| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 185 online users. » 0 Member(s) | 183 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ம் |
|
Posted by: Mathan - 01-28-2005, 05:57 AM - Forum: நூற்றோட்டம்
- Replies (15)
|
 |
சண்முகநாதன் கதை
(ஷோபாசக்தியின் சமீபத்திய நாவலான 'ம்'லிருந்து,)
கனகரட்ணம் சண்முகநாதன் என்ற மட்டக் களப்புத் தமிழர் சிற்றாண்டி எனும் ஊரை சேர்ந்தவர், நோயாளியான அவரது மனைவிக்கு உணவும் மருந்தும் இரண்டு வயதேயான அவரது மகளுக்கு பாலும் வாங்க சண்முகநாதன் பணம் தேடி அலைந்தார். கடைசியாக நகரத்தில் 'மில்' வேலைக்கு கூலிக்கு ஆள் எடுப்பதாக கேள்விபட்டு அவர் வேலை தேடி புறப்பட்டு சென்றபோது சிற்றாண்டி எல்லையில் வைத்து சிறிலங்கா விசேட அதிரடி படையினரால் சண்முகநாதன் கைது செய்யப்பட்டார். அப்போது வருடம் ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தாறாய் இருந்தது. கைது செய்யப்படும் போது சணமுகநாதனுக்கு வயது இருபத்தியிரண்டு.
அன்று சண்முகநாதனுடன் மேலும் அறுபத்தியிரண்டு தமிழர்கள் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப் பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவ வாகனங்களிலே காட்டுக்குள் அமைந்திருந்த விசேட அதிரடி படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமிற்கு அழைத்து செல்லபட்டார்கள். மறுநாள் அதிகாலையில் அதிரடி படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டபோது அதுவரை இலக்குகளாக உபயோகிக்கபட்டுவந்த வைக்கோல் பொம்மைகள் அகற்றப்பட்டு பொம்மைகளின் நிலையில் சண்முகநாதனும் மற்ற கைதிகளும் நிறுத்த பட்டார்கள். அன்றய காலை பயிற்சியில் நாற்பத்தியிரண்டு அதிரடி படையினர் இலக்குகளை துல்லியமாய் சுட்டு தள்ளினார்கள். இருபத்தோரு படை வீரர்கள் இலக்கு தவறி சுட்டார்கள். சண்முகநாதனுக்கு காலிலே வெடி விழுந்தது. இன்னும் இருபது கைதிகள் குற்றுயிரும் கொலைஉயிருமாய் கிடந்தார்கள். காயமுற்றவர்களுக்கு கொழும்பு வைத்திய சாலையில் கட்டில்களோடு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
வைத்தியசாலையிலிருந்து நேராக சண்முகநாதன் இராணுவ தடுப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டர். அவர் அனுப்பப்பட்ட இராணுவ முகாம் அவிசாவளை பகுதியில் குரிவிட்ட என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பு முகாமில் சண்முகநாதன் இரண்டு வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த தருணங்களில் நிலமையை தன் குடும்பத்தாருக்கு சொல்லிவிட எந்த வழியும் திறக்கவில்லை. சண்முகநாதனை தேடி கண்டுபிடிக்க அவரின் குடும்பத்தாலும் முடியவில்லை. ஒரு வருடம் கழித்து, சண்முகநாதனின் குடும்பம் செத்தவீடு கொண்டாடிற்று. சிற்றாண்டியில் இழவு நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தது. ஒப்பந்தத்தின் பின்னால் பல அரசியல் கைதிகள் விடுவிக்கபட்ட போதும் யாருக்கும் தெரியாமல் யாருடைய கவனத்தையும் பெறாமல் சண்முகநாதன் குரிவிட்ட தடுப்பு முகாமிலேயே இருந்தார். அடுத்த வருடம் அவர் போகம்பர பெருஞ்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போகம்பர சிறையில் ஒன்றல்ல இரண்டல்ல, பதினாறு வருடங்கள் சண்முகநாதன் பிரேதமாய் கிடந்தார். அவருடைய எல்லா பற்களும் குறடுகளால் பிடுங்கப்பட்டன. அவரின் முதுகு கோடாரியால் பிளக்கப்பட்டது. அந்த நிணமும் தசையுமான உடல் கிடங்கில் கந்தகத்தை கொட்டி எரித்தார்கள். அவரின் மார்புக் காம்புகளில் மின் அதிர்வு செலுத்தப்பட்டு பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் "பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்.
