| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 184 online users. » 0 Member(s) | 182 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ¿ñÀ÷¸Ç¢ý ¾í¨¸¸û |
|
Posted by: Thusi - 01-27-2005, 06:04 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
நண்பர்களின் தங்கைகள் - படித்ததில் பிடித்தது
'அண்ணன் குளிச்சிட்டிருக்கு
உள்ள வந்த
உட்காருங்கண்ணே"
என்று வரவேற்று
தேநீர் போட்டுத் தருகிறார்கள்
நண்பர்களின் தங்கைகள்.
கூச்சத்தைப் போக்க
தொலைக்காட்சிப்பெட்டி
மேலிருக்கும்
தலையாட்டிப் பொம்மைகளையும்
வரவேற்பறையிலிருக்கும்
ஓடாத கடிகாரங்களையும்
நாம் உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
சகஜமாக தங்கள்
உரையாடலைத்
தொடங்குகிறார்கள்.
வானொலியில் கேட்ட பாட்டு:
கல்லூரியில் நடந்த சண்டை:
மூன்றாவது போர்சனில்
குடிவந்திருக்கும் மிலிட்டெரி
குடும்பம்: என
சொல்லுவதற்கு அவர்களிடம்
விசயம் ஏராளமிருக்கிறது.
தேர்வு நேரங்களில்
நண்பர்களின் வீட்டு
மொட்மை மாடியில் கும்பலாக
அமர்ந்து
படித்துக்கொண்டிருக்கையில்
'இந்த வருசமாவது
பாஸாயிடுவீங்களாண்ணே?"
என்று
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்.
'என்
சூலொஜி ரெக்கோர்ட்டில்
படம் வரைஞ்சி
தர்றீங்களாண்ணா?
நான் வரைஞ்சா தவளை எல்லாம்
முதலையா மாறிடுது" என்று
வராத ஓவியத்திற்காய்
வருத்தப்படுகிறார்கள்.
பின்பொரு நாள்
பார்த்துக் கொண்டிருக்கையில்
சட்டென வளர்ந்து:
சாப்பாட்டு இலைகள் நோக்கி
உடைந்து எண்ணெய் வழியும்
அப்பளங்கள்
கூடைகளில் பயணிக்கும்
ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில்
தாலி கட்டிக்கொண்டு
கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.
நண்பர்களின்
தங்கைகள் இல்லாத
நண்பர்களின் வீடு.
முற்றத்தில் பறிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பவழமல்லியுடனும்:
பயணிகள் இறங்கிவிட்ட
ரயில் பெட்டியின் வெறுமையுடனும்:
நூற்றாண்டுகள் கடந்த
மலைக்குகையின் மௌனத்துடனும்:
நம் முன் நிற்கிறது.
¸Å¢¨¾ - ¿¡. ÓòÐìÌÁ¡÷
|
|
|
| §ƒ¡÷ˆ ÒêŠÄ£Â¢ý «Îò¾ À¼õ.. |
|
Posted by: ¸ÅâÁ¡ý - 01-27-2005, 03:10 PM - Forum: நகைச்சுவை
- Replies (15)
|
 |
<img src='http://img183.exs.cx/img183/209/gulfwarposter2fc.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img183.exs.cx/img183/8157/22dubya6si.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img169.exs.cx/img169/7374/chickens.jpg' border='0' alt='user posted image'> :wink: :wink:
|
|
|
| காதல் கடிதம் |
|
Posted by: தமிழரசன் - 01-27-2005, 01:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (20)
|
 |
எழுது எழுது
எனக்கொரு கடிதமெழுது
என்னைக் காதலிக்கிறாய்
என்றல்ல . . . . . . . . . . . .
