Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 374 online users.
» 0 Member(s) | 371 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  Žì¸õ
Posted by: elanguyilan - 11-15-2004, 10:55 AM - Forum: அறிமுகம் - Replies (30)

[/color]

Žì¸õ ¿¡ý ¾Á¢Æ£Æò¾¢Ä¢ÕóÐ þÇíÌ¢Äý ±ý¨É ÅçÅüÀ£÷¸Ç¡?

[color=red]<b>µ¨¼Â¢§Ä ±ý ºõÀø ¸¨ÃÔõ §À¡Ðõ-«¾¢ø ±ý ¯Â¢÷ ¾Á¢§Æ ºÄºÄòÐ µ¼ §ÅñÎõ</b>

<b>±ýÚõ «ýÒ¼ý
þÇíÌ¢Äý</b>

Print this item

  ஜெயா ரீவியும் இலவசமாக ?
Posted by: yarl - 11-15-2004, 12:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (14)

ஜெயா ரீவியும் இலவசமாக புதிய அலைவரிசையில் பரீட்சார்த்தமாக ஒளிபரப்புகிறார்கள் போலுள்ளது.
அலைவரிசை 10992 hotbird
vertical
27500

name occational enra peyarilthaan varukirathu.

Print this item

  பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா !
Posted by: ravi_dk - 11-14-2004, 01:59 PM - Forum: அறிமுகம் - Replies (3)

பூக்கள் திரைப்படத்தின் பாடல்கள் அறிமுக விழா !

http://www.tamilnet.dk/tamilan/html/module...rticle&sid=1029

புகைப்படங்கள்

<img src='http://www.tamilnet.dk/news/dk/pookkal-cd.jpg' border='0' alt='user posted image'>

அலைகள் மூவீஸ் தயாரிக்கும், முத்துமாரி அம்மன் கிரியேசன்ஸ் வழங்கும் பூக்கள் திரைப்படத்தின் இனிய பாடல்களின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிறு மாலை 16.00 மணிக்கு டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள லின்ட் பாடசாலையில் வெனு விமரிசையக ஆரம்பித்தது. கடவுள் வணக்கம், அமைதி வணக்கம் ஆகியவற்றோடு ஆரம்பித்த நிகழ்வு அரங்கு நிறைந்த மக்கள் திரளோடு நடந்தேறியது.

விழாவில் பூக்கள் திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ( சிடி ) வெளியியிடப்பட்டது. இந்த இசைத்தட்டை இங்கிலாந்தில் பிரபலமாக உள்ள ஐங்கரன் நிறுவனத்தினர் வெளியீடு செய்துள்ளனர். முதல்தடவையாக தமிழக சினிமா பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுடன் இலங்கைத் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்கி இக்காரியத்தை ஐங்கரன் நிறுவனம் செய்திருந்தது. ஐங்கரன் அதிபர் திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பூக்களின் திரைப்படக் காட்சிகள் அரங்கில் சிறு பொழுது காண்பிக்கப்பட்டு பெரும் பாராட்டு பெற்றது. அதேவேளை இசைத்தட்டின் பாடல்கள் பாடகர்கள் மேடைக்குவர இசைக்க விடப்பட்டது குறிப்பிடக்கூடிய ஒன்றாக இருந்தது. சுரத்தட்டை வாசிக்க பழக்கிய நோர்வே சுந்தரமூர்த்தி மாஸ்டர், சங்கீதம் கற்பித்த குமுதினி பிரித்திவிராஜ் ஆகியேரையும், பாடிய பாடகர்கள், ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்கள் அனைவரையும் வசந்த் வாழ்த்தினார்.



விழாவை முரளிசர்மா ஓம் நமச்சிவாய என்னும் நாமம் எழுப்பி ஆரம்பித்து ஆடற் கலைஞனான நடராஜப் பெருமானை அரங்கிற்குள் ஒளிபாய்ச்ச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து பூக்கள் திரைப்படத்தின் நடிகர் சுகேந்திரா வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திரைப்பட நடிகர்கள் அனைவரும் அரங்கில் தோன்றினார்கள். அத்தருணம் திரைப்பட இயக்குநர் கி.செ.துரை இந்த இசைத்தட்டு வெளியீட்டுக்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேற்படி இசைத்தட்டை சங்கீத, வயலின் ஆசிரியை இசைக்கலைமணி திருமதி குமுதா பிரிதிவிராஜன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். இசைத்தட்டில் உள்ள பாடல்கள் அனைத்தையும் தான் கேட்டதாகக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் கே.எஸ்.வஸந்தின் முயற்சிகளை பெரிதும் பாராட்டினார். ஒவ்வொரு பாடலையும் மிகுந்த கவனமெடுத்து தயாரித்துள்ளார். பாடிய அத்தனை பாடகர்களும் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர் என்று கூறி பூக்கள் திரைப்படம் வெற்றிபெறும் என்று வாழ்த்தினார். இந்த இசைத்தட்டின் முதல் பிரதியை திரு. சு. சுப்பிரமணியம் எடுத்து வழங்க திருமதி. அகிம்சா டக்ளஸ் எழில்வளவன் பெற்றுக் கொண்டு தனது வாழ்த்துரையைத் தெரிவித்தார். அடுத்த பிரதியை திருமதி சாந்தினி உதயச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

