Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மும்பை எக்ஸ்பிரஸ்-கமல்
#1
புதிய படத்திற்கு "மும்பை எக்ஸ்பிரஸ்' என பெயர்

ராமதாசுடன் மோத
தயாராகும் கமல்

ரஜினியின் "சந்திரமுகி'க்கு போட்டியாக ரிலீஸ்

சென்னை, நவ.7:

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர்தான் வைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த பெயருக்கான காரணம் என்ன என்பது படம் வெளியானபிறகு தெரியும் என்று கூறியுள்ள கமல், இதற்கு அவர் கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர்கள் நெப்போலியன், கரண், வையாபுரி, மதன்பாப், இயக்குனர்கள் சரண், சந்தானபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் கூடி நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது பிறந்தநாளையொட்டி நடை பெற்ற தமிழ் இனி என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவமாணவிகளுக்கு கமல் பரிசுகளை வழங்கினார். அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தாய்த் தமிழ் கல்விப்பணிக்கு நிதி உதவியை கவிஞர் தாமரை, அவரது கணவர் தியாகு ஆகியோரிடம் கமல் வழங்கினார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்த தனது ரசிகர்களின் குடும்பத்திற்கும் அவர் நிதி உதவி வழங்கினார். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நற்பணி இயக்கத்தின் மூலமாக எனது ரசிகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு அரசியல் கருத்துக்களை சொல்ல நான் அருகதையற்றவன். இந்த நற்பணி இயக்கம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம். ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மற்றும் இந்தியில் அடுத்த படம் நடிக்கி றேன். இந்த படம் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாராகிறது. "மும்பை எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

தமிழில் நாசர், பசுபதி, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியில் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர், ஓம்புரி, சவுரவ் சுக்லா ஆகியோர் நடிக்கின்றனர். தாய்த்தமிழ் பள்ளிக்கு நான் அளித்து உள்ளது ஆரம்ப உதவி. வடநாட்டைச் சேர்ந்த மாஜி அரசியல்வாதி ஒருவர் குடிசையில் இயங்கும் பள்ளிகளுக்கு டெண்ட்களை எங்கள் நற்பணி இயக்கத்தின் மூலமாக அளிக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நற்பணி மன்றம் நட்சத்திர இயக்கமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கே: படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று ராமதாசும், திருமாவளவனும் கூறி வரும் நிலையில், மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே? அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?
ப: தமிழ்ப்படிக்கிற சில நடிகர்களில் நானும் ஒருவன். திருமாவளவன் எழுதிய கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். இந்த படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருப்பதற்கான காரணம் படம் வெளியான பிறகு தெரிய வரும். அவர்கள் வீண் சர்ச்சைகளை கிளப்பமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கே: "சந்திரமுகி' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?
ப: அது சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படம். சிவாஜி வீடு என் தந்தை வீடு. அவர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

கே: ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தீர்களே? அது இந்த படம்தானா?
ப:ரஜினியுடன் இணைந்து நடிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இந்த படத்துடன் அதை முடிச்சு போடாதீர்கள்.

கே: திரைப்பட உலகுக்கு முதல்வர் அறிவித்துள்ள சலுகைகள் பற்றி...
ப: திரையுலகம் சார்பில் அனைவரும் சேர்ந்து நாளை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா நடை பெறுகிறது. அதற்கு முன்பாக நான் அதுபற்றி சொல்லி விவாதத்தைக் கிளப்ப விரும்பவில்லை. அற்புதமான ஒரு செயலை சரியான நேரத்தில் முதல்வர் செய்துள்ளார். அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கே:நாளை நடைபெறும் விழாவில் நீங்கள் கலந்துகொள்கிறீர்களா?
ப: நிச்சயம் கலந்துகொள்வேன்.
கே: மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
ப: அந்த படத்தில் அவினாசி என்ற பெயரில் வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன்.

