Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 356 online users.
» 0 Member(s) | 353 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,639
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
Posted by: Sriramanan - 11-13-2004, 05:53 AM - Forum: புலம் - Replies (235)

கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்

கனடாவில் பல தமிழ் இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிக முறைப்பாடுகளைக் கனடாவிலிருந்து விடுமுறைக்குத் தாயகம் திரும்பும் பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு குழுக்களாக நடமாடும் தமிழ் இளைஞர்கள் செய்யும் தவறுகள் பல சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்திற்கே இழுக்காக அமைவதாக கனடாவில் வாழ்ந்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். இவர்கள் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தமிழ் மக்கள் மீது கனடா நாட்டவர்கள் வைத்திருக்கும் நற்பெயரைச் சீர்கெடுப்பதாகவும் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அரசியல் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்தார்.

இவ்வாறு தொழிற்படும் ஆயுதக்குழு ஒன்று இன்றும் கனடாவில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு ஆயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

நன்றி: நிதர்சனம்

Print this item

  கருணாவையும் குழுவையும் நேரடியாக இயக்குவது யார்....?!
Posted by: kuruvikal - 11-13-2004, 02:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

<b>ஈ.பி.டி.பி முகாமில் இருந்தே செயற்படுகிறோம் : கருணா குழு உறுப்பினர் </b>

நேற்றைய தினம் இரண்டு பொதுமக்கள் மீது கிளைமோர் மற்றும் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அர்ச்சுனன் விஐயகுமார் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது, மேற்படி நபரை 14 நாட்களிற்கு விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்டப் பதில்நீதிபதி திரு. டி.சி. சின்னையா இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் களுவாங்கேணிச் சந்தியில் வைத்து துரைராஐh விமலேந்திரன், நல்லதம்பி பேரின்பராஐh ஆகிய இரு பொதுமக்கள் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும், அது அவர்கள் அவ்விடத்தைக் கடந்ததுமே வெடித்ததால் அவர்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் மேற்படி இருவரும் அதிர்ஷ்டவசமாக இவ்விரு தாக்குதல்களிலிருந்தும் தப்பியதையடுத்து, இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி மேற்படி நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வேளையில், இந்தக் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் கைக்குண்டுத் தாக்குதல் குறித்த தகவலும், அதனை நடத்திய நபர் ஏறாவூர்ப் பக்கமாகத் தப்பிசெல்வது குறித்த தகவலையும் பொலிசாருக்கு பொதுமக்கள் உடனடியாகவே தெரிவித்ததையடுத்து மேற்படி நபர் பொலிசாரால் ஏறாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், தான் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் செங்கலடியிலுள்ள ஈ.பி.டி.பி. முகாமிலிருந்து செயற்படுவதாகவும் தெரிவித்ததாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.தர்மசேனா ரத்னாயக்கே நீதிபதியிடம் தெரிவித்தார்.

இது பற்றி பொலிசார் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி நபர் தான் இவ்வாறு இயங்குவதற்கான வசதிகளை ஈ.பி.டி.பி.யே ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும், தான் செங்கலடியிலமைந்துள்ள ஈ.பி.டி.பி. முகாமிலேயே வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் எனவும், மேற்படி நபருக்கு எவ்வாறு கிளைமோர்க் குண்டு மற்றும் கைக்குண்டு கிடைத்தன என்பது பற்றி தாம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு, மேற்படி நபர் செங்கலடி ஈ.பி.டி.பி முகாமில் அடிக்கடி காணப்படுவதால் ஈ.பி.டி.பி உறுப்பினராக இருக்கலாம் என தாம் முதலில் சந்தேகம் கொண்டதாகவும், ஆனால் தாம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரனையின் படி கொலக்கன்னா வெளியைச் சேர்ந்த அருச்சுனன விஜயகுமார் என்ற இந்த 25 வயது நபர் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்பதும் ஈ.பி.டி.பி. ஆதரவுடன் செயற்படுபவர் என்பதும் தெரியவந்ததாகத் தெரிவிததனர்.

puthinam.com

Print this item

  மீண்டும் ஓர் இலங்கை - இந்திய ஒப்பந்தம்...!
Posted by: kuruvikal - 11-12-2004, 11:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<b>இந்தியா இலங்கை ஒப்பந்தத்துக்கு புலிகள் எதிர்ப்பு</b>

இந்தியா இலங்கைக்கு இடையிலான ராணுவ ஒப்பந்தம், அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

இணையத் தளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

இந்தியாவுடன் இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது, ராணுவ பலத்தில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தும். அமைதிக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற செயலை தமிழ் மக்கள் அநாவசியமான செயலாகத் தான் பார்ப்பார்கள்.

