முழங்கை அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக நீள்கிறது என்று கூறி அளித்த அறிக்கையின் அடிப்படையில் அதனை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கடந்த மே மாதம் ஐ.சி.சி. அறிவித்தது!
இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் சிறப்பு ஆலோசகரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஆங்கஸ் ஃப்ரேசரிடம் ஆலோசனை கேட்டிருந்தது ஐ.சி.சி..
சுழற்பந்து வீச்சாளர்கள் 15 டிகிரி வரை தங்களுடைய கரத்தை நீட்ட அனுமதிக்க வேண்டும் என்று ஆங்கஸ் ஃப்ரேசர் அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு முரளிதரனுக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நீக்கிக்கொண்டதாக தி இண்டிபெண்டண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆங்கஸ் ஃப்ரேசர், தி இண்டிபெண்டண்ட் நாளிதழின் கிரிக்கெட் செய்தியாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக் கரம் 5 டிகிரிக்கு மேல் நீட்டப்படக்கூடாது என்று 2001 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிமுறையை தளர்த்தி அதனை 15 டிகிரியாக உயர்த்தியுள்ள ஐ.சி.சி..
டெஸ்ட் கிரிக்கெட்டில் 532 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முத்தையா முரளிதரனை இதற்குமுன் இரண்டு முறை பந்தை எறிவதாகக் கூறி சர்ச்சைiயை ஏற்படுத்தியது ஐ.சி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.
webulagam
|
|
|
| வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல - புதுவை |
|
Posted by: hari - 11-11-2004, 08:03 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
வெள்ளைக் கொடி கட்டிய
வீட்டிலிருப்பது
விடுதலை அல்ல.
<b>"இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்ரும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே."</b>
பாரதி!
சுதந்திர தேவியின் பாதங்களை வருடி
ஆயிரம் வரிகளால் அர்ச்சித்த பாவலனே!
எட்டயபுரத்து அரசே!
எங்களுக்காகவா எழுதினாய் இப்பாட்டு?
கைதொழத் தக்க கவிஞனே!
காலம் கடந்தாலும் நீளும் உன்குரல்
இன்றுமெம் காதில் ஒலிக்கிறது.
நெருப்பிற் புதைத்து பழுக்கக் காய்ச்சிய சொற்களால்
பொய்யில்லாம் பாடல் புனைந்தவனே!
விடுதலையை விரும்புறும் எவருக்கும்
உன்பாடல் உருவேற்றும்.
விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்று
உன் இதயக்குகையெங்கும் இருந்தது விடுதலை.
எம் தேசத் திசையெங்கும் எழுவதும் விடுதலை.
விடுதலை என்பதின் விளக்கமென்ன?
சுதந்திரத்தின் சுருதிப் பொருள் யாது?
அனுபவத்தறியாததிற்கு உவமை கூற முடியாது,
கற்பனையிற்தான் கொஞ்சம் கண்டு கொள்ளலாம்
விடுதலையை விரித்துரைக்க முடியாதெனினும்,
இது காற்றைப் போல ஒரு உல்லாசம்,
கட்டளையற்றுப் பொழியும் மழை போன்ற சல்லாபம்,
சிட்டுக்குருவியின் சிறகசைப்பைப் போல ஆனந்தம்,
அதிகாலை இதழ் விரிக்கும் மல்லிகைப் பூவின் பரவசம்.
மலைதழுவும் கருமுகிலின் மகிழ்ச்சி
இரு என்று சொல்லவும்,
எழு என்று உத்தரவிடவும்,
எஜமானர்களற்ற இருப்பு,
என்னை நானே தீர்மானிக்கும் வாழ்வு
இதுவே விடுதலை.
அதற்காவே போராட்டம்.
அப்படியா?
கற்பனையிற்கூட எத்தனை ஆனந்தம்.
கைவிலங்குகளற்ற கைதிகளாக வாழ்வதிலும்
மூச்சைத் துறந்து முடிந்து விடுவது மேலானது.
எம் ஊரில்
எம் வீட்டில்
சுற்றம் சூழ இருப்பது மட்டும் சுதந்திரமல்ல
எம் வாழ்வை இன்னொருவன் தீர்மானிப்பது
விடுதலையுமல்ல.
பட்டிமாடுகளின் கழுத்தில் கயிறில்லை என்பதற்காக
மாடுகள் சுதந்திரமானவை என்று சொல்ல முடியுமா?
கூண்டுக் கிளியை கொஞ்சி மகிழ்வார்கள்
பறந்துசெல்லப் பார்த்திருப்பார்களா?