கே: தமிழனாக பிறந்ததால்தான் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடியாமல் போனதா?
ப: நான் ஹாலிவுட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். இதை வஞ்சகப் புகழ்ச்சியாக கருதுகிறேன். இங்கிருந்துகொண்டு பெயர் வாங்குவதைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். உலக அளவில் இந்தியா பல துறைகளில் முன்னோடியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இதேபோல் விளையாட்டு மற்றும் சினிமாத் துறையிலும் இந்தியா முன்னோடியாக திகழும். இதை நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கப்போகிறோம்.

கே: மருதநாயகம் படத்தை எப்போது தொடங்கப்போகிறீர்கள்?
ப:மருதநாயகத்தை மறுபடியும் நினைவு கூற வைத்ததில் எனக்கு பெருமை. அந்த படம் நிச்சயம் வரும்.
கே: வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டதாக ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தீர்களே?
ப: நான் தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்கியதில்லை. என் தோல்விகளை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன்.

கே: உங்கள் கவிதை தொகுப்பு எப்போது வெளிவருகிறது.
ப:விரைவில் வெளிவரும்.
கே: அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?
ப: எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு நீங்கள் வருவீர்களா என்று நீங்கள் என்னைக் கேட்பது விக்ரம் தர்மா மாதிரி உங்களால் பல்டி அடிக்க முடியுமா என்று நான் கேட்பதுபோல் இருக்கும்.

கே: மும்பை எக்ஸ்பிரஸ் படம் எப்போது தொடங்குகிறது? எப்போது ரிலீசாகும்?
ப: இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி நடிக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் சந்திரமுகி படமும் ஏப்ரல் மாதம்தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Reply
#2
தகவலுக்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
<img src='http://thatstamil.com/images25/cinema/kam22-450.jpg' border='0' alt='user posted image'>

இன்று (07 - 11 - 2004) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கமலுக்கு குருவிகளின் வாழ்த்துக்கள்...!

அதே நாளில் மேலுள்ள செய்திகளைத் தந்த யாழ் அண்ணாவுக்கு நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
வாழ்த்துகளும் நன்றிகளும்
[b][size=18]
Reply
#5
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
உந்த பார்பன டோக் வந்து எப்போதுமே தமிழ், தமிழ்த்தேசிய விரோதிதான்! அன்று புன்னகை மன்னனில் தொடங்கி இன்னும் நிற்பாட்டவில்லை? போராட்டத்தைக் கொச்சைப்படுத்தல், எமது பேச்சுத் தமிழை கொச்சைப்படுத்தல், புலத்தில் எமது வாழ்க்கையை கொச்சைப்படுத்தி படமெடுத்தல் எண்டு செயத டோக்கு, இப்போ தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிழேயே பெயரிடப்பட வேண்டுமென்று இயக்கம் தொடங்கிய பின், வேண்டுமென்றே உந்தப் பெயரில் படத்தை தயாரிக்க வெளிக்கிடுது? ஜெயலலிதா எண்ட பாப்பாத்தி சப்போட் பண்ணுவாளென்ற துணிவும்தான்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

ஏய் டோக்கு! உங்கே எற்கெனவே "சோ", "கின்டு ராம்", .. என்ட பார்ப்பனக் கூட்டம் என்னோடொ, டக்லூசோடு சேர்ந்திருக்குது? விரும்பினால் அப்பிளை பண்ணும்?

மேலதிக விபரங்களுக்கு .........
www.karuna@onion.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#6
கமலின் தமிழ்பற்று


அண்மையில் விழாவொன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழர்களின் தமிழ்ப்பற்று குறைந்து வருவது பற்றி, தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். தமிழ் பேசுவதையே அவமானமாக, தமிழர்களே நினைக்கின்றார்கள் என்ற உண்மையையும் குறிப்பிட்டிருந்தார். 'நன்றி மறந்தவன் தமிழன் என்பதற்கு வேறு உதாரணமே தேவையில்லை. அவன் 'நன்றி' என்ற வார்த்தையே மறந்து விட்டான். அதனால் தான் ஆங்கிலத்தில் தேங்கஸ் என்றே சொல்லிப் பழகிவிட்டான், 'நன்றியை மறந்து விட்டான்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழில் பேசுவது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்ற உணர்வு வளர்ந்து வருகிறது.

