![]() |
|
மாவீரர் நாள் உறுதிமொழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மாவீரர் நாள் உறுதிமொழி (/showthread.php?tid=6455) |
மாவீரர் நாள் உறுதிமொழி - Sothiya - 11-11-2004 மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி, வழிகாட்டி, எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழி மூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம். தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே ! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே ! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். ஏங்கே! எங்கே! ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே! ,எங்கே!) உயிர் விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது ‘தமிழீழம்’ – அதை நிரை நிரையாகவே நின்றினி, விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம் தலைவனின் பாதையில் தமிழினம் உயிர் பெறும் தனியர(சு) என்றிடுவோம் - எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம், உங்களின் நினைவுடன் வென்றிடுவோம். (எங்கே! ,எங்கே!) இப்பாடலை ஒலி வடிவில் கேட்க விரும்புகிறேன். எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன். - Sriramanan - 11-11-2004 சோதியா இப் பாடலின் புனிதத் தன்மை கருதி இப் பாடல் ஒலி நாடாவிலோ இறுவெட்டிலோ வெளியிடப்படவில்லை. மாவீரர் நாளில்த் மட்டும்தான் இப்பாடல் புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பப்படும். அதேவேளை இப் பாடல் ஒரு மாவீரனின் வித்துடல் விதைக்கப்படும் போதும் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாடப்படும். யாராவது இப்பாடல்களை ஒலிபதிவு செய்து வைத்திருந்தால் தயவு செய்து அதனை அழித்து விடுங்கள் - Suji - 11-11-2004 ரமணன் இந்தப்பாடல் குறுவட்டில் வந்திருக்கிறது. சீக்கிரம் எந்த இசைத்தட்டு என்று கூறுகிறேன் .கண்டிப்பாக உவ÷ கறுனாவுக்கு தொிந்திருக்கும் - Thusi - 11-11-2004 இப்பாடலில் 1995ம் ஆண்டின் பின்ன÷ ஒரு திருத்தம் வந்திருக்கிறது. 1995 வரை நவம்ப÷ 27 அதிகாலை 12 மணிக்கே மாவீர÷ துயிலும் இல்லங்களிலும், ஏனைய இடங்களிலும் மாவீர÷களுக்கான சுடரேற்றப்பட்டு இப்பாடல் இசைக்கப்பட்டது. பின்ன÷ 1995இல் இருந்து முதல் மாவீர÷ லெப். சங்க÷ வீரச்சாவடைந்த நேரமான நவம்ப÷ 27 மாலை 6.05 மணிக்கே மாவீர÷ சுடரேற்றப்பட்டு இப்பாடல் இசைக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக, நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம் என்ற வரியானது மாற்றப்பட்டு, முன்னிராவேளையில் நெய்விளக்கேற்றியே என்று இசைக்கப்பட்டு வருகிறது. மாற்றத்தைக் கவனிக்கவும். - tamilini - 11-11-2004 இந்தப்பாடலை நானும் கேட்டிருக்கிறேன் .TTN . இல் என்டு நினைக்கிறன்.... சோதியாக்காவை களத்தில் காண்பதில் மகிழ்ச்சி ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-12-2004 இப்பாடல் பற்றி விளக்கம் அழித்த அனைவருக்கும் நன்றி - Sriramanan - 11-12-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இப்பாடல் பற்றி விளக்கம் அழித்த அனைவருக்கும் நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எங்கள் விளக்கத்துக்கு நன்றி சொன்ன உங்களுக்கும் எல்லோர் சார்பிலும் எனது நன்றிகள் உரித்தாகட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :wink: :wink: - Sothiya - 11-14-2004 ஆனால் கடந்த வருடம் ஏதோ ஒரு இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்ய கூடியதாக இருந்தது... அப்பக்கம் மறந்து விட்டது... அதனால் தான் கேட்டேன்.. பதிலளித்த அனைவரிற்கும் நன்றிகள். - Sothiya - 11-14-2004 சோதியாக்காவை களத்தில் காண்பதில் மகிழ்ச்சி ....! தமிழினி.......! எல்லாம் உங்கட வழிகாட்டல் தான் தமிழினி தங்கச்சி... அடுத்த ஏப்ரலுக்கு பிறகு அடிக்கடி உங்களை களத்தில சந்திச்சு மகிழ்ச்சிப்படுத்துவன் தங்கச்சி... அதுவரை இப்பிடித்தான் எப்பவாவது... |