Yarl Forum
பெண்கள் முன்வர வேண்டும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்கள் முன்வர வேண்டும் (/showthread.php?tid=5561)

Pages: 1 2 3 4 5


பெண்கள் முன்வர வேண்டும் - aswini2005 - 01-29-2005

பெண்கள் முன்வர வேண்டும் .

காதல் புனிதமானது காதல் தெய்வீகமானது. காதலுக்குக் கண்ணில்லை. காதல் இன்றேல் சாதல் என்று ஏகப்பட்ட காதல் வார்த்தைகள் மண்ணில் நிலைத்துள்ளன. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்பவர்கள், மனப்பிறழ்வு அடைபவர்கள் எக்காலத்திலும் உள்ளனர். காதலி ஒருத்தி கிடைக்கவும், காதலன் ஒருவன் கிடைக்கவும், ஆண்களும் பெண்களும் ஏங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். காதலை மையமாக வைத்தே ஏராளமான இலக்கியங்களும் வந்துள்ளன. வள்ளுவர் கூட இதற்கெனத் தனி இயலைத்தந்துள்ளார். அகநாநூறு-நாற்றினை போன்ற சங்க இலங்கியங்களும் கூட உண்டு. இன்னும் தமி;ழர்கள் சால்பாகப் பேச்படுவதில் வீரமும் காதலுமே முதன்மை பெறுகின்றன.

தற்கால தமிழர்களின் வீரத்துக்கு உரைகற்கள் தேவையில்லை. இது உலகப்புகழ் பெற்ற விட்டது. ஆனால், தற்காலத் தமிழர்களின் காதலுக்கு எதை உதாரணமாக வைப்பது என்பது தெரியவில்லை.

காதல் ஒரு பொழுதுபோக்கா? காதல் ஒரு விளையாட்டா? காதல் ஒரு பள்ளிக்கூடமா? காதல் ஒரு நாடக ஒத்திகையா? காதல் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் களமா? எது? எது? தமிழர்களின் மானம் என்பதும் குடிப்பிறப்பு என்பதால் வருவதல்ல. பண்பும், நற்குடிப் பிறப்பும், படிப்பும் நிறைந்தவர்தான் நல்ல மணமகள் அல்லது மணமகன் என்ற நிலை போய் இன்றும் பணமும், தொழிலும் திருமணம் செய்யும் காலமும் இது. காதலிக்கத் தொடங்குமுன் ஒரு பெண்ணோ ஆணோ எதிர்பார்ப்பாலரின் சாதி, சமயம். சொத்துக்கள், சாதகம் எல்லாவற்றையும் பார்த்து விட்டா தொடங்குவார்கள் இல்லை. ஆனால், காதல் முற்றிய பின் ஆண்கள் இவற்றைப்பார்க்கவே செய்கின்றார்கள். இதன் விளைவாகப் பெண்கள் ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டி வருகின்றது.

அண்மையில் ஒரு பெண் தன்னைக் காதலித்தவர் திருமணம் செய்ய முன்வரவில்லை என்றார். காரணம் பெண்ணல்ல பெண்ணின் உறவினர்கள் யாரோ சாதிமாறித் திருமணம் செய்துள்ளார்கள். நாங்கள் இவ்வளவு பிரச்சினைக்கும் சாதி சுத்தமாகத்தான் இருக்கிறம்! என்றார் அவர். சரியான காரணமா?

இன்னுமொரு பெண் இரண்டொரு கடிதங்களே பரிமாறினாலும் இரண்டு மூன்று வருடங்களாக விரும்பியிருந்தவர். சுமார் ஆறு மாதங்களாகத் தொழிலில் மாற்றலாகிச் சென்றிருந்தார். இடையில் ஒரு தடவை வந்து அவளைப் பார்த்து விட்டும் போனவர். திருமணப் பேச்சை எடுத்தபோது அம்மா,அப்பா, அண்ணா,அக்கா எல்லோருக்கும் துரோகம் செய்வது போல உணர்கிறேன். நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்யுங்கள் என்று சற்றும் சலனமில்லாமல் கூறினார். ஒரு பெண்ணுக்கு அவன் செய்தது துரோகமில்லையா? இதுவே அவனுடைய சகோதரிக்கு நடந்தால் விடுவானா? ம்.... காதல் இவ்வளவுதான்.

இன்னுமொன்று மிக நெருக்கமான காதல் இரு பகுதியிலும் பெற்றோருக்கும் தெரிந்திருந்தது. வருவான் பேசுவான் விழாக்களில் கலந்து கொள்வான். மகிழ்ச்சியாகப் போனது காதல், திடீரென அவன் வாழ்க்கை நிலை உயர்ந்தது. இப்போது அந்தப்பெண்ணை பார்க்கவோ பேசவோ அவனுக்கும் நேரமில்லை. அவனுடைய பெற்றோருக்கும் நேரமில்லை. அந்தப்பெண்ணின் எதிர்காலமென்ன?

பெண்களின் உரிமைகளுக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் அபிவிருத்திக்கும் உழைக்கும் சர்வ தேசமோ, அரசாங்கங்களோ மிகச் சாதாரணமாகச் சட்டம் போட்ட இவற்றுக்குத் தீர்வு கண்டுவிட்டதாகப் பறைசாற்றினாலும் பெண்களின் மனம் என்ன சொல்கிறது. மனம் என்பதுதான் வாழ்க்கை. பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்குப் போடப்பட்ட சட்டங்கள் எந்தளவில் பெண்களைப் பாதகாக்கின்றன.

