| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 219 online users. » 0 Member(s) | 216 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அல்வா |
|
Posted by: Mathan - 01-28-2005, 03:19 PM - Forum: சமையல்
- Replies (32)
|
 |
தேங்காய் பால் தேங்காய் பால் அல்வா
தேங்காய் 1
பச்சரிசி ஒரு கப்
சீனி ஒரு கப்
தேங்காயைத் துருவி இரண்டு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பச்சரிசி மாவினை தேங்காய் பாலுடன் கலந்து ஒரு கனமான பாத்திரத்தில் இட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
கட்டி விழாத வண்ணம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து வண்ணம் மாறியவுடன் சீனியைக் கொட்டி கிளறவும்.
கலவை வெந்து திரண்டு பால்கோவா பதத்திற்கு வந்தபிறகு இறக்கி வைக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
|
|
|
| கையைக்கட்டி NETஇல் விட்டால்....! |
|
Posted by: Mathan - 01-28-2005, 02:55 PM - Forum: கணினி
- Replies (3)
|
 |
கையைக்கட்டி NETஇல் விட்டால்....!
சொல்வழி கேட்கும் இணைய உலாவி. ஒபேராவின் திடீர் பாய்ச்சல்..!
கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் கவலைப்படுவீர்களோ என்னவோ, இனி கையைக்கட்டி நெட்டில் விட்டால் மகிழ்ச்சியாக உலாவி வருவீர்கள்.
ஒப்பேரா நிறுவனம் தனது இணைய உலாவியின் அடுத்த பதிப்பைப்பற்றிய அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஐ. பீ. எம் தொழிநுட்ப்பத்தில் இயங்கும் குரல் உணர்வு வசதிகள் கொண்டதாக புதிய உலாவி வெளிவர இருக்கிறது.
இக்குரல் உணர்வு வசதி வின்டோசுக்கு மட்டுமேயாகும்.
<img src='http://www.opera.com/img/front/frontImagePc1.jpg' border='0' alt='user posted image'>
தற்போது சோதனைப்பதிப்பு இலவசமாக தரவிறக்கக்கிடைக்கிறது.
அடுத்தமாதம் முழுமையான பதிப்பு வெளிவரவிருக்கிறது.
ஏறத்தாழ ஐம்பது கட்டளைகளை செயற்படுத்தக்கூடியதாக இக்குரலுணர்வு வசதி அமைந்திருக்கும்.
எனைய குரல் உணர்வு மென்பொருட்களைப்போல இதற்கு பயிற்றுவித்தல் வேண்டியிருக்காது.
மேலும் இது இணையப்பக்கங்களை உரத்து வாசிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
நேற்று இவ்வறிவிப்பை பார்த்தவுடன் உலாவு நிலையத்தில் வைத்தே இதன் சோதனைப்பதிப்பை நிறுவி பரீட்சித்துப்பார்த்தேன்.
மொசில்லா, பழைய அடோப் ரீடர் போன்றே இதனை நிறுவுவதற்கு நிர்வாகியின் அனுமதி தேவையில்லை.
எனவே இதனை நீங்கள் எங்கும் பயமில்லாமல் கொண்டுசெல்லலாம்.
மிகவும் அழகான இடைமுகப்பு.
பக்கங்களின் பேழைகள் விசைகள் எல்லாவற்றையும் தனக்கேயுரிய சிறப்பான வடிவத்தில் காட்டுகிறது. அவற்றை நீங்களே தனிப்பயனாக்கிக்கொள்ளும் வசதியும் உண்டு.
இடைமுகப்பைப்பார்த்தவுடன் அடுத்து நான் என்ன செய்வேன்?....
ம்... தமிழ் யுனிகோட் பக்கங்களைப் பார்வையிட்டேன்.
எந்தச்சிக்கலும் இல்லை.
utf-8 இற்கு மாற்றக்கூடிய தேவையும் இல்லை.
