![]() |
|
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ? (/showthread.php?tid=5556) |
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ? - Thaya Jibbrahn - 01-29-2005 தாயே! எமையே சிதைத்ததேன்? நீயே! பகையாய் அழித்ததேன்?? வாழ்வு தந்தாய்! வளங்கள் தந்தாய்!! வல்லமை நீயே தந்தாய். உந்தன் மடி ஏறிநின்று உலகையே ஆழ வைத்தாய். உறவாக நீயிருந்தாய் உதறிடவேன் மனம் துணிந்தாய்? தீதென்ன செய்தோம் நாமோ தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ? தாய்மடியில் சேயாய் வாழ்ந்தோம் இரந்துண்டு வாழ்வதா? கடல்வென்று ஆண்ட மண்ணை கடல்கொண்டு போவதா? பகைவென்று வீரம் செய்தோம் பகைநீயாய் ஆவதா? வசந்தத்தை வரமாய் கேட்டோம் வஞ்சித்து துன்பத்தை நீதந்தால் தகுமோ? தயா ஜிப்ரான் - shiyam - 01-29-2005 நல்லது தயா ஜிப்ரான் எங்கே நீங்களும் ஒரு கலீல் ஜிப்ரான் என்பதை நிருபியுங்கள் பார்ப்போம் - aswini2005 - 01-29-2005 கவிதைக்கு வாழ்த்துக்கள் தயா ஜிப்ரான். தங்கள் கவிதை ரீரீஎன்னில் அடிக்கடி ஒலிக்கும் சுனாமிதுயரின் பாடலான 'கடலே எழுந்தே வீழ்ந்ததேன்" என்ற மெல்டில் அமைந்துள்ளது. இதை இன்னொரு வடிவில் இசைகலந்து பாடலாக்கலாம். 'கடலே எழுந்தே வீழ்ந்ததேன்" பாடலின் மெட்டில் உங்கள் கவிதையை பாடிப்பார்த்தேன். நன்றாகவே பாடலுக்கான ஏற்ற இறக்கங்கள் வருகிறது. - KULAKADDAN - 01-29-2005 கவிதைக்கு வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 01-29-2005 Quote:வசந்தத்தை வரமாய் கேட்டோம்«Õ¨ÁÂ¡É Åâ¸û. Å¡úòÐì¸û... - Mathuran - 01-30-2005 வணக்கம், தயா ஜிப்றான் அண்ணன் அவர்களே! உங்கள் கவிதை சிறப்போ சிறப்பு. சுனாமியை பற்றி பல கவிதைகள் இந்த யாழ் களத்தில் உலாவுகின்றன. அவற்றில் தங்கள் கவியும் ஒரு தாரகை ஒளியாய் ஒளிர்கின்றது. யாழில் பல நல்ல தேர்ந்த பறப்பு கொண்ட கவிக்குருவிகளும், இப்போதுதான் மெல்ல சிறகை அடிக்கும் குருவிகளும் யாழ் என்னும் பூங்காவில் உலவி மகிழ்கின்றன. நீங்களும் சுதந்திராமாய் பறவுங்கள், இனிய பல சேதிகளை கொண்டு வாருங்கள். உங்களை என்றும் வாழ்த்துகின்றோம். அன்புடன் மதுரன் Re: தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ? - kavithan - 02-02-2005 [quote=Thaya Jibbrahn]தாயே! எமையே சிதைத்ததேன்? நீயே! பகையாய் அழித்ததேன்?? வாழ்வு தந்தாய்! வளங்கள் தந்தாய்!! வல்லமை நீயே தந்தாய். உந்தன் மடி ஏறிநின்று உலகையே ஆழ வைத்தாய். உறவாக நீயிருந்தாய் உதறிடவேன் மனம் துணிந்தாய்? தீதென்ன செய்தோம் நாமோ தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ? தாய்மடியில் சேயாய் வாழ்ந்தோம் இரந்துண்டு வாழ்வதா? கடல்வென்று ஆண்ட மண்ணை கடல்கொண்டு போவதா? பகைவென்று வீரம் செய்தோம் பகைநீயாய் ஆவதா? வசந்தத்தை வரமாய் கேட்டோம் வஞ்சித்து துன்பத்தை நீதந்தால் தகுமோ? தயா ஜிப்ரான் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தயா.. தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவிதைகளை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Thaya Jibbrahn - 02-05-2005 நன்றி நண்பர்களே! இந்தக் களத்தில் எங்கே என்னை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களோ எனப் பயந்தேன். பரவாயில்லை நண்பனாய் அரவணைத்துக்கொண்டீர்கள். நன்றிகள். இனி நான் படித்த படைத்த ஆக்கங்களுடன் சந்திக்கின்றேன். |