Yarl Forum
பாரதியும் சோழியானும்!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாரதியும் சோழியானும்!! (/showthread.php?tid=576)

Pages: 1 2


பாரதியும் சோழியானும்!! - sOliyAn - 03-11-2006

பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?!

(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)

சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..

பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?

சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?

பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..

சோழியான்: சரி.. பாடும்..

பாரதியார்:
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..

சோழியான்:
ஹா.. ஹா.. கேளும் கேளும்..

அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு
தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..

(அம்மாநான்...)

மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்
சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்
என்னப்பா என்னபேர் என்றால் - அதனை
மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.

(அம்மாநான்...)

அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்
கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று
நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்
வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.

(அம்மாநான்...)

சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை
வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்
ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்
அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.

(அம்மாநான்...)
அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு
பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்
'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.

(அம்மாநான்...)

பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..

(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)

யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)


- Snegethy - 03-11-2006

ஆ........உங்கள மட்டும்தான் மகாபாவி என்று சொன்னவர் பாரதியார் சரியோ சோழியண்ணா?? வீணா எனக்கும் கொஞ்சம் பாவத்தில பங்கு தருவம் என்று கனவு காணவேண்டாம்:-)


- eelapirean - 03-11-2006

ஆகா சோழியான் விளையாட்டுப்பிள்ளையை வைத்து அந்த மாதிரி விளையாடியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.


- RaMa - 03-11-2006

சோழியன் அண்ணா அழகான கற்பனை. அப்படியே அந்த இசையில் பாடும்போது நகைச்சுவையாகவும் உண்மையாகவும் இருக்கின்றது. நன்றிகள் .


- Selvamuthu - 03-11-2006

சோழியன் கற்பனை அருமை!
இது இன்றைய சாமத்தில் எழுதிய கவிதையா?
இன்று "சற்" பண்ணியபின் சுடச்சுட எழுதியதுபோல் இருக்கின்றது அப்படியா?
சும்மா கேட்டேன்.


- sOliyAn - 03-11-2006

எல்லோருக்கும் நன்றி! வேலை செய்யும் போது களைப்பை மறக்க எதையாவது முணுமுணுப்பது வழக்கம்.. அப்போது தீராத விளையாட்டுப் பிள்ளை மெட்டில.. முதல் வரி முணுமுணுப்பில் வந்தது.. அதோடேயே வீடு வர சாமமாகிவிட்டதா.. மாட்டுப்பட்டார் சிநேகிதி.. எனது கரைச்சல் தாங்காம இணையத்தில தேடி பாடலை முழுமையாக எடுத்துத் தந்தார்.. ஆக சுடச்சுடச் செய்த சாம்பார்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வர்ணன் - 03-11-2006

வித்தியாசமான கற்பனை -சோழியன் அண்ணா!

என்றாலும் -பாரதியை இப்பிடி -வெறுப்பேத்தி இருக்க கூடாது -! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)


- அருவி - 03-11-2006

சோழியன் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு. பாரதி பாவம் உங்களிட்ட வந்து மாட்டுப்பட்டிட்டாரே

சுடச்சுடச் சாம்பார் சுவையா இருக்குமாம் அதுபோல இதுவும் சுவையா இருக்கு.


- Saanakyan - 03-11-2006

"ºü" Àñ½ô §À¡§¸ì¨¸Ôõ «õÁ¡ð¼ ¦º¡øÄ£ð¼¡ §À¡Å¢í¸û? ¿øÄ ÀÆì¸õ!


- தூயவன் - 03-11-2006

sOliyAn Wrote:பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..

<b>(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)</b>
தூண்டைக் காணோம், துணியைக் காணோம் என்பதற்கா ஒடினவர். நான் நினைத்தேன். உங்களின் உல்டாவைக் கேட்டுத் தான் ஓடியிருப்பார் என்று? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யாராவது தேடிக் கொடுங்களப்பா!! Idea


- KULAKADDAN - 03-11-2006

சோழியன் அண்ணா, சட்டிலை ஒரு கரை கண்டிருக்கிறீங்க போல.<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்ல அர்த்ததோட பாரதியின் கவிதைக்கு புது வடிவம் கொடுத்திருக்கிறீங்க.


