Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 229 online users.
» 0 Member(s) | 226 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பிரபல பத்திரிகையாளர் திரு. கார்மேகம் காலமானார்
Posted by: Nitharsan - 01-29-2005, 10:30 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (2)

பிரபல பத்திரிகையாளர் திரு. கார்மேகம் காலமானார்
<img src='http://www.freewebs.com/vannithendral/12_31_0.JPEG' border='0' alt='user posted image'>நன்றி:

தமிழர் செந்தாமரை
நேசமுடன் நிதர்சன்

Print this item

  தளபதி ராம் அவர்களின் விசேட செவ்வி.
Posted by: Vaanampaadi - 01-29-2005, 10:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மட்டு அம்பாறை மாவட்ட தளபதி ராம் அவர்களின் விசேட செவ்வி.
சனிக்கிழமை 29 சனவரி 2005 வேலணை

தற்போது மட்டு - மட்டு அம்பாறை மாவட்ட நிலைமை பற்றியும்ää அங்கு நிகழும் புனர்நிர்மான செயற்பாடுகள் பற்றியும்ää மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதி ராம் அவர்கள் அவர்கள் தந்த விசேட செவ்வி. கேள்வி : இந்த கடற்கோள் அனர்த்தம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வட - கிழக்கு மக்களின் புனர்வாழ்வு சம்பந்தமாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் புனர்நிர்மான மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பாக தங்களால் விளக்கிக் கூற முடியுமா?


பதில் : 26-1204 அன்று தமிழீழத் தாயகத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கிய சுனாமி பேரலைகளின் தாக்கத்தால் எமது தமிழ்பேசுமமக்கள் மிகப்பெரும் பாதிப்புக்களை அடைந்துள்ளார்கள். இந்த அனர்ததம் நடந்த உடனேயே எமது தேசியத் தலைவர் அவர்கள் தளபதிகள்ää போராளிகள் அனைவரையும் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக நாம் அனைவரும் பணிகளை மேற்கொண்டோம். வடக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் எமது இயக்கத்தின் பூரண கட்டுப்பாட்டுப் பகதி ஆகையால் அங்குள்ள தளபதிகள்ää பாறுப்பாளர்கள்ää படையணிகளை ஈடுபடுத்தி உடனடியாக பணிகளை ஆரம்பிக்க முடிந்தது. ஆனால் மட்டக்களப்பு அம்பாறையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்pபட்ட பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தது. அங்கு எமது அரசியல் பணிபுரியும் போராளிகள் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அதிலும் சுனாமி தாக்கிய அன்று அவர்கள் அங்கிருக்கவில்லை. காரணம் விசேட அரசியல் வகுப்புகளுக்காக அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின்
அழைப்பிற்கிணங்க அவர்கள் வன்னி சென்றிருந்தனர். உடனடியாக அவர்கள் செய்தி அறிந்து திரும்பி வந்தனர். அதற்கிடையில் பாதிப்புற்ற பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் தமது ஆளணி வளங்களைப் பயன்படுத்தி கனரக வாகனங்களைப்
பயன்படுத்தி மக்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டனர். உண்மையில் அந்த நேரத்தில் எமது மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டமைக்காக அவர்களுக்கு நன்றி கூற
வேண்டியுள்ளது. அதேவேளை வடமராட்சிப் பகுதிகளில் கடலலைகளால் பாதிப்புற்ற படையினரை எமது போராளிகளும் பாதுகாத்துள்ளனர். கல்லடி முகாமில்இருந்த இராணுவம்கடல் அலைகளினால் பாதிப்புற்று காயமடைந்த வேளையில் கொக்கட்சிச்சோலையில் வைத்து மருத்துவ சிகிச்சை
செய்து பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படட்னார். உண்மையில் அந்த இக்கட்டான வேளையில்பரஸ்பரம் மனிதாபிமான உணர்வோடு அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. மட்டு - அம்பாறை பகுதிகளில் எமது தளபதிகளான ரமணன்ää ஜனார்த்தனன்ää அரசியல்துறைப் பொறுப்பாளர்களான தயாமோகன் கௌசல்யன் குயிலின்பன் குவேனி (தமிழ்நிலவு) ஆகியோர் உடனடியாக பணிகளை ஆரம்பித்தனர். 500க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் எமது
போராளிகளால் மீட்கப்ப்டது. இடம்பெயாந்த மக்கள் வேகமாக எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்தனர். சிறப்புத்தளபதி கேணல் பாணு உட்பட அனைவரும் வேகமாகச் செயற்பட்டு காயமடைந்த மக்களுக்கான மருத்துவச்சேவை சமைத்த உணவு வினியோகம்ää உடுபுடவைகள் வழங்கல் எனப் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை வன்னியிலிருந்து
நிவாரணப் பணிகளை முன்னெடுக்க பெருமளவு பெண்போராளிகளும் ஆண்போராளிகளும் வந்து சேர்ந்தார்கள் அத்துடன் வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும்பொது அமைப்புக்களும்ää மக்களும்ää தொண்டர்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்ää பல்கலைக்கழக மாணவர்களும் நிவாரணப் பொருட்களோடு வந்திருந்தார்கள் இது எமது பணிகளுக்க
மேலும் பலமூட்டியது. அத்துடன் தெற்குப்பகுதி மலையகப் பகுதி மக்களும் நிவாரணப் பொருட்களோடு வந்திருந்ததால் அவர்களை இடைமறித்த அதிரடிப்படையனர்நிவாரணப் பொருட்களை
தம்மிடம் ஒப்படைக்குமாறும்ää புலிகள் நிவாரணப் பொருட்களை மறித்து தமது முகாம்களுக்கு கொண்டுசெ;னறு விடுவார்கள் என்றும் அம்மக்களுக்கு கூறியபோது அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதிரடிப்படையினரின் வற்புறுத்தலையும்ää மிரட்டலையும் மீறி அவர்கள் அந்த நிவாரணப் பொருட்களை கொண்டுவந்து எம்மிடம் தந்தர்கள்.