வேறு ஒருவரையும்
காதலிக்கவில்லை என்று..
|
|
|
| விமான சக்கரத்தைப் பிடித்துக்கொண்டு பறந்த சிறுவன் |
|
Posted by: Vaanampaadi - 01-27-2005, 12:32 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (11)
|
 |
விமான சக்கரத்தைப் பிடித்துக்கொண்டு பறந்த சிறுவன்
சீனாவில், Liyong எனப்படும் 14 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் கீழ் பகுதியில் சக்கரங்கள் உள்ள இடம் அருகே இருக்கும் இரும்பு கம்பிகளைப் பிடித்தபடி 700 கிலோ மீட்டர் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. அண்மையில் Gunming என்ற நகரிலிருந்து, Chongking என்ற இடத்துக்கு சென்ற விமானத்தின் அடியில் சாகசப்பயணம் செய்வதற்காக,பதுங்கியிருந்த அச்சிறுவனை, விமானம் தரையிறங்கிய போது கண்டுபிடித்த விமான சிப்பந்திகள்,அச்சிறுவனை பத்திரமாக மீட்டு,மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.700 கிலோமீட்டர் வேகத்தில் விமானம் பறந்த போதும், கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வந்த அச்சிறுவன், தரையிறங்கிய பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளான். காதில் 'கிர்' என சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், பறப்பது போலவே உணர்வு இருப்பதாகவும் அச்சிறுவன் கூறினான்.இத்தகவலை சீன அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
Source : Vanakkam Malaysia
|
|
|
| தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் ரெயில்கள் மோதல்: |
|
Posted by: Vaanampaadi - 01-27-2005, 12:25 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
லாஸ்ஏஞ்சல், ஜன. 27-
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரை சேர்ந்த வர் ஜீவான் மனுவேல் அல் வார்ஸ் (வயது25). மனநிலை பாதிக்கப்பட்டவர். தற்கொலை சய்வதற்காக இவர் ஒரு ஜீப்பில் ஏறி ரெயில் நிலையத்திற்கு சென் றார்.
அங்கு ரெயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஜீப்பை நிறுத்தி தற்கொலை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.
அந்த வழியாக ரெயில் வந்தபோது ஜீவான் தண்ட வாளத்தின் குறுக்கே ஜீப்பை நிறுத்தினார். அப்போது ஒரே நேரத்தில் 2 தண்டவாளங்களில் பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ஜீப்பும் இரண்டு தண்ட வாளங்களில் நின்று கொண்டு இருந்தது.
ரெயில்கள் அருகே வந்த போது கண் இமைக்கும் நேரத்தில் ஜீப்பில் இருந்து கீழே குதித்து ஜீவான் தப்பித்துக் கொண்டார். ஆனால் தண்ட வாளத்தில் நின்று கொண்டு இருந்த ஜீப் மீது மோதிய இரண்டு ரெயில்களும் நேருக்கு நேர் மோதி தீப்பற்றிக்கொண்டன.
இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 200 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடப்பதற்கு காரணமான ஜீவானை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் `என்னை மன்னித்து விடுங்கள்' என்று போலீசாரிடம் கதறி அழுதார்.
அவரை சோதித்து பார்த்த போது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
Source : Maalaimalar
|
|
|
| தீருவில் கிணற்று நீர் வெந்நீராக மாறியது |
|
Posted by: Vaanampaadi - 01-27-2005, 12:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
தீருவில் கிணற்று நீர்
வெந்நீராக மாறியது
வல்வெட்டித்துறை தீருவில் மகேஸ்வரி பேக்கரிக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்று நீர் நேற்று முன்னிரவு திடீரென வெந் நீராக (சுடுநீர்) மாறிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
மேற்படி செய்தி பரவியதை அடுத்து நேற்று நள்ளிரவு வேளையிலும் மக்கள் பலரும் அங்கு திரண்டனர் என்றும் - அந்தச்செய்தி மேலும் தெரிவித்தது.
Source : Uthayan
|
|
|
| பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 6 வருட சிறைதண்டனை. |
|
Posted by: Vaanampaadi - 01-27-2005, 12:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
இளம் குடும்பப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு 6 வருட சிறைதண்டனை.
