![]() |
|
துடுப்பெடுத்தாட்டம் - கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துடுப்பெடுத்தாட்டம் - கவிதை (/showthread.php?tid=588) |
துடுப்பெடுத்தாட்டம் - கவிதை - Selvamuthu - 03-09-2006 இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது. படித்துப்பாருங்கள். [size=18]துடுப்பெடுத்தாட்டம் ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு "கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு துடுப்பு எனசொல்வார் தமிழில். பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில் பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே முக்கி முக்கி அடித்தவர். கையை மடிக்காது வீசவேண்டும் அதனை கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில் தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால் உயர்த்திக் காட்டுவார் விரல். நடுவர் இருவர் நட்ட தடிக்குள் அடித்துவிட்டு ஓடுவர் இருவர் வட்டத்தைவிட்டு - தரையில் முட்டிச்சென்றால் நான்கும் முட்டாமல் சென்றால்புள்ளி கட்டாயம் பெறுவார் ஆறு. காலுக்கும் தலைக்கும் கைகள் இரண்டிற்கும் நாலுபுறமும் இடுவார் காவல் - இல்லையெனில் துள்ளும் பந்துவந்து தோலோடு என்புடைக்கும் பல்லும் போகும் பறந்து. சுழல்ப்பந்து வீச்சென்றால் துரிதாக விளையாடார் மழைவந்து குழப்பாதோ எனநினைப்பார் - வளைபந்தும் வரும் ஒருகரையால் விழுந்து சுருண்டுபின் விரையும் மறுகரையால் ஒழிந்து. ஒருநாள் என்றால் உற்சாகம் இடைவிடாது ஐந்துநாள் என்றால் சிறுது}க்கம் - ஒருநாளும் தவறாது வர்ணனையை வானலையில் கேட்பார் பாரெங்கும் மக்கள் பரந்து. ஒருநு}று அரைநு}று அடித்துவிட்டால் புகழ்மாலை ஒருபந்தில் அகன்றுவிட்டால் பொன்வாத்து - குறிபார்த்து எறிபவர்க்கும் கோணாமல் பிடிப்பவர்க்கும் பரிவாரம் பலநாளாய் தொடரும். வெள்ளையுடை போட்டு வெயிலில் விளையாடும் நல்லகுணம் கொண்டோர் விளையாட்டென்பார் - இந்நாளில் சிறுதொகைக்காய் சுூதாட்டம் குழறுபடி ஏமாற்றம் வெறுவெறுப்பை ஊட்டுவார் வீணோர். முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம் தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன் வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன் மூசிமூசி வலம்வருவோம் வீட்டை. - RaMa - 03-09-2006 முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம் தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன் வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன் மூசிமூசி வலம்வருவோம் வீட்டை. அடித்த பந்தை தேடி தேடி தான் வலம்வருவீர்களோ? துடுப்பந்தா விளையாட்டின் விதிமுறைகளை எல்லாம் உங்கள் கவிதையில் சொல்லி இருக்கிறீர்களே! வாழ்த்துக்கள். - Selvamuthu - 03-09-2006 அடித்த பந்தை தேடுகிறது ஒரு சாட்டு. (சும்மா!) அப்போ தங்கை அல்லது நண்பி என்று மாற்றிவிடவா? (இதுவும் சும்மாதான்!) துடுப்பெடுத்தாட்ட விதிமுறைகள்..... ம்!....அனுபவம்தான்! அவைகளை அறிந்தபடியால்தான் இப்படியான கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது. வாழ்த்துக்களுக்கு நன்றி ரமா. - Jeeva - 03-09-2006 - iniyaval - 03-09-2006 ஆகா பழைய ஞாபகங்களை மீட்கிறது உங்கள். கவிதைகள். இப்ப எனக்கு கிறிக்கட் விளையாடணும் போல இருக்கு. வாழ்த்துக்க:ள் - sOliyAn - 03-10-2006 ம்.. வித்தியாசமான கவிதைக் களம். வாழ்த்துக்கள்!! - வர்ணன் - 03-10-2006 ஒவ்வொரு கோணத்திலயும் கவி எழுதினால்தான் - கவிஞர் என்ற சொல் முழுமையடையும்-! அதை நீங்க செய்திருக்கிங்க- ம்ம்.. பொறாமைல- ஒரு பெருமூச்சுதான் விட முடிகிறது-! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தொடருங்கள் - ஆசிரியரே! 8) - Selvamuthu - 03-10-2006 ரமா, ஜீவா, இனியவள், சேழியன், வர்ணன் அனைவருக்கும் நன்றிகள் பல. எதையும் நகைச்சுவையோடு சொன்னால் மனதிலே உடனே பதிந்துவிடும். நகைச்சுவை ஒரு நல்ல மருந்து அல்லவா? என்னவோ எழுதும்போது மனதுள் மலர்வதை நகைச்சுவையாக்கி எழுத விளைகிறேன். - Manithaasan - 03-10-2006 கவிஞர் செல்வமுத்து அவர்களுக்கு ஒரு கட்டுரையின் விரிவாக்கத்தை சுவையாக எள்ளலும் தோய்ந்த கவிதையாக்கி துடுப்பாட்டம் அறியாதோரும் அறியவைக்கும் நல்ல முயற்சி வாழ்த்துகள்.. - Rasikai - 03-11-2006 ஆஹா வித்தியாசமான கவிதை படைத்த செல்வமுத்து ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!! பழைய ஞாபகங்களை மீட்கிறது. |