Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி!
#1
முரளிதரன் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. அனுமதி!

புதன், 10 நவம்பர் 2004
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை கலக்கி வந்த தூஸ்ரா பந்துகளுக்கு விதித்திருந்த தடையை சர்வதேச கிரிக்கெட் பேரவை விலக்கிக்கொண்டுவிட்டது!

தூஸ்ரா வகை பந்துகளை முரளிதரன் வீசும்போது அவருடைய முழங்கை அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக நீள்கிறது என்று கூறி அளித்த அறிக்கையின் அடிப்படையில் அதனை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கடந்த மே மாதம் ஐ.சி.சி. அறிவித்தது!

இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் சிறப்பு ஆலோசகரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஆங்கஸ் ஃப்ரேசரிடம் ஆலோசனை கேட்டிருந்தது ஐ.சி.சி..

சுழற்பந்து வீச்சாளர்கள் 15 டிகிரி வரை தங்களுடைய கரத்தை நீட்ட அனுமதிக்க வேண்டும் என்று ஆங்கஸ் ஃப்ரேசர் அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு முரளிதரனுக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நீக்கிக்கொண்டதாக தி இண்டிபெண்டண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கஸ் ஃப்ரேசர், தி இண்டிபெண்டண்ட் நாளிதழின் கிரிக்கெட் செய்தியாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக் கரம் 5 டிகிரிக்கு மேல் நீட்டப்படக்கூடாது என்று 2001 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிமுறையை தளர்த்தி அதனை 15 டிகிரியாக உயர்த்தியுள்ள ஐ.சி.சி..

டெஸ்ட் கிரிக்கெட்டில் 532 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முத்தையா முரளிதரனை இதற்குமுன் இரண்டு முறை பந்தை எறிவதாகக் கூறி சர்ச்சைiயை ஏற்படுத்தியது ஐ.சி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

webulagam
Reply
#2
மகிழ்ச்சியான தகவல், நன்றி அண்ணா
Reply
#3
அப்படியா... இது நம்ம கண்ணில் படாமல் போச்சே... தகவலுக்கு நன்றி யாழ் அண்ணா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த முடிவை ஐ சி சி பகிரங்கமாக அறிவித்ததாய் தெரியவில்லை.... பொறுத்திருந்து பார்ப்போம்...!

அப்ப எனி முரளியின் சாதனைப் பட்டியல் நீளும் என்று எதிர்பார்க்கலாம்....ஆனா சிறீலங்கா அணி எனி முரளிக்கு சரியா ஆட இடமளிக்குமா என்பதுதான் கேள்வி...இப்போ சேன் வோன் முரளியின் சாதனையை முறையடிக்க அவர் அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படாமையே காரணம்...ஏன் இந்த நிலை முரளிக்கு வந்தது...இதன் உள்நோக்கம் என்னவோ...????! :twisted: Idea

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40508000/jpg/_40508819_murali203.jpg' border='0' alt='user posted image'>

சிறீலங்காத் தகவலின் படி... முரளிக்கு அண்மையில் நிகழ்ந்த தோற்பட்டை சத்திரசிகிச்சை காரணமான அசெளகரிகங்கள் பூரணமாக அகலும் பட்சத்தில்.... அடுத்த ஆண்டு தைத்திங்களில் இருந்து அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது...!

தகவல் : bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவலுக்கு நன்றி.

முரளி மிகவிரைவில் விளையாட அனுமதிக்கப்படுவா÷ .....................?
<b> </b>
Reply
#5
இனி முரளி பந்தை கோபத்தில் எறிந்து போட்டாலும் ஒஸ்ரேலியாகாரா் குற்றம் சொல்லமுடியாத நிலமை வரபபோகிறது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#6
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இனி முரளி பந்தை கோபத்தில் எறிந்து போட்டாலும் ஒஸ்ரேலியாகாரா் குற்றம் சொல்லமுடியாத நிலமை வரபபோகிறது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்ல ஜடியாக்கொடுக்கிறியளோ.?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
அப்ப 1000 விக்கட்டுகள் வீழ்த்தி சாதனை படைக்க வேண்டியதுதான்.

எரிச்சல் பிடித்தவர்கள் இப்போதே கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
<b> . .</b>
Reply
#8
நன்றி
[b][size=18]
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அப்ப 1000 விக்கட்டுகள் வீழ்த்தி சாதனை படைக்க வேண்டியதுதான். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன கிருபன்ஸ் காணுமா? இவ்வளவும்
இன்னும் கொஞ்சம் கூட எடுக்கட்டுமே. முரளிக்குப் பிறகு யாராவது தமிழர்கள் வருவார்களோ தெரியாது அதனாலை இப்பவே முரளி தமிழர்களின் சார்பாக அதிக விக்கட்டுக்களை விழ்த்தட்டும்
<b>
?
- . - .</b>
Reply
#10
தயவுசெய்து யாரும் முரளியை தமிழன் என்பதற்காக ஆதரிக்காதீர்கள்...ஒரு சிறந்த சுழல் பந்து வீச்சாளன் விளையாட்டு வீரன் என்று பார்த்தே ஆதரியுங்கள்....!