மேலும் இது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும் எதிரான செயலாகும். தமிழர்களின் இந்தக் கருத்தை இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம்.

மேலும் அமைதிப் பேச்சுவார்த்தையை இது பாதிக்கும். இது தொடர்பான எங்களது கருத்தை இந்திய அரசுக்கு நாங்கள் தெரிவித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

thatstamil.com

Print this item

  வணக்கம்
Posted by: ramya - 11-12-2004, 04:31 PM - Forum: அறிமுகம் - Replies (28)

வணக்கம்,நான் சிங்கப்பூரிலிருந்து ரம்யா.யாழ் நண்பர்களுடன் உரையாட வந்துள்ளேன்.

Print this item

  இதயத்துள் ஒரு கோலம்...!
Posted by: kuruvikal - 11-12-2004, 04:09 PM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

<img src='http://kuruvikal.yarl.net/archives/11001_wallpaper280.jpg' border='0' alt='user posted image'><img src='http://kuruvikal.yarl.net/archives/30052_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

என் இதயத்தின் மையெடுத்து
உன் பிறை நுதலில் திலகமிட்டு
உனக்காய் வாழ்வதாய் சத்தியம் செய்தேன்...!
என் உயிர் நூல் இழைத்து
என்னை உன்னுடன் பின்னி வைத்து
ஓரங்கமானேன் ஓயாமல் உன்னோடிருக்க...!
ஒளியாய் என் பார்வை தந்து
ஒளிக்கும் நிலவாய் உன்னை வைத்தேன்
என்றும் நீ எனக்கு பெளர்ணமியாய் தோன்றிட....!
காந்தல் மலரொடித்து கருவி செய்தேன்
உன் கரங்கள் பஞ்சணையாக்கி
என்னை அங்கே பதுக்கி வைக்க....!
கொவ்வையும் மாதுளையும் கண்டேன்
பொருத்தி ஒரு உருச்செய்து
உன் வதனமதில் ஒளித்து வைத்தேன்
சொல்லெனும் தேன் சொட்டும்
அட்சய பாத்திரமாக...!
மலையேறி முகில் பிடித்து
வாரியதை வளையப்பண்ணி நெடும் கூந்தலாக்கி
பெட்டகமாம் உன்னில் பொருத்தி வைத்தேன்
பொக்கிசமாக....!
கடும் இருள் கவ்வ கருவியோடு ஏகி
ஆழிதனில் கண்டெடுத்தேன் கயல்தனை
மீன் தொட்டியாம் உன்னில் விட்டுவைக்க....!
ஆழ்கடல் முத்துக் குளித்தேன்
வலம்புரியோடு முத்துக் கண்டேன்
திருடியதை உன்னில் வைத்தேன் ஜொலித்துட...!
தாஜ்மகாலில் கள்ளமாய் ஒரு பளிங்கெடுத்து
நயமான சிற்பியாய் நானிருந்து செய்திட்டேன்
ஓர் சோடி வளையல் என் பெயர் சொல்லி ஒலித்திட...!
நல்லூரான் வாசலில் யாசகம் செய்து
கந்தன் கருணை வாங்கி
பசும் வெள்ளி கொண்டு சலங்கை செய்தேன்
உன் பாதங்கள் பண்பாட....!
இறுதியில் தவமிருந்து அருள் பெற்று
இம்மலரை தருவித்து
அழகாய் நீ கொண்ட மேகத்தில் இட்டுவைத்தேன்
அதுபோல் வாடா மலராய் நீ இருக்க....!
இத்தனையும் யான் செய்ய நீயோ....
இது பழைய பஞ்சாங்கம்
"பாரா முகமாம்" என்று பழித்துவிட்டு
பரிதவிக்க விட்டியேடி பாவி....!
உனக்காய் நான் புரட்டிய
பழைய பஞ்சாங்கங்கள் நீ அறிவாயோ
அது ஏன் உனக்கு...??!
இருந்தும்...
என்றும் உனக்காய் காத்திருப்பேன்
எனி என் வாழ்வே நீதானடி....!

