| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 533 online users. » 0 Member(s) | 530 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,183
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,179
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,576
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,272
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,567
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,999
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,394
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,066
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,968
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232
|
|
|
| சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும் |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-11-2006, 08:48 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (18)
|
 |
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்
இளவேனில்
சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்?
ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள்.
அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு மன்னன் ஷின்ஷி குவாங்தி மயங்கிப் போய்விடவில்லை. ஏனென்றால், வாழ்த்திய புலவர்கள் ஷின்ஷி குவாங்தியை வாழ்த்தும்போது அவனுக்கு முந்திய பல அரசர்களின் பெருமைகளைச் சொல்லி, அந்த வரலாற்றின் வாரிசே வாழ்க என்றார்கள்.
மன்னனுக்கு அது பொறுக்க வில்லை. வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் இந்த மண்ணில் தகுதி பெற்றவன் நான் ஒருவன் மட்டுமே. எனக்கு முன்னேயும் புகழுக்குரிய மன்னர்கள் இருந்தார்கள் என்று சொல்வது எனக்கு எதிரான சதியேதான். மனிதர்கள் நினைவிலும், வரலாற்றுக் குறிப்பிலும் ஒரே மன்னனாகத் தன் பெயர் மட்டுமே இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், காவியங்கள், சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் என அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.
நாடெங்கும் உள்ள நூல்களெல்லாம் சிப்பாய்களால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒரு பெரும் சதுக்கத்தில் போட்டு தீவைத்தார்கள். அந்த நெருப்பு அணையாமல் ஆறு மாதங்களுக்குமேல் எரிந்தது.
ஆனாலும் வரலாற்றை அழிக்கவிடோம்; அறிவின் கொடைகளை நெருப்பிலிடச் சம்மதியோம் என்று நூல்களைத் தரமறுத்தவர்களும் இருந்தார்கள். அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்ட அறிவின் ஆதரவாளர்கள் இருபது லட்சத்துக்கும் அதிகமாயிருந்தார்கள்.
அறிவை நேசித்ததற்காக, வரலாற்றைப் பாதுகாப்பதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற அந்த லட்சக்கணக்கான அடிமைகள் கட்டியதுதான் அழியாத வரலாற்றுச் சின்னமாய் உலக அதிசயமாய் விளங்கும் சீனத்து நெடுஞ்சுவர். சீன நெடுஞ்சுவர் நினைவுக்கு வரும்போதெல்லாம், வரலாற்றையும் அறிவியலையும் பாதுகாப்பதற்காக ஆக்கினைக்கும் அடக்கு முறைக்கும் அஞ்சாத அந்த அறிவார்ந்த போராளிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய தியாகம் சீனத்தின் வரலாற்றையும் அறிவுக் களஞ்சியத்தையும் மாத்திரமல்ல பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கும் பாதுகாப்பரணையும் வழங்கியிருக்கிறது.
எத்தனை கொடுமைகள் எதிர்வந்தாலும், கொடுங்கோலன் ஆட்சி நடத்தினாலும், அந்தச் சீனத்துக்குச் சென்றேனும் அறிவைத்தேடு என்பதுதான் உயிர்த் துடிப்புள்ள மனித இனத்தின் அறிவுரை; அறை கூவல்!
சீனத்தில் நடந்ததை விடக் கொடுமையான முறையில் அறிவுக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரான கொடுமைகள் நடந்த வேறொரு நாடும் உண்டு.
சீனத்திலே ஒரே ஒரு ஷின்ஷி குவாங்தி தான் இருந்தான். இந்த நாட்டிலோ ஆயிரக்கணக்கான அறிவின் எதிரிகள் இருந்தார்கள். அது இந்தியாதான். சீனக் கொடுங்கோலன் வரலாறே என்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும். நான்தான் ஆதி; நான்தான் அந்தம்; என்னையன்றி வணக்கத்துக்குரிய மன்னன் வேறெவனும் இருக்கக் கூடாது என்றான்.
அதே கருத்தை இங்குள்ள ஆரியர்கள் வேறு சொற்களில் சொன்னார்கள்.
