| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 374 online users. » 0 Member(s) | 371 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| இந்த நிலை மாறுமா? |
|
Posted by: Kanani - 11-16-2004, 03:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>பாவிகள் போகும் இடமெல்லாம் பள்ளமும், திட்டியுமா?</b>
<i>அனலைதீவு வயோதிபருக்கு விளங்கிய மருத்துவம், யாழ்ப்பாண வைத்திய அதிகாரிகளுக்கு விளங்கவில்லையா?</i>
யாழ் குடாவில் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவிவரும் புதிய காய்ச்சல் பற்றி அறிய யாழ் வைத்தியசாலைக்குச் சென்றேன்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்காக பராமரிக்கப்படும் விடுதி இல.11. தேடிச் செல்லும் ஒருவர், “Pears” விளம்பரத்தை தாங்கும் வழிகாட்டியில் புதிதாக ஒட்டப்பட்ட “சிறுவர்கள் விடுதி” என எழுதப்பட்டிருப்பதைக் கண்டு, மேலே ஏறிச்சென்றால், இல.6, இல.6A என இரண்டு விடுதிகள் முகப்பில் இருப்பதைக் காண்பார். அவை இரண்டிலும் விசாரித்துப் பார்த்ததில,; இரண்டும் தோல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கான பெண், ஆண்களுக்கான வைத்திய விடுதிகள் இருப்பதைக் காண்பார். சிறுவர்களுக்கான இல.11 ஐ தேடினால், அது குறிப்பிட்ட இரண்டு தோல்நோய் சம்பந்தமான விடுதிகளைக் கடந்தால் எதிர்ப்;படும்.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/14.11.2004/hos_2.jpg' border='0' alt='user posted image'>
அறிவித்தல்
விடுதியின் நடைபாதையில் இருந்த ஐயா ஒருவருடன் கதைத்த போது..
“நாங்கள் தம்பி, அனலதீவு சொந்தஇடம். என்ர பேரனுக்கு நாலைஞ்சு நாளாக காச்சல் என்று வந்து நிற்கிறன். ஆம்பிளையாட்கள் வாட்டுக்குள் இரவு நிற்க முடியாது, ஆனாலும் என்ர பேரனைப்பார்க்க வீட்டில் ஆட்கள் வசதியாக இல்லாதபடியால் நான் பார்க்கின்றேன் அதனால் நான் வாசலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளேன்@ என்ற விளக்கத்துடன் குறிப்பிட்ட ஐயா வாசலிலேயே நிற்பதற்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/14.11.2004/hos_3.jpg' border='0' alt='user posted image'>
அனலைதீவுப் பெரியவர்
உள்ளே சென்று பார்த்;தால் கட்டிலும் நிரம்பி, இரண்டு கட்டில்களுக்கு இடைப்பட்ட நிலங்களிலும் பாய்கள் பரவி ஏராளமான சிறுவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
<img src='http://www.mousegroup.net/tamilsociety/14.11.2004/hos_4.jpg' border='0' alt='user posted image'>
விடுதியின் ஒரு பகுதி
அண்மையில் பெய்துவரும் மழை காரணமாகவும், வேறு காரணிகளாலும் ஒருவித வைரஸ் காச்சல் சிறுவர்களுக்கு பரவி வருகின்றது. இவை அந்தப் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டு தீர்க்க முடியாது போகின்றபோது குடா நாட்டின் எல்லாப்பகுதிகளிலிலும் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகள் எடுத்துவரப்படுகின்றார்கள். இது சாதாரண விடயம்.