<img src='http://www.tamilnet.dk/news/dk/pookkal-cd1.jpg' border='0' alt='user posted image'>

அடுத்து சிறப்பு விருந்தினர் தபேலாக் கலைஞர் திரு. சௌந்தரராகவன் உரையாற்றினார். அத்தருணம் அவர் கூறும்போது பாடல்களுக்கு இசையமக்கும்போது இரண்டு பெரிய விடயங்களை கவனிக்க வேண்டும் என்றார். சாதாரணமாக ஒரு இசை ஆல்பம் வெளியிடும்போது இசையமைப்பாளருக்கும் கவிஞர்களுக்கும் சுதந்திரமாக நடமாட ஒரு வெளியிருக்கும். ஆனால் சினிமாவுக்கு இசையமைப்பது என்றார் கதைக்கும் காட்சிக்கும் ஏற்ப இசையமைக்க வேண்டும். அது மிகவும் கடினமான காரியம், இந்தப்படத்தில் அந்தப்பணியை அனைவரும் சிறப்போடு செய்துள்ளனர் என்றார். அவருக்கான சிறப்புப் பரிசை வழங்கிய திரு. தே. உதயச்சந்திரன் சிறிய உரையொன்றையும் வழங்கினார்.

அன்றைய தினம் லின்ட் பாடசாலை அரங்கு முழுவதுமே பெரும்பாலும் இசைத்துறை, நாடகத்துறை, படைப்பிலக்கியம் சார்ந்த பெருந்தொகையான கலைஞர்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள். புகைப்பட, சங்கீதக் கலைஞர் முரளி பேசும்போது ஈழத் தமிழரின் வர்த்தக சினிமா இதோ பிறந்துவிட்டது என்று பாராட்டினார். பூக்கள் திரைப்படத்தின் காட்சிகளின் துண்டுகளை பார்த்த பின்னர் உண்மையிலேயே புதிய நம்பிக்கை பிறந்துவிட்டது என்று பாராட்டிய அவர், அத்தோடு நம்மாலும் முடியும் என்று காட்டுவதற்கான கலைஞர்களை நான் இப்போது இந்த மேடையில் அடையாளம் காண்கிறேன் என்றார்.



கலைஞர் சண் பேசும்போது ஈழத் தமிழர்களின் திரைப்படங்களுக்கு நமது மக்கள் ஆதரவு தந்தால் நாம் வெற்றிபெறுவது கடினமான காரியமல்ல என்றும் கூறிய அவர், நீண்ட உரையொன்றை வழங்கினார். சினிமாவை ஏன் எடுக்கிறார்கள், இவர்களுக்கு வேலையில்லையா என்று சிலர் கேட்கிறார்கள். இது தவறு, சினிமா மிகப்பெரிய ஊடகம், அதனால் பல நல்ல விடயங்களை சொல்ல வழியிருக்கிறது என்றும் கருத்துரைத்தார். அவருக்கான பரிசை திரு. பொன். சிவகுமார் வழங்கினார். அடுத்து உரையாற்றிய வயன் தமிழ் இலக்கியமன்றத் தலைவர் திரு. தர்மா அவர்கள் இப்படியான முயற்சிகளின் வழியாக நாம் சமுதாயத்திற்கு பெரிய பணிகளை ஆற்ற முடியும் என்றார்.