சண்முகநாதன் சிறையதிகாரிகளால் மிருகத்தனமாக வேலைவாங்கப்பட்டார். பகல் முழுவதும் சுத்தம் செய்தல், உருளைக்கிழங்கு, காரட், போஞ்சி பயிரிடுதல், சமையல் போன்ற வேலைகளை செய்ய அவர் கட்டளையிடப்பட்டர். காலையில் ஒரு துண்டு பாணும் சீனியில்லாத கருப்புத்தேனீரும் மதியம் நூறுகிராம் சோறும் ஒரு பூசணிக்காய் துண்டு அல்லது சிறிதளவு கோவா மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்பட்டது. சண்முகநாதன் சிறைப் பிடிக்கபட்ட நாளிலிருந்து அவருக்கு முகச்சவரம் செய்ய வழி எதும் இருக்கவில்லை. அவரின் தாடி இடுப்புவரை படர்ந்து கிடந்தது.
சிறைவளாகத்துள் இருந்த ஒர் சிறையதிகாரியின் வீட்டை சுத்தம் செய்ய சண்முகநாதன் போவதுண்டு. அந்த சிறையதிகாரியின் நோனா சண்முகநாதனுக்கு இரங்கினாள்.அவளின் உதவியோடு சண்முகநாதன் இரண்டாயிரத்து நான்காம் வருடம் ஏப்ரலில் ஒரு மழைக்கால இரவில் போகம்பர சிறையிலிருந்து தப்பி சென்றார். காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து கடைசியாக சண்முகநாதன் தனது ஊருக்கு வந்து சேர்ந்தபோது தனது வயதை மறந்து போயிருந்தார். சண்முகநாதனின் மனைவி இறந்து போயிருந்தார். இரண்டு வயதில் அவர் பிரிந்து சென்ற அவரது மகளுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு குழந்தையிருந்தது.
தப்பி வந்தவரின் கதையை இயக்கம் முதலில் நம்ப மறுத்தது. அவரை அரசாங்க உளவாளி அல்லது மாற்று இயக்கத்தை சேர்ந்தவர் என்று இயக்கம் சந்தேகமுற்றது. தன்னை விசாரணை செய்த இயக்கக்காரர்கள் நால்வரில் எவருமே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தான் விசேட அதிரடி படையினரால் கைது செய்ய பட்டபோது பிறந்தேயிருக்கமாட்டார்கள் என்று சண்முகநாதன் அடித்து சொல்கிறார். இவர் சிறையிலிருந்த முழுக் காலங்களிலும் எந்த மனித உரிமை இயக்கமோ, செஞ்சிலுவை சங்கமோ அரசியல் கட்சியினரோ இவரை சந்திக்கவில்லை என்றும் கூறுகிறார். இவரைப் போலவே வந்தாறுமூலை, கிரான். முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி பகுதிகளை சேர்ந்த இருபது தமிழர்கள் வழக்குகள், விசாரணைகள் ஏதுமின்றி போகம்பர சிறையில் அநாதரவாய் கிடக்கிறார்கள் என்றும் சண்முகநாதன் கூறுகிறார்.
சண்முகநாதனின் உடல் சிதைக்கப்பட்டுவிட்டது. அவர் சற்று மனச்சமநிலை சரிந்தவராகவும் காணப்படுகிறார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நட்டஈடாக ஒரு வேலையும் வீடும் வழங்குமாறு இந்த அப்பாவி தொலைக்காட்சி பேட்டிகளில் அரசாங்கத்தை கோருகிறார். ஆனால் நட்டஈட்டை பெறுவதிலுள்ள ஒரு நுணுக்கமான சட்டச் சிக்கலையும் அவரே விபரிக்கிறார்.
அதாவது சண்முகநாதன் கைது செய்யப்பட்ட மறுவருடமே சண்முகநாதனின் மரண சான்றிதழ் கிராம நிர்வாக அதிகாரியால் சண்முகநாதனின் மனைவிக்கு வழங்கபட்டுள்ளது. இப்போது உயிரோடு மீண்டு வந்த சண்முகநாதன் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தனக்கு வழங்கபட்டுள்ள மரண சான்றிதழை அரசாங்கம் மீளப் பெற்றுகொள்ள வேண்டுமென்று கேட்டபோது மரண சான்றிதழை மீளபெற்றுகொள்ள தனக்கு அதிகாரமில்லை என சொல்லி கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார். ஆக அரசு ஆவணங்களின் படி சண்முகநாதன் இன்றும் இறந்துபோனவராகவே கருதப்படுவார். கனகரட்னம் சண்முகநாதன் கூறுகிறார்:
"எனவே எனது இப்போதய கவலையெல்லாம் நான் உயிருடன் இருப்பதை எப்படியாவது அரசாங்கத்திற்கு நிருபித்து காட்டவேண்டும் என்பதே."
