| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 220 online users. » 0 Member(s) | 217 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| உயிரின் வலி இறுவட்டு வெளியீடு. |
|
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 02:53 PM - Forum: இணையம்
- No Replies
|
 |
உலகத்தமிழர் வானொலியால்
உயிரின் வலி இறுவட்டு வெளியீடு.
சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் விளைவித்த அனர்த்தங்களின் கொடுமையை 26.12.2005 ல் உலகமே நினைவுகூர்ந்தது. அன்றைய தினம் சுனாமியின் அவலங்களை வெளிப்படுத்த உயிரின்வலி எனும் பெயரில் உலகத்தமிழர் வானொலியினர் இறுவட்டாக வெளியீடு செய்துள்ளனர். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலவைர் மனோ கணேசன் தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கஜேந்திரகுமார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஏராளமான மக்கள் கலந்து கொண்ட வெளியீட்டு நிகழ்வுக்கு உலகத்தமிழர் வானொலியின் நிர்வாக இயக்குனர் தர்சன் இராஜகோபால் தலைமை தாங்கினார்.
மேற்படி இறுவட்டு வெளியீட்டின் நோக்கம் பற்றி உலகத்தமிழர் வானொலியின் தாய் நிறுவனமான Yellowwin Media (p) Ltd ன் இயக்குனர் வினோத் கருத்து தெரிவிக்கும் போது:
சுனாமி நிகழ்த்திய கொடுமை தாளமுடியாதது. அதன் தாக்கத்தை எப்படியாவது பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கும் கையளிக்க வேண்டும் என சிந்தித்தோம். அத்துடன் எம்மிடம் ஏராளமான நேயர்கள் இருக்கின்றார்கள். அவர்களை இந்த இறுவட்டு வெளியீட்டு முயற்சியுடன் ஒன்றிணைத்துக் கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் நாமும் ஒரு மக்கள் ஊடகம் என்ற வகையில் எம்மாலானதை செய்யமுடியும் என்று நம்புகின்றோம். இப்போது இந்த பணிக்கு ஏராளமான ஆதரவு கிடைத்திருக்கின்றது. இது இன்னும் மேம்பட இன்னும் பல நேயர்கள் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.
பரவயில்லையே நண்பர்களே! வெறுமனே நிதியத்தை தொடக்கி வைச்சிட்டு பணம் பணம் எண்டு கேக்காம வித்தியாசமா முயற்சி பண்றாங்கள். வாழ்த்த தான் வேணும்.- என்ன நான் சொல்றது???
www.worldtamilarweb.com
live@wtrfm.com
|
|
|
| கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் |
|
Posted by: Vaanampaadi - 01-29-2005, 11:26 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள்
கைதிகளிடம் இரக்கம் காட்டலாம். கவர்ச்சி காட்டலாமா? ஈராக் போரில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை அமெரிக்கா குவாந்தனாமோ கடல் பகுதியில் உள்ள தீவுச்சிறையில் அடைத்து இருக்கிறது. அந்த கைதிகளிடம் சில உண்மைகளை வரவழைக்க ராணுவ அதிகாரிகள் என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டனர். சித்ரவதை செய்தும் கூட உண்மைகளை கறக்க முடியவில்லை. இதை தொடர்ந்து புதிய உத்தியை அமெரிக்கா கடை பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
சிறையில் கைதிகளிடம் விசாரணை நடத்த பெண் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள். அந்த பெண் அதிகாரிகள் கவர்ச்சியாக `மினி ஸ்கர்ட்' அணிந்து வந்து கைதிகளிடம் விசாரிக்கிறார்கள். தொட்டு தொட்டு பேசி கைதிகளிடம் கேள்வி கேட்கிறார்கள்.
கொஞ்சும் பார்வையில் செக்சியாக பேசி கைதிகளை மயக்கப் பார்க்கிறார்களாம். சித்ரவதையில் வெளிவராத உண்மைகள் `செக்ஸ்' லீலைகளில் வெளிவரலாம் என்பது அமெரிக்காவின் கணிப்பு. உண்மைகள் வெளி வந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை.
|
|
|
| அமெரிக்கப் படையினரில் ஆயிரம் பேர் திரும்பினர்! |
|
Posted by: Vaanampaadi - 01-29-2005, 11:08 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
நிவாரணப் பணிக்கென வந்திருந்த அமெரிக்கப் படையினரில்
ஆயிரம் பேர் திரும்பினர்!