பிரபஞ்சம் இயற்கைக்குக்
கட்டுப்பட்டது.
இயற்கை கடவுளுக்குக்
கட்டுப்பட்டது,
கடவுள் மந்திரத்துக்குக்
கட்டுப்பட்டவர்
மந்திரம் பிராமணனுக்குக்
கட்டுப்பட்டது
என்பது இவர்களின் நம்பிக்கை. பார்ப்பனனே மந்திரங்களுக்கும், கடவுளுக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்துக்கும் அதிபதி. பார்ப்பனரே உயர்ந்தோர். அவர்களே உலகையும் வாழ்வையும் நிச்சயிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். மற்ற இன மக்கள் அனைவரும் இழிந்தவர்கள்; சூத்திரர்கள். பார்ப்பனர்க்குப் பணிவிடை செய்வதே பார்ப்பனர் அல்லாதாரின் கடமை; தர்மம்; விதி; கதி என்றார்கள்.
ஆரியரே அனைத்து மக்களிலும் மேலானோர்; ஆரிய இனமே ஆளப் பிறந்த இனம் எனும் ஆணவச் சிந்தனை இட்லரை வெகுவாய்க் கவர்ந்தது. அந்த ஆரிய வெறியில்தான் அவன் உலகப் போரைத் தொடங்கினான். இட்லரின் நாஜிகள் முதலில் போலந்தைக் கைப்பற்றினார்கள். அப்போது கோயரிங் எழுதினான்; “போலந்திலே பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டுங்கள். போலந்துப் பெண்களை நமது படைவீரர்கள் கற்பழிக்கட்டும். நாஜி படைவீரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உயர்ந்த இரத்தத்துக்குப் பிறந்தவர்கள் என்பதால் அந்தக் குழந்தைகளே வாழும் தகுதி பெற்றவர்கள், அவர்கள் மூலம் போலந்தின் ‘தீட்டு’ கழியட்டும்’’ என்பதுதான் கோயரிங்கின் உபதேசம்.
இந்த ஆரிய வெறிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியானார்கள். பூமியே இரத்தச் சேறாகியது. இந்த இனவெறிக் கொள்கைக்கு ஜெனேட்சை குற்றத்துக்கு பாசிசத்துக்கு இந்தியப் பார்ப்பனியே வித்தாகும். இங்கே ஒரு ஷின் ஷி குவாங்தி இல்லை; ஒரு இட்லர் இல்லை; ஒவ்வொரு அக்கிரகாரத்திலும் வீட்டுக்கொரு இட்லர் இருக்கிறான்.
இவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இந்திய வரலாற்றையே அழித்தார்கள். இந்திய மொழிகள்; இந்தியத் தத்துவங்கள், இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் மறைத்தார்கள்; திரித்தார்கள்; அனல் வாதம் புனல் வாதம் என்கிற பெயரில் சூழ்ச்சியினால் அழித்தார்கள்.
இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்த பகுத்தறிவு இயக்கமாம் புத்தம், தேடித் தேடி அழிக்கப்பட்டது. புத்த விகார்கள் நாசமாக்கப்பட்டன. அவை ஆரியச் சின்னங்களாக மாற்றப் பட்டன. மங்கை உருவில், மகான் உருவில் பாண்டிய மன்னனை ஏமாற்றி எண்ணாயிரம் தமிழ்ச் சிந்தனையாளர்கள் கழுவிலேற்றப்பட்டார்கள்.
முத்துக்களை எடுத்துப் பன்றிகளுக்கு முன் போடக் கூடாது என்பார்கள். தமிழர்களோ முத்துக்களை விடவும் மேலான தங்கள் இதயத்தையே அவர்களுக்குத் திறந்து வைத்தார்கள். ஆனால் பன்றிகள் எவ்வளவோ உயர்ந்தவை என்று ஆரியர்கள் நிரூபித்தார்கள்.
பஞ்சையாய்ப் பாராரியாய் நாடோடிகளாய் வந்த ஆரியர்களுக்காகத் திராவிடர்களின் இதயம் உருகிற்று.