ஆணாதிக்க கருது கோள்களின் மீது ஆக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வெளிவரும் சட்டங்கள் இவை. திட்டமிட்டு 'உப்புக்குச் சப்பாணியாக" இதில் இரண்டொரு பெண்கள் கலந்து கொள்வதாகக் காட்டப்பட்டாலும் அவர்கள் வாய்திறக்கப்போவதில்லை. அவர்களுக்கு தங்கள் கதரைகளைக் காப்பாற்றி வைத்திருக்கவேண்டியதே முக்கியமாகும். திருமணப்புகைப்படங்கள் போல, ஒரு பெண்களுக்கான பத்திரிகையை நடத்தும் பெண், பத்திரிகையென தன்னால் எழுதப்படும் ஆசிரியர் தலையங்கத்தைக் கணவனிடம் காட்டி அனுமதி பெறவேண்டியுள்ளது. நான் உலக மட்டத்தில் பேசுகிறேன். சாதியழிப்பு ஒரு குற்றம் தமிழீழ ஒறுப்புச்சட்டம் இயல் 24,432, 433,437 இது பற்றி விரிவாகக் கூறுகிறது. இலங்கை குற்ற நடவடிக்கைச்சட்டத்திலும் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் 12,13ஆம் சரத்துக்களில் இது வேறுவகையில் சுட்டப்பட்டுள்ளது. ஆனால், இது சார்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு எந்த ஒரு பரிகாரத்தையும் பெற முடியாதவாறு சட்டத்தை வழிநடத்துவோர் செயற்படுவதையும் காணலாம்.

காதலனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் (சட்டப்படி இயல் 21,414 ஆவது சரத்து இது பற்றிக் கூறுகின்றது) பாதிக்கப்பட்ட ஒரு பெண் மிக இரகசியமாகச் சென்று தனது முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.

ஆனால் ஒரு வாரத்துக்குள் அது 'ஓல்சிலோன் அவுட்" டான செய்தியாகும். சம்பந்தப்பட்ட இடங்களில் அப்படி ரகசியம் பேணப்படும். சரி போட்ட முறைப்பாட்டையாவது ஒழுங்குற?? விசாரிக்க ஆரம்பிக்கும் முன்பே போதியகால அவகாசம் காரணமாக எதிரி கட்டுப்பாட்டை மீறித் தன்னைக் காத்துக்கொள்கிறார். பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கூடம் மேலும் பொலிவு பெறுகின்றது.

காதலுக்கு ஒருபோதும் சட்டவலு இல்லை. ஒரு பெண் பலதடவை வேண்டாம். ஒரு தடவை நீதிமன்றம் போனாலம் அவள் திருமணத்தை எதிர்பார்க்க முடியாது. இக்கால இளைஞர்களுக்கு காதல் ஒரு விளையாட்டு. இது எலி பூனை விளையாட்டு. பூனையாக ஒரு இளைஞன் ஆகும் ஆட்டம் எலியாக பெண்ணுக்கு ஜீவ மரணப்போராட்டம். அக்காவும் தங்கையும் திருமண வயதில் இருக்கத் தம்பிக்குத் காதல் வரும் இது பற்றித்தெரியாத ஒரு பெண்ணை தற்கால சினிமாக் கதாநாயகர்கள் போல துரத்தித்துரத்திக் காதலில் விழச்செய்வர். திருமணம் பற்றிப் பேச்சு வரும்போதுதான் அவருக்குச் சகோதரிகள் பாசம் பொத்துக்கொண்டு வரும். காரணம் காதலியிடம் ஏதாவது கறக்கலாமா? என்னும் முயற்சி அது

இந்தவகைக் கேடுகெட்டவர்கள்தான் எங்கள் சமுதாயத்தில் நிரம்பிவழிகிறார்கள். வீரத்தின் விளைநிலமான இந்த மண்ணில் காதலில் கோழைகளையே சந்திக்கிறோம். ஏமாற்றப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கிளர்ந்தெழ வேண்டும். ஏமாற்றும் துரோகிகளின் பெயர்கள் பகிரங்கமான இடங்களில் எழுதி ஒட்டப்பட வேண்டும். இவர்கள் கைது செய்யப்பட்டு வீதி உலா விடப்படவேண்டும்.

ஒரு நாட்டின் மானம் அந்நாட்டின் பெண்களிலம், பசுக்களிலுமே தங்கியிருந்தது. இருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு பெண் தவறு செய்தால் அவ்வீட்டுத் தலைவனுக்குப் பெரும் அவமானமாகப் கருதப்படும்.

'புகழ் பூத்த இல்லார்க்கு இல்லை ஏறு போல் பீடுநடை"

என்று வள்ளுவரே சொல்லயிருக்கிறார். பெண்கள் இந்நாட்டின் வீர வரலாற்றின் பங்காளிகள் சமுதாயத்தில் அவர்கள் சோக வரலாற்றின் சொந்தக்காரராய் இருக்க அனுமதிக்ககூடாது. ஒவ்வொரு பெண்ணும் உன் தங்கையாய், தாரமாய், தாயாய் இருப்பவளின் பதிவுதான் பெண்களின் கண்ணீருக்குள் பேரழிவு காத்திருந்த வரலாறுகள் உண்டு. பெண்கள் கண்ணீர் விட்டால் நாடே அழிந்துவிடும் என்று கீதை கூறும் பாரதக்கதையில் விதுரன் கூறுகிறான். இந்தக்காதல் கோழைகளின் தோலுரித்துத் தொங்கவிடப் பெண்கள் அணி திரளவேண்டும். தொடர்ந்து நம் எதிர்காலப் பெண்களைக் காக்க நாம் முன் வரவேண்டும்.

மாயா
(sooriyan.com)


- aswini2005 - 01-29-2005

குருவிகளண்ணா ஓடியாங்கோ உங்களுக்கு விவாதம் செய்ய ஏற்ற கட்டுரை. எங்கே உங்கள் கைவரிசையைக் காட்டுங்கோ. நாங்கள் புதினம் பாக்க தயாராகவுள்ளோம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-29-2005

http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836

இங்க போய்ப் பாருங்க...ரொம் யாரு செரி யாரென்று எழுதியிருக்கு...!