சங்கீதபூசணம் அளவையூர் திலகேஸ்வரன் கூறும்போது சினிமா படத்திற்கு பாடல்களை பாடி, நமது கலைஞர்களே மேடையில் தோன்றி அப்பாடல்கள் பற்றி பேசி அதற்கான இசைத்தட்டை வெளியிடுவது எவ்வளவு பெரிய விடயம். இதை நினைத்தாலே புதிய நம்பிக்கை பிறக்கிறது, தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாக வேண்டும், இன்றுபோல என்றும் மகிழ்வு பொங்க வேண்டும் என்றார். எல்லாக் கலைஞர்களும் இதுபோல சிறப்படையும் படி முயற்சிகளைத் தொடர வேண்டுமென வாழ்த்தினர். அவருக்கான பரிசை தொழில் அதிபர். திரு. சிவனேசகுமார் வழங்கினார். அடுத்து திறீ ஓ போய்சின் நடனம் இடம் பெற்றது.

தவில் வித்துவான் சங்கரதாஸ் இப்படத்தின் நடிகராகவும், இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக தன்னையும் அழைத்து சிறப்பித்தமைக்காக வாழ்த்துக்களைக் கூறினார். திரையில் படத்தின் ட்ரெயிலரைப் பார்த்து தான் அதிசயமடைந்ததாகக் கூறினார். அட நம்மாலும் இப்படிச் செய்ய இயலுமா என்பதை தான் இப்போது நம்பாமல் நம்புவதாகத் தெரிவித்தார்.

நடன ஆசிரியை திருமதி. சுமித்திரா சுகேந்திரா இயக்குநர் கி.செ.துரையின் பணி சிறப்படைய வேண்டுமென வாழ்த்தினார். பாடல்களைக் கேட்டபோது திரைப்படத்தின் சிறப்பு எப்படி அமையப் போகிறது என்பதை உணர முடிந்தது என்றார். எவ்வளவோ சிரமம்பட்டு இப்படியொரு காரியத்தை கண்விழித்து, ஓய்வு ஒழிச்சலின்றி செய்துள்ளார்கள் என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் திருமதி மாலா சத்தியமூர்த்தியின் மாணவியும், பத்மாசுப்பிரமணியத்திடம் பரதத்தைக் கற்று வந்துள்ளவருமான கிரு;ணபிரியா சத்தியமூர்த்தியவர்களின் இரு நடன உருப்படிகள் இடம் பெற்றன. நிகழ்வில் உரையாற்றிய திருமதி மாலா சத்தியமூர்த்தி வஸந்தின் திறமைகளை வாழ்த்தினார். அடக்கம், குரு பக்தி, கவனம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் அவர் இவ்வாறு உயர்ந்து சாதனை படைக்கிறார் என்று போற்றினார்.

அடுத்து நடனஆசிரியை சசிதேவி சந்ரபாலனின் மாணவி சர்மிளி சந்திரபாலனின் நடனம் இடம் பெற்றது. இந்த நடன நிகழ்வை தயாரித்து வழங்கிய சசிதேவி அவர்கள் பூக்கள் திரைப்படத்திற்கான பிரதான பாடலுக்கு நாட்டிய அமைப்பை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பூக்களின் பாடல்களை கேட்ட பின்னர் மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்தார். விநாடி விநாடியாக பாடலைக் கேட்டதாகவும், அதை எப்படி உருவாக்கினார் என்று அதிசயமடைந்ததாகவும் கூறினார். அசிரியர் கி.செ.துரை எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றிபெறுபவர், இம்முயற்சியிலும் வெற்றிபெறுவார் என்றும் வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் சோன் லுண்ட் அவர்கள் தமிழ் படத்தில் டேனிஸ்காரரான தனக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக தமிழ் மக்களுக்கு நன்றி கூறினார். இன்று டென்மார்க் லின்ட் நகரில் சாதனை படைத்த கலைஞர்கள் நாளை உலக அரங்கில் சாதனை படைப்பார்கள் என்று பொறிக்கப்பட்ட பரிசை இசையமைப்பாளர் வஸந்திற்கு வழங்கினார். இவருக்கான சிறப்பு இசைப்பரிசை திரு.வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் வாழ்த்திக் கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பூக்கள் திரைப்படத்தின் காட்சிகளின் சில பகுதிகள் அவ்வப்போது காண்பிக்கப்பட்டது. பாடலைப்பாடிய குணலிங்கம், ஸ்ரலின்டோஸ், அர்ச்சனா, ஜனனி, லோகன், துசான், சாந்தினி, தன்யா ஆகிய கலைஞர்கள் தோன்றி தங்களுடைய அனுபவங்களை வெளியிட்டனர். திரு. குணலிங்கம் கூறும்போது இதுவரை ரி. எம். சௌந்தரராஜன் குரலில் பாடிவந்த நான் இந்தப்படத்தில் எனது சொந்தக் குரலில் பாட வேண்டுமென வஸந்த் வலியுறுத்தினார். ஒவ்வொரு பாடகரும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் பாட வேண்டும் என்று வலியுறுத்தினார். தாயயே ! தாயின் மண்ணே என்ற பாடல்தான் குணலிங்கம் என்ற பாடகனின் குரலைக் காட்டுகிறது என்றார். சிம்பொனி இசைக்குழு இயக்குநர் தேவன் தெரிவிக்கும்போது சாந்தினி பாடிய துன்பம் எல்லாமே என்ற பாடல் கருத்தம்மா படத்தில் வரும் போறாளே என்ற பாடலை விஞ்சி நிற்கிறது என்றார். ஜனனி, லோகன், துசான் போன்றவர்கள் நமது திரைக்குக் கிடைத்த சிறந்த வரவுகள் என்று பல கலைஞர்களும் பாராட்டினார்கள்.

