Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 292 online users.
» 0 Member(s) | 289 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,187
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,181
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,576
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,574
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,002
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,079
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232

 
  வணக்கம் உள்ளே வருகிறேன்
Posted by: locga - 03-10-2006, 08:16 AM - Forum: அறிமுகம் - Replies (27)

கடந்த சில ஆண்டுகளாக யாழை வெளியிருந்து பார்த்தவன் இப்போ உள்ளே நுழைகிறேன் உறவுகளே உங்களுடன் நானும் ஒருவனாய் இணைவதில் மகிழ்ச்சி

Print this item

  அம்மா கிறுக்கன்
Posted by: aathipan - 03-10-2006, 07:13 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

அம்மா கிறுக்கன்

அ.தி.மு.க.,விற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில் மதுரையில் நமது நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்காக பாடுபட்டு வரும் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க, ராமனுக்கு அணில் போன்று பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.

அவரது பேட்டி:

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் "தொழிலாக' அரசியலில் ஈடுபடும் நடிகர், நடிகைகள் வரிசையில் நீங்களும் அ.தி.மு.க.,வில் இணைந்தீர்களா?

இப்பவும் பிசியாக தான் இருக்கேன். "தொடாமலே', "என் காதலே', "வஞ்சகன்' போன்ற பல படங்களில் நடிக்கிறேன். 1970ல் தி.மு.க.,வில் சேர்ந்தேன். சென்னையில் எனது தலைமையில் சாதிக்பாட்ஷா மன்றம் திறந்தோம். தி.மு.க., தில்லுமுல்லுகளை அம்பலமாக்கி எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., துவங்கியபோது, அக்கட்சியில் நானும், ஐசரிவேலனும் சேர்ந்தோம். அவ்வப்போது கட்சி கூட்டங்களில் பேசியிருக்கேன். முன்பு ரொம்ப பிசியாக இருந்ததால் தீவிர அரசியலில் ஈடுபடலை.

அ.தி.மு.க., மீது உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?

அம்மா இல்லாம அ.தி.மு.க., இல்ல. அவங்க முதல்வரா இருக்கிறதால தமிழகம் அமைதி பூங்காவா இருக்கு. எங்கையாவது ஜாதி சண்டை நடக்குதா? இல்லையே. எல்லாரும் தாயா பிள்ளையா இருக்கோம். கருணாநிதி முதல்வரா இருந்தப்ப என்ன நடந்துச்சு. எங்க பாத்தாலும் சண்டை சச்சரவு. யாருக்கும் நிம்மதியில்ல. கருணாநிதி கொடுக்கிற தொல்லைகளை பாத்து பொறுக்க முடியல. தமிழக மக்களுக்காக "அம்மா' பாடுபடுறாங்க. சுருக்கமா சொன்னா, சுனாமி பாதிச்சப்ப உயிரையும் பொருட்படுத்தாம கடல் பக்கம் போயி பாதிப்புகளை பார்த்தாங்க. பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செஞ்சாங்க. கருணாநிதி மருத்துவமனை போயி படுத்துகிட்டாரு. அத்தோடு பாதிக்கப்பட்டவங்களுக்கு மத்திய அரசிடம் ஜெ., கேட்ட நிதியை கொடுக்க விடாம தடுத்திட்டாரு. அவரு முதல்வரான தமிழகம் தாங்காது. முதல்வருக்கு பக்கபலமா இருக்கனும்னு தோணுச்சு, வந்துட்டேன்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியை கூட்டங்களில் கடுமையாக தாக்கி பேசுகிறீர்களே...

அவரால பல வழிகள்ல நான் பாதிக்கப்பட்டிருக்கேன். அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது. என்னை அவரு கிறுக்கன்னு சொல்லியிருக்காரு. ஆமா, நான் கிறுக்கன் தான். கிறுக்கன் என்றால் பற்று வைப்பவன்னு பொருள். அவரு சொல்படி நான் ஆடல் கிறுக்கன், பாடல் கிறுக்கன், தலைவி மீது கிறுக்கன், தொண்டர் மீது கிறுக்கன்... இப்படி என்னை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனா, கருணாநிதி தமிழக மக்கள் மீது கிறுக்கனா? இல்லையே... அவரு குடும்பத்தினர் மீது தானே கிறுக்கன்.

தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறீர்கள். நடிகராக சொகுசு வாழ்க்கையில் இருந்த உங்களின் உடல்நிலை ஒத்துழைக்கிறதா?

வீட்டுக்கு போயி ஒரு மாதம் ஆச்சு. தினமும் வீட்டுக்காரி போன்ல பேசுவா. அவ சொல்றத தான் சாப்பிடுகிறேன். பிள்ளைங்க தோளுக்கு மேல வளர்ந்துட்டாங்க. அவங்க தனியா தொழில் பண்றாங்க. கிராமத்துல இருந்து வந்த உடம்பு இது. ஆண்டவன் புண்ணியத்துல உடம்புக்கு பிரச்னையில்ல.

தேர்தலில் போட்டியிடுவீர்களா?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வந்திருக்கேன். ஜெயலலிதா உத்தரவிட்டா போட்டியிடுவேன். நானா "சீட்' கேக்க மாட்டேன்.