கள்ளர் கூட்டம்...பதுங்கிப் பதுங்கி எல்லாத்தையும் செய்யுறது செய்து போட்டு....கடைசியில ஏமாளி ஆண்கள் தலையில பழி சுமத்தி கட்டுரைகள் வரையிற கெட்டிக்காரர்...! **** (Rape பண்ணுறவங்கள்...பாலியல் பழிவாங்கல் பண்ணுறவங்கள்) அவங்கள் தான் உங்கட கொட்டம் அடக்குவாங்கள்... மேற்கிலையே கிட்டத்தட்ட 10 க்கு 1 றேப் பண்ணப்பட்டிருக்காமே...நம்பிச் சீரழிஞ்சதுகள்...!

நம்ப வேண்டியவைய சரியா அடையாளம் காணத்தெரியாத இயலாமைதான் இத்தனைக்கும் காரணம்..இதுவே பெண்கள் எவ்வளவு மனப் பலவீனமானவர்கள் என்று காட்டுது அதுக்க கதை எண்டா...ஏன் பேசுவான்...வாய் தான்...செயலில ஒன்றுமில்ல...! ஆரேன் நாலு பேர் செய்யுறத தூக்கிப் பிடிக்கிறான் வேலை...அதுதான் உங்கட கெட்டித்தனம் போல...ஆக மிஞ்சினா ஆண்களை ஒட்டு மொத்தமா திட்டி எழுத வேண்டியது...இதால் கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Mathuran - 01-29-2005

வணக்கம்,

திருவாட்டி மாயா அம்மயார் அவர்கள் சித்தரிப்பது போல ஒட்டுமொத்த ஆண்களும் காதலித்தவளை ஏமாற்றும் கூட்டத்தவர் அல்லர். அதே போன்று பெண்களை காதலித்து ஏமாந்த ஆண்களும் உண்டு. ஏன் பெண்களால் காதலிக்கபட்டு தற்கொலை செய்துகொண்ட ஆண்களும் உண்டு. என்ன சிலவேளை உங்களைப் போன்றவர்கள் சொல்ல்க் கூடும், விகிதாசாரப்படி பார்த்தால் ஆண்களை விட பெண்ளே கூடுதலாக பாதிக்க பட்டு இருக்கின்றார்கள் என்று. அத்தோடு இக் கட்டுரையை எழுதத்தொடங்கியதுமே. இப்படியான கருத்துக்களை முன்வைதுள்ளீர்கள் " பண்பும் , நற்குடிப் பிறப்பும், படிப்பும் நிறைந்தவர்தான் நல்ல மணமகள் அல்லது நல்ல மணமகன் என்ற நிலை போய், இன்றும் பணமும், தொழிலும் திருமணம் செய்யும் காலம் இது" அப்படியாயின் நீங்கள் சொல்ல வரும் விடயம்தான் என்ன்? நல்ல பண்பும், படிப்பும், நல்ல குடியில் பிறந்தவர்களும், கூடவே நானும் ஒன்றை சேர்த்துக்கொள்ளுகின்றேன் அழகும் இருப்பவர்கள்தான் காதலிக்கும் தகுதி உடயவர்கள் என்கின்றீர்களா? அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், என்னை போண்ரவர்கள் உங்கள் கருத்துடன் முறன்படுவதை தவிர்க்க முடியாது உள்ளது.

அடுத்து நான் இன்னும் ஒரு விடயத்தை இங்கே கூற வேண்டி உள்ளது. காதல் என்பது மனதால் ஏற்படும் இணக்கப்பாடு. நீங்கள் குறிப்பிட்டதனை போன்று. ஒரு வாலிபனுக்கு இரண்டு வயதில் மூத்த சகோதரிகள் இருந்ததாகவும், அப்படி இருக்கையில் அந்த வாலிபன் வேறு ஒரு பெண்ணை காதலித்தாகவும். பின்னாளில் அந்த வாலிபன் குடும்பப் பாரத்தினை கருத்திற்கொண்டு அந்த காதலினை தவிர்த்ததாகவும் கூறினீர்கள். அந்த வலிபன் அப்படி செய்திருந்தால் அது தவறுதான். அனால் அந்த வாலிபனை பற்றி கொஞ்சம் சிந்தித்தீர்களா? அவனும் ஒரு சாதாரண ஆண்மகன் தானே, அவனுக்கும் ஆசா பாசங்கள் இருந்திருக்கும் அல்லவா? இளவயதில் அவனுக்கும் காதல் வந்திருக்கலாம். அவன் மீது தமிழ் சமூகத்தால் சுமத்தபட்டுள்ள சீதணம் என்னும் கொடிய சுமைதனை பற்றி சிந்தித்தீர்களா? இன்றய எமது சமூகத்தில் பெண்ணிற்கும் கொடுக்க வேண்டிய சீதணத்தை அந்த இளம் வாலிபன் தானே சுமக்க வேண்டி உள்ளது. அந்த வாலிபன் மீது உஙளுக்கு அனுதாபம் வரவில்லையா?

நீங்கள் இப்படி சொல்லி இருக்கலாம், பெண்களுக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்து போராட வேண்டும் என்று. அதற்காக என்னை போன்றவர்களும் கைகோர்த்து நின்றிருப்பார்கள். காதல் என்பது இரு பாலாருக்கும் இருக்கக் கூடிய வலியே. இரு பாலாரும் ஏமாற்றப்படுகின்றார்கள். எத்தனையோ காதலர்கள் கண்ணியமாக வாழ்கின்றார்கள். உடலில் ஏற்படுகின்ற இரசாயன தாக்கங்களுக்கு இரு பாலருமே பாதிக்க படுகின்றார்கள். சமூகத்தில் சில ஆண்கள் விதிவிலக்கு அவர்களை விட்டுவிடுங்கள், அவர்களை சமூகம் தண்டிக்கும்.

ஒரு விரல் செய்யும் தவறிற்காக எல்லா விரல்களையும் வெட்டுவது நன்றன்று.