வயன்கந்தசாமி அவர்கள் உருக்கமான உரையை வழங்கினார், நேரப்பற்றாக்குறை காரணமாக செந்தில்குமரன் சுருக்கமாக தனது வாழ்த்துக்களைக் கூறினார். திரு. செல்வக்கதிரமலை,திரு. தனபால், நடிகர்கள் ராஜராஜன், ரவி, சிறிகாந்த், வள்ளுவன், சிந்துராஜ், மனோகரன், ராணி மனோகரன், திருமதி. பொன்னண்ணா, கண்ணன், டிலா சச்சிதானந்தம், பத்மா ஜெயராஜ், சு.சிறீராஜன், செ. அர்ச்சனா ஆகியோர் கருத்துரைகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பூக்கள் திரப்பட நடிகர் நடிகவிநோதன் செ.யோகராஜா நடிப்பில் இருந்து ஓய்வுபெற விடாமலே தன்னைப் பிடித்து இத்திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள் என்று கூறி, பாடல்களுக்கும் வாய்ப்பிற்கும் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கவிஞர் பொன்னண்ணா இந்த விழாவிற்கு மட்டுமல்ல பூக்களின் நு}றாவது நாள் வெற்றிவிழாவிற்கும் நாம் இதுபோல எழுச்சியுடன் கூட வேண்டும் என்று போற்றினார். அத்தருணம் அவர் கமேரா எடிட்டிங் ஆகியவற்றில் பணியாற்றிய ரவிசங்கரையும் பாராட்டினார். நிறைவாக இசைப்பாடல்களுக்கு வரிகள் எழுதிய ஆசிரியர் கி.செ.தரையின் நன்றியுரை இடம் பெற்றது. உலகமெல்லாம் பரந்திருக்கும் ஈழத் தமிழன் பூக்களைப் போல உலகமெல்லாம் நிறைந்திருக்கிறான். பூக்களை அழிக்க முடியாது அதுபோல ஈழத்தமிழினத்தையும் அழிக்க முடியாது என்பதே இத்திரைப்படத்தின் கருத்து என்றார். இந்த நிகழ்ச்சியை திருவாளர்கள் ஜெயராஜ், ஜெயமுரளிசர்மா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இசையமைப்பாளர் வசந்த் பாராட்டுக்கள் மட்டும் முக்கியமல்ல குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள் திருந்துவதற்குக் காத்திருக்கிறோம் என்று கூறி, தயவு செய்து பாடல்களை கணினியில் பிரதிபண்ணி நமது முயற்சிகளுக்கு சிரமம் தர வேண்டாம் என்று அன்போடும், தன்னடக்கத்துடனும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சிகள் இனிது நிறைவடைந்தன. பூக்கள் திரைப்படத்தின் தாவிப்பறக்கும் மயிர் கூச்செறியும் காட்சிகள் மக்கள் மனதில் மணம்பரப்பி நின்றன.

புகைப்படங்கள்

விழா மண்டபத்திலிருந்து அலைகள் நிருபர் சாம். இருதயராஜ்

Print this item

  காதல் கடிதம் புகைப்படத் தொகுப்பு
Posted by: ஜீவன் - 11-14-2004, 11:00 AM - Forum: சினிமா - Replies (22)

http://www.tamiloosai.com/oosai.asp?id=2683&catID=0

Print this item

  கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல-புதுவை
Posted by: hari - 11-14-2004, 07:46 AM - Forum: கவிதை/பாடல் - Replies (18)

<span style='color:green'>கட்டபொம்மன் காலத்தில்
மட்டுமல்ல எட்டப்பர்கள்
இன்றும் இருக்கின்றனர்.</span>
<img src='http://img113.exs.cx/img113/3215/hari1.gif' border='0' alt='user posted image'>