தமிழை முதன்மை மொழியாக தெரிவு செய்யும் வசதியும் உண்டு. ( பிரச்சனை இல்லாமல் கூகிள் தமிழில் தெரியும்)
என்னுடைய , நண்பர்களுடைய வலைக்குறிப்புக்களை பார்த்தேன், firefox இலிருக்கும் எழுத்தை பிய்த்துப்போடும் பிரச்சனையும் இல்லை.
உள்ளமைந்த செய்தியோடைப்படிப்பான் வசதியும் உண்டு என்பதால் எமக்கெல்லாம் பிரயோசனம்தான்.
செய்தியோடை வசதிகொண்ட தளங்களை தானே இனங்கண்டு பட்டியலில் சேர்த்துக்கொள்கிறது (உங்களிடம் கேட்டுவிட்டுத்தான்).
பிறகு புதிதுசேர்ப்புக்களை உடனுக்குடன் உங்களுக்கு அறியத்தருகிறது ( மீளேற்ற நேரத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்).
இவ்வுலாவியின் ஏனைய சிறப்பியல்புகள்:-
1. பத்துமடங்கு உருப்பெருக்கிய நிலையில் பக்கங்களைப் பார்க்கலாம்.
2. அழகூட்டு திட்டங்களை (Style sheets) நீங்க்ளே உருவாக்கிக்கொள்ளலாம்
3. துள்ளிவரும் சாளரங்களை நிறுத்திவிடலாம்
4.தத்து அடிப்படையிலான உலாவல் ( Tabbed browsing) சாத்தியம் உண்டு ( Firefox மூலம் இது ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியிருக்கும்)
5.உள்ளமைந்த மின்னஞ்சல் முகாமைச் செயலி இருக்கிறது.
6. எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் தனிப்பட்ட மற்றுமொரு சிறப்பியல்பு, திரை அடர்த்தியைப்பொறுத்து, சாளரத்துக்கு பொருந்தக்கூடியவாறு பக்க அளவை மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான். மிகவும் பிரயோசனமான வசதியாகப்படுகிறது.
கிடையான உருள்பட்டையை உருட்டி உருட்டி தளங்களைப்பார்க்கும் எரிச்சல் இனி இல்லை. என்னைப்போல வீம்புக்கு சின்ன திரையில், அடர்த்தியை கூட்டி வைத்துக்கொண்டு "பூந்து பூந்து" பார்க்கத்தேவையில்லை.
இச்செயலியினை இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ளலாம்.
விலைக்கும் வாங்கலாம். விலைக்கு வாங்கினால், இடதுபக்க மேல் மூலையில் தெரியும் விளம்பரம் இருக்காது. மேலதிக அனுசரணைகள் கிடைக்கும்.
ஆனால் ஜீ மெயில் பர்க்க முடியவில்லை. கூகிளின் மின்னஞ்சலுக்குரிய உலாவிகளின் பட்டியலிலும் இது இல்லை. முழுமையான பதிப்பு வெளிவரும்போது இக்குறை நிவர்த்திசெய்யப்படலாம்.
ஜாவா, ஜாவா ஸ்க்ரிப்ட் அனுசரணை எவ்வளவு இருக்கிறது என்பதுபற்றியும் , இன்னும் ஆழமான தொழிநுட்பங்கள் பற்றியும் இதுவரை நான் ஆராயவில்லை. ஆழமானவர்கள் இதனைச் செய்து பகிரலாம்.
உரத்து வாசிக்கும் வசதியும், குரல் உணர்வு வசதியும் ஆங்கிலத்துக்கு மட்டுமே.எமக்கு இல்லை.
இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.
உரை- குரல் வசதியும் இன்னும் எம்மிடம் இல்லை. (நண்பர் ஒருவர் சோதனை மென்பொருள் ஒன்று செய்திருந்தார். அதற்கு நடந்த சோகக்கதை பின்னர் விரிவாக..எனது கையெழுத்துணரியும் கேட்பாரற்றுக்கிடக்கிறது...)
