Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 401 online users.
» 0 Member(s) | 399 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,428
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,530
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பயமுறுத்தும் மாடல் அழகி
Posted by: Vaanampaadi - 02-16-2005, 01:54 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/16-2-2005/16fashion.jpg' border='0' alt='user posted image'>
பயமுறுத்தும் மாடல் அழகி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாஷன் ஆடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் நடக்கும் இந்த பாஷன் ஷோவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள ஆடைகளை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

ஆனால் டெல்லியை சேர்ந்த டிசைனர் ஆசிஷ்குப்தா தயாரித்த ஆடையை மாடல் அழகி அணிந்து வருவதை பார்த்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. மேடையில் எலும்புகூடு நடந்து வருவது போலவே அந்த அழகி நடந்து வந்தார். கறுப்பு உடையில் எலும்புக்கூடு போன்று தத்ரூபமாக டிசைன் போடப்பட்டு இருந்தது.


Maalaimalar

Print this item

  நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?
Posted by: kasthori - 02-16-2005, 12:08 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (7)

அன்பான நண்பர்களே,
அவசரப்படாது கீழே தரப்பட்டுள்ள விடயத்தை முழுமையாக வாசித்துவிட்டு உங்கள் கருத்தை முன்வையுங்கள்.

அண்மையில் "கங்காரு ஏன் நான்கு கால்களில் நடப்பதில்லை" என்றொரு சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகம் வாசித்தேன். அதிலே கங்காரு நான்கு கால்களில் நடக்காததற்கான காரணத்தைக் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் கங்காருவும் ஏனைய விலங்குகளைப்போல் நான்கு கால்களிற்தான் நடந்து திரிந்தது. ஒருநாள் அது உணவை உட்கொண்டுவிட்டு இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தின் கீழ் படுத்திருந்தது. அப்போது காடு தீப்பற்றிக்கொண்டது. வேகமாகப் பரவிய காட்டுத்தீயில் இருந்து தப்புவதற்காகக் கங்காரு கடுமையாகப் போராடியது. இறுதியில் அது காட்டுத்தீயிலிருந்து தப்பும்போது அதன் இரு முன்னங்கால்களும் தீயில் எரிந்து இப்போது இருக்குமளவிற்கு சிறியதாகிவிட்டன. அதனாற்தான அதன் முன்னங்காலின் அடிப்பகுதி கறுப்பாக இருக்கின்றது.

சரி இனி விடயத்திற்கு வருகிறேன். விஞ்ஞான ஏணியில் உலகம் தற்போது இருக்கும் இடம் என்ன? நாம் இப்போதும் எவற்றை எமது குழந்தைகளுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கின்றோம்? விஞ்ஞானத்திற்கும் எமக்கும் இடையிலான தொடர்பு இப்போதும் நேர்மாறுவிகித சமனாகத்தான் இருக்கின்றதா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
புத்தகத்தைப் படித்துவிட்டு இது இலங்கையில் அல்லது இந்தியாவில் அச்சடித்த புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட்டுப் பார்த்தால் அது அவுஸ்திரேலியாவில் அடித்த புத்தகம். அடப் பாவிகளா தமிழ் படிப்பிக்கிறோம் என்று கிழம்பி இதைத்தானா செய்துகொண்டிருக்கிறியள்.

Print this item

  பனிக்கட்டியில் கட்டப்பட்ட சொகுசு ஓட்டல்
Posted by: Vaanampaadi - 02-16-2005, 11:12 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/16/oddnews/C164_8ms-dkn.jpg' border='0' alt='user posted image'>
ஆஸ்திரியா நாட்டில் ஸ்கூல்டென் நகர மலைப்பிரதேசத்தில் 4 இளைஞர்கள் முழுக்க, முழுக்க பனிக்கட்டியிலான சொகுசு ஓட்டலை கட்டி உள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி அந்நாட்டின் ஸ்கூல்டென் நகர மலைப்பிரதேசத்தில் 4 இளைஞர்கள் முழுக்க, முழுக்க பனிக்கட்டியிலான சொகுசு ஓட்டலை கட்டி உள்ளனர். இந்த ஓட்டலில் மது பார், சமையல் அறை, தங்கும் அறை உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. டேபிள், கட்டில் உள்பட அனைத்து பொருட்களும் பனிக்கட்டியிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளன. ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குளிரை தாங்கி கொள்வதற்காக அவர்களுக்கு சிறப்பு கம்பளி உடைகள் வழங்கப்படுகின்றன. படத்தில் பனிக்கட்டி ஓட்டலை காணலாம்.