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட இலங்கை யில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவென இங்கு வந்திருந்த அமெ ரிக்கப் படையினரில் சுமார் ஆயிரம் பேர்வரை யானோர் நேற்றுமுன்தினம் நாடு திரும்பியுள் ளனர்.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா இந்தத் தகவலைத் தெரிவித் தார்.
இலங்கையில் மீட்பு மற்றும் மீள்கட்டுமா னப் பணிகளுக்கென ஜனாதிபதியின் அழைப் பின் பேரில் அமெரிக்கப் படையினர் இங்கு வந்திருந்தனர். இவ்வாறு 1,650 இற்கும் மேற் பட்ட அமெரிக்கப் படையினர் இங்கு தங்கியி ருந்து சேவையாற்றினர். அவர்களில் ஆயிரம் பேரே தற்போது நாடுதிரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள நூற்றுக்கணக்கான படையி னர் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்து மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின் றனர்.
மீள் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் அவர்களும் நாடு திரும்பி விடுவர் என்றும் பிரிகேடியர் தயா ரட்ணாயக்க தெரிவித்தார்.
எனினும் அமெரிக்கப் படையினரில் சிலர் இந்த ஆண்டு இறுதிவரை இலங்கையில் தங்கியி ருப்பர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Source : Uthayan
--------------------------------------------------------------
US Marines scale down Sri Lanka relief mission
COLOMBO (AFP) Jan 28, 2005
The United States has begun scaling down its tsunami relief operations and has withdrawn nearly two-thirds of its 1,600 Marines deployed on the island, defence ministry officials said Friday.
The United States has had one fixed-wing aircraft and four helicopters on the island since the departure last week of landing craft, the USS Duluth, along with heavy equipment used in initial clearing operations after the December 26 disaster, officials said.
"About two-thirds of the Marines have already left and they are likely to complete a withdrawal ... within a week," said a defence official who declined to be identified.
There was no immediate reaction from the US embassy here, but a spokeswoman said they had arranged a media briefing Saturday on US relief operations in Sri Lanka.
US troops are deployed at Sri Lanka's only international airport, in Colombo, and at the southern port district of Galle. A small contingent of doctors are in the northernmost Point Pedro area.
US deputy secretary of defence Paul Wolfowitz told reporters here last week that the troops would not stay any longer than necessary.
India and Pakistan have also scaled down their military relief operations in Sri Lanka where at least 30,957 people were killed in the December 26 tsunami.
|
|
|
| சமையலோ சமையல் |
|
Posted by: Vaanampaadi - 01-29-2005, 10:54 AM - Forum: சமையல்
- Replies (6)
|
 |
முருங்கைக் கீரையைத் துவட்டலாகச் செய்து உண்போம். குழம்பு வைப்போம். கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வேக வைத்து, வெந்த பருப்பு சேர்த்து மசித்து விடவும். முருங்கைக்கீரை மசியல் மிகவும் ருசியாக இருக்கும்.
--------------------------------------------------------------
அடைமாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். வீட்டில் சோள மாவு இருந்தால் சிறிது போட்டுக் கலக்கி அடை செய்யலாம். அடை மாவு சேர்த்தாற் போல் ஆவதுடன் அடையும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
---------------------------------------------------------------
பீன்ஸ் நிறைய வாங்கி வாடி வதங்கி விட்டதா? கவலைப்படாதீர்கள். குளிர்ந்த நீரில் அந்தப் பீன்சைப் போட்டு வைத்திருந்து பிறகு வெளியில் எடுத்து பொரியல் செய்து பாருங்கள். புத்தம் புது பீன்சில் செய்தது போலவே இருக்கும்.
--------------------------------------------------
எலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு முன் பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்க வேண்டும். அதன் பின் சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.
-------------------------------------------------------
முட்டை ஆம்லெட் செய்யும்போது, சிறிதளவு வெண்ணெயையும் முட்டையை கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்து பாருங்கள். ருசியாக இருக்கும்.
----------------------------------------------------
காரட், முட்டைகோஸ் இரண்டையும் மெல்லியதாகச் சீவிக் கொள்ளுங்கள். அதில் உப்பு, எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறிது நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிட்டுப் பாருங்கள். சுவை நன்றாக இருக்கும்.