விஜயகாந்த் பற்றி...

ரொம்ப நல்லவர். யாருக்கும் உதவும் குணம் கொண்டவர். அவரு கூட்டணியில சேர்றதா சொல்றாங்க. அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

Print this item

  வருமா வருமா?
Posted by: வர்ணன் - 03-10-2006, 06:22 AM - Forum: கவிதை/பாடல் - Replies (23)

<b>செவ்விளநீர் மர நிழலில்
மண்ணழைந்து- செம்பருத்தி பூ
இதழ்பிரித்து பொட்டு வைத்து
மெல்லிய காற்றில்
அணிஞ்சில் பழ கோது கொண்டு
விசில் ஊதி..........

ஐஸ் பழ வான் பின்னால் ஓடி
அடித்து பிடித்து
சில்லறை கொடுத்து
நாவில் பனியுருக
நாவால் உதட்டை
துடைத்து துடைத்து
சுவைத்தோமே

வருமா வருமா?
மீண்டும்-அந் நாட்கள் ?
சுகம் தருமா தருமா?

பாட நேரம் வெளியோடி
காளிகோயில் மாமரம் மீதேறி
பறித்து வந்த மாம்பிஞ்சை
ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே
அக்காலம் வருமா வருமா?

சுகம் தருமா தருமா?

கள்ளன் பொலிஸ் விளையாடி
கள்ளனுக்கு பொலிஸ்
"ஊண்டி போட "
அவன் அழுதுகொண்டு
வீட்டை -ஓட
அப்பா கிட்ட உதை வாங்கினோமே
வருமா வருமா அந்நாள்?
சுகம் தருமா தருமா?


மாலா புது சைக்கிள்
எடுத்திட்டாளென்று அழ
போனா போகுது என்று
அப்பா "லுமாலா" சைக்கிள்
ஒன்று எடுத்து தர - குறுக்கால போவான்
ஒருவன் பிளேற்றால் சீற்றை
குறுக்கும் மறுக்கும் வெட்டித்தள்ள
வீட்டை எப்பிடி போவதென்று
தெரியாம- விக்கி விக்கி
அழுதோமே- வருமா வருமா?

அந்நாட்கள் சுகம் தருமா தருமா?</b>

Print this item

  கல்லும் கனியலாம்
Posted by: Vishnu - 03-09-2006, 11:47 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (16)

மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6..7 மாதங்கள் உண்மையா ஒரு வித்தியாசமான நாட்களாக தான் இருந்தது. இப்ப அவங்க போட்டாங்க.

ஜயோ ! ! ! போட்டாங்க இனி நான் தனிய தானே என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கிற ஜீவன் நான் இல்லை. எனக்கு எதையும் தாங்கும் இதயம் ஒன்றை நானே உருவாக்கி வைச்சிருக்கன். எல்லாம் வாழ்க்கையின் பாடங்களில இருந்து வந்தது தான். சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை என்று வாழுற ஆள் நான். எல்லோர் கூடவும் கதைப்பன். ஆனால் அளவாக தான் கதைப்பன். கண்டால் மட்டும் கதைப்பன். அவளவும் தான். யாரையும் தேடி நான் போனதில்லை. 'என்ன இவனை கன நாளா காணலையே என்ன ஆச்சு?? தனியா இருக்கிற மனுசன்' என்று யாரும் என்னை தேடி வந்ததும் இல்லை. அந்த அளவுக்கு யார் கூடவும் நான் நடந்துகிட்டதும் இல்லை.

'ஆமா உங்களுக்கு ரத்த சொந்தங்கள் யாரும் இல்லையா?? குடும்பம் என்று ஒண்டும் இல்லையா??' என்று யாரும் நினைக்கலாம். 'இருந்திச்சு இப்ப இல்லை' என்று நான் சொல்லுவன். இப்படி நான் தனியா இருக்கிதால எனக்கு கஸ்டம் என்றோ.. கவலை என்றோ... ஏக்கம் என்றோ.. ஏதும் இல்லை. உண்மையில் உறவுகளோட சேர்ந்து இருந்தால் தான் இந்த கஸ்டம் கவலை ஏக்கம் எல்லாம் வரும் என்கிறது என்ர கருத்து.

நான் வாழ்கைல நிறைய விசயங்களை இழந்திட்டு.. சும்மா வீணாண நியாங்கள் கூறிக்கொண்டு வறட்டு கௌரவத்தோட இருக்கிறதா யாரும் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. வாழ்க்கையின் முழுமையை என்ட நாளாந்த வாழ்க்கையில நான் காணுறன். யார் என்ன சொன்னாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை. ஏன் என்றால் மற்றவங்களுக்காக நான் வாழல, எனக்காகத் தான் நான் வாழுறேன்.

மரத்தடியில இருந்து எனக்குள்ளேயே நானே பேசிட்டு இருந்தன். இப்ப உங்களுக்கு நல்லவே புரிஞ்சிருக்கும் நான் 23..24 வருசமா தனியாவே வாழ்ந்திட்டு, வாழ்க்கையின் முழுமையை காண்கிறேன் என்று சொன்னதின் அர்த்தம். இப்படி வரட்டுகௌரவம், அதுவும் எனக்குள்ளேயே, என்னோடு நான் பேசிட்டு இருக்கிறது என்ர முக்கியமான பொழுதுபோக்கில ஒண்டு.