தந்துவிட்டு கூறினார்கள்ää கடந்த வருடம் தெற்கில்ää மலையகத்தில் மழைவெள்ளம்ää மண்சரிவு ஏற்பட்டபோது எந்தப்பேதமும் பாராது எமது காலடிதேடி நிவாரணப்பொருடகளோடு வந்த புலிகள் அவர்கள் ஒருபோதும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை பறித்தெடுக்கின்ற வேலையை செய்ய மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கை எமக்கிருந்தது எனக் கூறினார்கள். தற்பொழுது எமது போராளிகள் மருத்துவப் பணிகள் பெண்கள்ää குழந்தைகளுக்கான விசேட கவனிப்புக்கள்ää பாலர்
வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரைக்குமான மாணவர்களின் கல்வி மேம்பாட்டுப் பணியென பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

கேள்வி :- தமிழீழ விடுதலைப் புலிகளின் புனர்நிர்மான செயற்பாடுகளின்போது படையினரால் இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகவும்ää புலிகளுக்கும்ää படையினருக்குமிடையே அடிக்கடி முரண்பாடுகள் நிகழ்வதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது. படையினரின் இத்தகைய
நடவடிக்கைகளுக்கு காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?

பதில் :- காலம் காலமாகவே எமது மக்களின் உரிi8மகளைப் பறித்துபோராட்டத்தையும் அழித்துவிடுகின்ற நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசு செயற்படுத்தி வந்துள்ளது அனைவருக்கும் தெரியும்ää இதே போலத்தான் அண்மையில் ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான அவசர நிவாரணப் பணிகளைää புனர்வாழ்வுப் பணிகளை நாம்மேற்கொள்ளும்போது அதற்கு இடையூறு விளைவிப்பதன் மூலம் ஏற்கனவே உயிர்களையும்ää உடமைகளையும் இழந்து உள ரீதியாகப்
பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். போராளிகள் நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இடையூறு செய்தல்ää கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கும்போது மாணவர்களைää ஆசிரியர்களை அச்சுறுத்தல்ää ஆயுதபாணிகளாக நலன்புரி நிலையங்களில் இரவுபகல் பாதுகாப்பு பணி என்ற போர்வையில் நின்று மக்களின் இயல்பான நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல் குறிப்பாக பெண்களுக்கான தனித்துவத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் என்பன திட்டமிட்ட தமிழின ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்
இன்னுமொரு வடிவம் அல்லது அதன் தொடர்ச்சி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் 1983ல் இருந்து அம்பாறை மாவட்டத்தில் பலபடுகொலைகளுக்குக் காரணமான இதே அதிரடிப்படையினர் இந்த சமாதான காலத்திலும்கூட இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுக்க விடாமல் இடையூறு செய்து மக்களின் மனங்களை மேலும் புண்படுத்துவது எமக்கு வேதனையளிக்கிறது.