<b>புதுவை இரத்தினதுரை</b>
கார்த்திகை,1997
<img src='http://img127.exs.cx/img127/7779/hari.gif' border='0' alt='user posted image'>
முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.
வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல
பெண்மை இங்கு புலியானதால்

Print this item

  விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டம்
Posted by: Nada - 11-14-2004, 02:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

ஜரோப்பாவில் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டம் அம்பலம்.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 14 நவம்பர் 2004 ஸ ஜ சுவிஸ் வயனி ஸ
ஜரோப்பாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரதிநிதிகளைத் தாக்கும் திட்டமொன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஜரோப்பிய நாடுகளுக்குப் பல்வேறு அரசியல் தேவைகளுக்காக வருகைதரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜரோப்பிய நாடொன்றில் தாக்குவதற்குத் தமிழ்த்தேசவிரோத சக்தியொன்றை இலங்கையின் அயல்நாடு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக ஈ.பி.டி.பி. தேசவிரோதக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நிஸாந்தன், பாஸ்கரன், ஜெகன் ஆகியோர்


சுவிஸ் நாட்டுக்கு இலங்கையின் அயல்நாடு ஆலோசனையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுவிஸ் நாட்டில் குறுஸ்லிங்கன் என்ற பகுதியில் கடந்த வாரம் சந்தித்து விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளைத் தாக்கபோட்ட திட்டமும் அம்பலமாகியுள்ளது.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய புள்ளிகளை இலகுவில் அணுக முடியாது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் எதிரிகள் இந்தத்தாக்குதல் திட்டத்தை ஜரோப்பாவில் தமிழ்த் தேசிவிரோதிகளை வைத்து நடாத்தி விட்டு அரசியல் போட்டியே இதற்குக் காரணம் என்றும் கூறித்தப்பித்துக் கொள்ளத் திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரியவருகிறது.

ஜரோப்பாவில் தமிழ்த் தலைமைகளை ஈழத்தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழ்த்தேச விரோதிகளை வைத்து இலகுவில் அணுகமுடியுமென்ற நோக்குடன் இத்திட்டம் அரகேற்றப்பட்டதாகவும் இதன் முதலாவது கட்டத் திட்டமிடல் கூட்டம் சுவிஸ் குறுஸ்லிங்கன் பகுதியில் தீட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு ஒரு சம்பவம் பாரிசில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

இது நிதர்சனத்திலிருந்து சுடப்பட்டது நன்றி

Print this item

  பாகிஸ்தான் வெற்றி
Posted by: Thusi - 11-13-2004, 09:00 PM - Forum: விளையாட்டு - Replies (6)

இந்திய கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபையின் 75வது ஆண்டு நிறைவுவிழா சிறப்புப் போட்டியாக கொல்கத்தா நகரில் இன்று இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான கிரிக்கற் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கற்களால் வெற்றியீட்டியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 பந்துமாற்றங்கள் நிறைவில் 292 ஓட்டங்களை 6 விக்கற்களை இழந்து பெற்றுக்கொண்டது. இதில் யுவராஜ்சிங் 78 ஓட்டங்களையும்இ வீரேந்தர் சேவாக் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49 பந்துமாற்றங்கள் நிறைவில் 4 விக்கற்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் சல்மான் பட் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும்இ சொஹைப் மலிக் 61 ஓட்டங்களையும் இன்சமாம்-உல்-ஹக் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நன்றி - பிபிசி ஸ்போட்ஸ்

Print this item

  தளத்தை குப்பையாக்க வேண்டாம்
Posted by: Thiyaham - 11-13-2004, 08:56 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (11)

தயவு செய்து தளத்தில் தேவையில்லாத விடயங்களை எழுதவேண்டாம். உதாரணமாக தளத்தில் முகப்பிலேயே இருக்கும் இரு விடயத்தை களப்பிரிவுகளில் எழுதி இத்தளத்தை குப்பையாக்க வேண்டாம்(spam).


<img src='http://img121.exs.cx/img121/3410/kuruvi.jpg' border='0' alt='user posted image'>


அத்துடன் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டிய இரு விடயங்கள் இரு வேறு தலையங்கங்களில் எழுதப்பட்டுள்ளது.