அன்புடன்
மதுரன்


- Vasampu - 01-29-2005

ஆரம்பிச்சுட்டாஙக ஐயா ஆரம்பிச்சுட்டாங்க !!!
சரி நம் பங்குக்கும் எடுத்து விடுவம். பொதுவாக பெண்கள் தங்களை விட அந்தஸ்திலும் அறிவிலும் கூடிய மாப்பிள்ளைக்கு போட்டி போட வெளிக்கிட்டே உந்த சீதனப்பிரச்சினை உருவானது. ஆனால் பழி யார் மேலே???? அதே போல் தான் காதலிலும் பெண்களே வைச்சிருக்கிறதை விட பெரிய புளியங்கொம்பு மாட்டினால் வைச்சிருந்தது அண்ணாவோ தம்பியோ ஆகிவிடும். அதற்காக ஆண்கள் எல்லோரும் யோக்கியன்கள் என்று சொல்ல வரவில்லை. பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்கள் பறுவாயில்லை. ஏன் கனக்க பெண்கள் சாறி வாங்கும்போது அருகிலிருந்தோருக்கு தெரியும். 5 - 6 மணித்தியாலமாய் மாஞ்சு மாஞ்சு 50 - 60 புடவை பார்த்து கடைசியாய் ஒரு புடவை வாங்கிக் கொண்டு வெளியே வருவினம் அப்போ காட்சிப்பொம்மை கட்டியிருக்கிறது இன்னும் திறமாய் தெரியும். பெண்கள் ஒரு விடயத்தில் திருப்தி அடைவதென்பது ஊரிலே நிலாவரை கேணியின் ஆழம் காண்பது போலே. இத்தோடு என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன் Cry Cry Cry Cry


- thamizh.nila - 01-29-2005

தலை சுத்துறது...ஒருத்தரை ஒருத்தர் சாடுவதை விடுத்து, ஏமாறாமல்..ஏமாற்றாமல் இருக்க வேண்டும். வசம்பு அண்ணா, சரிதானே?


- Thaya Jibbrahn - 01-29-2005

இது ஆரோக்கியமான விவாத தொடக்கமாக தெரிகிறது. எனினும் வாதத்தின் போமு வார்த்தைப் பிரயோகத்தில் கவனம் செலுத்துதல் முக்கியம் என எண்ணுகின்றேன்.

மதுரன் சொல்வது போல் காதல் என்பது ஆண் பெண் இருபாலருக்குமான பொதுவலி. காதலில் வரும் தடைகள் எல்லாம் அது எங்கிருந்து வந்தாலும் அந்த இரண்டு மனங்களையும் காயப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். மேலும் தலைப்பிற்கு பொருத்தமாக பார்த்தால்
நாம் வாழும் மேற்க்தேய வாழ்வுமுறையில் ஆண்கள் பாவம் என்றே சொல்லத்தோன்றுகின்றது. காரணம்.... புலம்பெயருகின்ற போதே ஆண்கள் மீது ஒரு சுமை சுமத்தப்படுகின்றது. அது அவர்கள் புலம்பெயருவதற்கான செலவை வந்தவுடன் உழைத்து கொடுக்க வேண்டும். இதனால் ஆண்களால் தமது பொருளாதார வளம் பற்றி மட்டுமே சிந்திக்க முடிகிறது. அவர்களால் படிப்பதற்கோ வேறு தொழில் அறிவை வளர்ப்பதற்கோ முடியாமல் போகின்றது. ஆனால் பெண்களின் நிலை வேறு. ஏற்கனவே புலம்பெயர்ந்த உறவினர் ஒருவரால் வரவழைக்கப்படுகிறாள். எனவே பெண்களால் இங்குள்ள வசதிகள் வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வி தொழில் போன்றவற்றில் இலகுவாக முன்னேற முடிகிறது.... இங்குதான் ஆரம்பமாகிறது காதலுக்கான ஆப்பு. இந்த இடத்தில் நான் பெண்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை. ஆண்களிலும் பலர் இன்னமும் பழைய பஞ்சாங்க நடைமுறைகளையும் கொண்டு வந்து பெண்கள் தலையில் சுமத்த நினைக்கிறார்கள். இதனை காதல் எனும் பெயரில் பெண்கள் மௌனமாக ஏற்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதேபோல் பெண்களும் தாங்கள் பெற்றுள்ள பாடசாலைக்கல்வி எல்லா இடங்களிலும் தங்களை முன்னுக்கு வைத்துள்ளதாக எண்ணி.... காதலனை வழி நடத்த விழைகிறாரகள். இவ்வாறான நடைமுறைப்பிரச்சனைகளில் ஏற்படுகின்ற தெளிவின்மை தான் மனமுறிவுக்கு காரணமாகிறது. நான் நினைக்கிறேன் யாரும் இவருடன் அல்லது இவளுடன் பழகிவிட்டு ஏமாற்ற வேண்டும் என திட்டமிட்டு ஏமாற்றமாட்டார்கள். நடைமுறையில் தான் எங்கோ பிரச்சனை.

இந்த பிரச்சனைகளை வைத்துக் கொண்டு ஆண்கள் இப்பிடித்தான் பெண்கள் இப்பிடித்தான் என கோஸங்களாக வாதங்களை முன்வைத்தல் ஆரோக்கியமான இராது. இதை ஒரு சமூகப்பிணியாக நினைத்து மருந்து தேடுவது நம் எல்லோரினதும் பணியாகும்.