கேள்வி :- களமுனைத் தளபதிகள் எல்லோரும் நின்று அர்ப்பணிப்புடன் மக்களுக்கு
சேவையாற்றுகின்றீர்கள் படையினரின் இத்கைய செயற்பாடுகள் உங்களின் பணிகளுக்கு இடையூறாக அமையுமிடத்து தங்களால் எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றி கூற முடியுமா?

பதில் :- எமது போராட்டம் மக்களுக்கானதுää மக்களைப் பெருமளவு பாதித்த இச்சம்பவம் எம் அனைவருக்கும் ஆழ்ந்த மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் தமது சொத்து சுகங்களைää உயிர்களை இழந்து துன்பப்பட்ட மக்கள் இயற்கை
அனர்த்தத்தினால் பாதிப்புக்களைச் சந்தித்துள்ள இவ்வேளையில் எமது பணிகளுக்கு
இராணுவத்தினர் மூலமாக இடையூறுகள் ஏற்படும்போது மக்களின் நலனுக்காக எமது போராளிகள் மிகவும் பொறுமைகாத்து வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். எமது அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் கௌசல்யன்ää குயிலின்பன் ஆகியோர் நெருக்கடி நிலைமைகள் தோன்றும்போது படை அதிகாரிகளைச் சந்தித்து சுமூகமான சு10ழலை உருவாக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால் இந்த நெருக்கடி மிக்க காலத்தில் படைத்தரப்பினர் புரிந்துணர்வுடன் செயற்பட முயற்சிக்காமல் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துருவது எதிர்காலத்தில சமாதான முயற்சிகளில் கூட பாதிப்புக்களை ஏற்படு;தும் வாய்ப்புள்ளது.

கேள்வி :- மட்டு - அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இந்த கடல்கோள் அனர்த்தம்
காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறிலங்கா அரசில் போதியளவு அரசியல் பலம் இல்லாத காரணத்தினால் கிடைக்கப்பெறும் அரச நிவாணரம் மற்றும் ஏனைய உதவிகள் பற்றி மக்கள் மத்தியில் பெரும் ஐயம் நிலவுகின்றது. இது முறையாக கிடைக்க விடுதலைப் புலிகளால் எத்தகைய முயற்றி மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றி கூற முடியுமா?

பதில் :- அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சிறுபான்மை இனமாகவே இன்று தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் அரசியல் ரீதியான பலம் மற்றைய
மாவட்டங்களைப்போல்இல்லை என்பது உண்மைதான். அரச அதிபர் தொடக்கம் அரச அதிகாரிகள் பலரும் பெரும்பான்மை சமூகங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. பத்மநாதன் அவர்களும் சுனாமி அலைகளினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றார். இந்நிலையில் சுனாமி அனர்த்தத்தின் பின்பு மேலதிக அரச அதிபராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டு இருப்பது நல்ல விடயம்தான்ää ஆனால் அவரின் பணிகள் வேகமாகவும்ää சிறப்பாகவும் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


கேள்வி :- எமது மாணவர்களின் கல்வி வளங்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் கல்வி
நடவடிக்கைகளுக்கும் இந்த கடல்கோள் அனர்த்தம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க தங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றியும்ää தேவைகள் பற்றியும் கூற முடியுமா?

பதில் :- மட்டு அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால்பல கிராமங்கள் முற்றாகவே கல்வியில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. அதேவேளை சுனாமித் தாக்கத்தினால் பல பாடசாலைக் கட்டடங்கள்ää தளபாடங்கள் முற்றாக அழிந்து போயுள்ளன. பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பாடசாலைகளே பலஇடங்களில் மக்களின் நலன்புரி நிலையங்களாக உள்ளதால்ää பாடசாலைகளை உரிய காலத்தில் ஆரம்பிக்க முடியாதுள்ளது.இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. அத்துடன்
பல்கலைக்கழக மாணவர்கள்ää வேறு உயர்கல்வி மாணவர்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள்ää அதிபர்கள்ää கல்வி அதிகாரிகள்கூட பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கல்வியை மேம்படுத்த நாம் பலமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்திட்டம் ஒன்றை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரு நல்ல முயற்சி இவ்வாறாக எதிர்காலங்களில் எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கேள்வி :- எமது மண்ணில் அன்னியப் படையினர் மனிதாபிமான ரீதியில் உதவுவதற்காக வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் மக்கள் மத்தியில் இவர்கள் மீது ஒரு விதமாக சந்தேகம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பாக தங்களின் கருத்தை அறிய
முடியுமா?