<img src='http://img7.exs.cx/img7/3517/stupids.jpg' border='0' alt='user posted image'>


நாங்கள் விதி முறைகளை மீறாவிட்டாலும், எமக்கென்று ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

Print this item

  வீரரின் நினைவுகள் அழிவதில்லை....!
Posted by: kuruvikal - 11-13-2004, 12:33 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<b>----------------------------------------------
[b]பூநகரித் தளம் மீதான தாக்குதல் வெற்றிவிழா இன்று</b>

பூநகரி கூட்டுப் படைத்தளம் மீது தழிழீழ விடுதலைப்புலிகளால் 1993ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓப்பரேசன் தவளைத் தாக்குதலன் வெற்றி விழா நிகழ்வு இன்று பூநகரியில் நடைபெறவுள்ளது.

இவ் வெற்றிவிழா நிகழ்வின் போது பூநகரி தளம் தகர்ப்பில் வீரகாயமன 456 மாவீரர்களை நினைவுகூரும் அதேவேளை படைத்தலமையை திசை திருப்பும் முகமாக பலாலி பெருந்தளப் பகுதியில் நடத்தப்பட்ட கரும்புலித்தாக்குதலில் வீரகாவியமாகிய 15 கரும்புலிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

தவளைத் தாக்குதலின் வெற்றி நிகழ்வு இன்று மாலை 4.00 மணிக்கு பூநகரி வாடியடியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்புரைகள் கலைநிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

puthinam.com
[b]---------------------------------------------

<img src='http://www.eelavision.com/gallery/5001-8443.jpg' border='0' alt='user posted image'>

கார்த்திகைத் திங்கள் 1993
ஆண்டிறிதிப் பரீட்சைக்காய்
விளக்கும் கையுமாய்
குந்தி இருக்க....
நள்ளிரவு தாண்டிக்
கிழக்குப் பக்கமாய்
பயங்கரக் குண்டுத்தாக்குதல்...
ஓடி வந்து உற்று நோக்கினால்
பூநகரிப் பக்கம் நாயடி விழுகுது
யாரடிப்பது....
இரவெண்டால் பொட்டியள் தான்
டேய்...
பங்கரக் கிளீன் பண்ணு
அங்க அடிக்க
அவன் இங்க ரவுணுக்க கொட்டுவான்....
அம்மாவுக்கு எப்ப பாரு பங்கர்தான்
பாவம் அவவுக்கு
பாசக் குஞ்சுகள் மீது அக்கறை
அங்கே பிரபாகரன் பிஞ்சுகள்
சகதிக்கால் விழுந்தடிச்சு
புலியாய் தவளையாய்
பாயுதுகள்....
அவைக்கார் பங்கர் தோண்டுவது
சிந்திக்கும் ஒரு மனம்
சில நொடியில் பயம் கவ்வ
அம்மா பக்கம் நியாயம் தேடிப்
பாய்ந்தோடிப் பதுங்கும்...!

மறுநாள் காலையும்
சண்டை தொடருது
செவிப்பறை கிழியுது
உதயன் பக்கம் சைக்கிளை மிதிக்க
பொறுங்கோ ஸ்பெசல் பேப்பர் வருமாம்...
அப்படியே ஒரு மிதி
ஈழநாதம் பக்கம்
நீண்ட கியூ...
அப்ப உதயனட்டையே வாங்குவம்
என்று திரும்ப
சீனாக்காரனின் F-7 சுப்பசொனிக்
உரசிப் பறக்குது
சைக்கிளப் போட்டிட்டு
கானுக்க விழுந்ததும்
காலால இரத்தம் வடிய
வீட்ட போய்
அம்மாவின்ர கை வைத்தியம்
பார்க்க....
மீண்டும் நினைவு..
எத்தனை சகோதரங்கள்
எத்தனை சகோதரிகள்
களத்தில் விழுந்தினமோ
எத்தினைக்குக் காயமோ
கண்கள் கலங்க....
நாங்கள் என்ன செய்யலாம்
இரத்தக் கொடுக்கலாம்
ம்ம்ம்...போனமுறை போக
நிறை காணாது எண்டு திருப்பி அனுப்பினவ...!
நினைவு கலையமுதலாய்
அம்மாவின் கையத்தட்டிப்போட்டு
எழும்பி ஓடி
பக்கத்தில இருந்த
அண்ணாமார் காம்ப் போய்....
அண்ண என்ன உதவி வேணும்
எங்களால முடிஞ்சத் செய்யுறம்....
தம்பி இப்ப நாங்கள் கொஞ்சம் பிசி
பிறகு வாங்கோ சொல்லுறம்....
அவையும் பதறித்தான் நிக்கினம்
மேலும் அவைய பதட்டப்படுத்தாம
சைக்கிளத் திருப்பி வீட்டுக்கு வந்தம்...!