கடைசியில் ஒன்று சொல்கிறேன்.... தனது காமத்தேவை முடிவடைந்ததும் காதலை துச்சமாக மதித்த ஆண்கள் பற்றி தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம. அதற்கு இப்போது பழிவாங்கப்படுகின்றதோ என்னமோ.... என் செவியில் வந்து விழும் செய்திகள் ஆரோக்கியமாய் இல்லை


- Thaya Jibbrahn - 01-29-2005

Hello <b>thamizh.nila</b>,


- thamizh.nila - 01-29-2005

Thaya Jibbrahn Wrote:Hello <b>thamizh.nila</b>,

என்ன ? எதுக்கு கூப்பிடுகிறீர்கள்?? திட்ட வேணும் என்றால் தனியா திட்டலாம்...உலகமே பார்க்கிற போல திட்ட் வேண்டாம்.. :oops:


- Thaya Jibbrahn - 01-29-2005

மாயா அவர்களே! நீங்கள் எங்கிருந்து இந்த கட்டுரையை புனைந்தீர்கள்? நீங்கள் உலகஅளவில் பேசுவதாக கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் புலம்பெயர்ந்து இஙகே வாழுகின்ற வாழ்க்கை முறை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இலங்கைச்சட்டம்ää தமிழீழச்சட்டம் போன்றவற்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். கடைசியாக விதுரனையும் துணைக்கு அழைத்திருந்தீர்;கள். ஏன் இந்த அலைச்சல். நடைமுறையில் எந்த எடுகோள்களும் நீங்கள் நிறுவ விரும்பிய தேற்றத்திற்கு தோதாக அமையவில்லையா?

ஒன்று மட்டும் புலப்படவில்லை. நீங்கள் சொல்லவருவது தான் என்ன? சட்டஇயல் பற்றி எண்வாரியாக சொல்கிறீர்கள். பின்னர் சட்டம் பற்றியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றீர்கள். உங்களுக்கு சட்டம் தெரியும் என்பதை நீங்கள் வேறுவழிகளிலும் நிரூபணம் செய்யலாம்.

பெண்கள் பத்திரிகைத்துறை வரை வந்துவிட்டதாக சொல்கிறீர்கள். பின்னர் அந்தப் பெண்ணும் தான் எழுதும் கட்டுரையை கணவனிடம் காட்டி அனுமதி பெற வேண்டும் என்கிறீர்கள்? இதை அந்த கணவன் கேட்டாரா? அந்தப் பெண் தனது தராதரத்தை கணவனுக்கு புரிய வைக்க போடுகின்ற சின்ன நாடகம். தான் பெரிய நிலைக்கு வந்தபின்னும் கல்லானாலும் கணவன் ரக பெண் என்பதை நிருபிக்க காட்டும் வித்தை அது என்பது பாவம் அந்த கணவனுக்குத் புரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை.

வேறு என்ன?? காதலித்து ஏமாற்றிய ஆண்களை வீதியுலா கொண்டுவரப்போகி;ன்றீர்கள். தாராளமாக.... வேண்டுமானால் வேண்டிய செலவுகளை நானே பொறுப்பெடுத்துக் கொள்கின்றேன். அதற்கு முன்-.----

காதலித்து.. சு10ழ்நிலைச்சிக்கலை மீள முடியாத ஆண்களுக்கு அந்த தண்டனை. வெறும் 4 நாட்கள் பழகிய பழக்கம். அதுவும் ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் அந்த பெண்ணால் ஏற்படுத்தப்பட்டது. இது காதல் என்;றே அவனால் உணரப்பட்டது. 4ம் நாள் உன் அம்மாவில் குடித்ததுபோல் எனக்கு செய்து காட்டு என பச்சையா கோரிக்கை வைக்கும் பெண். அவளுக்கு அந்த இடத்தில் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்ததன் பயன்... 6ம் நாள் புதுஆண் நண்பர். அத்துடன் இவன் கையாலாகதவன் என்பது போலான அரசல்புரசலான வதந்தி பரப்பல்--- இதற்கு என்ன செய்யலாம் மாயா???

பொறுங்கோ பொறுங்கோ---- இதெல்லாம் எங்கயோ நடக்கிறத பொறுக்கி கொண்டு வாறதா சொல்ல வாறீங்கள். இல்லை மாயா இல்லை. இங்க இப்பிடி தான் போது வாழ்க்கை. இது போல ஏராளமான சம்பவங்களை என்னால் பட்டியலிட முடியும்- ஆனால் விரும்பவில்லை. காரணம் இதன் மூலம் நான் பெண்களை பழிசொல்ல முனையவில்லை. நடப்பதெல்லாம் வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்கள். அவற்றை வைத்துக்கொண்டு தீர்க்கமான முடிவுக்கு வருதல் ஆரோக்கியமானதல்ல. மேலும் உயர்பதவிகளில் உள்ள பெண்கள் கதிரைகளை காப்பாற்றிக் கொள்ள வாயே திறப்பதில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் ஆண்கள் போராடி உரிமை பெற்றுத்தர வேண்டுமென்று எண்ணுகின்றீர்களா? அல்லது இவ்வாறான குழப்பகரமான கட்டுரைகள் மூலம் உங்களை பெண்ணியவாதி என்பதாய் இனம் காட்டி அந்த உயர்பதவிகளை அடைய முனைகிறீர்களா? இந்த உலகம் ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தங்கியுள்ளதாய் தான் படைக்கப்பட்டிருக்கின்றது மாயா- யாதார்த்தத்தை மறக்கதீர்கள்.


- Mathuran - 01-29-2005

வணக்கம்,

உங்கள் பார்வை சரியான நேர்த்தியான பார்வை தயா ஜிப்றான் அவர்களே. நீங்கள் குறிப்பிடுவது போன்று கட்டுரையாளர் ஒரு சமூக சீர்கேட்டினை காதல் என்னும் சிறிய வட்டத்துக்குள் அடைக்க முயன்றது தான் நமக்கிங்கு தப்பாக தோன்றுகின்றது. அத்தோடு பகவத்கீதயில் விதுரன் உரைத்தாக கூறுவது, கட்டுரையாளர் பகவத்கீதயை ஏற்ரு கொண்டு பேசுவதை போலான தோற்றத்தையே காட்டுகின்றது. பகவத்கீதையில் இல்லாத அடிமை தனங்களையா இன்றய நமது சமூகம் கொண்டுள்ளது? எனவே கட்டுரையாளர்தான் இவற்றை தொளிவு படுத்த வேண்டும். தெளிவு படுத்துவாரா?