- tamilini - 03-11-2006

Quote:அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு
தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..
அடப்பாவமே.. இப்படி ஆக்கீட்டாங்க சோழியான் அண்ணாவை சற்றில.. நல்லாத்தான் இருக்கு.. பாவம் பாரதியார்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 03-11-2006

ஆஹா பாரதியையும் விட்டு வைக்க இல்லையா? சோழி அண்ணா நல்லா இருக்கு உங்கள் கற்பனை.


- Nitharsan - 03-12-2006

ஆகா அருமை அருமை..நினைச்சன்..சற்றால பாழாய் போன ஒருவர் தான் இதை எழுதியிருக்கிறார் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பறவாயில்லை உங்க ஆதங்கம்..ஆனால் பாரதி பாவம் அந்த காலத்திலை பட்ட பாடு அருக்கு தான் தெரியும்..அந்த நேரம் சற் இல்லையே என்று பாரதி என்னோட கதைக்கும் போது சொல்லி கவலைப்பட்டாரே!.. :wink:


- kuruvikal - 03-13-2006

அப்பாடா... நமக்கும் ஒரு பாரதி கிடைச்சிருக்கிறான் என்ற திருப்தி...அதிலும் சோழியான் அண்ணா கண்ட அனுபவங்களை அப்படியே எழுதி இருக்கிறது...சூப்பர்...! அப்ப கண்ணன்களின் தொல்லைகள் மட்டும் தான் இப்ப கோபியர் தொல்லைகளும் அதிகம் என்னண்ணா..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அண்ணாக்கு மூட் கப்பி போல..எனவே உடல்நலம் தேறி இருக்கும்...என்ற நம்பிக்கையோடு...நாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 03-13-2006

பாரதியார் பாடலை ரீமிக்ஸ் செய்த சோழியன் அண்ணாக்கு வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவி அண்ணாக்கு கோபியரால் ரொம்ப தொந்தரவு போல :roll:


இப்படித்தானே ஒரு பாடல் முந்தி வந்தது.


அம்மா நான் போராடப் போறேன் -கையில்
ஆயுதம் ஏந்தி நான் போராடப்போறேன்
சும்மா நான் உட்கார மாட்டேன் -
...................................................


Arrow


- Niththila - 03-13-2006

சோழியன் அண்ணாவின் உல்டா பாட்டு நல்லாத்தான் இருக்கு நல்லா சற் பண்ணுறீங்க போல


- kuruvikal - 03-14-2006

வெண்ணிலா Wrote:பாரதியார் பாடலை ரீமிக்ஸ் செய்த சோழியன் அண்ணாக்கு வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>குருவி அண்ணாக்கு கோபியரால் ரொம்ப தொந்தரவு போல </b>:roll:

இப்படித்தானே ஒரு பாடல் முந்தி வந்தது.

அம்மா நான் போராடப் போறேன் -கையில்
ஆயுதம் ஏந்தி நான் போராடப்போறேன்
சும்மா நான் உட்கார மாட்டேன் -
...................................................

Arrow

அப்படி எல்லாம் இல்லைத் தங்கையே... பாரதியார் பாட்டில கண்ணனைச் சாடினார்..கோபியர் கண்ணனுக்கு செய்ததைச் சொல்லேல்ல...பட் சோழியான் அண்ணா அப்படி யாரையும் சாடல்ல...காரணம்..சற்றில்...கோபியரின் கூத்துக்களும் அறிவார் போல..அப்படி இருக்க கண்ணன்களை மட்டும்...எப்படி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Senthamarai - 03-14-2006

சோழியன் அண்ணா நல்லாயிருக்கு.


- SUNDHAL - 03-14-2006

ke ke ke ke வாழ்த்தக்கள் அண்ணா நன்னா இருக்கு :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->