தொலைக்காட்சிகளில் ஆங்கிலம் நிரம்பி வழிந்து, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. சன் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களும், இசை நிகழ்ச்சிகளும் அந்தத் தொலைக்காட்சியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தன. ஆனால் அடுத்தடுத்து வந்த தொலைக்காட்சிகளும் சன் தொலைக்காட்சியைப் போலவே ஆங்கிலம் அதிகம் கலந்து பேசினால் தான் வெற்றி பெற முடியும் என்ற ஒரு மூடத்தனமான முடிவுக்குள் நுழைந்தன.

உண்மையில் இன்றைய நிலையில் முழுக்க முழுக்க நல்ல தமிழ் பேசிக்கொண்டு ஒரு தொலைக்காட்சி உருவாகினால், அந்தத் தொலைக்காட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளில் அது பேசும் நல்ல தமிழும் கண்டிப்பாக ஒரு காரணமாக இருக்கும். ஒருவேளை அந்தத் தொலைக்காட்சி வெற்றிபெறவில்லை என்றால் அதற்கு தமிழ் காரணமாக இருக்காது. அந்தத் தொலைக்காட்சியின் வேறு பலவீனங்கள் தான் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் மற்ற தொலைக்காட்சிகள் சன் தொலைக்காட்சியைவிட நாங்கள் எந்த அளவிற்கு அதிக ஆங்கிலம் பயன்படுத்துகிறோம் பார்த்தீர்களா? என்று போட்டி போடுவதிலேயே குறியாக இருக்கின்றன. இதைவிட முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

பிரபல நடிகை குஷ்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொருமுறையும் 'குட் மார்னிங் அண்டு வணக்கம்' என்றுதான் ஆரம்பிக்கிறார். குறைந்தபட்சம் 'வணக்கம் மற்றும் குட் மார்னிங்" என்று சொன்னாலாவது ஆறுதலாக இருக்கும். வேறு மொழியில் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் வணக்கம் மற்றும் நமஸ்காரண்டி" என்றோ அல்லது வேறு மாதிரியோ முதலில் தமிழில் அழைத்து, துவங்கினால் ஏற்றுக்கொள்வார்களா?

இன்னொரு தொலைக்காட்சியில் இன்னொரு தொகுப்பாளி, 'தமிழைநன்றாகப் பேசுகிறோம் என்ற எண்ணத்தில், ஆங்கிலத்தைக் கொலை செய்து விடக்கூடாது" என்று பதறுகிறார். இதேபோல் தெலுங்கு, மலையாள, கன்னட தொலைக்காட்சிகளில் அந்தந்த மொழிகளைக் கொலை செய்தாலும் பரவாயில்லை ஆங்கிலத்தை மட்டும், கொலை செய்யக்கூடாது என்று கூறினால் அவர்கள் விட்டு விடுவார்களா?

இலங்கையில் இருந்து வரும் வானொலியாகட்டும் அல்லது ரூபாவாஹினி தொலைக்காட்சியாகட்டும், அவைகளில் நல்ல தமிழ் புழங்கியது. தமிழில் தனியார் தொலைக்காட்சிகள் வந்த காலத்தில், அவை ரூபாவாஹினியை உதாரணமாகக் கொண்டு இயங்கியிருந்தால் கூட, இன்று தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தமிழ் கொழித்திருக்கும். இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளை பார்த்து விட்டு சாதாரண மக்களும்கூட, ஆங்கில வார்த்தைகளை கலந்து தமிழைக் குதறியும் பேசுவதுதான் நவீன பாணி என்று நினைக்கிறார்களே அந்தப் பைத்தியக்காரத்தனம் வராமல் இருந்திருக்கும்.