வியாழக்கிழமை 27 சனவரி 2005 திவயின
லண்டனில் தமிழ்க்குடும்பப் பெண்ணொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவருக்கு நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. இவர் தனது தண்டனைக் காலத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளதுடன் இவரை நாடுகடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2001 ம் ஆண்டு மாசிமாதம் விஜயகுமார் சோதிலிங்கம் வயது 22 என்ற இளைஞனே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் 26 வயதான குடும்பப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது. வீதியோரத்தில் இரவு நேரத்தில் நடந்து சென்ற பெண்ணைத் திடீரென்று கட்டியணைத்துக் கடத்திச் சென்றதாகவும் இவருடன் சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் இச்செயலில் இறங்கியதாகவும் அவர்களைப் பொலிசார் தேடிவருவதாகவும் தெரியவருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சோதிலிங்கத்தின் சகோதரன் துருக்கிக் கடையருகில் அண்மையில் தமிழ் இளைஞர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source : http://www.nitharsanam.com/?art=8337
|
|
|
| இலங்கையில் இருந்து தெ.ஆப்பிரிக்கா சென்ற அனுமன் சிலை |
|
Posted by: Vaanampaadi - 01-27-2005, 11:42 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
சுனாமி பேரலையில் சிக்கி இலங்கையில் இருந்து தெ.ஆப்பிரிக்கா சென்ற அனுமன் சிலை கடலோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
ஜோகன்ஸ்பர்க், ஜன.. 27-
தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கடலோரத்தில் உள்ள பிளிதிடேல் பீச்சில் 2 பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கடÚத்தில் ஒரு சிலை ஒதுங்குவதை கண்டனர். அதை அவர்கள் வெளியில் எடுத்து வந்தனர்.
அந்த சிலை அனுமன் கடவுள் சிலை என்பது தெரிய வந்தது. அது 25 கிலோ எடை கொண்டதாக உள்ளது. அது முழுவதும் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது.
சிலையின் அடிபகுதியில் "ஸ்ரீலங்கா" என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இந்த அனுமன் சிலை இலங்கையில் தயாரானது என்று தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் இலங்கை கடலோரத்தை சுனாமி பேரலைகள் தாக்கியபோது, இந்த அனுமன்சிலை கடலுக்குள் இழுத்து வரப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக கடலில் மிதந்தபடி இது பயணம் செய்துள்ளது.
கடல் அலைகளின் போக்கில் போன அந்த சிலை கடைசியில் தென் ஆப்பிரிக்காவில் கரை ஒதுங்கி உள்ளது. இது சுனாமி அலைகளால் இழுத்து வரப்பட்டது தான் என்பதை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் களும் உறுதி செய்துள்ளனர்.
இந்தியப்பெருங்கடல் பகுதியை ஒட்டி உள்ள நாடுகளை துவம்சம் செய்த சுனாமி அலைகள் நிறைய உடைமை களையும் கடலுக்குள் வாரி சுருட்டி சென்று விட்டது. அந்த பொருட்களுடன் செருப்பு, உடைகள், போன்றவை கடல் அலைகளில் மிதந்தபடி உலகின் மற்ற கண்டங்களுக்கும் சென்று விட்டன.
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் இந்த உடைமைகள் மிதப்பதாக தெரியவந்துள்ளது.
Source : Maalaimalar
|
|
|
| செந்தளிர் இல்லத்தில் |
|
Posted by: hari - 01-27-2005, 06:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
நினைவு தினப்படங்கள்
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_21_35977_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_16_35958_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_17_35962_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_18_35966_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_23_35985_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_20_35973_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_22_35981_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/mourningday_2005_19.jpg' border='0' alt='user posted image'>
படங்கள்: தமிழ் நெட்
|
|
|
| August Sun |
|
Posted by: Mathan - 01-27-2005, 04:00 AM - Forum: குறும்படங்கள்
- Replies (3)
|
 |
August Sun
[size=14]August Sun (ஐரா மடியம்மா) பிரசன்னா வித்யநங்கேயின் இயக்கத்தில் வெளிவந்த ஐரா மடியம்மா எனும் சிங்களத் திரைப்படம் கனேடியத் திரையரங்கில் காண்பிக்கப் பட்டது.