மைக்ரோ சொப்ட் இதனை அறிமுகப்படுத்தி நெடுநாளாகிறது.
எப்படி செய்திருக்கிறார்கள் என்பதை திறந்திருந்தால் இவ்வளவு காலத்துக்கு தமிழுக்கு அந்த வசதி கிடைத்திருக்கும்.
தளையறு நிரலாளர்கள் இன்னமும் இத்த்கைய தொழிநுட்பங்களில் முழுமை காணவில்லை என்பதுதான் நாம் பின்னிற்பதற்கான முதன்மையான காரணமோ என எண்ணத்தோன்றுகிறது.
Thanx: மு.மயூரன்
|
|
|
| மீண்டும் சுனாமி இணையத்தளம் |
|
Posted by: KaviPriyan - 01-28-2005, 11:11 AM - Forum: புலம்
- Replies (1)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>மீண்டும் சுனாமி</span>
வணக்கம்!
சுனாமி இணையப் பக்கத்தின் முகவரி இயங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது... ஆனால் தற்போது அந்த முகவரியை நீங்கள் பயன்படுத்தி சுனாமி இணையத்தை பார்வையிடலாம். கீழே கொடுக்கப்பட்ட முகவரிகளினூடாக நீங்கள் செல்லலாம்....
www.tsunamiineelam.com
www.tamilonlinenetwork.com
சுனாமி இணையத்தை பார்வையிடுவதில் ஏதாவது தடுங்கல் இருந்தால் தயவுசெய்து அறியத்தரவும்...
தொடர்வுகளுக்கு
கவிப்ரியன்
மன்னஞ்சல்: asruban@hotmail.com
தொலைபேசி: +47 92 04 23 15
நன்றி
கவிப்ரியன்
|
|
|
| பழந்தமிழர்களின் காலடிச்சுவடுகள் |
|
Posted by: Vaanampaadi - 01-28-2005, 11:10 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
பழந்தமிழர்களின் காலடிச்சுவடுகள்
இயற்கையை எதிர்த்துப் போராடி வளர்ந்ததே மனித வரலாறு. இயற்கை கடுமையானத் தாக்குதலை மனித சமுதாயத்தின் மீது தொடுக்கும் போதெல்லாம் துவண்டு விழும் மனிதன், அதே வேகத்தில் திரும்ப எழுந்து நின்று, தன்னையும் தன் சக மனித இனத்தையும் பாதுகாத்துக் கொள்ள கடுமையாகப் போராடுகிறான். சுனாமிக்குப் பின் மனிதகுலம் எழுந்து நிற்க முயற்சிப்பதும் அவ்வகையிலேயே. பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தூக்கி சாப்பிட்ட சுனாமிக்கு எதிராக களம் அமைக்க உலகம் முழுக்கப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒன்று, சுனாமி அலைகளைக் கண்டறியும் கருவிகளைக் கடலுக்குள் நிறுவுவது, (பெரும்பாலான நாடுகளில் இத்திட்டத்தை தான் பரிசீலித்துக் கொண்டுள்ளனர். சுனாமி பேரலைகள் கடலில் உருவாகும் போதே, கடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் அடுத்த நிமிடமே கரைக்குத் தகவல் அனுப்பிவிடும். கரையோரங்களில் வசிப்பவர்கள் வீடு-வாசல் அனைத்தையும் விட்டு ஓடிப் போய் பிழைத்துக் கொள்ளலாம்.