நண்பர்களே வீடுதருகிறோம்; நிலம் தருகிறோம்; எம் சகோதரராய் உங்களை அணைத்துக் கொள்கிறோம் நிம்மதியாய் வாழுங்கள் என்று வளமான பகுதிகளையெல்லாம் ‘மங்கலங் களாய்’த் தானம் தந்தார்கள்.
தமிழரின் பண்பாடே அவர்களுக்கு விலங்காயிற்று. நாகரிக இனத்தைப் பண்பாடற்ற போக்கிரிகள் எளிதில் வெல்வதுதான் வரலாறு எங்கிலும் காணக் கிடைக்கும் செய்தி. இங்கேயும் அதுதான் நடந்தது.
தமிழினம் ஏமாற்றப்பட்டது. அவர்களின் சரித்திரம் மாற்றப்பட்டது. அழிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் போக எஞ்சியவற்றுள் ஆரியச் சிந்தனைகள் புகுத்தப்பட்டன. புகழ் பெற்ற புலவர்கள் கலைஞர்களை ஆரிய மயமாக்கினார்கள். குறைந்த பட்சம் ஆரியருக்குப் பிறந்த சூத்திரரே அறிவாளிகள் ஆக முடியும்; திருவள்ளுவர், அகத்தியர் போன்றோர் அப்படித்தான் அறிஞராய்ப் பிறந்தவர்கள் என்று கதை கட்டினார்கள். ஆரியக் கறைபடாத தமிழ் இலக்கியமே இல்லை என்கிற அளவுக்கு இலக்கிய - வரலாற்று மோசடிகள் நடந்தன. இதை எதிர்த்தவர்கள், தமிழினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க நினைத்தவர்கள், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.
பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர், ஆசைத் தம்பி, சிற்றரசு, குத்தூசி குருசாமி என்று நூற்றுக்கணக்கான திராவிட இனச் சிந்தனையாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய நூல்கள் தடைசெய்யப்பட்டன. இந்த அறிவின் ஆதரவாளர்கள், சிறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளான போதிலும் சீன நெடுஞ்சுவரை விடவும் உறுதியான நெடுஞ்சுவர் ஒன்றைத் தம் இனத்துக்காகக் கட்டி எழுப்பிவிட்டார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுத்தறிவுக் கோட்டை தான். திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம்தான் தமிழினத்தின் வரலாற்றையும் சிந்தனைக் கருவூலத்தையும் பாதுகாத்து, ஆரிய ஆணவத்தையும் எதிர்த்து நிற்கிறது. இந்த அறிவியக்கக் கோட்டையைக் கட்டிய அடித்தள - அஸ்திவாரக் கற்களில் ஒன்றுதான் புலவர் குழந்தையின் இராவண காவியம்...
(-சென்னைச் சிந்தனையாளர் மன்றம் நடத்தும் தமிழ் அறிஞர் சிலம்பொலியாரின் இராவண காவியம் தொடர் சொற்பொழிவின் நான்காம் பொழிவில் இளவேனில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து ஒரு பகுதி.)