கிட்டத்தட்ட 7 MI 8 கெலிகள்
வரிசையாப் போகுது
பூநகரிப்பக்கமாய்....
சிறீலங்காச் செய்தியைக் கேட்டால்
மெளனம்...பேச்சே இல்லை
பிறகு பின்னேரமாய்
உதயன் கிடைக்கத்தான்
செய்தி தெரிஞ்சுது....
பூநகரி சரியாம்
நாகதேவன் துறையும் சரியாம்
பொடியள் வோட்டர் ஜெட்டும் எடுத்திட்டாங்களாம்
சனம் வீதியெல்லாம்
கூடிக் கூடிக் கதைக்குது...!
எனக்கோ அதில இல்ல மனசு
அண்ணாமாருக்கு என்ன இழப்பு
இப்ப பொம்பர் வந்து அடிச்சா
அவையள் பாடு என்ன
கடவுளே அவைக்கு இழப்பைக் குறை
பத்திரமாய் அனுப்பி வை
இப்படியே என் நினைவு.....
பேப்பரும் கையுமாய்
வீட்டுக்கு வர
அண்ணா ஒருத்தர் கண்டு சொன்னார்
எங்க பக்கமும் சேதம் கொஞ்சம் கூடத்தான்
தம்பிமார்
கொஞ்சம் இளநீர் சேத்துத் தருவீங்களே....
ஓம் அண்ண இதுவும் செய்யாமல்
இந்த மண்ணில் நாங்கள் வாழ்வதா.....
உள்ள இடமெல்லாம் தேடி
பல குலை இளநீர் சில மணி நேரத்துக்க
அண்ணன் கையில் ஒப்படைக்க....
அவருக்கு சந்தோசம் கட்டித் தழுவி
ஆசுவாசப்படுத்தி அனுப்பினார்
அதன் பின்னாத்தான் பேப்பர் படிக்க
மனசு வந்திச்சு சங்கதி அறிய....!

அடுத்து வந்த நாட்கள்
கொஞ்சம் சோகம் தான்
சோக கீதங்கள் இசைக்க
எங்கள் சகோதரங்கள்
வித்தாகி விதைப்பட்ட
நிகழ்வுகள்...
மனசு கணத்தது
விடுதலைக்கு காணிக்கை
விலை அதிகம் தான்
வீர சுதந்திரம் வேண்ட
குருதிக்கு விடுதலை கொடுத்த
வேங்கைகள்
உயிரையும் அல்லவா
விடுவித்துத் துயில்கிறார்
அவர்கள் வீரக் கனவு
என்று நிறைவேறும்
அதற்காய் என்னால் இயன்றது செய்வேன்
சத்தியம் எடுத்தேன்
இன்றுவரை கடைப்பிடிக்கின்றேன்
என்று கடைப்பிடிப்பேன்
எங்கள் சகோதரங்கள் நினைவுகள்
மரணம் வரை என்னோடு வாழும்....!

<img src='http://www.eelavision.com/gallery/5001-8097.jpg' border='0' alt='user posted image'>

பூநகரித் தாக்குதலில் அழிக்கப்பட்ட இராணுவத் தாங்கி...நினைவுச் சின்னமாய்...!

Print this item

  இன்றைய தமிழ் இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றனர்
Posted by: Nitharsan - 11-13-2004, 09:54 AM - Forum: புலம் - Replies (1)

<span style='font-size:25pt;line-height:100%'>புகலிடத்தில் தமிழ் இளைஞர்கள் சமூகத்தால் பரிந்த கொள்ளப்படுகின்றனரா?</span>

