![]() |
|
கவி எழுதும் ஆசை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவி எழுதும் ஆசை (/showthread.php?tid=591) |
கவி எழுதும் ஆசை - Selvamuthu - 03-09-2006 கவி எழுதும் ஆசை பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில் நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன் பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன் கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா? பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை எட்டிப் பிடித்திடவே மொய்த்தபடி கண்ணயர்ந்தேன் சொட்டக் கவியென்று சொல்லி அங்குவந்து குட்டித் து}க்கமிடல் குற்றமே என்பதுபோல் எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என் மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன் பட்டால்தான் தெரியும் படுகவி பட்டதுன்பம் கட்டாயம் கவியெழுத கதிரைகொண் டங்குசெல்லேன் வீட்டுவேலை செய்யாமல் பாட்டெழுதச் சென்றகவி புூட்டிவிட்டுக் குளியறையில் புகுந்துவிட்ட மாயமென்ன? ஏட்டினிலும் ஏதுமில்லை எனஏங்கி என்மனையாள் ஆட்டிவிட்ட பம்பரமாய் அடுக்களையில் நின்றிருந்தாள் மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன் உறவுகளே இக்கவிதையைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்னவென்பதை எதிர்பார்க்கிறேன். கூடியளவு நகைச்சுவை கலந்து எழுதவே விருப்பம். இயன்றவரை முயன்றிருக்கிறேன். இக்கவிதை எழுதி சில வருடங்கள் கழிந்துவிட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - Thinava - 03-09-2006 ஆகா!! கவிதை மிக அற்புதம்..............ஈழத்தில் இருந்து.... மிக இரசித்து ....... எழுதியது போல்....... நன்றாக அமைந்திருந்தது. உங்கள் சிந்தனையும் கவி ஆர்வமும் மேன் மேலும் உயர்ந்து ஓங்க.......இச் சிறியவளின் வாழ்த்துக்கள்!!!!!!! அன்புடன் தினவா............. - Snegethy - 03-09-2006 ஆகா கவிதை நல்லாயிருக்கு.நாராய் நாராய் பாட் டு மாதிரி :-) "எட்டாத உயரத்தில் இருந்த கருங்காக்கை கெட்டித்தனமாய் வந்து நேர்கிளையில் அமர்ந்தபடி சுட்ட பழம்போல் சொரிந்த எச்சத்தை என் மொட்டந்தலை ஏந்த மருண்டு கண்விழித்தேன் " இதுவும் கனவிலதானே ஆசிரியர்? - பிறேம் - 03-09-2006 ஆகா ஆசிரியரே கவிதை நன்றாக இருக்கு. அப்படியே முற்றத்து வேம்பின் ஞாபகத்தை கொண்டுவந்திட்டீங்க. - N.SENTHIL - 03-09-2006 ¬¸¡.... «Õ¨Á ³Â¡! ¿øÄ ¸Å¢¨¾ ¦¸¡Îò¾ ¯í¸ÙìÌ ¿ýÈ¢. - Selvamuthu - 03-09-2006 ஆகா ஆகா என்று கவிதையை ரசிக்கும் கள உறவுகளுக்கு எனது நன்றிகள் பல. Quote:ஆகா கவிதை நல்லாயிருக்கு.நாராய் நாராய் பாட் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம் அல்லவா? ம்! மொட்டந்தலை?............பார்த்துச் சொல்கிறேன்! - RaMa - 03-09-2006 மூட்டிவைத்த அடுப்பினிலே மூக்கைத் துளைத்தகறி நு}ர்த்துவைத்த நெருப்பினைப்போல் நொடிப்பொழுதில் ஆகிவிட ஆட்டிநின்ற தொட்டிலிலே ஆண்மகவும் அலறியெழ அடுக்களையும் தீப்பிடிக்க கனாக்கண்டு நான்விழித்தேன் சிலசொற்கள் புதிதாக இருந்தாலும் வாசிக்க விளக்க கூடியதாக இருக்கின்றது.. கவி நகைச்சுவையாக இருக்கின்றது. அப்படியே உங்கள் மற்றக் கவிதைகளையும் இணைக்காலமே?... - Selvamuthu - 03-09-2006 ஆமாம் ரமா அவ்வப்போது ஒவ்வொன்றாக இணைக்கலாம் என்று எண்ணுகிறேன். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" அல்லவா? - Niththila - 03-09-2006 ஆசிரியரின் கவிதை பற்றி விமர்சனம் சொல்லுற அளவு தமிழ் அறிவு இல்லை அங்கிள் வாசிக்கும் போது நகைச்சுவையாக இருந்தது - Selvamuthu - 03-09-2006 விமர்சனம் வேண்டும் என்பதற்காக இங்கே இதனை இணைக்கவில்லை. நான் சுவைப்பதை மற்றவர்களும் சுவைக்கவேண்டும் என்பதற்காகத்தான். வாசிக்கும்போது சுவைக்கவேண்டும். அதுதான் கவிதை! "நகை" யோடு நல்ல தமிழும் சேர்ந்தால் நன்றாக இருக்கும். மனதில் வந்ததை எழுதினேன் அவ்வளவுதான். நன்றி நித்திலா. - அனிதா - 03-09-2006 ஆஹா , கவிதையும் அந்த மாதிரி எழுதுறீங்க.... கவிதையில், ட் டா எண்டு வருவதும் பார்ப்பதுக்கு அழகாகவும் இருக்கு..:wink: நல்லா எழுதிருக்குறீங்க செல்வமுத்து அங்கிள் தொடர்ந்து உங்கள் கவிதைகளை இணையுங்கள்.... வாழ்த்துக்கள்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- iniyaval - 03-09-2006 கவிதை நன்று ஆசிரியர். அப்படியே ஊர் ஞாபகத்தை கொண்டு வந்துட்டுது. வாழ்த்துக்க:ள். - gausi - 03-09-2006 அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் - வர்ணன் - 03-10-2006 என்ன சொல்ல- தமிழால் விளையாடி இருக்கிங்க ஆசிரியர் அவர்களே! நீங்க எங்கயோ - நாங்கள் எங்கோ! அருமை! 8) - Selvamuthu - 03-10-2006 அப்படிச் சொல்லக்கூடாது. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" தான். முடியாதது என்று சொல்ல ஒன்றும் இல்லை. "முயற்சி திருவினையாக்கும் அல்லவா?" - Rasikai - 03-11-2006 ஆஹா!! கவிதை மிக அருமை. ஊரில் இருந்து மிகவும் இரசித்து எழுதியது போல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் செல்வமுத்து அண்ணா |