லொறி ஓடுறது எனது வேலை. நினைச்சதை செய்ய எங்கட வேலையிடத்தில என்னால மட்டும் தான் முடியும். ஏன் என்றால் நான் மட்டும் தான் தனி ஆள் எங்க வேலை இடத்தில. தூர இடங்களுக்கு லோட் எடுத்திட்டு போக கூட நான் தான் ஒத்துக்கிறது. நினைச்ச இடத்தில சாப்பிடுவன். எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுவன். எப்ப தூக்கம் வருதோ அப்ப படுப்பன். எங்கே என்றாலும் படுப்பன். தொடர்ந்து 2..3 கிழமையாக லொறி ஓடுவன். அதில எனக்கு சலிப்பு என்று ஒன்றும் இல்லை. இது எங்க வேலை இடத்தில எல்லாராலும் முடியாது. ஏன் என்றால் அவங்களுக்கு குடும்பம் குட்டி என்று இருக்கும். இரவு எப்படியும் போகணும் வீட்டில மனுசி தனிய.. பிள்ளை தனிய.. பிள்ளைக்கு அது இது... என்று அவங்களுக்கு நிறைய சோலி இருக்கும்.

எனக்கு இது ஏதும் இல்லை... சில நேரங்கள்ல அவங்க வேலைகளை நான் தான் பாக்கிறது. அவங்களுக்குபதிலா நான் லோட் கொண்டு போறது. இதால எங்க முதலாளிக்கும் என்னில நல்ல இஸ்டம். பல நேரங்கள்ல நானா ஏதும் முடிவு எடுத்து செய்திட்டு முதலாளிக்கு போய் சொன்னால் கூட முதலாளி ஏதும் சொல்லுறதில்லை. காரணம் அவருக்கு என்னில ரொம்ப பற்று. முதலாளிக்கு மட்டும் இல்லை. கூட வேலை பார்க்கிறவங்களுக்கும் என்னில பற்று. காரணம் அவங்களுக்கு லீவு வேணும் என்றால் நான் தானே அவங்க வேலையை செய்கிறது.

எல்லோரும் என்னில பாசம். ஆனால் நான் அவங்க பாசத்துக்கு அடிமைப்பட்டது கிடையாது. சாப்பிட கூப்பிடுவாங்க, என்னை தனி ஆள் என்ற படியால். ஆனால் நான் போனதில்லை. எனக்கு பிடிக்கிறதும் இல்லை. அதுக்காக என்னை ஒரு மாதிரியான ஆள் என்று நினைச்சால் அது தப்பு. வேலைஇடத்தில எனக்காக சாப்பாடு குடுத்துவிட்டால் வாங்கி நல்லாவே வெட்டுவன். ஆனால் எதிர் பார்க்கமாட்டன்.

எனக்கு லீவு தேவையில்லைத்தான் இருந்தாலும்... சில வேளைகள்ல ஒரு கிழமைக்கு லீவு போடுவன். வீட்ல தான் இருப்பன். விரும்பின சாப்பாடுகளை நானே சமைச்சு சாப்பிடுவன். அரசியல்ல எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருக்கு. பேப்பர் சஞ்சிகைகள் வாங்கீட்டு வந்து படிப்பன். வேலைல சரி வீட்ல சரி நல்லா ரெடியோ கேட்பன். சினிமா பாட்டு என்றால் எனக்கு ரொம்ப இஸ்டம். பழைய பாட்டில இருந்து இனிக்கு வந்த பாட்டுவரைக்கும் ஒண்டும் விடாமல் கேட்பன். படம் பார்க்கிறதில்லை நான்.. ஆனால் லீவு நாட்கள்ல எப்பவாவது தியேட்டருக்கு போய் படம் பார்ப்பன். இவைகள் தான் எண்ட தனிமையை இனிமையாக்கிற சில விடயங்கள் என்று சொல்லலாம்.

ஒருவேலையும் இல்லை என்றால் இந்த மரத்தடி சாய்மனைல படுத்துக்கொண்டு எனக்குள்ளேயே நான் வறட்டு கதைகளை பேசிட்டு இருப்பன். மற்றவங்களுக்கும் சொல்லுவன், 'இப்படி நான் தனிமைல இருக்கிறது தான் எண்ட பலம் என்று'

ஆனால் இப்ப கொஞ்ச நாள் எனக்கு வித்தியாசமா... என் கொஞ்சம் சந்தோசமா போய் இருக்கு என்று சொல்லலாம். எல்லாம் என்ட மகள், மருமகன், மகள்டமகன், வந்து நிண்டதுதான். மகளை நான் பிரிஞ்சது அவள் 3 மாத குழந்தையா இருக்கும் போது. ஆரம்பத்தில மகளை பார்க்கணும் என்ற தவிப்பு இருந்ததுதான். ஆனால் பிறகு இருக்கல. இப்ப என்னமா வளர்ந்து நிற்கிறாள்.. இப்ப அவளுக்கு 23.. 24 வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

" உங்களை யாரோ சந்தில விசாரிக்கினம்.. யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்த ஆட்களாம்" என்று பக்கத்து வீட்டு பெடியன் வந்து சொன்ன போது... எனக்கும் யாரோ ஆட்கள் இருக்காங்களா?? என்று போய் பார்த்தன்.