அன்புடன்
மதுரன்


- kuruvikal - 01-29-2005

Thaya Jibbrahn Wrote:மாயா அவர்களே! நீங்கள் எங்கிருந்து இந்த கட்டுரையை புனைந்தீர்கள்? நீங்கள் உலகஅளவில் பேசுவதாக கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் புலம்பெயர்ந்து இஙகே வாழுகின்ற வாழ்க்கை முறை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இலங்கைச்சட்டம்ää தமிழீழச்சட்டம் போன்றவற்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். கடைசியாக விதுரனையும் துணைக்கு அழைத்திருந்தீர்;கள். ஏன் இந்த அலைச்சல். நடைமுறையில் எந்த எடுகோள்களும் நீங்கள் நிறுவ விரும்பிய தேற்றத்திற்கு தோதாக அமையவில்லையா?

ஒன்று மட்டும் புலப்படவில்லை. நீங்கள் சொல்லவருவது தான் என்ன? சட்டஇயல் பற்றி எண்வாரியாக சொல்கிறீர்கள். பின்னர் சட்டம் பற்றியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றீர்கள். உங்களுக்கு சட்டம் தெரியும் என்பதை நீங்கள் வேறுவழிகளிலும் நிரூபணம் செய்யலாம்.

பெண்கள் பத்திரிகைத்துறை வரை வந்துவிட்டதாக சொல்கிறீர்கள். பின்னர் அந்தப் பெண்ணும் தான் எழுதும் கட்டுரையை கணவனிடம் காட்டி அனுமதி பெற வேண்டும் என்கிறீர்கள்? இதை அந்த கணவன் கேட்டாரா? அந்தப் பெண் தனது தராதரத்தை கணவனுக்கு புரிய வைக்க போடுகின்ற சின்ன நாடகம். தான் பெரிய நிலைக்கு வந்தபின்னும் கல்லானாலும் கணவன் ரக பெண் என்பதை நிருபிக்க காட்டும் வித்தை அது என்பது பாவம் அந்த கணவனுக்குத் புரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை.

வேறு என்ன?? காதலித்து ஏமாற்றிய ஆண்களை வீதியுலா கொண்டுவரப்போகி;ன்றீர்கள். தாராளமாக.... வேண்டுமானால் வேண்டிய செலவுகளை நானே பொறுப்பெடுத்துக் கொள்கின்றேன். அதற்கு முன்-.----

காதலித்து.. சு10ழ்நிலைச்சிக்கலை மீள முடியாத ஆண்களுக்கு அந்த தண்டனை. வெறும் 4 நாட்கள் பழகிய பழக்கம். அதுவும் ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் அந்த பெண்ணால் ஏற்படுத்தப்பட்டது. இது காதல் என்;றே அவனால் உணரப்பட்டது. 4ம் நாள் உன் அம்மாவில் குடித்ததுபோல் எனக்கு செய்து காட்டு என பச்சையா கோரிக்கை வைக்கும் பெண். அவளுக்கு அந்த இடத்தில் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்ததன் பயன்... 6ம் நாள் புதுஆண் நண்பர். அத்துடன் இவன் கையாலாகதவன் என்பது போலான அரசல்புரசலான வதந்தி பரப்பல்--- இதற்கு என்ன செய்யலாம் மாயா???

பொறுங்கோ பொறுங்கோ---- இதெல்லாம் எங்கயோ நடக்கிறத பொறுக்கி கொண்டு வாறதா சொல்ல வாறீங்கள். இல்லை மாயா இல்லை. இங்க இப்பிடி தான் போது வாழ்க்கை. இது போல ஏராளமான சம்பவங்களை என்னால் பட்டியலிட முடியும்- ஆனால் விரும்பவில்லை. காரணம் இதன் மூலம் நான் பெண்களை பழிசொல்ல முனையவில்லை. நடப்பதெல்லாம் வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்கள். அவற்றை வைத்துக்கொண்டு தீர்க்கமான முடிவுக்கு வருதல் ஆரோக்கியமானதல்ல. மேலும் உயர்பதவிகளில் உள்ள பெண்கள் கதிரைகளை காப்பாற்றிக் கொள்ள வாயே திறப்பதில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் ஆண்கள் போராடி உரிமை பெற்றுத்தர வேண்டுமென்று எண்ணுகின்றீர்களா? அல்லது இவ்வாறான குழப்பகரமான கட்டுரைகள் மூலம் உங்களை பெண்ணியவாதி என்பதாய் இனம் காட்டி அந்த உயர்பதவிகளை அடைய முனைகிறீர்களா? இந்த உலகம் ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தங்கியுள்ளதாய் தான் படைக்கப்பட்டிருக்கின்றது மாயா- யாதார்த்தத்தை மறக்கதீர்கள்.