இன்னொருவனுக்குக் கீழே இருந்து கொண்டு
என்னை நானே தீர்மானிக்கின்றேனென்பது
எவ்வளவு வேடிக்கையானது?
வீட்டு நாய் விறாந்தையில் ஏற முடியும் என்பதற்காக
நான் சுதந்திரமானவனென்று
நாய் எப்படிக் கூறமுடியும்?
இன்று
ஊருக்குப்போன உறவுகளெல்லாம்
"ஆனந்த சுதந்திரம்" அடைந்துவிட்டோமென்று
பாட்டுக்கள் பாட பகைவன் விடுவானா?
சின்னத்திரையில் வண்ணப்படம் பார்ப்பதும்,
"சீமைச் சரக்கில்" வாய் நனைத்துக் கொள்வதும்,
பள்ளிக்குப் போவதும்,
பரீட்சை எடுப்பதும்,
வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பதும்
விடுதலையல்ல.
விளக்கேற்றாதே,
வீதிக்குவராதே,
ஆறு மணிக்குள்ளே அடங்கிப்போ என்றதும்,
கூனிக்குறுகிக் கிடப்பதும் சுதந்திரமல்ல....
எம்வீட்டில்,
எம் ஊரில்,
தும்மவும், இருமவும் அனுமதிபெற வேண்டுமென்றால்
அந்த வாழ்வு யாருக்கு வேண்டும்?
எந்தையர் பூமியில் உலா வரும் உரிமம் கூட
எமக்கில்லை என்றான பின்பு
சும்மா மூச்சு விடுவதற்குப் பெயர் சுதந்திரமென்றால்
சொன்னவன் மனிதனல்ல... சோற்றுப் பிண்டம்.
கைகட்டி சேவகம் செய்பவனுக்கு
காற்சட்டை வேண்டியதில்லை.
வெட்கமென்ன வெட்கம்?
நிர்வாணமாகவே நிற்கலாம்.
அடிமை வாழ்வில் அழுந்திக் கிடப்பவனுக்கு
தோலின் துவாரத்தில் வியர்வை கசிவதில்லை
நாயாய் கிடப்பவனுக்கெதற்கு கோயிலும், குளமும்?
சுதந்திரமற்ற ஊரில் திருவிழா எதற்கு?
நான் நானாக இல்லையென்றான பின்னர்
தேனென்ன? திரவியமென்ன?
உன்னுடலுக்கெதற்கு உணவென்று
நாக்குக் கூட நகைத்துக் கொள்ளும்
ஊரிலிருந்தால் உன்னதம் தான்.
ஆனால், அடிமையற்று இருத்தல் வேண்டும்.
ஏவல் செய்து கொண்டு இந்திரபுரியில் இருப்பதிலும்
சுதந்திரமாக வனாந்திரத்தில் வாழ்வது சுகமானது.
அச்சத்தோடு அரியணையில் இருத்தலிலும்
பயமேதுமின்றி தரையிலிருத்தல் தாழ்வன்று,
மீளா அடிமையென ஊரிலிருத்தலிலும்
கைவீசிக் கொண்டு காட்டிலிருத்தலே ஆனந்தம்.
வாய்பொத்திக் கொண்டு வலிகாமத்தில் வாழ்வதிலும்
வாய் திறந்து பாடி வன்னியிலிருத்தல் மேலானது.
ஊர்வந்த பகை தொலத்தெம் பிள்ளைகள் வருவர்.
தலைவன் கொடியேற்றினானெனும் செய்தியும் வரும்.
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந் நாடே" என்று மகிழ்ந்து
பரந்தன் வீதியில் பாடிக்கொண்டும்
நாமுமெம் ஊர் புகுவோம் ஓர் நாள்.
அன்று வலிகாமம் மட்டும் மீட்டதாய் இராது.
தேசம் முழுமையும் எம் வசமானதாய்,
"தமிழீழம்" எல்லையிடப்பட்டு தனி நாடானதாய்
விடுதலையின் மெய்ப்பொருள் உணர்ந்ததாய் இருக்கும்
உறுதி குலையாது ஒருவன் உள்ளான்
அவனெம் தலைவன்.
மானம் பெரிதென்ற மகுடம் அவன் தலையில்
ஈனம் துடைக்கின்ற இறுமாப்பு அவன் நெஞ்சில்,
வானம் இடிந்தாலும் வளையாத மனமுண்டு
வரிவேங்கைப் படைவென்று வருமென்ற திடமுண்டு
அடிமைத்தனத்தில் உழலும் உறவுகளுக்கு
சுதந்திரதேவி!
