![]() |
|
அமெரிக்க அறிவிப்பாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அமெரிக்க அறிவிப்பாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? (/showthread.php?tid=5551) |
அமெரிக்க அறிவிப்பாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? - Vaanampaadi - 01-29-2005 ரேடியோ நிகழ்ச்சியில் சுனாமியால் பலியானவர்களை கேலி செய்த அமெரிக்க அறிவிப்பாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? நிïயார்க், ஜன. 29_ அமெரிக்காவில் ஒலிபரப் பாகும் ரேடியோவில், சுனாமி பேரலைத் தாக்குத லுக்குப் பலியானவர்களை கேலி செய்யும் பாடலை ஒரு பெண் அறிவிப்பாளர் ஒலி பரப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். லட்சக்கணக்கில் பலி சுனாமி பேரலைத் தாக்குத லால் 13 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். பல லட்சம் பேர் வீடு வாசல் மற்றும் உடைமை களை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலகமே கண்ணீர் சிந்தியது. உலக நாடுகள் உதவிக் கரம் நீட்ட ஓடோடி வந்தன. ஆனால் அமெரிக்க நாட்டின் "ஹாட் 97" என்ற ரேடியோ நிலையம் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களை கேலி செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. ஜோன்ஸ் ரேடியோ அறிவிப்பாளர் மிஸ் தர்ஷா ஜோன்ஸ், இன வெறி அதிகமாக உள்ள ஒரு பாடலை ஒலிபரப்பினார். நடிகையும், பாடகியும், பாடல் ஆசிரியருமான அவர் ஒலிபரப் பிய பாடல் வருமாறு:_ [size=14]அன்று ஒரு நாள் சூரிய ஒளி வீசிய நாள் காற்று வாங்கி வர கடற்கரை வரை நான் போக 20 அடி அலை பாய்ந்து வந்தது உங்கள் நாடே அதில் மாய்ந்து போனது எங்கு பார்த்தாலும் மரண ஓலம் யாருமே இல்லை மீதம் ஆப்பிரிக்கர் மூழ்கினார் சீனாகாரர் மூழ்கினார் கடவுளின் சிரிப்பு கேட்டது நீந்து... முறை கெட்டவனே... நீந்து சுனாமி உன்னை பதம் பார்த்தது இனி நீ அடி வயிற்றை முத்தமிடுவதே நல்லது இதோ! அவள் மிதந்து போகிறாள் அவள் தலை மீது மரமும் போகிறது இனி உங்கள் குழந்தைகளோ விற்கப்படுவார்கள் அடிமைகளாக ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எதிர்ப்பு இந்தப்பாடல் ஒலிபரப்பான தும், அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. பாடலைக் கேட்டு கோபம் அடைந்த ரசிகர்கள் உடனே ஜோன்சை டிஸ்மிஸ் செய்யும்படி கோரி ரேடியோ நிலையத்துக்கு `இ_மெயில்' அனுப்பினர். பாராளுமன்ற உறுப்பினர்கள் `ஹாட் 97' நிலையம் மீது அமெ ரிக்க பெடரல் கம்ïனிகேஷன்ஸ் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ரேடியோ நிலையம் மீது 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்றும் கோரி னர். அமெரிக்க முஸ்லிம்களும், சீனர்களும் எதிர்ப்புத் தெரிவித் தனர். [u] சண்டை போட்டார் இந்த நிலையில் ரேடியோ நிலையத்தில் வேலை செய்யும் இன்னொரு அறிவிப்பாளரான மிஸ் இன்போ (இவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்) இந்தப் பாடல் எனக்கு வருத்தம் அளித் தது. இதில் நான் சம்பந்தப்பட வில்லை என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த ஜோன்ஸ் அவரிடம் சண்டை போட்டார். "ஆசிய நாட்டுக் காரர் என்பதால் ரொம்ப உயர் வாக உன்னைப் பற்றி நீ நினைத் துக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். மிஸ் இன்போவின் கோபத்தை கண்ட இன்னொரு அறிவிப்பாள ரான டாட் லின், ஆசிய நாட் டுக்காரர்களை எல்லாம் சுட்டுக் கொல்லவேண்டும் என்று சத்தம் போட்டார். [u]மீண்டும் ஒலிபரப்பினார் இந்த நிலையில் `ஹாட் 97' ரேடியோ நிலையத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. அதைப் பொருட்படுத்தாமல் மிஸ் ஜோன்ஸ் சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை மீண்டும் ஒலிபரப்பி னார். ரேடியோவில் என்ன ஒலி பரப்பாக வேண்டும் என்பதை எதிர்ப்பாளர்கள் முடிவு செய்ய முடியாது என்பதைக் காட்டு வதற்காகவே இந்தப்பாடலை ஒலிபரப்பியதாக ஜோன்ஸ் கூறினார். மன்னிப்பு கேட்டது இது நடந்த சில மணி நேரங் களில் ரேடியோ நிலையம் மன் னிப்பு கோரியது. ஒரு துயரமான சம்பவத்தை வேடிக்கையாக்கி, நிகழ்ச்சியை ஒலிபரப்பியதற்காக வருந்து கிறோம். இந்த பாடல் யார் மன தையாவது புண்படுத்தி இருந் தால், மன்னிப்பு கேட்டுக்கொள் கிறோம் என்று ரேடியோ நிலை யம் கூறியது. 7 நாள் சம்பளம் "ஜோன்சும், மற்றும் அந்த பாடல் ஒலிபரப்பில் சம்பந்தப் பட்ட 7 ஊழியர்களும் தங்கள் ஒரு வார சம்பளத்தை சுனாமி நிவாரணத்துக்கு நன்கொடை யாக வழங்கி உள்ளனர்" என்றும் ரேடியோ நிலையம் அறிவித்தது. தவறு செய்த ஊழியர்கள் யார் மீதும் ரேடியோ நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜோன்சை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரி வருகின் றன. இந்தக் கோரிக்கையை ஏற்று ரேடியோ நிலையம் அவரை டிஸ் மிஸ் செய்யும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. |