சனத்துக்கு சிலதப் பச்சையாச் சொன்னாத்தான் விளங்குது போல...உதாரணம் மேலே உள்ள கருத்தில் உள்ள தொலைபேசி சம்பாசணை...தற்கால " விடுதலை " பெற்ற காவாலிப் பெண்களின் கதை இதை விட மோசம்... குருவிகள் எழுதிய "றேப் பண்ணுறவங்கள்" (ஆங்கிலத்தில் எழுதியதற்குக் காரணம்...அது பாலியல் வன்முறையாக இல்லாமல் பாலியல் பழிவாங்கலுக்காகவே பெரிதும் நடப்பதால்) என்ற சொல்லை எடுத்துப் போட்டாங்க...அவங்களட்ட ஒரு வேண்டுகோள்...அதற்கு உங்க அகராதியில உள்ள சொல்லைப் போட்டு நிரப்புங்க...உலகத்தில அது இல்லாமல் இல்ல...தினமும் பெண்கள் அப்படியும் சீரழிக்கப்படுகிறார்கள்...அதற்குப் பிரதாரன காரணம் காதல் என்றும் நட்பு என்றும் இன்னும் பல விதங்களிலும் பெண்கள் ஆண்களை ஏமாற்ற விளைந்ததும்...அதற்கான பாலியல் பழிவாங்கல்களுமே....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- KULAKADDAN - 01-29-2005

இக்கட்டுரையாளர் ஆண்ளின் தலையில் அனைத்தையும் கட்டியடித்து விட்டு தாங்கள் தப்பிகொள்ள முயல்வது தவறானது. காதல் என்பது ஆண் பெண் இருபாலருக்குமான விடயம் . ஆணகள் தான் தனியே ஏமாற்றுகிறார்கள் என்றில்லை.. பல பெண்கள் புலத்தில் மாப்பிள்ளை கிடைத்ததும் உள்ளுர் காதலனுக்கு பெற்றாரை மீறமுடியாது என கூறி கைவிட முடியும். இதன் வலி பாதிக்கபட்ட ஆணுடன் முடிந'து விடுகிறது. அப்போதும் யாரும் ஆணை பற்றியோ அவன் உணர்வுகள் பற்றியோ கவனத்திலெடுக்கப்படுவதில்லை. பெண் என்ன செய்வாள் பாவம் என்பார்கள். இதே சூழ்நிலை ஆணுக்கு எற்பட்டால் உடனடியாக பெண்ணை ஏமாற்றிவிட்டான் என வைய தொடங்கிவிடுவார்கள்.

Quote:பொதுவாக பெண்கள் தங்களை விட அந்தஸ்திலும் அறிவிலும் கூடிய மாப்பிள்ளைக்கு போட்டி போட வெளிக்கிட்டே உந்த சீதனப்பிரச்சினை உருவானது

இதிலும் உண்மையுண்டு. இது நேரே கண்டது .. இரு சாகோரிகள் அவர்களது அண்ணன் எகவுண்டன் திருமண பேச்சுகள் வந்த போது மூத்த சகோதரி அண்ணனின் தராதரம் அல்லது மேல் வேணுமென்றதால் இன்று வரை திருமணமாகவில்லை... இளைய சாகோதரிக்கு பேச்சுகள் வந்த போது மூத்தவள் நானிருக்க நீ எபபடி திருமணம் செய்யலாம் என்று தடுத்து விட்டார் இதை என்ன என்பது.
எமது பள்ளி நாட்களில் மலர் விட்டு மலர் தாவும் பெண்களையும் பார்த்துள்ளோம். ஆண்கள் செய்தால் அது நல்ல கட்டுரை தலைப்பு . பெண் செய்தால் பெண் விடுதலை!


- kuruvikal - 01-29-2005

[quote=KULAKADDAN]இக்கட்டுரையாளர் ஆண்ளின் தலையில் அனைத்தையும் கட்டியடித்து விட்டு தாங்கள் தப்பிகொள்ள முயல்வது தவறானது. காதல் என்பது ஆண் பெண் இருபாலருக்குமான விடயம் . ஆணகள் தான் தனியே ஏமாற்றுகிறார்கள் என்றில்லை.. பல பெண்கள் புலத்தில் மாப்பிள்ளை கிடைத்ததும் உள்ளுர் காதலனுக்கு பெற்றாரை மீறமுடியாது என கூறி கைவிட முடியும். இதன் வலி பாதிக்கபட்ட ஆணுடன் முடிந'து விடுகிறது. அப்போதும் யாரும் ஆணை பற்றியோ அவன் உணர்வுகள் பற்றியோ கவனத்திலெடுக்கப்படுவதில்லை. பெண் என்ன செய்வாள் பாவம் என்பார்கள். இதே சூழ்நிலை ஆணுக்கு எற்பட்டால் உடனடியாக பெண்ணை ஏமாற்றிவிட்டான் என வைய தொடங்கிவிடுவார்கள்.

[quote]
பொதுவாக பெண்கள் தங்களை விட அந்தஸ்திலும் அறிவிலும் கூடிய மாப்பிள்ளைக்கு போட்டி போட வெளிக்கிட்டே உந்த சீதனப்பிரச்சினை உருவானது
[/quote]

இதிலும் உண்மையுண்டு. இது நேரே கண்டது .. இரு சாகோரிகள் அவர்களது அண்ணன் எகவுண்டன் திருமண பேச்சுகள் வந்த போது மூத்த சகோதரி அண்ணனின் தராதரம் அல்லது மேல் வேணுமென்றதால் இன்று வரை திருமணமாகவில்லை... இளைய சாகோதரிக்கு பேச்சுகள் வந்த போது மூத்தவள் நானிருக்க நீ எபபடி திருமணம் செய்யலாம் என்று தடுத்து விட்டார் இதை என்ன என்பது.
எமது பள்ளி நாட்களில் மலர் விட்டு மலர் தாவும் பெண்களையும் பார்த்துள்ளோம்

அப்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீங்க போல...பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்றால் தாங்கள் வளர்வது போல ஆண் வளரக் கூடாது என்பது போல...இவர்கள் 8 அடி பாய்ந்தால் ஆண் 64 அடி பாய்வான்...இது ஆணாதிக்கக் கருத்தல்ல...அவனுக்கு அந்தத் தகுதி இருக்கு...ஆபத்து என்று வரும் போது எந்த உயிரும் தன் உச்ச பலத்தைக் காட்டத்தான் விளையும்... பெண்களுக்கு கற்பனை உலகைக் காட்டி விடுதலைக் கோசம் எழுப்புவதைக் காட்டிலும் நிஜ உலகைக் காட்டி அதைச் சமாளிக்கக் கற்றுக் கொடுங்கள் உபயோகமாக இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- KULAKADDAN - 01-29-2005

kuruvikal Wrote:[quote=KULAKADDAN]
]