இன்றைய தமிழ் இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றனர் என்பது பல இளைஞர்களின் கருத்தாக உள்ளது. புகலிடத்திலோ அல்லது தாயகத்திலோ இளைஞர்கள் ஊக்கிவிக்கப்படுவதற்குப்பதிலாக மறைமுகமான பல தாக்கங்களை எதிர் நோக்கு கின்றனர். இன்றை கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்களது வயதிற்கு மீறிய சுமைகளைச் சுமக்கின்றனர் என்பதே உண்மையாகும். வீட்டுப்பிரச்சனை முதல் நாட்டுப்பிரச்சினை வரை இளைஞர்கள் தலையிலே தான். தாயகத்தில் ஆயுதமேந்திப் போராடுவது வேறு யாருமல்ல இளைஞர்கள் தான் அதே நேரம் அப்போராட்டத்திற்க்காக குரல் கொடுப்பது யார்?? இங:கும் இளைஞர்களின் பணியே அதிகம் கட்டளை இடுவதற்கும் பத்திரிகையில் எழுதுவதற்குமே இங்கு பெரியவர்கள் இருக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான தமிழ் இணையங்களை நிர்வகிப்பது இளைஞர்களே.இணையத்தை நிhவகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது கருத்துக் கூறுபவருக்கோ அல்லது பயன் பெறுபவர்களுக்கோ தெரியாது. தம்மால் நடாத்தப்படும் இணையத்தில் துரொகிகளின் கருத்து உள்நுழைக்கூடாது என்பது முதல் தரமான ஆக்கங்கள் வழங்க வேண்டும். அதை விட மாதாந்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள். இப்படி இவர்கள் கஸ்;டப்படுகையில் இவர்களுக்கெதிரான விமர்சனங்களே அதிகம் வருகிறது. பெரும்பாலன தமிழீழ எழுச்சி நிகழ்ச்சிகளை நடாத்துவது யார்?? இதும் இந்த இளைஞர்கள் தான் ஆனால் தலையை வெளியே காட்டும் பெரியவர்களுக்கே அந்த பெருமையேல்லாம் இதோடு இவர்கள் நின்று விடவில்லை. நிகழ்வகளுக்கு தொண்டர்களாய் வேலை செய்து தமது சமுதாயத்தை நெறிப்படுத்துகின்றனர். தமது விடுமுறை நாட்களில் தாயம் சென்று தம் கற்றவற்றை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர். கனடாவைப் பொறுத்தவரை தமிழ் இளைஞர் பேரவை எனும் அமைபபு குறிப்பிடத்களவு சேவைகளை வழங்கிவருகின்றது எனலாம். இளைஞர்களை ஒனறினைப்பதில் இவர்கள் முன்னின்று உழைத்த போதிலும் ஆரம்பத்தில் இருந்த வேகமும் ஊக்கமும் இப்போது இல்லை. காரணம் எவரும் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. இது தான் வழி முன்னேறுங்கள் என்று தோள் கொடுக்கவில்லை. இவர்களால் தமிழ்குரல் என்றொரு பத்திரிகையும் வெளியிடப்படுகின்றது. இவர்களது இணையத்தளம்:[img]www.tamilkural.com[/img] அண்மையில் கூட புயலாகும் பதுராகம் என்றோரு நிகழ்வு நடைபெற்றது அதை நடத்தியது யார்? தம்மைவிட தமது தேசத்தை நேசிக்கும் இப்படிப்பட்ட பொறுப்புணர்வள்ள இளைஞர்சமூகம் ஏன் சமுதாயத்தால் விமர்சிக்கப்படுகின்றது?? ஏன் பொறுப்பற்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்?? சமுதாயம் இவர்களை இப்படி நினைப்பதற்கு காரணம் இவர்கள் மத்தியிலுள்ள சில சீய நடத்தைகளே பாடசாலைக்கு பாடசாலை சண்டையணிகளை யார் உருவாக்கினார்கள்?? மதுச்சாலைகளிலம் உணவகங்களிலும் வீண் சண்டைகளை உருவாக்குவது யார்??? கனடாவைப் பொறுத்த வரையில் சிறையிருக்கும் தமிழர்களில் எந்த வயதினர் அதிகம்??? அனைத்துக்கும் சில இளைஞர்களே காரணம் சமுதாயத்தை நோக்கி இளைஞர்களின் சேவை நன்றாக நடைபெறும் போது தமது வயதினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைப்பறி ஏன் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. தேவையற்ற சண்டைகளை இவர்கள் எதற்காய் உருவாக்குகின்றனர்? மற்றை சமூகத்தினர் மத்தியில் எமதினத்திற்கு இவர்களால் ஏற்படும் தப்பான அபிப்பிராயங்களை கண்டு எங்கள் சமுகம் என்ன செய்யும் விமர்சிப்பதைத்தவிர...இதற்கு இவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது சமூகத்திற்கு தீய விடையங்களே முன்னுக்குத் தெரியும் அவர்களது நல்ல சிந்தனைகளை நடவடிக்கைகளைப்பற்றிச் சிந்திக்க எமது சமூதாயம் தயாராய் இல்லை என்பது ஓர் கசப்பான உண்மையாகும்

இப்போது எனது கோள்வி என்னவெனில் இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
இளைஞர்கள் புரிந்து கொள்ளப்படுகின்றனரா?? அல்லது மேலும் விமர்சிக்கப்படுகின்றனரா??
-நேசமுடன் நிதர்சன்-

Print this item