பதில் :- மட்டு - அம்பாறை மாவட்டங்களில் வெளிநாட்டுப் படையினர் பல பணிகளில்
ஈடுபட்டுவருவதனை அவதானிக்க முடிகிறது. அவர்கள் சுனாமி அனர்த்த மனிதாபிமானப் பணிகளை ஆற்றுவதற்காகவே தாம் வந்துள்ளதாகவும்ää அப்பணிகளை முடித்துக் கொண்டு தமது நாடுகளுக்குச் செல்வதாக கூறுவதை ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது. நாமும் அவர்கள் கூறியதுபோலவே
செயற்படுவார்கள் என்று நினைக்கின்றோம்.

Print this item

  யாழ் சமையல் பகுதி உங்களை வரவேற்கிறது
Posted by: thamizh.nila - 01-29-2005, 08:27 AM - Forum: சமையல் - Replies (2)

வணக்கம்,

யாழ் களத்தின் சார்பில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய பாரம்பரிய உணவு குறிப்புகளை ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறி உதவுவோமாக. எங்கள் வேண்டுகோளுக்கிணங்க இப்பகுதியை ஆரம்பித்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

நன்றி

Print this item

  இணைய அறிமுகமும் ஆக்கங்கள் கோரலும்.
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 05:52 AM - Forum: இணையம் - Replies (10)

மிகவும் வெற்றிகரமாக முழுமையான தமிழ்த்தளமாக இப்போது உலகத்தமிழர் வானொலி இயங்க ஆரம்பித்துள்ளது. தினமும் அவ்வப்போது செய்திகள் புதுப்பிக்கப்படுகின்றன. கடந்த வாரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன். புதிய புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். நண்பர்கள் நீங்களும் உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம்.

தேசத்திலிருந்தே தேசத்தின் நிகழ்வுகளை வெளிக்கொண்டுவர துடிக்கும் அவர்களின் பணிக்கு நாமும் கைகொடுக்கலாம். என்ன நான் சொல்றது.???

www.worldtamilarweb.com
live@wtrfm.com

Print this item

  தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ?
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 05:44 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

தாயே! எமையே சிதைத்ததேன்?
நீயே! பகையாய் அழித்ததேன்??


வாழ்வு தந்தாய்! வளங்கள் தந்தாய்!!
வல்லமை நீயே தந்தாய்.
உந்தன் மடி ஏறிநின்று
உலகையே ஆழ வைத்தாய்.
உறவாக நீயிருந்தாய்
உதறிடவேன் மனம் துணிந்தாய்?
தீதென்ன செய்தோம் நாமோ
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ?


தாய்மடியில் சேயாய் வாழ்ந்தோம்
இரந்துண்டு வாழ்வதா?
கடல்வென்று ஆண்ட மண்ணை
கடல்கொண்டு போவதா?
பகைவென்று வீரம் செய்தோம்
பகைநீயாய் ஆவதா?
வசந்தத்தை வரமாய் கேட்டோம்
வஞ்சித்து துன்பத்தை நீதந்தால் தகுமோ?




தயா ஜிப்ரான்

Print this item

  சொல்லத் தெரியவில்லை
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 05:36 AM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

சொல்லத் தெரியவில்லை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..

பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?

மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….

தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………

தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------

முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.




--- மின்னஞ்சலில் வந்த கவிதை

Print this item

  www.worldtamilarweb.com
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 05:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

உலகத்தமிழர் வானொலி கேட்டீங்களோ நண்பர்களே? கேளுங்கோ. ஆக்கபூர்வமான உங்கள் ஆக்கங்களையும் அனுப்பி வையுங்கோ. தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்காத எந்த ஆக்கங்களும் பிரசுர தகுதி உடையவை.

www.Wtrfm.com
live@wtrfm.com

Print this item

  உலகத்தமிழர் வானொலி.
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 05:20 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (5)

உலகத்தமிழர் வானொலி. தாய்நிலத்திலிருந்து புலம் எங்கும் பரவும் இணைய வானொலி. தொழில்முறை நேர்த்தி கொண்ட முதல் தமிழ் இணைய வானொலி

www.worldtamilarweb.com

Print this item

  அப்பம்
Posted by: thamizh.nila - 01-29-2005, 05:13 AM - Forum: சமையல் - Replies (21)