அனலைதீவில் வைத்தியசாலை இருக்கின்றது, அங்கு ஒரு தென்இலங்கை வைத்திய அதிகாரி தன்குடுப்பத்தோடு இருக்கின்றார். ஆனாலும் அவர் நோளாளிகளுக்கு மருந்து கொடுப்பதற்கு மருந்து இல்லை என்ற காரணத்தை சொல்லி <i>(காரணம் உண்மையாகவும் இருக்கலாம்)</i> நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். ஆனால் அங்கு தற்போது மின்சாரம் உண்டு, நீர்வசதிகள் உண்டு, நகருடனான போக்குவரத்து வசதிகள் உண்டு, வைத்தியசாலை வசதிகள் உண்டு இவ்வளவு இருந்தும் வைத்தியசாலையில் மருந்து இல்லாது போகுமா? :?:
அங்கிருக்கும் வைத்திய அதிகாரி பொய் சொல்லவில்லை என்பதை அறியக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் பற்றி சுகாரத்திற்கு பெறுப்பான அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்களா? :?:
ஆஸ்பத்திரி கட்டடமும் கட்டி, வைத்தியரையும் நியமித்து, திறப்புவிழாவும் வைத்தவுடன் வைத்திய அதிகாரியினதும், நாடாளுமன்ற பிரதிநிதிகளினதும் கடமை முடிந்துவிட்டதா? மருந்துகள் இல்லாத நிலையில் இவைகள் ஏன்? யாழ்ப்பாணத்து தினசரிகளுக்கு இவை பற்றி எழுத பக்கங்களில் இடமில்லையா? :?:
இது மட்டுமல்ல
அந்த அனலைதீவு பொதுமகன் எழுப்பிய கேள்வி முக்கியமானது
“<i>ஊரில ஒரு நோய் வந்திட்டா நாங்கள் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வம், நோயாளியை பத்திரப்படுத்தி கவனிப்பம் ஆனால் வைத்தியசாலை என்று சொல்லப்படுகின்ற இடத்தில, அதுவும் படித்த பெரிய வைத்தியர்கள் இருக்கிற இடத்தில தோல் வியாதி சம்பந்தமான வைத்திய விடுதியையும், சிறுவர் விடுதியையும் பக்கத்திற்கு பக்கம் வைப்பார்களோ?</i>
இஞ்ச வாற சின்னதுகள் எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல், நோய்வாய்ப்பட்டு வருகுதுகள், அதுகளுக்கு என்ன வியாதியும் விரைவா தொற்றிக்கொள்ளும் என்ற விசயம் உவையளுக்கு தெரியாதோ? :?:
நாங்கள் இஞ்ச வந்து, ஊரக்கு போகும்போது வேறு ஏதையாவது து}க்கிக்கொண்டு போகவேண்டி வந்திடுமோ என்று பயமாக இருக்கிறது.
இந்த மக்களின் பயங்கள் நியாயமானதே. சாதாரணபொதுமக்களின் மனங்களில் நோய்பற்றிய விழிப்புணர்வுகளும், பாதுகாப்பு உணர்வுகளும் இருக்கும் போது யாழ்ப்பாண வைத்திய அதிகாரிகளுக்கு இல்லாமல் இருப்பது வேதனை தரக்கூடிய ஒரு விடயமே.
வைத்தியசாலையில் இடவசதிப்பிரச்சனைகள், நிர்வாகச்சிக்கல்கள், வளப்பற்றாக்குறைகள் என்று தங்களுடைய பிரச்சனைகளை வைத்திய அதிகாரிகள் அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் மக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப்பணத்தில் தான் இலவசமாக வைத்திய படிப்பு மேற்கொண்டதும், தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெறுகின்ற ஊதியமும் என்பதை எந்த வைத்திய அதிகாரிகளும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது <i>தங்களுடைய நோய்தீர்க்க வந்த பொதுமக்களது மனத்தில் எழுகின்ற பயங்களைப்போக்க வேண்டியதும் வைத்திய அதிகாரிகளின் கடமை </i>என்பதும் அவர்களுக்கு தெரியும்.
தங்களுடைய தவறுகளை மூடி மறைப்பதற்கு தொலைபேசி மூலம் கதைத்து, இடைஞ்சலாக இருக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரை இரவோடு இரவாக மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யும் ஆற்றல் உள்ளவர்களும்,.......
மருத்துவத்தினது அற ஒழுக்கக் கோட்பாட்டிற்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருந்த மருத்துவருக்கு எதிராக மேல் விசாரணை நடைபெறாது செய்து, அந்த மருத்துவருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றத்தையும் செய்விக்கக்கூடிய செல்வாக்கினையும் கெண்டுள்ள அதிகாரிகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இருக்கும் போது, இது போன்ற நோயாளிகளினது விடுதிகள் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வுகாண ஒரு வைத்திய அதிகாரி யாழ்போதனா வைத்தியசாலையில் இருப்பார் என யாழ்ப்பாணத்து மக்கள் நம்புவது, அவர்கள் செய்த புண்ணியமே! :twisted:
எந்தப் பத்திரிகையாளராவது வைத்தியர்கள் பற்றியோ அல்லது வைத்தியசாலை பற்றியோ “தவறான” செய்திகள் விடுவதை, வைத்தியசாலையின் சில முக்கிய வைத்திய அதிகாரிகள் விரும்புவதில்லை. மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், “சமூகப்பணிகளில்” ஈடுபட்ட சில இளைஞர்களது படங்களைத் தலத்திற்குச் சென்று எடுத்துப் பிரசுரம் செய்தமைக்காக, “சமுகப்பணியில்” ஈடுபட்டு அம்பலமான இளைஞர்கள், பழிவாங்கும் நோக்கத்தில், பிழையான தகவல் கொடுத்து குறிப்பிட்ட படப்பிடிப்பாளரை மறைவான இடத்திற்கு அழைத்து, அடித்திருந்தார்கள். அடிவாங்கி மருந்து போடுவதற்கு யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற படப்பிடிப்பாளரை ஊடகவியலாளர் என்பதை இனம் கண்டுகொண்ட குறிப்பிட்ட ஓரு வைத்தியர், “<i>நீர் இங்கு இரவு தங்கவேண்டாம,; உமது வீட்டிற்கு சென்றுவிடும்</i>” என வற்புறுத்தினார். அதற்கு அவ்வுூடகவியலாளர் வலிதாங்கமுடியாமல் இருப்பதாகக் கூறி, இரவு தங்குவதற்கு கேட்டபோது, “<i>இங்கு நீர் தங்கமுடியாது, வெளியிலுள்ள கோவிலில் போய்த் தங்கும்</i>” என அவருக்குக் கூறப்பட்டு, அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். இப்படியான வைத்தியம்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பற்றிய “தவறான” செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளருக்கு கிடைக்கும். :evil:
இந்த விடயங்களைக் குறிப்பிட்ட அனலைதீவு பொதுமகனுக்கு கூறிய போது....