அப்ப ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு அழுதவள். 3 மாதத்தில பிரிஞ்சும் அவள் என்னை போட்டோல பார்த்தே அடையாளம் கண்டு பிடிச்சிருக்காள். ஆனால் அவள் வாயால சொல்லும் வரை எனக்கு தெரியாது அவள் யார் என்று. அப்படி ஒரு கல் நெஞ்சுக்காரனா இருந்து இருக்கன் நான். அன்னில இருந்து இன்க்கு அவள் போகுமட்டும் என் மேல அவள் காட்டின அன்புக்கு அளவே இல்லை. எனக்கு அன்பு செய்ய இப்படி ஒரு ஆள் இருக்கா என்று நான் நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு அவள் பாசம் என்மேல இருந்தது. இதுவரைக்கும் அவள் பிறக்கிறதுக்கு காரணமா இருந்ததை தவிர நான் அவளுக்காக எதுவுமே செய்யல.

அப்படி ரொம்ப பாசம் அவள் என்மேல. ஆனால் ஒரே ஒரு விசயத்திலதான் எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வாறது. அவங்க அம்மா பற்றி பேச்சு வந்தால் தான். ஆனால் அப்படி பேச்சு வந்தால் நான் ஒன்றும் பேசுறதில்லை. அவள் பேசுறதை மட்டும் கேட்டுகொண்டிருப்பன். அவள் சொல்லுற விடயங்கள் எல்லாமே எனக்கு சரியப்பட்டதால தான் நான் பேசாமல் இருந்தனோ என்னவோ. எப்பவும் அவள் அவங்க அம்மாவை விட்டு குடுத்து கதைக்கிறது இல்லை.

சில வேளைகளில 'அப்படி உங்க அம்மா நல்லவாவா இருந்தால், அவா நியாயமான ஆளா இருந்தால் உன்கூட சேர்ந்து இங்க வந்திருக்கலாம் தானே.. ஏன் அவ வராமல் உங்களை மட்டும் அனுப்பினா??' அப்படி என்று நினைப்பன். ஆனால் ஏனோ நினைக்கிறதை மகள்கிட்ட சொன்னதில்லை.

என்ட மருகனும் ஒன்னும் குறைஞ்ச ஆள் இல்லை.. மகளோட சரி.. என்னோட சரி நல்ல மாதிரி, தங்கமான ஒரு பெடியன். என்ட வறட்டு கவுரங்களை எல்லாம் எனக்கு முன்னாலேயே ஒரு பயமும் இல்லாமல் சொல்லி பேசுவார். ஆனால் எனக்கு என்னவோ கோபம் வந்ததில்லை. அவர் சொன்னதில நியாயம் இருந்ததால கோபம் வரலையோ என்னவோ நான் கோபப்பட்டதில்லை. ஆனால் அவர் சொன்னதுக்காக என்னில ஒரு மாற்றத்தை காட்டியதும் இல்லை. என்ட பேரன்.. அவனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. உவடம் எல்லாம் குப்பையாக்கிறதில ரொம்ப கெட்டிக்காரன்... சின்ன பிள்ளைகள் செய்கிற குறும்புகளை பொறுமையோ ஏற்று ரசிக்கிற பாக்கியம் எனக்கு ஒரு பிள்ளை இருந்தும் எனக்கு கிடைக்கல. இருந்தாலும் அந்த இப்ப எனக்கு அந்த குறையில்லை என்றால் அதுக்கு காரணம் அவன் தான் காரணம்.

மகள் போன பிறகு கொஞ்சம் இருந்து பழைய நினைவுகளை அசைப்போட்டது காணும் நாளைக்கு வேலைக்கு போகணும் என்கிறது நினைவுக்கு வர... 'சரி இனி எழும்பி போய் சாப்பிட்டு படுப்பம்' என்று எழும்பி வீட்டுள்ள போனன். வீட்டுக்குள்ள போக வீடு ரொம்ப துப்பரவா இருந்தது. அப்பா தனிய இதேல்லாம் செய்ய மாட்டார் என்று மகளும் மருமகனும் செர்ந்து இனிக்கு காலைல இருந்து துப்பரவு செய்தது தான். ஆனால் மற்றும் படி இப்படி இருக்காது... எண்ட பேரன் எல்லா சாமானும் எடுத்து அங்கே இங்கே என்ரு எறிஞ்சு இருப்பான்.. அதை பொறுக்கிகொண்டு வாறதில தான் எனக்கு ஒரு சந்தோசம். எதோ மனசு கொஞ்சம் ஒரு ஆட்டம் கண்ட மாதிரி இருந்தது.