பழைய இலங்கை வானொலி அறிவிப்பாளரும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகளின் அறிவிப்பாளருமான அப்துல் ஹமீது இவர்களெல்லாம், என்றென்றும் நல்ல தமிழ் பேசக் கூடியவர்கள். இவர்களின் மொழியாற்றல் மற்றும் உச்சரிப்புச் சிறப்புக்களை அளவு கோலாக வைத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை உருவாக்கி இருந்தாலும் தமிழ் நன்றாக இருந்திருக்கும். ஆனால், தமது தொலைக்காட்சிகள் அதையும் செய்யவில்லை. திட்டமிட்டு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இன உணர்வும் வளரவே கூடாது என்று எல்லோரும் செயல்படுவது புரிகிறது.

அண்மையில், ஒரு படத்தின் ஒளிநாடா வெளியீட்டு விழாவில், நடிகை திரிஷா ஆங்கிலத்தில் பேச, சீறிச் சினந்து எழுந்த இயக்குனர் ராஜேந்தர், 'திரிஷா, தமிழ் நாட்டுப் பெண்தானே? எதற்காக ஆங்கிலத்தில் பேச வேண்டும்?" என்று பொங்கி எழுந்து விட்டார். மிக நியாயமான உணர்வு அது. ராஜேந்தர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக திரிஷாவை யாரும் சமாதானப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

உண்மையில், ராஜேந்தர் பேசியதில் கூட நமக்கு ஒரு திருத்தம் உண்டு. அவர் சொல்லும் பொழுது, 'இங்கு சிம்ரன்,கிரண் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். காரணம் அவர்கள் தாய்மொழி தமிழ் அல்ல. அதனால் பரவாயில்லை. ஆனால் திரிஷா ஆங்கிலத்தில் பேசியது ஏன்?" என்று கேட்டார். ஆனால், சிம்ரனும், கிரனும் கூட தமிழில்தான் பேச வேண்டும். அதுதான்முறை.

எங்கோ ஊர் பேர் தெரியாமல் குப்பை கொட்டிக் கொண்டிருந்த இவர்களை புகழின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, பிரமுகர்களாக்கியது, தமிழ்சினிமா, இவர்கள் சாப்பிடும் சாப்பாடு தமிழ்நாடு போடும் சாப்பாடு. அப்படியிருக்க, இவர்கள் இங்கையே பல வருடங்களாக புழங்கி வரும் நிலையில், தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் பேசச் சொல்லி இவர்களை வற்புறுத்த வேண்டும்.

இங்கே இந்த மண்ணில் தமிழ் திரையுலகில் பிழைக்க வரும் வேற்று மொழிக் கலைஞர்கள் எல்லோரும் தங்கள் தாய் மொழியைச் சேர்ந்தவர்களை இங்கு வளர்த்துவிட்டு, தமிழ்த் திரையுலகில் தமிழர்களின் இருப்பைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தங்கள் தாய்மொழி மாநிலங்களில் இருந்தே தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு வந்து அவர்களுக்கு வேலை கொடுத்து இங்குள்ள தமிழ்க் கலைஞர்களைப் புறக்கணிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கிற, பிழைக்கிற யாவரும் தமிழை, தமிழ் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்ற உணர்வு கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும். நம் தமிழ் கலைஞர்கள் அனைவரும் இனியாவது உண்மையான தமிழ் உணர்வோடு செயல்பட்டால்தான் கமலஹாசனின் ஆதங்கம்,ஒரு நாள் கூத்தாக இல்லாம் தொடர்ந்து எல்லோரும் (மற்ற நடிகர்கள் உட்பட) பின்பற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தி அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும், பரவி, தமிழ் உணர்வுள்ள ஒரு தமிழ்;த் சமுதாயத்தை உருவாக்கும் அளவிற்குப் பலனைத் தரும். அப்போது தான் நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும்.

வீரகேசரி
============================
இது பற்றோ? இல்லாட்டி அரசியலோ? எனக்கு விளங்கேல்லை....உங்களுக்கு????
"மும்பை கடுகதி" ஏன் மும்பை எக்சுபிரசு ஆனது???
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)