1990இன் நடுப்பகுதியில் போரினால் பாதிக்கப் படும் மூன்று குடும்பங்களை மையமாக வைத்துக் கதை நகர்கின்றது.ஒன்று முஸ்லீம் மக்கள் போராளிகளால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு அகற்றப்பட்ட போது அம்மக்களின் நிலையை காட்டி நின்றது. அதில் அரபாத் எனும் சிறுவனின் குடும்பம் முக்கியப் படுத்தப் பட்டு ஊரைவிட்டுச் செல்லும் போது boat இல் போக நேர்ந்ததால் தனது நாயை விட்டு அவன் பிரிந்து அழுதபடியே செல்கின்றான். ரூபா. 4,000 மட்டும் அனுமதிக்கப் பட்ட நிலையில் மக்கள் பணத்தை எப்படியெல்லாம் போராளிகளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றார்கள் என்பதும் காட்டப்பட்டது.அடுத்து ஒரு இளம் சிங்களப் பெண் தனது காணாமல் போன பைலட் கணவனை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக நம்பி கணவனைத் தேடும் முயற்சியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகச் சென்று கலந்துரையாட இருக்கிறார் என்று அறிந்து தனது கணவனை அவன் ஒருத்தனால் தான் கண்டுபிடித்துத் தர முடியும் என்று அவனிடம் மன்றாடித் தானும் அவனுடன் கணவனைக் கண்டு பிடித்து விடும் நம்பிக்கையில் கிளம்புகின்றாள்.அடுத்து வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு குடும்பத்தில் இளைஞன் பணத்திற்காக ஆமியில் சேர்கின்றான். அவன் தங்கை விபச்சாரியாகின்றாள். தங்கையை விபச்சார விடுதியில் கண்டு கலங்கி அவளுக்காக ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்கும் தனது கடமையை அவன் உணர்ந்து கொள்கின்றான்.போர் சூழலால் பாதிக்கப்படும் மூன்று குடும்பங்களின் நிலை காட்டப்பாட்டாலும் இயக்குனர் பிரசன்னா தமிழ் மக்களை அப்புறப்படுத்தி சிங்கள முஸ்லீம்களுக்கு முக்கியத் துவம் கொடுத்திருப்பது சர்வதேச ரீதியில் திரையிடப்படும் திரைப்படம் என்பதால் பொருத்தமாக இல்லை.பைலட்டின் மனைவியாக வரும் நடிகை Nimmi Harasgama மிக அழகாக இருக்கின்றார். கணவனை இழந்த சோகம் அவர் முகத்தில் அதிகம் தெரியவில்லை. நிருபராக வந்த Peter D’Almeida சிறப்பாக நடித்துள்ளார். ஒரு அழகான இளம் பெண்ணோடு இரவு பகலாகப் பயணம் செய்யும் போது எழும் உணர்வுகளை மிக யதார்த்தமாக தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். இறுதியில் அவர்களைச் சந்திப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் முஸ்லீம்களின் பிரச்சனையால் சந்திக்க முடியாமல் போய் விட்டதாக அறியத் தந்த போது கணவன் உயிருடன் இருக்கின்றான் எப்படியும் சந்தித்து விடலாம் என்று நம்பி வந்தவள் சோகம் தாளாது நிருபரை அணைத்துக் கொண்டதும் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தடுமாற்றமும் மனிதனின் யதார்த்த நிலையை எடுத்துக் காட்டுகின்றது.கதையின் முக்கிய பாத்திரங்களை திரைப்படத்தின் தொடக்கத்தில் மூன்று வேறுபட்ட இடங்களில் காட்டி இறுதியில் ஒரே இடத்தில் அவர்களைக் கொண்டு வந்து திரைப்படத்தை முடித்திருக்கின்றார் இயக்குனர்சிறந்த திரைப்படமாக இருந்த போதும் <b>சிங்கள மக்களை மையப்டுத்தியிருப்பதால் தமிழ் பார்வையாளர் நிராகரிக்கும் ஒரு சிறந்த படமாகிப் போய் விட்டது.</b>
by கறுப்பி (Sumathi Ruban?)
|
|
|
|