<img src='http://www.infolanka.com/recipes/mess1/aappa1.jpg' border='0' alt='user posted image'>

அப்பம்

தேவையானவை:

1 கப் வெள்ளை பச்சை அரிசி
1.5 கப் கோதுமை மா
2 TBS சீனி
2 கப் பால் -தேங்காய் பால் அல்லது dairy milk
1/2 tsp அப்பசோடா
உப்பு


செய்முறை:

1.நான் எழுதின பொருட்கள் அனைத்தும் இருக்கா என சரி பார்த்துக் கொள்ளவும். இடையில விட்டுட்டு supermarket ஓட கூடாது. அப்பம் சரியா வராது.

2. அரிசியை இரவு ஊறப்போடவும்.

3. காலையில் நன்றாக அரைக்கவும். [ஆட்டுகல் அல்லது , அரைக்கும் இயந்திரம்]. அரிசியை அரைக்கும் போது 1 1/2 cஅப்நீரை சேர்த்துகொள்ளவும்.

4.அரைத்த அசிரி பசையுடம், கோதுமை மா, சீனியை சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் மா கலவை முடிந்த அளவு கட்டியா இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

5. இக்கலவையை 8 மணித்தியாலங்களுக்கு வெட்ப பதமான இடத்தில் மூடி வைக்கவும்.

6.அப்ப சோடா,பால். உப்புஆகியவற்றை போட்டு கலக்கவும்.[பாலை சிறிது சிறிதான சேர்க்கவும்.

இப்பொழுது உங்கள் அப்ப கலவை தயாராகி விட்டது. அனைவருக்கும் எப்படி அப்பம் சுடுவது தெரியும் என நினைத்து..இத்துடன் விடை பெறுகிறேண். மற்றும் இன்னோர் சமையல் குறிப்பில் சந்திக்கும் வரை அப்ப கலவையுடன் விடை பெறுவது...உங்கல தமிழ்.நிலா

Print this item

  பெண்கள் முன்வர வேண்டும்
Posted by: aswini2005 - 01-29-2005, 12:29 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (95)

பெண்கள் முன்வர வேண்டும் .

காதல் புனிதமானது காதல் தெய்வீகமானது. காதலுக்குக் கண்ணில்லை. காதல் இன்றேல் சாதல் என்று ஏகப்பட்ட காதல் வார்த்தைகள் மண்ணில் நிலைத்துள்ளன. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்பவர்கள், மனப்பிறழ்வு அடைபவர்கள் எக்காலத்திலும் உள்ளனர். காதலி ஒருத்தி கிடைக்கவும், காதலன் ஒருவன் கிடைக்கவும், ஆண்களும் பெண்களும் ஏங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். காதலை மையமாக வைத்தே ஏராளமான இலக்கியங்களும் வந்துள்ளன. வள்ளுவர் கூட இதற்கெனத் தனி இயலைத்தந்துள்ளார். அகநாநூறு-நாற்றினை போன்ற சங்க இலங்கியங்களும் கூட உண்டு. இன்னும் தமி;ழர்கள் சால்பாகப் பேச்படுவதில் வீரமும் காதலுமே முதன்மை பெறுகின்றன.

தற்கால தமிழர்களின் வீரத்துக்கு உரைகற்கள் தேவையில்லை. இது உலகப்புகழ் பெற்ற விட்டது. ஆனால், தற்காலத் தமிழர்களின் காதலுக்கு எதை உதாரணமாக வைப்பது என்பது தெரியவில்லை.

காதல் ஒரு பொழுதுபோக்கா? காதல் ஒரு விளையாட்டா? காதல் ஒரு பள்ளிக்கூடமா? காதல் ஒரு நாடக ஒத்திகையா? காதல் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் களமா? எது? எது? தமிழர்களின் மானம் என்பதும் குடிப்பிறப்பு என்பதால் வருவதல்ல. பண்பும், நற்குடிப் பிறப்பும், படிப்பும் நிறைந்தவர்தான் நல்ல மணமகள் அல்லது மணமகன் என்ற நிலை போய் இன்றும் பணமும், தொழிலும் திருமணம் செய்யும் காலமும் இது. காதலிக்கத் தொடங்குமுன் ஒரு பெண்ணோ ஆணோ எதிர்பார்ப்பாலரின் சாதி, சமயம். சொத்துக்கள், சாதகம் எல்லாவற்றையும் பார்த்து விட்டா தொடங்குவார்கள் இல்லை. ஆனால், காதல் முற்றிய பின் ஆண்கள் இவற்றைப்பார்க்கவே செய்கின்றார்கள். இதன் விளைவாகப் பெண்கள் ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டி வருகின்றது.

