![]() |
|
இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் (/showthread.php?tid=590) |
இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் - siddu - 03-09-2006 இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து என்ன செய்வது? அருள்சாமி, சுரேஸ் வடிவேல் போன்றோரால் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமாயின், எம்மால் எமது தலைவருக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க முடியுமென தெரிவித்த இ.தொ.கா.வின் உப தலைவர் ஆர்.யோகராஜன் ஆனால், பதவிகளை பெறுவதற்காக நாம் அரசுடன் இணையவில்லை என்றும் கூறினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சிசபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.தொ.கா.மற்றும் மலையக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கடந்த சனிக்கிழமை மாலை மாத்தளை ஹோம்சீஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: "மலையக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இணக்கம் காணப்பட்டபின்பே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இன்றைய அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளோமே தவிர அமைச்சர் பதவியையோ வேறு எந்தவொரு சலுகைகளையோ எதிர்பார்த்தல்ல. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படவிருந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதும் எமது கோரிக்கைகளில் ஒன்றாகும். எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள இன்றைய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோமே தவிர அரசுடன் இணைந்து செயற்படும் எண்ணம் எமக்கில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மலையக மக்களினது 95 சதவீத வாக்கு ஐ.தே.கட்சிக்கே சென்றடைந்தது. தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச மட்டத்தில் இது பாரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் எம்மை அணுகி மலையக மக்களின் வாக்குகளை உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தனக்கு பெற்றுத்தறுமாறு கோரிக்கை விடுத்தார். நாம் இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பின்பே உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்தோம். எமக்கு அமைச்சர் பதவி முக்கியமல்ல. எமது மக்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதே எமது லட்சியமாகும். எமது வேண்டுகோளுக்கிணங்க தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், தொண்மான் கலாசார மண்டபம், தொண்டமான் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்துகொள்ள ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நாட்டில் இன்னும் நான்கு வருடத்துக்கு எந்தவொரு தேர்தலுமே நடைபெறமாட்டாது. எனவே நாம் தொடர்ந்து நான்கு வருடம் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கூக்குரலிடுவதனால் எந்தவொரு பயனும் ஏற்படமாட்டாது. எமது மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமானால் பதவியில் இருக்கும் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். இல்லையேல் பதவியில் இருக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம் இன்றைய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளோம். இம்முறை மாத்தளை மாநகர பிதா பதவியை எமது தலைமை வேட்பாளர் எம்.சிவஞானத்துக்கு வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை இன்று அவர் மறந்து செயற்படுவதுபோல் அவரால் எம்மை ஏமாற்ற முடியாது" என்றார். நன்றி தினக்குரல் |