“<i>நான் இதைப்பற்றிக் கலைப்படுபவன் கிடையாது.; நான் பாதிக்கப்படப்போறன் என்பதற்காக பொதுவிடயத்தில சும்மா இருக்க கூடாது</i>” எனக் கூறிய பெரியவர்,
தனக்கு வரப்போகும் நேருக்கடியைக்கூடப் பொருட்படுத்தாது, தன்னுடைய படத்தினை இணையத்தளத்தில் பிரசுரிக்க அனுமதித்தமைக்கு, அந்த அனலைதீவுப் பெரியவருக்கு நன்றி.
அதிகாரத் திணிப்பை மருத்துவத்திலும் எதிர்நோக்கும் யாழ் குடா மக்கள் உண்மையில் பாவிகளே! :?
மீசாலைச் சிவா
நன்றி தமிழ்ச்சமுகம் இணையம்
|
|
|
| பதில் |
|
Posted by: ஜீவன் - 11-16-2004, 02:56 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
தேவையானவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அவர்(வசீகரன்) அனுப்பிய கடிதம் அனுப்புகிறேன்.
:x
ஜீவன்
admin@tamiloosai.com
|
|
|
| Vanakam |
|
Posted by: thaiman.ch - 11-15-2004, 10:59 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (12)
|
 |
அனைவருக்கும் வணக்கம்
இந்த களத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
உயிர் தமிழிற்கு உடல் தாய்மண்ணிற்கு இதை உரத்துச் சொல்வோம் உலகிற்கு
|
|
|
| மீண்டும் நதியா அலை |
|
Posted by: kuruvikal - 11-15-2004, 09:22 PM - Forum: சினிமா
- Replies (138)
|
 |
<img src='http://thatstamil.com/images25/cinema/nadia-sonof380.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் சினிமாவில் மீண்டும் நதியா அலை அடிக்க ஆரம்பித்துள்ளது.
பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நதியாவுக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர் தமிழ் மக்கள். பெருமளவில் ரசிகர்களைப் பெற்ற நதியா தமிழக மக்களிடையே பெரும் பாப்புலர் ஆனார்.
அவர் அணிந்து வரும் சேலை, சூடிதார், தோடு, வளையல் என அனைத்தும் கவனிக்கப்பட்டன. நதியா வளையல், நதியா சேலை, நதியா தோடு என நதியாவின் பெயரை வைத்து பல பொருட்களும் விற்பனையில் சக்கை போடு போட்டன.
புதுமுகங்களின் வரவால் நதியாவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. அத்தோடு கல்யாணம் செய்து கொண்டு திரையுலகுக்கு குட்பை சொல்லி விட்டு லண்டன் சென்று விட்டார் நதியா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரவியின் அம்மா வேடத்தில் நதியா நடித்திருந்தார்.
அன்னைக்குப் பார்த்தது போலவே இருக்கிறாரே என்று கூறும் அளவுக்கு இன்னும் அழகை தேக்கி வைத்துள்ள நதியாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம்.
அம்மா வேடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளீர்கள் என்று கூறி ஐஸ் வைத்து தங்களது படத்தில் நடிக்க கூப்பிடும் தயாரிப்பாளர்களிடம் 30 லட்சம் சம்பளமாக கேட்டு அதிர வைக்கிறாராம் நதியா.
உண்மையில் அவருக்கு நிறைய படங்களில் நடிக்க விருப்பம் இல்லையாம். நல்ல வேடமாக இருந்தால் மட்டுமே மீண்டும் நடிப்பேன் என்று கூறுகிறார் நதியா.
