Yarl Forum
நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா? (/showthread.php?tid=5591)



நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா? - Mathan - 01-27-2005

நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களா?

யட்சன் தர்மபுத்திரனிடம் கேட்டான். "மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எது?"

"எவனொருவன் கடனில்லாதவனாகவும் பிழைப்புக்காக வேற்று தேசம் செல்லாதவனாகவும் பன்னிரண்டிலிருந்து இரண்டு மணிக்குள் வீட்டில் சமைத்த சோறும் கீரையும் சாப்பிடுபவனாகவும் இருக்கிறானோ அவனுடைய வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை", என்றான் தர்மபுத்திரன்.

(யட்சன் யாரு தர்மபுத்திரன் யாருன்னு தெரியலேன்னா மன்னிக்க. இங்கு மகாபாரதம் சொல்லித் தரப்பட மாட்டாது.)

அவர் சொல்றபடி பாத்தா நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலைங்க. ஆனா நான் சந்தோசமாத்தான இருக்கேன். ஒருவேளை எனக்கு சொரணை செத்துப்போச்சோ.

வெளிநாட்டுத் தமிழர்களே! ஈஎம்ஐயில் வண்டி வாங்கி ஓட்டிக் கொண்டு ஹவுசிங் லோனில் வீடு கட்டிக் கொண்டிருக்கும் நம்ம ஊரு மக்களே! பொழுதினிக்கும் கடையில சாப்புடுற பேச்சுலர்களே!

நீங்களே சொல்லுங்க. நீங்க சந்தோசமா இருக்கீகளா?

Thanx: சனியன்


- thaiman.ch - 01-27-2005

சோறும்ää கீரையும் விட வேற ஒன்டும் தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


புதினம் மீண்டும் தொடங்கி விட்டதா? - Mathuran - 01-27-2005

புதினம் மீண்டும் தொடங்கி விட்டதா? மிகவும் ஆவலாக இருக்கின்றோம்.


- shiyam - 01-28-2005

அய்யா மதன் முதலில் மகா பாரம் என்பது ஒருவரால் எழுதப்பட்ட கதை சரி அது நடந்த கதை எண்டு வைத்தாலும் கி.மு .3000ஆண்டு என்கிறனர் அந்த காலத்தில் சோறும் கீரையும் அல்ல வெறும் சோறே போதும் வாழ்வதற்கு.(அதைப்போய் இப்போது உதாரணத்திற்கு காட்டுவது தகுமோ??)மகாபாரதம் வியாசர் சொல்ல பிள்ளையார் எழுதினார் என்று கூறு கிறார்கள். பிள்ளையாரும் வியாசரும் ஒரேகாலகட்டத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. வியாசரை முனிவர் என்கிறார்கள் முனிவர் என்றால் அவர்புராணங்களில் முற்றுமுளுதாக பிராமணர் ஆனால் வியாசர் பிறந்தது பரராசர் என்கிற பிராமணருக்கும் மக்சந்தி என்கிற மீனவ பெண்ணிற்கும் அப்போ அவர்யார்???;;;;;பி.கு பிள்ளையார் என்கிற கடவுள் தோற்றம் பெற்றது இந்தியா ராயஸ்தான் மானிலத்தில்


- Mathan - 01-28-2005

என்ன சொல்ல வருகின்றீர்கள்?


- shiyam - 01-28-2005

உமக்கு உதாரணம் காட்ட வேறை ஏதும் கிடைக் வில்லையா???என்பதை தான் கேட்க வந்தேன் புழுகு கதைகளை உதாரணம் காட்டுவதை கை விடவும்


- Mathan - 01-28-2005

சியாம் இந்த கருத்தை எழுதியவர் சொல்லவந்தது பிறந்து வளர்ந்த மண்ணை பிரிந்து இன்னொரு நாட்டில் வாழும் சூழ்நிலையில் உங்கள் வாழ்கை மகிழ்சியாக போகிறதா என்பது தான், அது குறித்த மற்றவர்களின் கருத்துக்களையும் அறிய முயல்கின்றார், அதில் வரும் கதை உண்மையா பொய்யா எனபது வேறு விடயம் கருத்தை எடுத்து கொண்டால் போதுமானது.


- sri - 01-28-2005

thaiman.ch Wrote:சோறும்ää கீரையும் விட வேற ஒன்டும் தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இதைத்தான் விரும்பி உண்ணுகிறார்கள்


- Mathan - 01-28-2005

இணைய தமிழர் ஒருவரின் பதில்

எந்த நாட்டில எப்படியிருந்தாலும்.. மனத்தில் அதை நினைக்காமலிருந்தால் எல்லோராலும் சந்தோசமாக இருக்கமுடியும்.. சொந்த நாட்டில் அல்லது சொந்த ஊரில் இருந்தாப்போல எல்லோரும் சொந்த வீட்டிலா அல்லது பன்னிரண்டிலிருந்து இரண்டு மணிக்குள் வீட்டில் சமைத்த சோறும் கீரையும் சாப்பிடுகிறவர்களாகவா இருக்கிறார்கள்... ஆகவே என்னைப்பொருத்தவரை எல்லாம் மனம்தான்........ நான் மகிழ்ச்சியாக உள்ளேன்..ஏனேனில் நான் அவைகளை நினைப்பதில்லை...


- thaiman.ch - 02-01-2005

sri Wrote:
thaiman.ch Wrote:சோறும்ää கீரையும் விட வேற ஒன்டும் தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இதைத்தான் விரும்பி உண்ணுகிறார்கள்


அது தானே நீங்களே சொல்லீட்டிங்களே குழந்தைகள் சப்பிடுகிறார்கள் என்று. அதெப்படி உங்களுக்கு தெரியும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று? உங்களை மாதிரி ஆக்கள் குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்திட்டு பிறகு சொல்லுங்கோ அவையள் விரும்பி சாப்பிடீனம் என்டு. குழந்தையள் விரும்பி சாப்பிடுறதா எத்தின பெற்றோர்கள் குடுக்கினம்? அவையள் தாங்கள் என்ன சாப்பிடீனமோ அதையே குழந்தைகளுக்கும் குடுக்கினம்.