----------------------------------------------------
உளுந்து வடை செய்யும் போது உளுந்து மாவில் ஊறவைத்த துவரம் பருப்பை ஒரு கைப்பிடி கலந்து செய்தால் உளுந்து வடை சூப்பராக இருக்கும்.
|
|
|
| கோழி பிரியாணி |
|
Posted by: Vaanampaadi - 01-29-2005, 10:42 AM - Forum: சமையல்
- Replies (45)
|
 |
கோழி பிரியாணி
இஞ்சி - 2 அங்குலம்
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 125 கிராம்
தயிர் - 225 கிராம்
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை - சிறு துண்டு
முந்திரி பருப்பு - 15 கிராம்
பாதாம்பருப்பு - 15 கிராம்
சாரப் பருப்பு - 15 கிராம்
பிஸ்தா பருப்பு - 15 கிராம்
திராட்சை - 15 கிராம்
கோழித் துண்டுகள் - 125 கிராம்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - சிறிது
ஏலக்காய் - சிறிது
கிராம்பு - சிறிது
பாசுமதி அரிசி - 2 கப்
செய்முறை:-
2 அங்குலம் இஞ்சி, 6 பல் பூண்டு, 125 கிராம் சின்ன வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 225 கிராம் தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். 1 மேஜைக்கரண்டி சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பிரியாணி இலை ஒன்றைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு (சாரோலி), பிஸ்தா பருப்பு, திராட்சை ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் 15 கிராம் எடுத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவைத் தயிருடன் கலந்து, இதில் சுத்தம் செய்த கோழித் துண்டுகள் 125 கிராம், உப்புத்தூள் இவற்றையும் கலந்து 4 மணி நேரம் அப்படியே ஊற விடவும். அதன் பின் ஒரு கனமானப் பாத்திரத்தில் சமையல் எண்ணெய் 100 கிராம் ஊற்றி, காய்ந்ததும், அரை அங்குலம் பட்டை, பெரிய கறுப்பு ஏலக்காய் விதைகள் 1 மேஜைக்கரண்டி, 4 கிராம்பு, துண்டுகளாக்கிய பிரியாணி இலை. 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு வதங்கியதும், ஊற வைத்துக் கோழிக்கறி மசாலாவைச் சேர்த்து வாணலியை மூடி வைக்கவும். கறி வெந்து, மசாலா நன்கு வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கிக் கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், 2 கப் பாஸ்மதி அரிசியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிர் உதிராக வேக வைத்து இறக்கவும். பின் இதனை 3 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் தடவி, ஒரு பாகம் சாதம், அதன் மீது கோழித்துண்டுகள் என மூன்று பாகமாக ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்து இறக்கவும். மேல் பாகத்தில் பருப்பு வகைகளை தூவி, அதன் மீது வெள்ளி ஜரிகைத் தாள்களைப் (Silver Foils) போட்டு அலங்கரிக்கவும். கோழி பிரியாணி இப்பொழுது சாப்பிட தயார்.
|
|
|
| அமெரிக்க அறிவிப்பாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? |
|
Posted by: Vaanampaadi - 01-29-2005, 10:32 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ரேடியோ நிகழ்ச்சியில் சுனாமியால் பலியானவர்களை கேலி செய்த அமெரிக்க அறிவிப்பாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?
நிïயார்க், ஜன. 29_
அமெரிக்காவில் ஒலிபரப் பாகும் ரேடியோவில், சுனாமி பேரலைத் தாக்குத லுக்குப் பலியானவர்களை கேலி செய்யும் பாடலை ஒரு பெண் அறிவிப்பாளர் ஒலி பரப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
லட்சக்கணக்கில் பலி
சுனாமி பேரலைத் தாக்குத லால் 13 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். பல லட்சம் பேர் வீடு வாசல் மற்றும் உடைமை களை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலகமே கண்ணீர் சிந்தியது. உலக நாடுகள் உதவிக் கரம் நீட்ட ஓடோடி வந்தன.
ஆனால் அமெரிக்க நாட்டின் "ஹாட் 97" என்ற ரேடியோ நிலையம் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களை கேலி செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.
ஜோன்ஸ்
ரேடியோ அறிவிப்பாளர் மிஸ் தர்ஷா ஜோன்ஸ், இன வெறி அதிகமாக உள்ள ஒரு பாடலை ஒலிபரப்பினார்.