குசினிக்குள்ள போனன்...குசினிக்குள்ள நான் உள்ளட்டு ரொம்ப நாள். மகள் நிண்ட நாள்ல ஒரு நாள் தன்னிலும் என்னை ஒரு வேலை செய்ய அனுமதிச்சதில்லை அவள். குசினிக்குள்ள போக மகள் உள்ள நிண்டு "போய் இருங்கப்பா நான் சாப்பாடு கொண்டு வாறன்" என்று சொல்லுற மாதிரி ஒரு பிரமை. போய் சாப்பாட்டை பார்த்தன். எனக்காக சமைச்சு மூடி வைக்கப்பட்டு இருந்திச்சு. இனிக்கு தானே கடைசி.. இனி வேலையால வந்து நான் தானே சமைக்கணும் என்று மனசு ஏதோ சோகமா ஃபில் பண்ணி சொல்லுற மாதிரி பட்டுது.

'அட நீயா இப்படி சோகமா கதைக்கிறது... நீ எம்மாம்ப்ட்ட ஆளடா?? உன்ட கொள்கை எல்லாம் எங்கே?? ஏதோ பந்தாவா நிறைய எல்லாம் சொன்னியே... அது எல்லாம் எங்கே போட்டுது?? ' என்று என் மனசைப்பார்த்து நானே கேட்டன். சோகம் வந்தா கதைக்காமல் இருக்கிறது நல்லது, என்ட மனசும் அப்படித்தான்.. நான் சொன்னதுக்கு பதில் ஒன்னுமே சொல்லல. சாப்பாட்டை போட்டு சாப்பிட போனன். ஆனால் என்னால முடியல, இனந்தெரியாத சோகம் ஒன்று என்னை கஸ்டப்படுத்திச்சுது. சாப்பிட மனசு வரல.

" அப்பா நீங்க இனியாவது வந்து எங்க கூட இருங்களேன்.. உங்க கடைசி காலத்தில தனிய இங்க இருந்து என்னத்தை பண்ண போறிங்கள்?? " என்று இப்ப கடைசி கிழமையா அடிக்கடி என்ட மகள் கேட்டது நினைவில வந்து வந்து போச்சுது. ஆனால் அதுக்கு நான் ஒரு பதிலும் சொல்லல, மருமகனும் வந்து கேட்டுப்பார்த்தவர், ஆனால் அதுக்கு உருப்படிய நான் ஒரு பதிலும் சொல்லல, என்ட குணமும் அவைக்கு நல்லவே தெரியும், நான் இப்படி இருக்கிறதுக்கு நான் பட்ட கஸ்டங்களும் காயங்களும் தான் காரணம் என்று அவைக்கு தெரிஞ்சிருக்கணும் என்று நினைக்கிறன்.

கடைசியா போகும் போதும் மகள் தன்ட மகனிட்ட சொல்லி கேட்டது " அப்பப்பாவை எங்க கூட இருக்க சொல்லி கேள்" என்று. ஆனால் அப்ப கூட எனக்கு மனம் விட்டு கொடுக்கல, அந்த அளவுக்கு கல் நெஞ்சகாரன் நான். உண்மையில நானும் எல்லோரையும் போலத்தான் மற்றவங்களை புரிஞ்சுக்கிற ஒரு ஆளா இருந்தனான். ஆனால் இப்ப ஏனோ நான் அப்படி இல்லை.

மனசில ஏதோ ஏதோ நினைவுகள் எல்லாம் வந்து போச்சுது, இந்த 20 வருசத்தில நினைவுக்கு வராத பழைய நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து போச்சுது, ஏனோ மனசு வலிக்கிற மாதிரி இருந்தது, உறுதியா இருந்த என்ட மனசு இப்ப ஏதோ என்ன செய்கிறதென்டு அறியாமல் தவிக்கிற மாதிரி இருந்திச்சு. இப்ப எனக்கு என்ட மகள் மேல கோபம் வாற மாதிரி இருந்தது. இருட்டில கண்ணை இருட்டுக்கு பழக்கிட்டு போய் கொண்டிருந்த என்னை கொஞ்ச நேரம் முன்னால வந்து லைட்டைக் காட்டி சந்தோசப்படுத்திட்டு.. திருப்ப தவிக்க விட்ட மாதிரி இருந்தது.

மனசை கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு படுத்திடுவோம்.. நாளைக்கு வேலைக்கு போய் வர எல்லாமே சரிவரும் என்று நினைச்சிட்டுபடுக்க போனேன். என்ட ரூம்ல போய் உடுப்பு மாத்த உடுப்பை பார்த்த போது. கீழ ஒரு பாக்ல என்ட உடுப்பு எல்லாம் அடுக்கி வைச்சிருந்திச்சு. அது ஒண்டுமில்ல. நான் பதில் சொல்லாவிட்டாலும் போகும் போது நானும் சேர்ந்து அவங்ககூட வருவன் என்று நினைப்பில என்ட மகள் என்ட உடுப்பு எல்லாம் எடுத்து பாக்ல றெடியா அடுக்கி வைச்சு இருந்தாள்.