¿ýÈ¢- ¾Á¢úý§È¡÷ §À芦ºö¾¢Á¼ø
|
|
|
| காமம் அதில் காதல் இல்லை..காதல் அதில் காமம் இல்லை |
|
Posted by: Snegethy - 03-11-2006, 04:21 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (7)
|
 |
<span style='color:blue'>காமம் அதில் காதல் இல்லை
காதல் அதில் காமம் இல்லை
[size=15]வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போகும்போது கீழ் வீட்டு அண்ணி ( அவரு அண்ணா அதனால் இவுங்க அண்ணி கணக்கு சரியா) கோலம் போடுவார்கள் என்னை கண்டவுடன் உதட்டோரமாக சிரிதாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பதிலுக்கு நானும் புன்முறுவல் ஒன்று செய்துவிட்டு டீகுடிக்க போய்விடுவேன். எப்படியோ ஒருவருடம் ஓடிப்போச்சு இந்த வீட்டிற்க்கு வந்து. இரண்டு அல்லது மூன்று முறை அண்ணி மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்திருக்கிறேன் ஒருவராம் நீடிக்கும் அப்புறம் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்,அந்த அண்ணா எப்போதாவது மேலே வந்து இரவு நெடுநேரம் இருப்பார் விரக்தியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார் பிறகு அங்கேயே படுதுறங்கி விடுவார். இன்னிக்கு அண்ணி மீண்டும் மிக சந்தோசமாக இருப்பது தெரிந்தது, மாடிப் படியிறங்கி வரும்போது அவர் ஏதேபாடல் முனுமுனுத்தபடி கோலம் போடுவதை பார்க்க அழகா இருந்தது, தலை குளித்து வெள்ளை துண்டு தலையில் சுறியிருக்கும் விதமே ஒரு அழகுதான்,அவருடைய மாநிறத்துக்கு மஞ்சள் மெலிதாக பூசியிருந்தது மினுமினுப்பாக இருந்தது ,சிறிய வட்டமாக குங்குமம் அதற்க்கு கீழ் மெல்லியதாக கோடுபோல திருநீர், வெளிர்மஞ்சள் சேலையில் காலையில் மங்களகரமான அவர் முகத்தில் விழித்தது மனதில் ஒரு மகிழ்ச்சி வந்தது,
"என்ன அங்கேயே நின்னுட்டீங்க ஒ படிக்கட்டுல கோலமா டப்பா இருக்கா, இருங்க நகத்தி வச்சிடுரேன்" என்று கேட்டுக்கொண்டே படியிறங்க வழிசெய்து கொடுத்துவிட்டு "கோலம் எப்படி இருக்கு"?என்றார்
இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ம்ம் ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மாவும் இப்படிதான் மயில் கோலம் போடுவாங்க என்றேன்
"அட கோலத்தோட பேரெல்லாம் தெரியுமா" என ஆச்சரியமாக கேட்டு பிறகு "என்ன உங்க அண்ணா இன்னும் தூங்குறாறா?" என்று என்னிடம் கேட்டார்.
நான் பாக்கலியே மேல தூங்குறாரா என்று அவரையே திருப்பி கேக்க
அவர் வாய் விட்டு சிரித்துவிட்டார்.
"இருக்குறது ரெண்டு ரூம் அதுலயெ என்னா நடக்குதுன்னு தெரியலையா?
ராத்திரி வீட்டுக்கு எங்க மாமா வந்தாங்க கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மேல படுத்துக்க வந்துட்டார்" என்று சொல்லிவிட்டு அய்யோ மாமா எழுதிட்டார் என்று சொல்லிகொண்டு வேகமாக வீட்டுக்குள் போய்விட்டார்.
எனக்கு என்னவோ மனம் பலசிந்தனைக்கு போய்வந்தது,அண்ணியுடய மாமா வரும்போது அண்ணா மேலே படுக்கவந்துருவார் விரக்தியாக பேசிகொண்டிருப்பதும் அப்போதுதான். அண்ணியும் அந்த நேரத்திலதான் ரொம்ப சந்தோசமாக இருக்கார் ரொம்ப யேசிச்சுக்கிட்டே ரெண்டு டீ ரெண்டு சிகரெட்டு அடிச்சுட்டு வீட்டுக்குவர அண்ணா முழிச்சுட்டார்ன்னு தெரிஞ்சது,அவருடய மகன் அவருக்கு காபி வைத்துவிட்டு ஓடிவிட்டான்,தந்தையிடம் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் கிடையாது இவருக்கும் மகன்மீது பாசம்துளிகூட கிடையாது காய்ச்சல் வந்தபோதுகூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனது அவர் மனைவிதான் இவர் வேறுவேளை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.அன்று மாடியில் இருந்து பார்த்த எனக்கு வினோதமாக இருந்தது இன்று அது குழப்பத்தை அதிகரித்தது.சரி இதுக்குமேல் இதுபற்றி யோசிக்க வேண்டாம் என முடிவுக்கு வந்தவனாக குளிக்க போனேன்.குளித்துக்கொண்டிருக்கும் போது
"தம்பி இன்னிக்கு வெளிய போரிங்களா எதுனச்சும் வேளை இருக்கா?" என்று அண்ணா கேட்டார் நானும் இல்லை இன்னிக்கு சனிக்கிழமை கோயில் போகனும் அவளோவுதான் என்றேன்.