ஆனால் இலங்கையில் தமிழர் பகுதிகளைத் தங்கள் வசம் வைத்திருக்கும் விடுதலைப்புலிகள் கொஞ்சம் வித்தியாசமான முயற்சியில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மண்ணைப் பயன்படுத்தி கடற்கரையோரத்தில் சுவர் அமைக்கப் போவதாக அந்த அமைப்பின் பொறியியல் மற்றும் கட்டுமானப்பிரிவு அறிவித்துள்ளது. முதலில் கேட்டால் யாருக்கும் சிரிப்பு வரும். பொங்கி வரும் கடல் அலைகளை மண் வைத்து தடுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பலாம். இந்த கேள்விக்கு விடை தேட வேண்டுமானால், வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். தமிழர்கள் அந்தக் காலத்தில் இன்றைக்கு நாம் மலைத்துப் போய் பார்க்கும் தொழில்நுட்பங்களை மிகச் சாதாரணமாக அன்றைக்குச் சாதித்திருக்கிறார்கள். அவ்வகை தொழில்நுட்பத்தை தான், இன்றைக்கு விடுதலைப்புலிகள் பயன்படுத்தப் போவதாய் அறிவித்திருக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து செயல்படுத்திய ஒரு தொழில்நுட்பம் இன்றைக்குப் பொருந்துமா? என்று ஹைடெக் தமிழர்கள் கேட்பதும் புரிகிறது. முடியும் தமிழர்களே! இயற்கையை ஒட்டிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துப் பாருங்கள். பஞ்சபூதங்கள் பணிவாக உங்கள் முன் கைகட்டி நிற்கும். எப்படி சாத்தியம்? அன்றைக்கு , 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் என்ற சோழ நாட்டு அரசன் வடிவமைத்திருக்கும் கல்லணையே அதற்கு சாட்சி! 1830 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன்(Sir Arthur Cotton) என்ற பிரிட்டிஷ் பொறியியல் வல்லுநர் இந்தியாவில் நீர் அணைக்கட்டுகளை வடிவமைக்க இங்கிலாந்திலிருந்து வந்தார். கல்லணைக்குச் சென்றவர், அணையின் பக்கவாட்டுப் பகுதியில் தோண்டினார். மலைத்துப் போனார். அப்படி ஒரு தொழில்நுட்பத்தை அதற்கு முன் அவர் சிந்தித்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை.அந்த தொழில்நுட்பம் இது தான்:
காவிரி ஒடும் பகுதியில், நீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில் வரிசையாக, பெரிய பாறைக்கற்களைக் கொண்டு அடுக்கியிருக்கிறார்கள், தண்ணீரின் வேகத்தில் பாறைகளின் கீழ் உள்ள மணல் அரித்துக்கொண்டு ஓட,ஓட அப்படியே அந்த பாறைகள் தரையில் அழுந்த ஆரம்பித்தன; பல அடிகள் கீழ் அழுந்திய பாறைகளின் மேல், ஒரு வகையான களிமண் கலவையை (மணல்,கருப்பட்டி, வெள்ளைச்சுண்ணாம்பு,பதநீர் கலந்த சக்தி வாய்ந்த இயற்கையான சிமெண்ட் கலவை) பூசி, அதன் மீது மீண்டும் பாறைகளை அடுக்கியிருக்கிறார்கள். இவ்வாறு மீண்டும் பாறைகள்,கலவை என ஒன்றன் மேலொன்றாக அடுக்கடுக்காக அமைக்கப்பட்டதால், தொடக்கத்தில் அடுக்கி வைத்த பாறைகளின் வரிசை, பூமியில் ஆற்றின் கீழே மணல் பகுதியைக் கொஞ்சம்,கொஞ்சமாகத் தாண்டி அடிஆழத்தில் கடினமான தரையில் போய் அருமையாக உட்கார்ந்து கொண்டது. தயாராகி விட்டது அணை.
