![]() |
|
இலங்கையில் இருந்து தெ.ஆப்பிரிக்கா சென்ற அனுமன் சிலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கையில் இருந்து தெ.ஆப்பிரிக்கா சென்ற அனுமன் சிலை (/showthread.php?tid=5599) |
இலங்கையில் இருந்து தெ.ஆப்பிரிக்கா சென்ற அனுமன் சிலை - Vaanampaadi - 01-27-2005 சுனாமி பேரலையில் சிக்கி இலங்கையில் இருந்து தெ.ஆப்பிரிக்கா சென்ற அனுமன் சிலை கடலோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஜோகன்ஸ்பர்க், ஜன.. 27- தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கடலோரத்தில் உள்ள பிளிதிடேல் பீச்சில் 2 பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கடÚத்தில் ஒரு சிலை ஒதுங்குவதை கண்டனர். அதை அவர்கள் வெளியில் எடுத்து வந்தனர். அந்த சிலை அனுமன் கடவுள் சிலை என்பது தெரிய வந்தது. அது 25 கிலோ எடை கொண்டதாக உள்ளது. அது முழுவதும் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. சிலையின் அடிபகுதியில் "ஸ்ரீலங்கா" என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இந்த அனுமன் சிலை இலங்கையில் தயாரானது என்று தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் இலங்கை கடலோரத்தை சுனாமி பேரலைகள் தாக்கியபோது, இந்த அனுமன்சிலை கடலுக்குள் இழுத்து வரப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக கடலில் மிதந்தபடி இது பயணம் செய்துள்ளது. கடல் அலைகளின் போக்கில் போன அந்த சிலை கடைசியில் தென் ஆப்பிரிக்காவில் கரை ஒதுங்கி உள்ளது. இது சுனாமி அலைகளால் இழுத்து வரப்பட்டது தான் என்பதை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் களும் உறுதி செய்துள்ளனர். இந்தியப்பெருங்கடல் பகுதியை ஒட்டி உள்ள நாடுகளை துவம்சம் செய்த சுனாமி அலைகள் நிறைய உடைமை களையும் கடலுக்குள் வாரி சுருட்டி சென்று விட்டது. அந்த பொருட்களுடன் செருப்பு, உடைகள், போன்றவை கடல் அலைகளில் மிதந்தபடி உலகின் மற்ற கண்டங்களுக்கும் சென்று விட்டன. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் இந்த உடைமைகள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. Source : Maalaimalar - thamizh.nila - 01-27-2005 நன்றி. இவங்கட தொல்லை தாங்காமல் அனுமானே போனாரோ தெரியவில்லை - shiyam - 01-27-2005 இலங்கையிலை சீதையை தேடி வந்தர் அங்கை யாரை தேடி போனவராக்கும் எங்கட இராவண்ன் இதையெல்லாம் கவனிக்கமாட்டாரோ?? - kavithan - 01-27-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->இலங்கையிலை சீதையை தேடி வந்தர் அங்கை யாரை தேடி போனவராக்கும் எங்கட இராவண்ன் இதையெல்லாம் கவனிக்கமாட்டாரோ??<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கோயில் கட்டுங்கப்பா..... |