எனக்கு எல்லா நினைப்புகளும் மாறி மாறி வர.. அப்படியே உடுப்பு பாக்ல சாய்ஞ்சு கொண்டே யோசிச்சன். இப்ப நான் திரும்ப போனால் என்ன நடக்கும் என்று ஒரு முறை நினைச்சுப்பார்த்தன். அதை என்னால ஜீரணிக்கமுடியாமல் இருந்தது. ஆனால் போகாமல் இனியும் இங்கே தனிய இருக்கிறதை நினைச்சுப்பார்க்கவே முடியல. மகள் சொன்ன வார்த்தைகளை நினைச்சுப்பார்த்தன்.

இப்ப கூட போனால் மகள் கூட சேர்ந்து போகலாம் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி கொண்டு இருப்பாங்க போய் சேர்ந்துக்கலாம் என்று மனசு சொல்லிச்சு. இவளவு காலமும் என்ட சொல்லு கேட்ட என்ட மனசு எப்ப எனக்கே கட்டளை போட பாக்கை எடுத்து க்கொண்டு மகள் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுற இடம் நோக்கிப் புறப்பட்டேன்.

(முற்றும்)

எழுத்துப்பிழைகள், மற்றும் ஏனைய பிழைகளை சுட்டிக்காட்டவும் :roll: :roll:

Print this item

  வணக்கம்
Posted by: Manmathan18 - 03-09-2006, 05:06 PM - Forum: அறிமுகம் - Replies (28)

வணக்கம் என்னையும் உங்களுடன் சேர்த்து கொள்வீர்களா? நம்பிக்கையுடன் வந்து இருக்கிறேன்

vanakam ennaium ungaludan serthu kolvierkala nambikaiudan vanthu irukiren

<b>தமிழில் திருத்தப்பட்டுள்ளது -யாழ்பாடி </b>

Print this item

  நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி
Posted by: ThamilMahan - 03-09-2006, 03:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (207)

இன்றைய தினம் நிதர்சனம்.கொம் இல் வெளிவந்துள்ள "யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிங்களப்படைகளின் ஒற்றன் நியமனம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கலாநிதி ஜீவன் ஹூல் அவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய புத்திஜீவிகளில் ஒருவர் என்பது பேராதனைப் பல்கலைக்கழக சமுதாயம் அனைத்திற்கும் தெரிந்த விடயம். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது அனைத்துத் தமிழருக்கும் பெருமை தரும் ஒரு விடயம்.

நான் நினைக்கிறேன் நிதர்சனம் ராஜன் ஹூல் (UTHR என்ற பெயரில் அடிக்கடி அறிக்கை விடுபவர்) என்பவருடன் கலாநிதி ஜீவன் ஹூலின் பெயரைப் போட்டு, தான் குழம்பியதுமல்லாமல் மற்றவர்களையும் குழப்பி கற்பனையான ஒரு தலையங்கத்தை தனது செய்திக்கு இட்டுள்ளது.

Print this item

  துடுப்பெடுத்தாட்டம் - கவிதை
Posted by: Selvamuthu - 03-09-2006, 03:02 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது.
படித்துப்பாருங்கள்.

[size=18]துடுப்பெடுத்தாட்டம்

ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு
ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு
"கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு
துடுப்பு எனசொல்வார் தமிழில்.

பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச
தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில்
பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே
முக்கி முக்கி அடித்தவர்.

கையை மடிக்காது வீசவேண்டும் அதனை
கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில்
தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால்
உயர்த்திக் காட்டுவார் விரல்.

நடுவர் இருவர் நட்ட தடிக்குள் அடித்துவிட்டு
ஓடுவர் இருவர் வட்டத்தைவிட்டு - தரையில்
முட்டிச்சென்றால் நான்கும் முட்டாமல் சென்றால்புள்ளி
கட்டாயம் பெறுவார் ஆறு.

காலுக்கும் தலைக்கும் கைகள் இரண்டிற்கும்
நாலுபுறமும் இடுவார் காவல் - இல்லையெனில்
துள்ளும் பந்துவந்து தோலோடு என்புடைக்கும்
பல்லும் போகும் பறந்து.

சுழல்ப்பந்து வீச்சென்றால் துரிதாக விளையாடார்
மழைவந்து குழப்பாதோ எனநினைப்பார் - வளைபந்தும்
வரும் ஒருகரையால் விழுந்து சுருண்டுபின்
விரையும் மறுகரையால் ஒழிந்து.

ஒருநாள் என்றால் உற்சாகம் இடைவிடாது
ஐந்துநாள் என்றால் சிறுது}க்கம் - ஒருநாளும்
தவறாது வர்ணனையை வானலையில் கேட்பார்
பாரெங்கும் மக்கள் பரந்து.

ஒருநு}று அரைநு}று அடித்துவிட்டால் புகழ்மாலை
ஒருபந்தில் அகன்றுவிட்டால் பொன்வாத்து - குறிபார்த்து
எறிபவர்க்கும் கோணாமல் பிடிப்பவர்க்கும்
பரிவாரம் பலநாளாய் தொடரும்.

வெள்ளையுடை போட்டு வெயிலில் விளையாடும்
நல்லகுணம் கொண்டோர் விளையாட்டென்பார் - இந்நாளில்
சிறுதொகைக்காய் சுூதாட்டம் குழறுபடி ஏமாற்றம்
வெறுவெறுப்பை ஊட்டுவார் வீணோர்.

முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம்
தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன்
வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன்
மூசிமூசி வலம்வருவோம் வீட்டை.

Print this item

  ¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ
Posted by: sri - 03-09-2006, 10:14 AM - Forum: விளையாட்டு - Replies (27)

¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ù츢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ

'ż츢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ ¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, ¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Ũà ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ.
Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄާÀ¡Ðõ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òШÈ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯Õš츢 ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨Ä¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ.



¡ú. Áò¾¢Â ¸øæÃ¢ «½¢
żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼ò¨¾ «È¢Ó¸ôÀÎò¾¢Â ¦ÀÕ¨Á¢¨É ¡úôÀ¡½ Áò¾¢Â ¸øæ¡¢Ôõ «¾ý ¨Á¾¡ÉÓõ ¦ÀüÚ ¿¢ü¸¢ýÈÉ.

þÃñÎ ¸øÄ¡¡¢¸Ù§Á §¾º¢Â Áð¼ò¾¢ø ÁðÎõ «øÄ¡Áø º÷ŧ¾º Áð¼ò¾¢Öõ ÐÎôÀ¡ð¼õ ÁðÎõ þýÈ¢ Àø§ÅÚ Å¢¨Ç¡ðÎòШȸǢÖõ ÀÄ º¡¾¨É¸¨Ç ¿¢¨Ä¿¡ðÊÔûÇÉ.

¡úôÀ¡½ Áò¾¢Â ¸øÄ¡¡¢ Á¡½ÅÉ¡¸ þÕó¾§À¡Ð¾¡ý þÄí¨¸ìÌ Ó¾ýÓ¾ø ¬º¢Â Å¢¨Ç¡ðÎô§À¡ðʸǢø ±¾¢÷ţú¢í¸õ ¾í¸ôÀ¾ì¸ò¨¾ô ¦ÀüÚ즸¡Îò¾¡÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

100 ¬ÅÐ ÅÕ¼ò¾¢¨É ¦¾¡ðÎ ¿¢üÌõ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ Á¡¦ÀÕõ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ç¢ÉÐõ ¿ðÒÈ×ìÌ Á¡¦ÀÕõ º¡ýÈ¡¸ þÕ츢ýÈÐ.



ÒÉ¢¾ Àâ§Â¡Å¡ý ¸øæÃ¢ «½¢

Å¢¨Ç¡ðÎ ¾Å¢Ã Àø§ÅÚ Ð¨È¸Ç¢Öõ, ¸¡Ä¸ð¼í¸Ç¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ùõ ¾í¸Ç¢¨¼§Â ¦ÀÕõ ¿ðÒÈÅ¢¨Éô §À½¢ôÀ¡Ð¸¡òÐ ÅÕ¸¢ýȨÁÔõ, ´Õ º¢Èó¾ ±ÎòÐ측ðÎ.

þó¾ þÃñÎ «½¢¸ÙìÌõ þ¨¼Â¢ø þÐŨà ¿¨¼¦ÀüÈ 99 §À¡ðʸǢø À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ 33 ¾¼¨Å¸Ùõ, Áò¾¢Â¸øæ¡¢ 22 ¾¼¨Å¸Ùõ ¦ÅüÈ¢ ¦ÀüÚûÇÉ. þ¾¢ø 44 §À¡ðʸû ¦ÅüÈ¢§¾¡øÅ¢Â¢ýÈ¢ ÓÊ×üÚûÇÉ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

þó¾ Ó¨È þó¾ô§À¡ðʸÙì¸¡É «¨ÉòÐ À¡Ð¸¡ôÒ ÁüÚõ ²üÀ¡Î¸¨Ç þÃñÎ ¸øæ¡¢ ¿¢÷Å¡¸í¸Ù§Á ¦À¡Úô§ÀüÚûǾ¡¸ ¦¾¡¢Å¢ì¸ôÀθ¢ýÈÐ.

þýÚ ¬ÃõÀÁ¡¸ þÕìÌõ §À¡ðÊ ¸¡¨Ä 9.30 Á½¢ìÌ ¬ÃõÀÁ¡Ìõ ±ýÚõ §À¡ðÊ þ¼õ¦ÀÚõ ãýÚ ¿¡ð¸Ùõ ¾¢ÉÓõ 90 ÀóÐ À¡¢Á¡üÈí¸û (µÅ÷¸û) ÀóРţºôÀÎõ ±ýÚõ «È¢Å¢ì¸ôÀðÎûÇÐ.