முரளி தமிழன் என்பதிலும் பார்க்க சிறீலங்கன் என்று தான் உலகில் பார்க்கப்படுகிறார்...அதெற்கும் மேலாய் கிரிக்கெட் வீரனாகவே உலகிற்கு அவரைத் தெரியும்...அரசியல் ரீதியாக இன ரீதியாக அல்ல....! எங்கும் இந்த தமிழன் என்ற இன உணர்வு ரீதியான பார்வையைப் புகுத்துவதை தவிர்ப்பது நல்லம்...இனத்தின் மீது பற்றிருக்கலாம்...வெறியாக அதுமாறக்கூடாது...பின் சிங்களவருக்கும் எமக்கும் பேதமில்லா நிலையே தோன்றும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உண்மையைச் சொன்னால் குருவிகளுக்கு அறிவு வந்தது முதலாய் ஆதரிப்பது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியைத்தான்... திறமை... ஒற்றுமை... வெற்றி தோல்வியை சமனாக மதிக்கும் செயல்..மற்றைய வீரர்களுக்கு கொடுக்கும் மதிப்பு... அரசியல் இல்லா விளையாட்டு....இப்படிப் பல அம்சங்கள் அவர்களிடம் இருப்பதால்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
முரளி தமிழன் என்பதற்காக மட்டும் அவரை ஆதரிக்கவில்லை. அவரை ஆதரிப்பதற்கு அவரிடமிருக்கும் திறமையே முதன்மையானது. ஆனால் மற்றைய வீரர்களை விட அவரிடம் எமக்கு ஒரு ஈர்ப்பு தானாகவே வருகிறது. அது அவர் தமிழனாக இருப்பதால்தான்.

உங்களைப் போலவே நானும் தென்னாபிரிக்க அணியின் ரசிகன். ஆனால் 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் அவர்கள் அவுஸ்திரேலியாவிடம் தோற்று என்னை அழ வைத்து விட்டார்கள். அத்தோடை கிரிக்கெட் மீதிருந்த பிடிப்பு அகன்று போனது.

தற்போது முரளியின் சாதனைகள் மாத்திரமே கிரிக்கெட் செய்திகளை படிக்க வைக்கிறது. அது முரளி தமிழன் என்பதால் மாத்திரமே!
<b>
?
- . - .</b>
Reply
#12
நானும் முரளியின் பரம ரசிகன். முரளி அணியில் விளையாடினால் மட்டும் தான், அந்த விளையாட்டை ரசித்து பார்ப்பேன். இலங்கை அணி வெல்லவேண்டும் என்று துடிப்பேன். முரளி இல்லாத மட்சுகளில் யார் வென்றாலும் அதைபற்றி அலட்டிக்கொள்ளமாட்டேன். அந்த உணர்வு சரியா பிழையா என்றும் தெரியாது எப்படி வந்தது என்றும் தெரியாது!
Reply
#13
உங்கள் இரண்டு பேரின் சொந்த நிலைப்பாட்டில் இருந்து குருவிகளின் சொந்த நிலைப்பாடு வித்தியாசம் தான்... இதில் அவரவர் விருப்பம் மனச்சார்போட்டம் (வாழும் சூழலில் உள்ள கருத்தோடு ஓடுவது) உங்களை எங்களை அறியாமல் எழும் இனப்பற்று இப்படிச் சில மறைமுக விடயங்கள் செல்வாக்குச் செலுத்துவதால்...!

இந்த இடத்தில் எங்களுக்கு உதித்த ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்... வெற்றி தோல்விக்காக ஒரு அணியை விரும்புவது அல்லது ஒரு திறமையான அணி என்று மட்டும் பார்த்து ரசிகனாவது அந்த அணி உங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராகப் போய்விட்டால் அதன் மீதான பிடிப்பும் போய்விடும்... நாங்கள் சிறியவர்களாக இருந்த போது எல்லோரும் இந்திய அணியை ஆகா ஓகோ என்பார்கள்...நாங்களும் விளக்கம் இன்றி அதன் ரசிகரானோம்... இந்திய இராணுவம் வந்த கையோடு அந்த ரசனை மாற்றியது பின்னர் 90,95 இடம்பெயர்வுகளின் பின் கொழும்புக்கு வந்தோர் எல்லாம் கொழும்பில் இருந்தோர் எல்லாம் பெரும்பாலும் இலங்கை அணி ரசிகரானார்கள்... நாங்கள் அப்படியாகவில்லை....!

இந்திய அணியை விளங்காமல் ஆதரித்ததை கைவிட்டு விளங்கி ஒன்றை ஆதரிக்க முயன்றோம்..பல வழிகளிலும் சிறப்பாகத் தெரிந்தது தென்னாபிரிக்க அணி.... அன்று தொட்டு இன்று வரை என்றும் அதே அணிக்குத்தான் எம் ஆதரவு...அதற்காக மற்றைய அணிகளின் திறமையை ரசிப்பதில்லை என்றில்லை.... ரசிப்போம்... தனி வீரர்களின் திறமையையும் ரசிப்போம் பாராட்டுவோம்...அந்த வகையில் முரளி மீதும் ஒரு ரசிப்பு.. பாராட்டு வரும்... அதேபோல் சேன் வோனும் எமக்கு ஒன்றுதான்....!

விளையாட்டில் திறமைக்கும் அவரவர் மைதானத்திலும் வெளியிலும் மற்றவர்களை (ரசிகர்கள், சக வீரர்கள் உள்ளடங்கலாக) மதிக்கும் தன்மைக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்போம்...மதிப்புக் கொடுக்காத தலைக்கணக்களைப் பிடிப்பதில்லை....உதாரணம் திறமை இருந்தும் மற்றவர்களோடு அணுகும் முறையில் பிழை... இலங்கை அணியில் பலருக்குண்டு...! :twisted:

(இது குருவிகளின் சொந்தப் பார்வை... உங்களுக்காக...!) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)