1080 நீளத்தில், 50 அடி அகலத்தில், 18 அடி உயரத்தில் வலிமையாக நின்று கொண்டிருந்த அந்த இரண்டாயிரம் ஆண்டு கால அணை, சர் ஆர்தர் காட்டனின் உள்ளத்தில் பிரமிப்பினால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருந்தது. தன்னுடைய வாழ்க்கைச்சரித்திரத்தில் அச்சம்பவத்தினை "எவ்வளவு ஆழம் என்று கண்டுபிடிக்க முடியாத மணற்படுகையில் எப்படி அடித்தளம்(foundation) அமைப்பது என்ற தொழில்நுட்பத்தினை இந்த அணையைக் கட்டிய தமிழர்களிடமிருந்து தான் நாம் தெரிந்து கொண்டோம்; இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் ஆற்றின் மீது பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் தொழில்நுட்பக் கட்டுமானங்களை மேற்கொண்டோம். இம்மகத்தான சாதனையைப் புரிந்த முகம் தெரியாத மனிதர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என British Irrigation Works in India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்."
இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த தமிழர்களின் கட்டடக்கலை, கல்லணையோடு நிற்கவில்லை. தஞ்சை,கங்கை கொண்ட சோழபுரம், மதுரை, இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி நகரங்களில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் கோயில்களே இதற்கு சாட்சி. ஒற்றைக்கல்லில் கோவிலின் மேல் கோபுரம் (தஞ்சை) அமைந்துள்ள கட்டடக்கலை இதற்கு ஓர் அற்புத டுத்துக்காட்டாகும். மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை இரண்டு பழந்தமிழ் இலக்கிய நூல்களும் தமிழர்களின் கட்டடக்கலை தொழில்நுட்பத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
காலத்தால் அழியாத தமிழர்களின் அன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே, இலங்கையின் வடகிழக்கில் கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கப் போவதாக புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத் தீவு பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு வலுவான மண் சுவரைக் கட்ட விடுதலைப் புலிகள் முடிவு செய்துள்ளனர். கடலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள நிலப் பகுதியில் இந்த தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. 3 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலத்தில் இந்த தடுப்புச்சுவர் அமையவுள்ளது. பழங்காலத்து தமிழர் கட்டடக் கலையைப் பயன்படுத்தி இந்தத் தடுப்புச் சுவர் முற்றிலும் மண்ணால் கட்டப்படவுள்ளது.
மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து அமைக்கப்படவுள்ள இச்சுவர் கான்கிரீட் சுவரை விட மிகவும் வலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும். செலவும் மிக மிக குறைவாகவே இருக்கும் என தமிழர் மறுவாழ்வு அமைப்புத் தலைவர் சிவனடியார் அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி கட்டப்படவுள்ள அம்மண் சுவர், நமது மூதாதையர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என அவர் கூறியுள்ளார். சுவர் கட்டுவது மட்டுமன்றி, அவற்றை ஒட்டி மாங்குரோவ் காடுகளை வளர்க்கவும்,தென்னை மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளனர். சுனாமியை இவ்வாறு இயற்கையான முறையில் தடுக்க முடியும் என்பது தான் உண்மை.
இயற்கையை அதன் போக்கிலேயே சந்தித்த நாகரிகப்பின்னணி கொண்ட நம் தமிழினம், இன்றைக்கு ஆயிரக்கணக்கில் அருமையான உயிர்களைப் பறிகொடுத்து நிற்கின்றது. இயற்கையின் ஆன்மாவை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், இயற்கையை சமாளிக்கும் வித்தையை நம் முன்னோர்கள் நமக்கு நிறையவே விட்டுச் சென்றுள்ளனர். அந்த காலடித்தடங்களைப் பின்பற்றினால், காற்று கூட கைகளில் வந்து அடங்கும்.....
இரா.குறிஞ்சிவேந்தன்
|
|
|
| புலிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்த்தை... |
|
Posted by: Vaanampaadi - 01-28-2005, 09:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்த்தை கொழும்பில் இன்று நடைபெறுகிறது.