தற்போது சத்யராஜூக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க நதியா ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் அவரது தீவிர ரசிகர் சலபதி, நதியாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைக்க ஒரு கதை எழுதி, நல்ல தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார்.
இதற்கிடையே நதியா ஒரு பேட்டியில், குடும்ப பொறுப்புகள் காரணமாகவே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் லண்டனில் டிவி செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதால், கேமரா முன்நிற்பது, மேக்கப் போடுவது இரண்டும் என்னை விட்டு விலகவில்லை.
இந் நிலையில்தான் எம்,குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதை எனக்கு பிடித்து இருந்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். படத்தில் நான் பேசப்படும் அளவிற்கு கேரக்டர் இருக்க வேண்டும்.
சாதாரணமாக அம்மா, அக்கா கேரக்டர்களில் வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாக சொல்கிறார்.
<img src='http://thatstamil.com/images25/cinema/nadia350.jpg' border='0' alt='user posted image'>
thatstamil.com
|
|
|
| சந்தேகத்திற்குரியபிறவிகள் |
|
Posted by: Nada - 11-15-2004, 09:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
படையினரின் வாகனம் மோதி பூசகர் பலி! இராணுவ வாகனம் ஒன்று மோட்டார் சையிக்கிளில் சென்று கொண்டிருந்த பூசகர் மீது மோதியதில் அவ் பூசகர் ஸ.தலத்திலேயே கொல்லப்பட்டார். கொல்லப்பட்டாவர் கல்வியன்காட்டைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் ஹரிகரசர்மா என்றும் தெரியவந்துள்ளது. அவ்வீதியால் வந்த இராணுவத்தினரின் தண்ணீர் கொண்டு செல்லும் பவுசர் கட்டுப்பாட்டை இழந்ததினால் இவ் கொரூரம் நடைபெற்றதாகவும் இது விபத்தேயொழிய திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி அல்ல என்றும் இதனை புலிகள் அரசியலாக்க முயன்று தோல்வி கண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கி;ன்றன.
துரோகத்தளமொன்று இராணுவத்துக்காக எப்படி செய்திகளை திரிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். இவர்கள் தாய்ப்பால்தான் குடித்தார்களா? பிறப்பு பற்றிய சந்தேகத்திற்குரியபிறவிகள்
|
|
|
| நீரைக்காணா வேர்கள் |
|
Posted by: Paranee - 11-15-2004, 08:55 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
[b][size=24]நீரைக்காணா வேர்கள்
புதிய திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில்.
தாயக மக்கள் முற்று முழுதாய் இயங்கும் தாயகப்பற்றுள்ள படம்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு.சண் அவர்கள் தாயகத்தில் சந்திக்க நேர்ந்தது. அதில் இயற்றப்பட்டுள்ள பாடல்கள் இசை எல்லாம் அற்புதமாக அமைந்திருந்தது. விரைவில் அத்திரைப்படத்தினை கண்டு எம் விமர்சனங்களால் இன்னும் இன்னும் எம் படைப்பாளர்களை ஊக்குவிப்போம்
|
|
|
| கவி இன்றி களம் . . . |
|
Posted by: Paranee - 11-15-2004, 08:47 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (22)
|
 |
எங்கே எம் கவிஞர்கள் கலைந்துவிட்டீர்களா ? கவியால் களம் நிரப்பாது கலகத்தால் நிரப்புகின்றீர்களே
கவி மலர்களை எதிர்பார்த்து ...............
<span style='font-size:25pt;line-height:100%'>பிரிவு</span>
இணைந்திருந்த நாட்கள் இன்பமாய்
இன்று பிரிந்து வாழும் நாட்கள் நரகமாய்
புரியமுடியவில்லை வலியின் உணர்வை
வார்த்தைகளால் வடிக்கமுடியாத வலி
இணைந்த கரங்கள் என்றும் இணைந்தே இருத்தல்வேண்டும்
|
|
|
| எச்சரிக்கை |
|
Posted by: yarlmohan - 11-15-2004, 11:50 AM - Forum: களம் பற்றி
- Replies (28)
|
 |
கடந்த சில தினங்களாக கருத்தக்களத்தில் ஒரு சிலரது நடவடிக்கைகளால், அவர்கள் களத்தில் எழுதுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட ஒரு சிலர் வேறு பெயர்களில் பதிந்து மீண்டும் வேண்டத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் அவர்கள் களத்திற்கு வருவது முற்றாக (IP யினைக் கொண்டு) தடை செய்யப்படும்.
மோகன்
|
|
|
|