நன்றி: ரோசாவசந்த்
|
|
|
| நாகரீகத்தின் தொட்டில் |
|
Posted by: Mathan - 01-28-2005, 05:48 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
நாகரீகத்தின் தொட்டில்
மெஸபடோமியா என்று அந்த இடத்தைக் குறிக்கிறார்கள். ஈராக் என்று நான் அறிந்த அதை, பச்சாதாபம் பாக்கி வைத்திருக்கும் அமெரிக்கர்கள் ஐராக் என்று லேசான குற்றவுணர்வோடு குறிப்பிடுகிறார்கள். சதாம் தாத்தாவின் கொடுங்கோலாட்சியிலிருந்து மக்களை மீட்டெடுத்து சுதந்திரம் வழங்கிய குட்டி புஷ், இப்போது அங்கே தேர்தல் நடத்தி , அவர்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்யப் போகிறாராம்.
ஜனவரி 30 என்று நாள் குறித்திருக்கிறார்கள். வேட்பாளர்கள் பெயர் வெளியே யாருக்கும் தெரியாது. தெரிந்தால் உயிர் போய்விடும். ஆனால் திசம்பர் 15 முதல் பிரசாரம் ஆரம்பித்து விட்டதாம். ஆச்சரியமாக இருக்கிறது கேட்பதற்கு. ஆனால் இதை எப்படியாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு. இராக்கிலிருந்து திரும்பி வரும் ராணுவக்கைதிகளை( வீரர்களை) பேட்டி காண்கிறார்கள் டெலிவிஷனில். "இந்த தேர்தல் நம்மால் அவர்கள் மீது திணிக்கப்படுகிரது" என்கிறார்கள் போர் வீரர்கள். அமெரிக்காவில் வாழும் ஈராக்கியர்கள் " அந்த தேர்தலுக்கு நாங்கள் இங்கிருந்து ஓட்டுப் போட மாட்டோம். எங்களுக்கு அவர்கள் அரசை தீர்மானிக்க உரிமை கிடையாது" என்கிறார்கள் தெளிவாக.
இராக் போர் சம்பந்தப்பட்ட பேரழிவுக் காட்சிகள் இனையமெங்கும் இரைந்து கிடக்கின்றன. மண்ணை வாரித் தூற்றும் மூதாட்டியர்கள் டீவி ஃபுட்டேஜ்களில் ஏராளமாக தெரிகிறார்கள். தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறையும் பெருகி இருக்கிறது. அமெரிக்கா இதுவரை இழந்த 1420 வீரர்களுக்காக பரிதாபப்படும் ஊடகங்கள் கூட அதை விட பல மடங்கு இழப்பை உடைய ஈராக்குக்காக அந்தளவு வருந்துவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக புஷ் மறுபடியும் வெற்றி பெற்று போர் அடிப்படையிலான தன் வெளியுறவுக் கொள்கைகளை இன்னமும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார்.
என்ன நடக்கும் இராக்கில்..?? எதிர்ப்பாளர்களை பொறுத்தவரை தெர்தல் ஒழுங்காக நடந்து சகஜநிலை திரும்ப விட மாட்டார்கள். அப்படி விட்டு விட்டால், அமெரிக்காவின் உள்நுழைவை அங்கீகரித்து, அவர்கள் தந்திருக்கும் ஜனநாயகத்தை தங்கள் ரத்தம் வழியும் கைகளால், நிணநாற்றமெடுக்கும் தெருக்களில் நடுவே நின்று கொண்டு வாங்கிக் கொள்வது போலாகும். தேர்தல் நடக்காது தடுக்கப்பட்டாலோ, அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கிருந்து விலக்காது. கிட்டத்தட்ட இதே மாதிரி தருணத்தில் தான், வியட்நாமில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. கிடைத்த ஹெலிகாப்டர்களை பிடித்து வெளியில் தொங்கிக் கொண்டே ஊர்வந்த அமெரிக்கர்கள் இன்றளவும் அதை மறக்காமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இராக்கில் இப்போதைக்கு வாபஸ் வாய்ப்பில்லை. அதனால், நன்றாக இருந்த ஒரு நாட்டை நாசமாக்கி, வழி வழியாக இர்ந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு ஈடாக இன்னொரு பிரச்சினையை உண்டாக்கியதை தவிர வேறொன்றும் இவ் விஷயத்தில் சாதிக்கவில்லை குட்டி புஷ்.