நடிகையும், பாடகியும், பாடல் ஆசிரியருமான அவர் ஒலிபரப் பிய பாடல் வருமாறு:_
[size=14]அன்று ஒரு நாள்
சூரிய ஒளி வீசிய நாள்
காற்று வாங்கி வர
கடற்கரை வரை நான் போக
20 அடி அலை பாய்ந்து வந்தது
உங்கள் நாடே அதில் மாய்ந்து
போனது
எங்கு பார்த்தாலும்
மரண ஓலம்
யாருமே இல்லை மீதம்
ஆப்பிரிக்கர் மூழ்கினார்
சீனாகாரர் மூழ்கினார்
கடவுளின் சிரிப்பு கேட்டது
நீந்து... முறை கெட்டவனே...
நீந்து
சுனாமி உன்னை பதம்
பார்த்தது
இனி நீ அடி வயிற்றை
முத்தமிடுவதே நல்லது
இதோ! அவள் மிதந்து
போகிறாள்
அவள் தலை மீது மரமும்
போகிறது
இனி உங்கள் குழந்தைகளோ
விற்கப்படுவார்கள்
அடிமைகளாக
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எதிர்ப்பு
இந்தப்பாடல் ஒலிபரப்பான தும், அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது.
பாடலைக் கேட்டு கோபம் அடைந்த ரசிகர்கள் உடனே ஜோன்சை டிஸ்மிஸ் செய்யும்படி கோரி ரேடியோ நிலையத்துக்கு `இ_மெயில்' அனுப்பினர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் `ஹாட் 97' நிலையம் மீது அமெ ரிக்க பெடரல் கம்ïனிகேஷன்ஸ் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ரேடியோ நிலையம் மீது
2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்றும் கோரி னர்.
அமெரிக்க முஸ்லிம்களும், சீனர்களும் எதிர்ப்புத் தெரிவித் தனர்.
[u]
சண்டை போட்டார்
இந்த நிலையில் ரேடியோ நிலையத்தில் வேலை செய்யும் இன்னொரு அறிவிப்பாளரான மிஸ் இன்போ (இவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்) இந்தப் பாடல் எனக்கு வருத்தம் அளித் தது. இதில் நான் சம்பந்தப்பட வில்லை என்று கூறினார்.
இதனால் கோபம் அடைந்த ஜோன்ஸ் அவரிடம் சண்டை போட்டார். "ஆசிய நாட்டுக் காரர் என்பதால் ரொம்ப உயர் வாக உன்னைப் பற்றி நீ நினைத் துக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
மிஸ் இன்போவின் கோபத்தை கண்ட இன்னொரு அறிவிப்பாள ரான டாட் லின், ஆசிய நாட் டுக்காரர்களை எல்லாம் சுட்டுக் கொல்லவேண்டும் என்று சத்தம் போட்டார்.
[u]மீண்டும் ஒலிபரப்பினார்
இந்த நிலையில் `ஹாட் 97' ரேடியோ நிலையத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. அதைப் பொருட்படுத்தாமல் மிஸ் ஜோன்ஸ் சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை மீண்டும் ஒலிபரப்பி னார்.
ரேடியோவில் என்ன ஒலி பரப்பாக வேண்டும் என்பதை எதிர்ப்பாளர்கள் முடிவு செய்ய முடியாது என்பதைக் காட்டு வதற்காகவே இந்தப்பாடலை ஒலிபரப்பியதாக ஜோன்ஸ் கூறினார்.
மன்னிப்பு கேட்டது
இது நடந்த சில மணி நேரங் களில் ரேடியோ நிலையம் மன் னிப்பு கோரியது.
ஒரு துயரமான சம்பவத்தை வேடிக்கையாக்கி, நிகழ்ச்சியை ஒலிபரப்பியதற்காக வருந்து கிறோம். இந்த பாடல் யார் மன தையாவது புண்படுத்தி இருந் தால், மன்னிப்பு கேட்டுக்கொள் கிறோம் என்று ரேடியோ நிலை யம் கூறியது.
7 நாள் சம்பளம்
"ஜோன்சும், மற்றும் அந்த பாடல் ஒலிபரப்பில் சம்பந்தப் பட்ட 7 ஊழியர்களும் தங்கள் ஒரு வார சம்பளத்தை சுனாமி நிவாரணத்துக்கு நன்கொடை யாக வழங்கி உள்ளனர்" என்றும் ரேடியோ நிலையம் அறிவித்தது.
தவறு செய்த ஊழியர்கள் யார் மீதும் ரேடியோ நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜோன்சை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரி வருகின் றன. இந்தக் கோரிக்கையை ஏற்று ரேடியோ நிலையம் அவரை டிஸ் மிஸ் செய்யும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
|
|
|
|