03-11-2006, 02:38 AM
பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?!
(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)
சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..
பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?
சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?
பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..
சோழியான்: சரி.. பாடும்..
பாரதியார்:
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
(தீராத)
தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத)
அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்
(தீராத)
பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
(தீராத)
பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..
சோழியான்:
ஹா.. ஹா.. கேளும் கேளும்..
அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு
தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..
(அம்மாநான்...)
மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்
சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்
என்னப்பா என்னபேர் என்றால் - அதனை
மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.
(அம்மாநான்...)
அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்
கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று
நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்
வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.
(அம்மாநான்...)
சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை
வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்
ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்
அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.
(அம்மாநான்...)
அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு
பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்
'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.
(அம்மாநான்...)
பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..
(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)
யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)
(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)
சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..
பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?
சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?
பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..
சோழியான்: சரி.. பாடும்..
பாரதியார்:
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
(தீராத)
தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத)
அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்
(தீராத)
பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
(தீராத)
பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..
சோழியான்:
ஹா.. ஹா.. கேளும் கேளும்..
அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு
தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..
(அம்மாநான்...)
மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்
சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்
என்னப்பா என்னபேர் என்றால் - அதனை
மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.
(அம்மாநான்...)
அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்
கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று
நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்
வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.
(அம்மாநான்...)
சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை
வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்
ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்
அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.
(அம்மாநான்...)
அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு
பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்
'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.
(அம்மாநான்...)
பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..
(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)
யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->