(முக்கிய குறிப்பு - யாவும் கற்பனை...!) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  வெளிநாடுகளில் புலிகள் பற்றி அறிய
Posted by: yarl - 11-12-2004, 10:58 AM - Forum: புலம் - Replies (17)

வெளிநாடுகளில் புலிகள் பற்றிய தகவல்களை அறிய புலனாய்வு அதிகாரிகள் நியமனம்

சர்வதேச ரீதியில் புலிகள் தொடர்பான தகவல்களைத் திரட் டிக்கொள்ளும் நோக்கில், மேலும் நான்கு சிரேஷ்ட புலனாய்வுத்துறை அதிகாரிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.கடந்த வாரம் நியமிக்கப்பட்ட இரு புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளுள் - தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தாய்லாந் தில் மொத்தமாக ஏழு புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை - பிரிட்டனில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபடுபடுவதற்கு மேலும் இரண்டு புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பத்திரிகையாளர் என்ற போர்வையில் கடந்த பத்து வருடங்களாகத் தொழிற்பட்டு வந்த ஒரு அதிகாரி - மீண்டும் பிரிட்டனுக்கு அனுப் பப்பட்டார்.இதேவேளை - பிரிட்டனில் பணியாற்றிய இன்னொரு பெண் புலனாய்வு அதிகாரி நாடு திரும்பியிருப்பதாகவும் தெரியவருகிறது

eelazhanadu.com

Print this item

  கொலை வழக்கில் சங்கராச்சாரியர் கைது
Posted by: Sriramanan - 11-12-2004, 09:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (14)

கோயில் மேலாளர் ஒருவரை ஆட்களை வைத்துக் கொலை செய்தமைக்காக காஞ்சி சங்கராச்சாரியார் தமிழகக் காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது வேல்ஊர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

ஆந்திர மாநிலத்தில் தங்கியிருந்த மேற்படி சாமியாரை தமிழகக் காவல்த்துறையினரின் விசேட படைப்பிரிவு கைது செய்து விமான மூலம் தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து காவல்த்துறை வாகனத்தில் காஞ்சிபுரத்திலுள்ள நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாமியாரை 15நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதிவரை சங்கராச்சாரியார் சிறையிலிருப்பார்.

................................................................

இது தொடர்பாக தற்ஸ்தமிழ் இணையத் தளத்தின் செய்திகள்

கொலை நடந்தது ஏன்? யார் இந்த சங்கரராமன்?
http://www.thatstamil.com/news/2004/11/12/murder.html

ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு
http://www.thatstamil.com/news/2004/11/12/bail.html

பெங்களுர் கைதராபாத்: ரகசியமாக நடந்த கைது
http://www.thatstamil.com/news/2004/11/12/.../bangalore.html

போலீசுக்கு கருணாநிதி பாராட்டு
http://www.thatstamil.com/news/2004/11/12/karuna.html

காஞ்சி மடம் மூடல்: போலிஸ் பாதுகாப்பு ரத்து
http://www.thatstamil.com/news/2004/11/12/mudd.html

ஜெயேந்திரரைக் காட்டிக் கொடுத்த வங்கி ஆதாரம்
http://www.thatstamil.com/news/2004/11/12/police.html

Print this item

  தளத்தில் பதில் அளிக்க ..
Posted by: Tamilavan - 11-12-2004, 01:13 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (6)

தளத்தில் பதில் அளிக்க முடியவில்லைலலலல .... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  தீபாவளி வாழ்த்துக்கள்
Posted by: Tamilavan - 11-12-2004, 01:06 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (9)

தீபாவளி வாழ்த்துக்கள் தீபாவளி வாழ்த்துக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  யாழ்
Posted by: Tamilavan - 11-12-2004, 01:02 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - No Replies

இவ் யாழ் தளத்தில் நிறைய விடயங்கள் இருக்கின்றன

நன்றி

Print this item