28.1.2005
தமிழீழ விடுதலைப் புலிகளின் சாமாதனச் செயலகப் பிரதிநிதிகளுக்கும் இலங்கையரச தரப்பின் சமாதானச் செயலகப் பிரதிநிதிகளுக்குமான விசேட நிவாரணப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப்பணிப்பாளர் புலித்தேவன் உட்பட தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். இலங்கையரச தரப்பில் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜெயந்த தனபால தலைமையில் ஒரு குழு பங்கபற்றுவதாக அறியமுடிகிறது. இலங்கையில் இயற்கையின் அழினால் சிதைந்து போன தமிழர் தாயகப் பிரதேசங்களைக் கட்டியெழுப்ப உலக நாடுகளால் வளங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை உரியமுறையில் பங்கிடுவதற்காக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவரும்.
Source : Tamiloosai
|
|
|
| அந்தமான்: 24 மணியில் 15 நில நடுக்கங்கள்! |
|
Posted by: hari - 01-28-2005, 08:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
அந்தமான்: 24 மணியில் 15 நில நடுக்கங்கள்!
டெல்லி:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 26ம் தேதி இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அளவிலான இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக நிக்கோபார் தீவில் உள்ள காமோர்ட்டா பகுதியில் நேற்று காலை 09.29, 10.52, மதியம் 12.27, 02.12, பிற்பகல் 03.23, 04.28, மாலை 05.14, இரவு 08.54, 09.05 ஆகிய நேரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.0 லிருந்து 5.8 வரை பதிவாகின.
இதே பகுதியில் நேற்றிரவு 11.11, 12.23, 02.15, 03.28, 04.11 மற்றும் 04.57 ஆகிய நேரங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.1லிருந்து 5.5 வரை பதிவாகின.
லிட்டில் நிக்கோபாரின் வடக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை 09.29க்கு நில நடுக்கம் (5.4 ரிக்டர்) ஏற்பட்டது.
இதே பகுதியில் நேற்றிரவு 01.40 மணியளவில் அடுத்தடுத்து 2 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நில நடுக்கம் 5.1 ரிக்டராகவும், அடுத்த நில நடுக்கம் 5.2 ரிக்டராகவும் பதிவானது.
கார் நிக்கோபாரின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நேற்று மதியம் 02.07க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. இதேபகுதியில் மாலை 05.14 மணி முதல் இரவு 10.29 வரை அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் இவை 5லிருந்து 5.4 வரை பதிவாகின.
நேற்று முன்தினம் இரவு 03.30க்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது.
இந்த இடைவிடாத நில நடுக்கங்களால் அந்தமான் தொடர்ந்து குலுங்கி வருகிறது.
thatstamil
|
|
|
| காதல் கவிதைகள் |
|
Posted by: தமிழரசன் - 01-28-2005, 08:26 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (19)
|
 |
காதல் கவிதைகள்
*அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன. உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
*உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.
*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
காட்டியதெனக்கு.
*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
*அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன்
நிழல்.
*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே.
*எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.
*என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை.
*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது.
*'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே உன்
கண்கள்.
நன்றி தமிழ்
|
|
|
| காதல் கவிதைகள் |
|
Posted by: தமிழரசன் - 01-28-2005, 08:25 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
காதல் கவிதைகள்
*அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன. உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
*உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.
*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
காட்டியதெனக்கு.
*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
*அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன்
நிழல்.
*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே.
*எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.
*என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை.
*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது.
*'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே உன்
கண்கள்.
நன்றி தமிழ்
|
|
|
| செய்தி |
|
Posted by: glad - 01-28-2005, 08:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
வணக்கம் புதிய சுனாமி ஒன்று ப்ற்றிய செய்தி ஒன்று திடீர் எனப் பரவி உள்ளது. இந்தோனேசியாவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையை இன்னும் இரு மணி நேரத்தில் தாக்கும் எனவும் செய்தி. இதன் உண்மை ப்ற்றி செய்தி தெரிந்தால் தயவு செய்து யாராவது சொல்லுங்கள்
glad
|
|
|
|