அண்மையில் ஒரு பெண் தன்னைக் காதலித்தவர் திருமணம் செய்ய முன்வரவில்லை என்றார். காரணம் பெண்ணல்ல பெண்ணின் உறவினர்கள் யாரோ சாதிமாறித் திருமணம் செய்துள்ளார்கள். நாங்கள் இவ்வளவு பிரச்சினைக்கும் சாதி சுத்தமாகத்தான் இருக்கிறம்! என்றார் அவர். சரியான காரணமா?

இன்னுமொரு பெண் இரண்டொரு கடிதங்களே பரிமாறினாலும் இரண்டு மூன்று வருடங்களாக விரும்பியிருந்தவர். சுமார் ஆறு மாதங்களாகத் தொழிலில் மாற்றலாகிச் சென்றிருந்தார். இடையில் ஒரு தடவை வந்து அவளைப் பார்த்து விட்டும் போனவர். திருமணப் பேச்சை எடுத்தபோது அம்மா,அப்பா, அண்ணா,அக்கா எல்லோருக்கும் துரோகம் செய்வது போல உணர்கிறேன். நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்யுங்கள் என்று சற்றும் சலனமில்லாமல் கூறினார். ஒரு பெண்ணுக்கு அவன் செய்தது துரோகமில்லையா? இதுவே அவனுடைய சகோதரிக்கு நடந்தால் விடுவானா? ம்.... காதல் இவ்வளவுதான்.

இன்னுமொன்று மிக நெருக்கமான காதல் இரு பகுதியிலும் பெற்றோருக்கும் தெரிந்திருந்தது. வருவான் பேசுவான் விழாக்களில் கலந்து கொள்வான். மகிழ்ச்சியாகப் போனது காதல், திடீரென அவன் வாழ்க்கை நிலை உயர்ந்தது. இப்போது அந்தப்பெண்ணை பார்க்கவோ பேசவோ அவனுக்கும் நேரமில்லை. அவனுடைய பெற்றோருக்கும் நேரமில்லை. அந்தப்பெண்ணின் எதிர்காலமென்ன?

பெண்களின் உரிமைகளுக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் அபிவிருத்திக்கும் உழைக்கும் சர்வ தேசமோ, அரசாங்கங்களோ மிகச் சாதாரணமாகச் சட்டம் போட்ட இவற்றுக்குத் தீர்வு கண்டுவிட்டதாகப் பறைசாற்றினாலும் பெண்களின் மனம் என்ன சொல்கிறது. மனம் என்பதுதான் வாழ்க்கை. பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குப் போடப்பட்ட சட்டங்கள் எந்தளவில் பெண்களைப் பாதகாக்கின்றன.

ஆணாதிக்க கருது கோள்களின் மீது ஆக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வெளிவரும் சட்டங்கள் இவை. திட்டமிட்டு 'உப்புக்குச் சப்பாணியாக" இதில் இரண்டொரு பெண்கள் கலந்து கொள்வதாகக் காட்டப்பட்டாலும் அவர்கள் வாய்திறக்கப்போவதில்லை. அவர்களுக்கு தங்கள் கதரைகளைக் காப்பாற்றி வைத்திருக்கவேண்டியதே முக்கியமாகும். திருமணப்புகைப்படங்கள் போல, ஒரு பெண்களுக்கான பத்திரிகையை நடத்தும் பெண், பத்திரிகையென தன்னால் எழுதப்படும் ஆசிரியர் தலையங்கத்தைக் கணவனிடம் காட்டி அனுமதி பெறவேண்டியுள்ளது. நான் உலக மட்டத்தில் பேசுகிறேன். சாதியழிப்பு ஒரு குற்றம் தமிழீழ ஒறுப்புச்சட்டம் இயல் 24,432, 433,437 இது பற்றி விரிவாகக் கூறுகிறது. இலங்கை குற்ற நடவடிக்கைச்சட்டத்திலும் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் 12,13ஆம் சரத்துக்களில் இது வேறுவகையில் சுட்டப்பட்டுள்ளது. ஆனால், இது சார்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு எந்த ஒரு பரிகாரத்தையும் பெற முடியாதவாறு சட்டத்தை வழிநடத்துவோர் செயற்படுவதையும் காணலாம்.

காதலனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் (சட்டப்படி இயல் 21,414 ஆவது சரத்து இது பற்றிக் கூறுகின்றது) பாதிக்கப்பட்ட ஒரு பெண் மிக இரகசியமாகச் சென்று தனது முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.

ஆனால் ஒரு வாரத்துக்குள் அது 'ஓல்சிலோன் அவுட்" டான செய்தியாகும். சம்பந்தப்பட்ட இடங்களில் அப்படி ரகசியம் பேணப்படும். சரி போட்ட முறைப்பாட்டையாவது ஒழுங்குற?? விசாரிக்க ஆரம்பிக்கும் முன்பே போதியகால அவகாசம் காரணமாக எதிரி கட்டுப்பாட்டை மீறித் தன்னைக் காத்துக்கொள்கிறார். பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கூடம் மேலும் பொலிவு பெறுகின்றது.

காதலுக்கு ஒருபோதும் சட்டவலு இல்லை. ஒரு பெண் பலதடவை வேண்டாம். ஒரு தடவை நீதிமன்றம் போனாலம் அவள் திருமணத்தை எதிர்பார்க்க முடியாது. இக்கால இளைஞர்களுக்கு காதல் ஒரு விளையாட்டு. இது எலி பூனை விளையாட்டு. பூனையாக ஒரு இளைஞன் ஆகும் ஆட்டம் எலியாக பெண்ணுக்கு ஜீவ மரணப்போராட்டம். அக்காவும் தங்கையும் திருமண வயதில் இருக்கத் தம்பிக்குத் காதல் வரும் இது பற்றித்தெரியாத ஒரு பெண்ணை தற்கால சினிமாக் கதாநாயகர்கள் போல துரத்தித்துரத்திக் காதலில் விழச்செய்வர். திருமணம் பற்றிப் பேச்சு வரும்போதுதான் அவருக்குச் சகோதரிகள் பாசம் பொத்துக்கொண்டு வரும். காரணம் காதலியிடம் ஏதாவது கறக்கலாமா? என்னும் முயற்சி அது

இந்தவகைக் கேடுகெட்டவர்கள்தான் எங்கள் சமுதாயத்தில் நிரம்பிவழிகிறார்கள். வீரத்தின் விளைநிலமான இந்த மண்ணில் காதலில் கோழைகளையே சந்திக்கிறோம். ஏமாற்றப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கிளர்ந்தெழ வேண்டும். ஏமாற்றும் துரோகிகளின் பெயர்கள் பகிரங்கமான இடங்களில் எழுதி ஒட்டப்பட வேண்டும். இவர்கள் கைது செய்யப்பட்டு வீதி உலா விடப்படவேண்டும்.

ஒரு நாட்டின் மானம் அந்நாட்டின் பெண்களிலம், பசுக்களிலுமே தங்கியிருந்தது. இருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு பெண் தவறு செய்தால் அவ்வீட்டுத் தலைவனுக்குப் பெரும் அவமானமாகப் கருதப்படும்.

'புகழ் பூத்த இல்லார்க்கு இல்லை ஏறு போல் பீடுநடை"

என்று வள்ளுவரே சொல்லயிருக்கிறார். பெண்கள் இந்நாட்டின் வீர வரலாற்றின் பங்காளிகள் சமுதாயத்தில் அவர்கள் சோக வரலாற்றின் சொந்தக்காரராய் இருக்க அனுமதிக்ககூடாது. ஒவ்வொரு பெண்ணும் உன் தங்கையாய், தாரமாய், தாயாய் இருப்பவளின் பதிவுதான் பெண்களின் கண்ணீருக்குள் பேரழிவு காத்திருந்த வரலாறுகள் உண்டு. பெண்கள் கண்ணீர் விட்டால் நாடே அழிந்துவிடும் என்று கீதை கூறும் பாரதக்கதையில் விதுரன் கூறுகிறான். இந்தக்காதல் கோழைகளின் தோலுரித்துத் தொங்கவிடப் பெண்கள் அணி திரளவேண்டும். தொடர்ந்து நம் எதிர்காலப் பெண்களைக் காக்க நாம் முன் வரவேண்டும்.

மாயா
(sooriyan.com)

Print this item