உன் கண்ணின் ஒளி கொடு
நிமிர்ந்தெழு நெஞ்சில் உரம் கொடு
விடுதலை எம் மூச்சு
விடுதலை எம் வாழ்வு
அடிமை நரகில் அழுந்திக் கிடப்பதிலும்
விடுதலைக்காக எழுந்து வீழ்ந்து மடிந்தாலும்
அது பெருவாழ்வெனப் பெருமை கொள்வோம்.
ஒன்றே தேசம்
ஒருவனே தலைவன்
வென்றே வருவோம்
விடுதலை பெறுவோம்
புதுவை இரத்தினதுரை
வைகாசி, 1996
|
|
|
| உளவாளிகள் |
|
Posted by: Jude - 11-11-2004, 07:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாழ்.நகரில் தீபாவளி வியாபாரம் என்ற போர்வையில் அரச உளவாளிகள்.
[வியாழக்கிழமை] 11 நவம்பர் 2004 [ ஆசிரியர்பீடம் யாழ்ப்பாணம் ]
யாழ்.நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் தீபாவளி வியாபாரம் எனும் தோற்றத்தில் தென்னிலங்கையில் கடமையாற்றிய பல அரச உளவாளிகள் யாழ் மாவட்டத்தில் நடமாடிவருவதாக நேரில் பார்த்தவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளித் திருநாளை முன்னிட்டும் இதனைச் சாட்டாக வைத்தும் பலநு}ற்றுக்கு மேற்பட்ட உளவாளிகள் நடைபாதை வியாபாரிகள் போன்று யாழ்.நகரில் குவிந்துள்ளனர். யாழ்.மாநகர சபையினரால் நடை பாதை வியாபாரத்துக்கென யாழ்.முனீஸ்வரன் வீதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட போதும் அங்கு தற்பொழுது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த வெளியுூர், நடைபாதை வியாபாரிகள், யாழ்.வைத்தியசாலை வீதி, மின்சாரநிலைய வீதி, ஆகிய வீதிகளிலுள்ள நடைபாதைகளிலும் யாழ்.நவீன சந்தைப் பகுதிகளிலும் தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்று நடமாடிவருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் , இதனால் மேற்படி இடங்கள் சன நெரிசலில் சிக்கியிருப்பதாகவும் அறிய வருகிறது.
நிதர்சனம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நுற்றுக்கணக்கான உளவாளிகளினால் யாழ்ப்பாண நடைபாதையில் சனநெரிசல்...
தமிழ்மக்களை இப்படியும் முட்டாள்களாக நினைக்கும் இணையத்தளங்கள் இருக்கின்றனவே!
|
|
|
| மாவீரர் நாள் உறுதிமொழி |
|
Posted by: Sothiya - 11-11-2004, 06:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி,
வழிகாட்டி, எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழி மூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம். தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே ! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே !
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
ஏங்கே! எங்கே! ஒரு தரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமுமை வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
(எங்கே! ,எங்கே!)
உயிர் விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது ‘தமிழீழம்’ – அதை
நிரை நிரையாகவே நின்றினி, விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர் பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம், உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.
(எங்கே! ,எங்கே!)
இப்பாடலை ஒலி வடிவில் கேட்க விரும்புகிறேன். எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன்.
|
|
|
| Please Help Me! |
|
Posted by: கறுணா - 11-10-2004, 11:39 PM - Forum: கணினி
- Replies (6)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
காய் யாழ்க்கள கணனி எக்ஸ்பேட்ஸ்!
"கோணல் கறுணா" ஆகிய எனக்கு கணனித் துறையில் அனுபவம் வாய்ந்த உங்கள் உதவி தேவைப்படுகிறது? உங்களில் திறமைசாலிகளை பின்னாளில் பில்கேட்ஸைப் போல உருவாக்குவேன்? அதைக் கொள்கையளவிலும் ஏற்றுக் கொண்டுள்ளேன்!
.... வேறையொண்டுமில்லை உந்த யாழ் களத்திலே படங்களை இணைப்பது தொடர்பாக சின்ன கெல்ப் தேவை? விளக்கமாகத்தேவை? தெரியாதோ அறிவு அப்படி இப்படித்தான்!.......
மற்றும் உங்களில் ஒருவரை பில்கேற்றாக உருவாக்குவது சம்பந்தமாக "டக்லூசு", "பரந்தன் ராசன்" ... போன்றதுகளோடு உயர்மட்ட பேச்சு வார்த்தையை இப்போதெ தொடங்கி விட்டேனென்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்!
மேலதிக விபரங்களுக்கு ....
www.karuna@onion.com/pleasehelpme
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
|