![]() |
|
புலிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்த்தை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்த்தை... (/showthread.php?tid=5577) |
புலிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்த்தை... - Vaanampaadi - 01-28-2005 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்குமான பேச்சுவார்த்தை கொழும்பில் இன்று நடைபெறுகிறது. 28.1.2005 தமிழீழ விடுதலைப் புலிகளின் சாமாதனச் செயலகப் பிரதிநிதிகளுக்கும் இலங்கையரச தரப்பின் சமாதானச் செயலகப் பிரதிநிதிகளுக்குமான விசேட நிவாரணப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப்பணிப்பாளர் புலித்தேவன் உட்பட தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். இலங்கையரச தரப்பில் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜெயந்த தனபால தலைமையில் ஒரு குழு பங்கபற்றுவதாக அறியமுடிகிறது. இலங்கையில் இயற்கையின் அழினால் சிதைந்து போன தமிழர் தாயகப் பிரதேசங்களைக் கட்டியெழுப்ப உலக நாடுகளால் வளங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை உரியமுறையில் பங்கிடுவதற்காக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவரும். Source : Tamiloosai - kuruvikal - 01-28-2005 பேசிப் பேசிக் கண்டது 0....! :wink:
|