Yarl Forum
கோழி பிரியாணி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: கோழி பிரியாணி (/showthread.php?tid=5550)

Pages: 1 2 3


கோழி பிரியாணி - Vaanampaadi - 01-29-2005

கோழி பிரியாணி

இஞ்சி - 2 அங்குலம்
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 125 கிராம்
தயிர் - 225 கிராம்
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை - சிறு துண்டு
முந்திரி பருப்பு - 15 கிராம்
பாதாம்பருப்பு - 15 கிராம்
சாரப் பருப்பு - 15 கிராம்
பிஸ்தா பருப்பு - 15 கிராம்
திராட்சை - 15 கிராம்
கோழித் துண்டுகள் - 125 கிராம்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - சிறிது
ஏலக்காய் - சிறிது
கிராம்பு - சிறிது
பாசுமதி அரிசி - 2 கப்



செய்முறை:-

2 அங்குலம் இஞ்சி, 6 பல் பூண்டு, 125 கிராம் சின்ன வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 225 கிராம் தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். 1 மேஜைக்கரண்டி சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பிரியாணி இலை ஒன்றைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு (சாரோலி), பிஸ்தா பருப்பு, திராட்சை ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் 15 கிராம் எடுத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவைத் தயிருடன் கலந்து, இதில் சுத்தம் செய்த கோழித் துண்டுகள் 125 கிராம், உப்புத்தூள் இவற்றையும் கலந்து 4 மணி நேரம் அப்படியே ஊற விடவும். அதன் பின் ஒரு கனமானப் பாத்திரத்தில் சமையல் எண்ணெய் 100 கிராம் ஊற்றி, காய்ந்ததும், அரை அங்குலம் பட்டை, பெரிய கறுப்பு ஏலக்காய் விதைகள் 1 மேஜைக்கரண்டி, 4 கிராம்பு, துண்டுகளாக்கிய பிரியாணி இலை. 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு வதங்கியதும், ஊற வைத்துக் கோழிக்கறி மசாலாவைச் சேர்த்து வாணலியை மூடி வைக்கவும். கறி வெந்து, மசாலா நன்கு வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கிக் கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், 2 கப் பாஸ்மதி அரிசியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிர் உதிராக வேக வைத்து இறக்கவும். பின் இதனை 3 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் தடவி, ஒரு பாகம் சாதம், அதன் மீது கோழித்துண்டுகள் என மூன்று பாகமாக ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்து இறக்கவும். மேல் பாகத்தில் பருப்பு வகைகளை தூவி, அதன் மீது வெள்ளி ஜரிகைத் தாள்களைப் (Silver Foils) போட்டு அலங்கரிக்கவும். கோழி பிரியாணி இப்பொழுது சாப்பிட தயார்.


- kasthori - 01-29-2005

என்ன கொஞ்சப்பேர் சாப்பாட்டு அயிட்டத்தோட கிழம்பியிருக்கிறியள். என்ன விசேசம்?


Re: கோழி பிரியாணி - Sabesh - 01-29-2005

அதென்ன பிரியாணி இலை? கேள்விப்படவே இல்லை... :!:


- sinnappu - 01-30-2005

Quote:kasthori



இணைந்தது: 13 தை 2005
கருத்துக்கள்: 13

எழுதப்பட்டது: சனி தை 29, 2005 3:04 pm Post subject:



என்ன கொஞ்சப்பேர் சாப்பாட்டு அயிட்டத்தோட கிழம்பியிருக்கிறியள். என்ன விசேசம்?

என்ன மகள் இப்பவே விடிஞ்சது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 01-31-2005

செய்முறையைப் பார்க்க வாயூறுதான்... கலக்கிட மாட்டேன்!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 01-31-2005

சோழி அண்ணை அப்படியே இங்க ஒரு பார்சல் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 01-31-2005

பார்சல் பிரச்சினை இல்லீங்க.. பிரியாணி இலை என்றா என்ன.. எப்பிடி இருக்கும்.. எங்க கிடைக்கும்.. இதுக்கு முதல்ல பதில சொல்லுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 01-31-2005

பிரியாணி வாங்கும் போது அதுக்குள்ள சின்ன சின்ன இலைகள் இருக்குமே.. அதுவாய் இருக்குமோ? தமிழ் கடைகளில் கண்டிருக்கிறன்.. சின்ன பக்கெற்றுக்குள் இருக்குமே அது தானோ?? இனி உங்கள் வேலை நாளைக்கு கடை கடையா போறது தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- thamizh.nila - 01-31-2005

வசி அண்ணாவிட அறிவ என்ன என்று சொல்ல... :wink:


- vasisutha - 01-31-2005

ஆகா கண்டுபிடிச்சுட்டேன் சோழியான் அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ...
இது தான் பிரியாணி இலை. தமிழ் கடைகளில் கிடைக்கும்.
இலைகள் உலர்த்தப்பட்டு பைகளில்
அடைத்து விற்பார்களாம்.
தகவலும் படமும் தந்து உதவியவர் இந்திய நண்பர் ஒருவர்.

