11-12-2004, 04:09 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/11001_wallpaper280.jpg' border='0' alt='user posted image'><img src='http://kuruvikal.yarl.net/archives/30052_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
என் இதயத்தின் மையெடுத்து
உன் பிறை நுதலில் திலகமிட்டு
உனக்காய் வாழ்வதாய் சத்தியம் செய்தேன்...!
என் உயிர் நூல் இழைத்து
என்னை உன்னுடன் பின்னி வைத்து
ஓரங்கமானேன் ஓயாமல் உன்னோடிருக்க...!
ஒளியாய் என் பார்வை தந்து
ஒளிக்கும் நிலவாய் உன்னை வைத்தேன்
என்றும் நீ எனக்கு பெளர்ணமியாய் தோன்றிட....!
காந்தல் மலரொடித்து கருவி செய்தேன்
உன் கரங்கள் பஞ்சணையாக்கி
என்னை அங்கே பதுக்கி வைக்க....!
கொவ்வையும் மாதுளையும் கண்டேன்
பொருத்தி ஒரு உருச்செய்து
உன் வதனமதில் ஒளித்து வைத்தேன்
சொல்லெனும் தேன் சொட்டும்
அட்சய பாத்திரமாக...!
மலையேறி முகில் பிடித்து
வாரியதை வளையப்பண்ணி நெடும் கூந்தலாக்கி
பெட்டகமாம் உன்னில் பொருத்தி வைத்தேன்
பொக்கிசமாக....!
கடும் இருள் கவ்வ கருவியோடு ஏகி
ஆழிதனில் கண்டெடுத்தேன் கயல்தனை
மீன் தொட்டியாம் உன்னில் விட்டுவைக்க....!
ஆழ்கடல் முத்துக் குளித்தேன்
வலம்புரியோடு முத்துக் கண்டேன்
திருடியதை உன்னில் வைத்தேன் ஜொலித்துட...!
தாஜ்மகாலில் கள்ளமாய் ஒரு பளிங்கெடுத்து
நயமான சிற்பியாய் நானிருந்து செய்திட்டேன்
ஓர் சோடி வளையல் என் பெயர் சொல்லி ஒலித்திட...!
நல்லூரான் வாசலில் யாசகம் செய்து
கந்தன் கருணை வாங்கி
பசும் வெள்ளி கொண்டு சலங்கை செய்தேன்
உன் பாதங்கள் பண்பாட....!
இறுதியில் தவமிருந்து அருள் பெற்று
இம்மலரை தருவித்து
அழகாய் நீ கொண்ட மேகத்தில் இட்டுவைத்தேன்
அதுபோல் வாடா மலராய் நீ இருக்க....!
இத்தனையும் யான் செய்ய நீயோ....
இது பழைய பஞ்சாங்கம்
"பாரா முகமாம்" என்று பழித்துவிட்டு
பரிதவிக்க விட்டியேடி பாவி....!
உனக்காய் நான் புரட்டிய
பழைய பஞ்சாங்கங்கள் நீ அறிவாயோ
அது ஏன் உனக்கு...??!
இருந்தும்...
என்றும் உனக்காய் காத்திருப்பேன்
எனி என் வாழ்வே நீதானடி....!
(முக்கிய குறிப்பு - யாவும் கற்பனை...!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நன்றி... http://kuruvikal.yarl.net/
என் இதயத்தின் மையெடுத்து
உன் பிறை நுதலில் திலகமிட்டு
உனக்காய் வாழ்வதாய் சத்தியம் செய்தேன்...!
என் உயிர் நூல் இழைத்து
என்னை உன்னுடன் பின்னி வைத்து
ஓரங்கமானேன் ஓயாமல் உன்னோடிருக்க...!
ஒளியாய் என் பார்வை தந்து
ஒளிக்கும் நிலவாய் உன்னை வைத்தேன்
என்றும் நீ எனக்கு பெளர்ணமியாய் தோன்றிட....!
காந்தல் மலரொடித்து கருவி செய்தேன்
உன் கரங்கள் பஞ்சணையாக்கி
என்னை அங்கே பதுக்கி வைக்க....!
கொவ்வையும் மாதுளையும் கண்டேன்
பொருத்தி ஒரு உருச்செய்து
உன் வதனமதில் ஒளித்து வைத்தேன்
சொல்லெனும் தேன் சொட்டும்
அட்சய பாத்திரமாக...!
மலையேறி முகில் பிடித்து
வாரியதை வளையப்பண்ணி நெடும் கூந்தலாக்கி
பெட்டகமாம் உன்னில் பொருத்தி வைத்தேன்
பொக்கிசமாக....!
கடும் இருள் கவ்வ கருவியோடு ஏகி
ஆழிதனில் கண்டெடுத்தேன் கயல்தனை
மீன் தொட்டியாம் உன்னில் விட்டுவைக்க....!
ஆழ்கடல் முத்துக் குளித்தேன்
வலம்புரியோடு முத்துக் கண்டேன்
திருடியதை உன்னில் வைத்தேன் ஜொலித்துட...!
தாஜ்மகாலில் கள்ளமாய் ஒரு பளிங்கெடுத்து
நயமான சிற்பியாய் நானிருந்து செய்திட்டேன்
ஓர் சோடி வளையல் என் பெயர் சொல்லி ஒலித்திட...!
நல்லூரான் வாசலில் யாசகம் செய்து
கந்தன் கருணை வாங்கி
பசும் வெள்ளி கொண்டு சலங்கை செய்தேன்
உன் பாதங்கள் பண்பாட....!
இறுதியில் தவமிருந்து அருள் பெற்று
இம்மலரை தருவித்து
அழகாய் நீ கொண்ட மேகத்தில் இட்டுவைத்தேன்
அதுபோல் வாடா மலராய் நீ இருக்க....!
இத்தனையும் யான் செய்ய நீயோ....
இது பழைய பஞ்சாங்கம்
"பாரா முகமாம்" என்று பழித்துவிட்டு
பரிதவிக்க விட்டியேடி பாவி....!
உனக்காய் நான் புரட்டிய
பழைய பஞ்சாங்கங்கள் நீ அறிவாயோ
அது ஏன் உனக்கு...??!
இருந்தும்...
என்றும் உனக்காய் காத்திருப்பேன்
எனி என் வாழ்வே நீதானடி....!
(முக்கிய குறிப்பு - யாவும் கற்பனை...!) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