þõÓ¨È Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ «½¢ìÌ ƒ£.Á¸£ÀÛõ, ¡úôÀ¡½õ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢ «½¢ìÌ ±ý.¿Å¿£¾Ûõ ¾¨Ä¨Á ¾¡í̸¢ýÈÉ÷. ¾ü§À¡Ð ¡úôÀ¡½ ¿¸¡¢ø µÃÇ× «¨Á¾¢ ¿¢Äמý ¸¡ÃÁ¡¸×õ, þÐ Ó츢ÂÁ¡É 100¬ÅÐ ÅÃÄ¡üÚ ¦ÀÕ¨ÁÁ¢ì¸ §À¡ðÊ ±ýÈ ¸¡Ã½ò¾¢É¡Öõ þô§À¡ðÊ¢¨É §¿¡¢ø ¸ñÎ ¸Ç¢ôÀ¾ü¸¡¸ ²Ã¡ÇÁ¡¸ ¦ÅÇ¢¿¡Î¸Ç¢ø þÕóÐõ, À¢ÈÁ¡Åð¼í¸Ç¢Ä¢ÕóÐõ ¦ÀÕõ¦¾¡¨¸Â¡É À¨ÆÂ Á¡½Å÷¸Ùõ ÅÕ¨¸¾óÐûǾ¡¸ ¦¾¡¢ÂÅÕ¸¢ýÈÐ.

நன்றி சங்கதி

Print this item

  இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில்
Posted by: siddu - 03-09-2006, 09:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து என்ன செய்வது?

அருள்சாமி, சுரேஸ் வடிவேல் போன்றோரால் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமாயின், எம்மால் எமது தலைவருக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க முடியுமென தெரிவித்த இ.தொ.கா.வின் உப தலைவர் ஆர்.யோகராஜன் ஆனால், பதவிகளை பெறுவதற்காக நாம் அரசுடன் இணையவில்லை என்றும் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சிசபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.தொ.கா.மற்றும் மலையக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கடந்த சனிக்கிழமை மாலை மாத்தளை ஹோம்சீஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

"மலையக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இணக்கம் காணப்பட்டபின்பே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இன்றைய அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளோமே தவிர அமைச்சர் பதவியையோ வேறு எந்தவொரு சலுகைகளையோ எதிர்பார்த்தல்ல.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படவிருந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதும் எமது கோரிக்கைகளில் ஒன்றாகும். எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள இன்றைய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோமே தவிர அரசுடன் இணைந்து செயற்படும் எண்ணம் எமக்கில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மலையக மக்களினது 95 சதவீத வாக்கு ஐ.தே.கட்சிக்கே சென்றடைந்தது. தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச மட்டத்தில் இது பாரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் எம்மை அணுகி மலையக மக்களின் வாக்குகளை உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தனக்கு பெற்றுத்தறுமாறு கோரிக்கை விடுத்தார்.

நாம் இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பின்பே உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்தோம். எமக்கு அமைச்சர் பதவி முக்கியமல்ல. எமது மக்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதே எமது லட்சியமாகும்.

எமது வேண்டுகோளுக்கிணங்க தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், தொண்மான் கலாசார மண்டபம், தொண்டமான் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்துகொள்ள ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நாட்டில் இன்னும் நான்கு வருடத்துக்கு எந்தவொரு தேர்தலுமே நடைபெறமாட்டாது. எனவே நாம் தொடர்ந்து நான்கு வருடம் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கூக்குரலிடுவதனால் எந்தவொரு பயனும் ஏற்படமாட்டாது. எமது மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமானால் பதவியில் இருக்கும் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். இல்லையேல் பதவியில் இருக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம் இன்றைய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளோம்.

இம்முறை மாத்தளை மாநகர பிதா பதவியை எமது தலைமை வேட்பாளர் எம்.சிவஞானத்துக்கு வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை இன்று அவர் மறந்து செயற்படுவதுபோல் அவரால் எம்மை ஏமாற்ற முடியாது" என்றார்.



நன்றி தினக்குரல்

Print this item

  கவி எழுதும் ஆசை
Posted by: Selvamuthu - 03-09-2006, 12:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

கவி எழுதும் ஆசை

பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு
கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை
நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில்
நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன்
பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை
தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி
சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க
எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன்

கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து
சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு
வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை
எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன்
கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா?
பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி
கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை
எட்டிப் பிடித்திடவே மொய்த்தபடி கண்ணயர்ந்தேன்

சொட்டக் கவியென்று சொல்லி அங்குவந்து
குட்டித் து}க்கமிடல் குற்றமே என்பதுபோல்
எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை
கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி
சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என்
மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன்
பட்டால்தான் தெரியும் படுகவி பட்டதுன்பம்
கட்டாயம் கவியெழுத கதிரைகொண் டங்குசெல்லேன்

வீட்டுவேலை செய்யாமல் பாட்டெழுதச் சென்றகவி
புூட்டிவிட்டுக் குளியறையில் புகுந்துவிட்ட மாயமென்ன?
ஏட்டினிலும் ஏதுமில்லை எனஏங்கி என்மனையாள்
ஆட்டிவிட்ட பம்பரமாய் அடுக்களையில் நின்றிருந்தாள்
மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி
நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட
ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ
அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன்


உறவுகளே இக்கவிதையைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்னவென்பதை எதிர்பார்க்கிறேன். கூடியளவு நகைச்சுவை கலந்து எழுதவே விருப்பம். இயன்றவரை முயன்றிருக்கிறேன். இக்கவிதை எழுதி சில வருடங்கள் கழிந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Print this item