இராக்கியர்களுக்கு தேவை தேர்தல் அல்ல. தேறுதல். அரவணைப்பு. யாங்க்கிகளின் வெளியேற்றம்.
by மூக்கன்
|
|
|
| ஒரு சின்னக் குறுகுறுப்பு |
|
Posted by: Mathan - 01-28-2005, 05:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
ஒரு சின்னக் குறுகுறுப்பு
சுனாமி வந்து போய் விட்டது. அழிவுகள் சொல்லில் அடங்கா. எல்லோரும் ஒரு கணம் துடிதுடித்துப் போனது உண்மை. ஆனால்
இப்போது எல்லமே சுனாமியாகிப் போய் விட்டது. தான் எடுத்த படத்தை ஓட ஒருவர் நாள் குறிந்திருந்தார். சுனாமி வந்ததனால், ஓடினால் மக்கள் தன்மை கல்லு நெஞ்சக்காறன் எண்டு சொல்லிப்போடுவார்கள் எண்ட பயத்தில சுனாமிக்கு காசு சேக்கப் படம் ஓடப் போறன் எண்டார்.
சுனாமிக்காக நாட்டிய நிகழ்வு, சுனாமிக்காக சி.டி வெளியீடு, சுனாமிக்காக நாடகம். எனக்குத் தலை சுத்துது. உண்மையிலேயே இவர்கள் மனம் உருகி பாதிக்கப்பட்டாக்களுக்கு உதவச் செய்யிறார்களா? இல்லாட்டா சுனாமி இவர்களுக்குக் கிடைச்ச புதிய வியாபாரத் தளமா?
ஊரில் அடிக்க அடிக்க இஞ்ச உள்ள ஊடகக்காறருக்கு நல்ல வியாபாரம். அதை வைச்சு அழுதழுது கொஞ்ச நாளைக்கு நிகழ்சிகள் செய்யிற வேலையும் இல்லை. பெட்டி பெட்டியா வானொலியும் தொலைக்காட்சியும் விற்பனையாகி நல்ல வருமானம் எண்டு கேள்விப்பட்டன்.
இப்ப சுனாமி இப்பிடி எதை எடுத்தாலும் ஊரில அழிவு எந்த வடிவில வந்தாலும் புலம்பெயர்ந்த வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம்.
பேச்சுவார்த்தை கொஞ்சம் அவையளுக்குப் பயத்தைக் குடுத்துது. அங்கை ஏதாவது நடந்தாத் தானே இஞ்ச அவையள் தம்மைக் கொழுப்பிக்கலாம்.
நான் சொல்லுறது பிழையோ? நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
நன்றி - கறுப்பி
|
|
|
| சமையல் பகுதி.. |
|
Posted by: thamizh.nila - 01-28-2005, 05:31 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (24)
|
 |
மோகன் அண்ணா, யாழ் சமையல் பகுதிக்கு என்ன ஆச்சு?? எங்க தேடினாலும் எங்கட சமையல் குறிப்புகள் எடுக்கிறது சரியான சிரமமாக இருக்கின்றது...இங்க இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் தானே?இல்லை எனில் சமையல் சம்பந்தபட்ட கேள்விகளை எந்த பகுதியில் கேட்கலாம்??
சரி எனது சக [அன்பான, அறிவான,] கள உறுப்பினர்கள் என்ன இது பற்றி நினைக்கிறீர்கள்??
|
|
|
| நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா? |
|
Posted by: Mathan - 01-27-2005, 08:29 PM - Forum: புலம்
- Replies (9)
|
 |
நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா?
யட்சன் தர்மபுத்திரனிடம் கேட்டான். "மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எது?"
"எவனொருவன் கடனில்லாதவனாகவும் பிழைப்புக்காக வேற்று தேசம் செல்லாதவனாகவும் பன்னிரண்டிலிருந்து இரண்டு மணிக்குள் வீட்டில் சமைத்த சோறும் கீரையும் சாப்பிடுபவனாகவும் இருக்கிறானோ அவனுடைய வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை", என்றான் தர்மபுத்திரன்.
(யட்சன் யாரு தர்மபுத்திரன் யாருன்னு தெரியலேன்னா மன்னிக்க. இங்கு மகாபாரதம் சொல்லித் தரப்பட மாட்டாது.)
அவர் சொல்றபடி பாத்தா நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலைங்க. ஆனா நான் சந்தோசமாத்தான இருக்கேன். ஒருவேளை எனக்கு சொரணை செத்துப்போச்சோ.
வெளிநாட்டுத் தமிழர்களே! ஈஎம்ஐயில் வண்டி வாங்கி ஓட்டிக் கொண்டு ஹவுசிங் லோனில் வீடு கட்டிக் கொண்டிருக்கும் நம்ம ஊரு மக்களே! பொழுதினிக்கும் கடையில சாப்புடுற பேச்சுலர்களே!
நீங்களே சொல்லுங்க. நீங்க சந்தோசமா இருக்கீகளா?
Thanx: சனியன்
|
|
|
|