"சரி ரெடியா இருங்க நானும் வருகிரறேன்" என்று சொன்னவர் படியிறங்கும் சத்தம் கேட்டது.
சுமார் 30 நிமிட மவுனம் என்னை பித்துபிடிக்க வைத்து விட்டது,கோயிலுக்கு வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் மவுனத்தை கலைப்பதாக என்னி
அந்த நாட்டியகாரி சிலை அழகா இருக்குல்ல நல்ல கலைஞ்சன் செய்து இருக்கனும் போல என்று சொல்ல
அவர் "அதை பார்க்க உனக்கு என்ன தோனுது?" நானும் நல்ல அசைவுகள், அமைப்புகள் உயிரூட்டி பார்த்தால் நிச்சயம் நல்ல அழகான பெண்கிடைப்பாள் என்றேன்.
மீண்டும் அவர் "ம்ம் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அதான் இப்படி சொல்ர" என்றார்,
நானும் நீங்கள் சொல்லுங்கள் என்றேன் அவரும் தொடர்ந்து எவ்வளவு "களைப்பாக வீட்டுக்கு வந்தாலும் ஒரு முறை சல்லாபம் கொண்டு பிறகு தூங்க போகலாம் நல்ல காமத்தை கிளரும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்"
என சாதாரணமாக சொல்ல நான் இதை ஒத்துக்கெள்ள முடியது பெண் இன்பத்திற்க்காக மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல என்று வாதாட குறுக்கிட்டு அவர்
"இன்னிக்கு உன்கிட்ட மனசு விட்டு பேசனும்னுதான் இங்க வந்தேன்" என்று சொல்லி தொண்டை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்"எங்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது முதல் வருடம் நன்றாக இருந்தது பிள்ளை பிறந்தான்,இரண்டாம் வருடம் ஆரம்பித்தது முதல் தன் மாமா புராணம் பாட ஆரம்பித்து விட்டாள் என் மனைவி,அவள் மாமா முன்பெல்லாம் வந்தால் ஒரு நாள் அல்லது இரண்டாம் நாள் கிளம்பிவிடுவார் போக போக ஒரு வாரம் தங்கிபோக ஆரம்பித்துவிட்டார்,அவரும் என் மனைவியும் சிரித்து கும்மாளம் தாங்க முடியாமல்தான் மேலே வந்து படுக்குறது,சில நேரம் மகனுக்கு அப்பா நானில்லை என்றுகூட தோன்றும்.அவனும் என்னிடம் ஒட்டுவதே கிடையாது
(இப்படி அவர் அடுக்கிகொண்டே போக எனக்கு தலைசுத்திக்கொண்டு வந்தது உடம்பிற்க்குள் ஒருவித நடுக்கம் வந்து ஆட்டிவிட்டுபோனது)
எத்தனையோ நாட்கள் இந்த கோயில்ல சாமிக்கிட்ட இதபத்தி புலம்பிட்டு போவேன் இருந்தாலும் மனசு தனியாதுப்பா அதனால இன்னிக்கு உன்கிட்ட எல்லத்தையும் கொட்டிட்டேன் சீக்கிரமா இந்த அசிங்கத்துக்கு முடிவுகட்டனும் என்று முடித்தார்.
நான் நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள் அண்ணியை பார்க்க அப்படி தோன்றவில்லை என்றேன். "நான்கு வருடத்துக்கு மேல் யோசித்துவிட்டேன் இன்னும் எவ்வளவு நாலைக்கு தள்ளிபோடுறது" என்றார்.
அண்ணிக்கிட்யே கேட்டா என்ன ஒருவேளை அவர்கள் வேறுவிதமாக பழகலாம் இல்லையா?