<img src='http://img184.exs.cx/img184/9695/biryanyleaf2we.jpg' border='0' alt='user posted image'>


- Mathuran - 01-31-2005

வணக்கம்,

இதென்னா வசிசுதா? இது ஆலம் இலமாதுரி அல்லோ இருக்குது. அடுத்தமுறை ஊருக்கு போனால் கொஞ்ச சாக்கு கட்டி வரலாம் போல கிடக்கு.


அன்புடன்
மதுரன்


- KULAKADDAN - 01-31-2005

Mathuran Wrote:வணக்கம்,

இதென்னா வசிசுதா? இது ஆலம் இலமாதுரி அல்லோ இருக்குது. அடுத்தமுறை ஊருக்கு போனால் கொஞ்ச சாக்கு கட்டி வரலாம் போல கிடக்கு.


அன்புடன்
மதுரன்
இல்லை காய்ந்த கறுவா இலை போலுள்ளது... எதற'கும் ஒருமுறை மணந்து பார்த்து சொல்லுங்களேன்


- tamilini - 01-31-2005

நமக்குப்பிடிச்ச அயிட்டம்.. நன்றி குளக்காட்டுத்தம்பி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சோழியன் அண்ணா என்ன சமையல் முடிஞ்சிட்டிதா..?? :wink:


- வெண்ணிலா - 01-31-2005

அசைவம்தான் தான் சமைப்பீர்களா? :?: :evil:


- tamilini - 01-31-2005

Quote:அசைவம்தான் தான் சமைப்பீர்களா?
அப்ப நீங்க சைவமா...?? பாவம் அவங்க.. ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-31-2005

tamilini Wrote:
Quote:அசைவம்தான் தான் சமைப்பீர்களா?
அப்ப நீங்க சைவமா...?? பாவம் அவங்க.. ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எவங்க? :roll: Confusedhock:


- tamilini - 01-31-2005

நிங்க என்றது அவங்க என்று வந்திட்டுது.. :wink: அது சரி ஏன் நீங்க சைவம்.. பிறந்ததில் இருந்து சாப்பிறது இல்லையா.. அசைவம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-31-2005

tamilini Wrote:நிங்க என்றது அவங்க என்று வந்திட்டுது.. :wink: அது சரி ஏன் நீங்க சைவம்.. பிறந்ததில் இருந்து சாப்பிறது இல்லையா.. அசைவம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அருள் படத்தில் ஜோதிகா சாப்பிடுவது போல அம்மா , அப்பாக்குத் தெரியாமல் எப்போதாவது சாப்பிடுறதுதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-31-2005

Quote:அருள் படத்தில் ஜோதிகா சாப்பிடுவது போல அம்மா , அப்பாக்குத் தெரியாமல் எப்போதாவது சாப்பிடுறதுதான்.
அடப்பாவிகளா..?? அப்படியும் நடக்கா.. சரி ஏன் அசைவம் சாப்பிடுறதில்லை.. நீங்க என்ன ஐயர் ஆக்களா என்ன..?? :wink: :| அப்ப நாங்க சொன்னது சரி தான்.. அவங்க பாவம்..


- வெண்ணிலா - 01-31-2005

tamilini Wrote:
Quote:அருள் படத்தில் ஜோதிகா சாப்பிடுவது போல அம்மா , அப்பாக்குத் தெரியாமல் எப்போதாவது சாப்பிடுறதுதான்.
அடப்பாவிகளா..?? அப்படியும் நடக்கா.. சரி ஏன் அசைவம் சாப்பிடுறதில்லை.. நீங்க என்ன ஐயர் ஆக்களா என்ன..?? :wink: :| அப்ப நாங்க சொன்னது சரி தான்.. அவங்க பாவம்..

அட அவங்களைப் பற்றி ஏன் கவலை. அவங்களே வாங்கித்தருவாங்க. பட் முட்டை மட்டும் அவிக்கத் தெரியும். யாருக்கும் தெரியாமல் சாப்பிடவும் தெரியும். ஓர்நாள் அம்மாவின் காலடி ஓசை கேட்டு முழுதாக விழுங்கின ஞாபகமும் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->