எமது பள்ளி நாட்களில் மலர் விட்டு மலர் தாவும் பெண்களையும் பார்த்துள்ளோம்

அப்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீங்க போல...பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்றால் தாங்கள் வளர்வது போல ஆண் வளரக் கூடாது என்பது போல...இவர்கள் 8 அடி பாய்ந்தால் ஆண் 64 அடி பாய்வான்...இது ஆணாதிக்கக் கருத்தல்ல...அவனுக்கு அந்தத் தகுதி இருக்கு...ஆபத்து என்று வரும் போது எந்த உயிரும் தன் உச்ச பலத்தைக் காட்டத்தான்ன் விளையும்... பெண்களுக்கு கற்பனை உலகைக் காட்டி விடுதலைக் கோசம் எழுப்புவதைக் காட்டிலும் நிஜ உலகைக் காட்டி அதைச் சமாளிக்கக் கற்றுக் கொடுங்கள் உபயோகமாக இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நாம் அனைவரும் [மனிதன்]சமூக பிராணிகள்.........
Idea
சமூகத்தை பள்ளி தோழர்களை அவதானித்ததால் கிடைத்தது.


- kuruvikal - 01-29-2005

அதுதாங்க சொன்னம் பார்த்து பார்த்து மனத்தாக்கம் அடைஞ்சு பாதிக்கப்படிருக்கீங்க என்று...! :wink: Idea


- Mathuran - 01-29-2005

வணக்கம்,

அனால் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறை என்று ஒன்று இருக்கின்றது என்பதனை ஆண்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். பல அடக்குமுறைகலிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதனை ஆண்களால் மறுக்க முடியாது. பெண்விடுதலை என்பதில் பலவிதமான குளப்பங்கள் காணப்படுகின்றது. ஆகவே பெண்ணின் விடுதலைக்கான ஆர்வலர்கள். பெண்கள் எந்தெந்த தடைகளை உடைத்து சமத்துவ சமூகத்தை அமைக்கலாம் என ஒரு தெளிவான இலக்குகளை சுட்டி காட்ட வேண்டும். பிற மேற்கத்தேய சமூகங்களுடன் ஒப்பிடுகயில், நமது சமூகம் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற சமூகமாகவே இருக்கின்றது. இதற்கு சிலவேளைகளில் நமது சமூகதில் நிலவக்கூடிய பொருளாதார சிக்கல், பிற்போக்குதனமான மூட நம்பிக்கைகளும், இன்னும் பல்வேறு காரணங்களுமாக இருக்கலாம். மேற்கத்தேய நாடுகளில் கூட இன்னும் 50% இற்கு 50% வீகிதம் எனும் நிலையினை இன்றளவும் எட்டவில்லை. மேலை நாட்டு பெண்கள் இன்னும் போரடிய வண்ணமே உள்ளனர். எனவே தமிழ் சமூகம் பெண்களுக்குரிய உரிய உரிமையை கொடுக்க முன்வருதல் வேண்டும்.


அன்புடன்
மதுரன்


- kuruvikal - 01-29-2005

மதுரன் நீங்கள் உச்சரித்த அந்த 50 : 50 எவற்றிலெல்லாம் அடையப்பட வேண்டும் என்று என்றீங்க...இல்ல சில இலக்குகள் இப்போதைக்குச் சாத்தியமில்ல...பல கூர்ப்பு நிலைகள் தாட்டினாத்தான் சாத்தியம்...அதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


- Mathuran - 01-29-2005

வணக்கம்,

குருவிகளே சில வேளை நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். கென்றிக் இப்சென் இவர் ஒரு உலக புகள் பெற்ற நோர்வே நாட்டு நாடக ஆசிரியர், கவிஞ்ஞர். இவர் ஒரு நாடக ஆசிரியர், கவிஞ்ஞர் மட்டுமன்றி ஒரு பெண்விடுதலையாள்ரும் கூட. இவர் கிட்டதட்ட எங்கள் முண்டாசுகவிஞ்ஞன் பாரதி போல. இவரே நோர்வேயினுடய தேசியகீதத்தினையும் வடித்தவராவர் 1800 இன் நடுப்பகுதிகளில். சரி விடயத்திற்கு வருகின்றேன். அன்று பெண்விடுதலைக்காக இவர் முழங்கிய முழக்கமே. இன்று நோர்வே நாடில் பெண்கள் குறிப்பிட்ட அளவு உரிமைகள் பெற்று இருக்கின்றார்கள். இங்கே சமத்துவத்துடன் இந்நாட்டு மக்களால் வாழ முடிகின்றது என்றால், ஏன் நம்மக்களும் அப்படி வாழ் முடியாது? அன்று 5% இல் இருந்தவர்கள் இன்று 50% நெருங்குகின்றார்கள் என்றால், ஏன் இன்னும் சில காலங்களில் 50% அடய மாடார்கள்? எல்லா விடயங்களிலும் அடைவார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் சிலவிடயங்களில் சாத்தியம். உதாரணத்திற்கு சம்பள்ம் வழங்குவதில் பாகுபாடுகள் நீங்கலாம், இப்படி சிலவற்றில் சாத்தியகூறுகள் உள்ளன.

எனவே நமது தமிழ் பெண்களும் பாவம் உரிமைகள் பெற்று வாழ்வதில் தவறில்லை.

அன்புடன்
மதுரன்


- Niththila - 01-29-2005

அண்ணாமாரே உங்கட கருத்துகளுடன் என்னால் ஒத்துப் போக முடியேல்லை.
பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க நீங்கள் (ஆண்கள்) யார்?. இந்தக் கருத்தின்படி நீங்கள் பெண்களை இன்னும் அடிமையாக வைத்திருக்கிறிர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?.