"தப்பு செய்றவ ஒத்துக்குவாளா"என்று என்வாயை அடைத்துவிட்டார்."சரி வா வீட்டுக்குபோலாம்" என எழுந்து அவர் போக பின்னாலே பயத்துடன் போனேன் இன்னிக்கு ரெண்டுபேருக்கும் வர சண்டைல நான் மத்தளம் என உள்ளுக்குள் காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டடதை உணர்ந்தேன்.நேரே மாடிப்படி எறி அவர் செல்ல பின்னால் பூனைகுட்டிபோல மெல்ல சத்தம் வராமல் படிஏறி போனேன்.கடைசி படி கால் வைக்க கீழே இருந்து அண்ணி குரல்
"உங்க அண்ணாவை பாத்திங்களா" நான் மேலே அவரை பார்க்க அவர் இல்லை என சைகையால் காட்ட நானும் மெதுவாக தலையை மேலும் கீழும் மாக ஆட்டிவிட்டு பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி நானும் குழம்பி அண்ணியையும் குழப்பி வைத்தேன்.
அவரோ அழகாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு
"ஒன்னும் இல்லப்பா எங்க மாமாவுக்கு ஒரு ஆப்ரேசன் இன்னிக்கு நல்லபடியா முடிஞ்சது அவர்க்கிட்ட உடனே சொல்லனும் அதுதான்" என்று சொல்லியவர் முகத்தில் ஒருபெருமிதம் தெரிந்தது.
நான் மெதுவாக ஆப்ரேசன்னா என்று இழுக்க.
"நான் கல்யாணம் பண்ணி வந்த புதுசுல இந்த டாக்டர் பத்தி கேள்விப்பட்டு மாமாவ கூட்டிட்டு போய் காட்டுனா அவர் நாலு வருசம் மருந்து சாப்பிடனும் அப்புறம் ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ண வேண்டி வரும்னு சொல்லிட்டார். பாவம் மாமாவும் வந்து எல்லா டிரீட்மெண்டும் எடுத்துக்கிட்டார்.இன்னிக்கு ஆப்ரேசன் நாள்குறிச்சு காலைலயே போய்ட்டோம் எனக்கு மனசு திக்திக்னு அடிச்சுக்கிட்டே ஒரு மணிநேரம் ஆப்ரேசன் தியேட்டர் வாசல்ல ஒக்காந்து இருந்தேன்,அப்ப இவர கூப்புடலாமான்னு தோனுச்சு ரொம்ப பயந்துட்டேன் நாலு வருசம் ரகசியமா வச்சிருந்துட்டு இப்ப சொல்ல கூடாது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று பல்ல கடிச்சுக்கிடு இருந்துட்டேன் எங்க மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போதே அப்பா தவறிட்டார் எல்லாமே எங்க மாமாதான் அவர மாமான்னு கூப்பிடுறதவிட அப்பான்னு கூப்பிடலாம்,எங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தெரியுமா.
இந்த ஆப்ரேசன் வந்து குழந்த பிறக்க செஞ்சது ஆமா அவருக்கு ஆணனுக்களோட கவுண்ட் குறைவா இருந்துச்சி இனிமெ எல்லாம் சரியாயிடும்.சரி அச்சோ மாமாவுக்கு இந்நேரம் மயக்கம் தெளிஞ்சிருக்கும்கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிவரிங்களா?"
என்று கேட்டவர் முகம் கெஞ்சுவது தாங்காமல் திரும்பி அவரை பார்த்தேன் அவரோ கண்ணீர் தளும்பும் கண்களுடன் வெட்க்கிப்போய் தலைகவிழ்ந்து நிற்க்கிறார்.
இந்த அண்ணாவுக்கு அண்ணி மீது இருந்தது காமம் அதில் காதல் இல்லைஅண்ணிக்கு மாமா மீது இருந்தது காதல் அதில் காமம் இல்லை என்று எண்ணிக்கொண்டுநான் வேகமாக படியிறங்கி போனேன் அவரைதேடுவதற்க்கு?
-சிவனடியார்-</span>
|
|
|
| "விபச்சாரியும்", "உண்டியலானும்"!!!! |
|
Posted by: ஜெயதேவன் - 03-10-2006, 12:34 PM - Forum: புலம்
- Replies (12)
|
 |
[size=18]"ஓன் கோலென்டு" கேள்விப்பட்டிருப்பியள்!! அது உந்த உண்டியலான் அன்ட் கோவும் "ரி.பி.சி"ஆன் "அறசியள் அறங்கம்" நிகழ்ச்சியில் அடியோ அடியென்று அடித்திருக்கினமாம்!!! உண்டியலானின் எச்ச சொச்ச உண்டியல் பணத்தில் இன்று வாழும் விவேகானந்தன் எண்டதுதானாம், உந்த கோலை அடிக்கத் தொடங்கினதாம்!!!! உந்த புது உன்டியல் அரசியல்வாதி விவேகானந்தனெண்டது, ஒரு கதை சொல்லிச்சுதாம் ...
... " ஜேசுநாதரின் வாழ்வில் ஒருநாளாம் எங்கோ சென்று கொண்டிருந்தாராம். அவர் போகும் வழியில் ஒரு பெண்ணை பலர் கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்களாம்!! அதைப்பார்வையிட்ட ஜேசுபிரான் .. ஏன் இப்பெண்ணை கற்களால் அடிக்கிறீர்களென்று வினாவினாராம். அதற்கோ அடித்தவர்கள் ... இவள் ஒரு விபச்சாரி என்றார்களாம், அதற்காகத்தான் தண்டனை வழங்கிகின்றோம் என்றார்களாம்!! அதற்கு ஜேசுபிரான் .. இப்பெண் விபச்சாரிதான், இங்கு குற்றமே செய்யாத யாருமிருந்தால் இவளைத் தண்டியுங்கள்! என்றாராம்" ...
<b>... இக்கதையை கூறிய அந்த அறிவாளி விவேகானந்தன், உண்டியலான் ஜெயதேவன் கள்ளன் தான், உண்டியலை களவெடுக்கிறவர்தான், ஆனால் ஒருதரும் கேட்க முடியாதாம்!!!! .. </b>
செய்வது உண்டியல் களவு!! அதற்கேன் ஜேசுநாதர் வசனமெல்லாம்?????
<b>யாரிந்த விவேகானந்தன்:</b>
லண்டனில் வந்த காலம் தொட்டு கடைகளில் கூலிக்கு வேலை செய்து கொண்டுவந்த இவர், பின் சொந்தமாக மதுபாணங்கள் விற்கும் கடையொன்றை ஆரம்பித்தார்!! கடை வியாபாரம் நட்டத்தில், கடன் தொல்லை மிகுதியால், வியாபாரத்தையே கைவிட்டு விட்டு இன்றுவரை பல வருடங்கள் அரச உதவிப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டுபவர்!!! ஈழ்பதீஸ்வரர் ஒட்டி உண்டியலில் வரும் பணத்தில், உண்டியலான் கொடுக்கும் எச்சங்களை ஈழ்பதீஸானின் சித்தமாக ஏற்றவர்!! கஸ்ட நிலைமையிலும் இருந்த போது, தனது மகளின் திருமணத்திற்கு "19 ஆயிரம்" பவுண்களை உண்டியலால் ஈய்ந்த உண்டியலானுக்கு ஜல்ரா அடித்துத் திரிவது!! கோயிலில் தற்போது உண்டியலானின் காரியதரிசி எனும் பெயரில் உன்டியலின் கணிசமான பங்கை பகிருபவர்!! உண்டியல் பணத்தில் உலகவலம்!!! 24 மணிநேரமும் "S" இலக்கத்தகடுடைய உண்டியாலானின் பென்ஸ் வாகனத்துள், உண்டியலானுடன் இருப்பவர்!!! ... இப்படியான அற்புதங்களைப் புரிபவருக்கா வெட்கம்! சூடு!! சொரணை!!! .... சீசீசிசிச்....
|
|
|
| ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள் |
|
Posted by: siddu - 03-10-2006, 09:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (13)
|
 |
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்
விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
| உருகுதே உருகுதே... |
|
Posted by: Snegethy - 03-10-2006, 08:16 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
[size=24]உருகுதே உருகுதே...
<img src='http://img123.imageshack.us/img123/2803/frozenriver6xw.jpg' border='0' alt='user posted image'>
[size=15]
கண்டேன் கண்டேன்
சூரியனைக் கண்டு உருகி உச்சி
குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு
சிலிர்க்க கண்டேன் -அது
ஆதவன் அணைப்பில்
சிணுங்கவும் கண்டேன்
சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:
|
|
|
|