Dinakaran

Print this item

  `ஆபாச கேக்' விற்றவர்-வழக்கு தொடர்ந்த பெண்
Posted by: Vaanampaadi - 02-16-2005, 11:08 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

`ஆபாச கேக்' விற்றவர் மீது வழக்கு தொடர்ந்த பெண்

காதலர் தினத்தையொட்டி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு பேக்கரி அதிபர், வித்தியாசமான வடிவங்களில் கேக் தயாரித்து விற்பனை செய்தார். அதில் சில `கேக்'குகள் ஆண்_பெண் அந்தரங்க உறுப்புகளை சித்தரிக்கும் விதத்தில் அமைந்து இருந்தது.

அந்த `கேக்' வகைகள் ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து பக்கத்து வீட்டுப் பெண் பேக்கரி அதிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பேக்கரி அதிபர் வான் பக்கன் ஹூட், "ஒரு வேடிக்கைக்காகத்தான் இப்படி செய்தேன். ஏராளமானவர்கள் இந்த கேக்குகளை பார்த்து வாய் விட்டு சிரித்ததுடன் தங்கள் மனைவி அல்லது காதலிக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றதாக கூறியிருக்கிறார்.

Dailythanthi

Print this item

  மாணவனை கற்பழித்த ஆசிரியை மாணவனையே மணக்கிறார்.
Posted by: Vaanampaadi - 02-16-2005, 11:05 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (9)

12 வயதுள்ள மாணவனை கற்பழித்த பெண் ஆசிரியர்
10 ஆண்டு இடைவேளைக்குப்பிறகு திருமணம் செய்ய இருக்கிறார்


சியாட்டில், பிப். 16_

12 வயதுள்ள மாணவனை கற்பழித்த பெண் ஆசிரியர்

7 ஆண்டு ஜெயில் தண்ட னைக்குப் பிறகு இப்போது தான் விடுதலை ஆகி இருக் கிறார். அவர் தன் மாணவ னையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

6_ம் வகுப்பு மாணவனை

அமெரிக்காவில் சியாட்டில் நக ரைச் சேர்ந்தவர் லெடோர் நிï. இவருக்கு இப்போது வயது 43.

1996_ம் ஆண்டு லெடோர்நிï பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் வகுப்பில் 6_ம் வகுப்பு படித்த மாணவன் விலி பவுலா.

பவுலாவுக்கு இப்போது வயது 22. அப்போது வயது 12.

ஒரு நாள் நள்ளிரவு ஒரு வேனுக் குள் பவுலாவுடன் ஆசிரியர் லெடோர்நிï ஒன்றாக இருந்ததைப் போலீசார் பார்த்து கையும் களவுமாகப் பிடித்தனர்.

7 ஆண்டு ஜெயில்

அப்போதே லெடோர் நிï வுக்கு திருமணமாகி 4 குழந்தை கள் இருந்தனர். மாணவனுடன் லெடோர் நிï தவறாக நடந்து கொண்டது தெரியவந்ததும் அவ ரது கணவர் அவரை விவாகரத்து செய்து விட்டு அலாஸ்கா நக ருக்கு சென்றுவிட்டார்.

லெடோர் நிï மாணவனை கற்பழித்ததாக கோர்ட்டில் வழக் குத் தொடரப்பட்டது. அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

2 குழந்தைகள்

தண்டனை கொடுக்கப்பட்ட போதே, பவுலாவின் குழந்தை லெடோர் நிïவின் வயிற்றில் வளர்ந்தது. பிறகு பிரசவம் நடந் தது. 1998_ம் ஆண்டு பரோலில் விடுதலை செய்யப்பட்டார். பவு லாவுடன் தொடர்பு கொள்ளத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தடையை மீறி பவுலாவை லெடோர்நிï சந்தித்தார்.

2 பேரும் சினிமாவுக்குச் சென்றனர். ஒரு காரில் 2 பேரும் ஒன்றாக இருந்தபோது லெடோர் நிï பிடிபட்டார். பிறகு பரோல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு 2_வது பெண் குழந்தை பிறந்தது.

இப்போது அந்த 2 குழந்தைகளுக்கு 7 மற்றும் 6 வயது ஆகிறது. அவை பவுலாவின் தாயாரி டம் வளர்கின்றன.

திருமணம்

7 ஆண்டு கால ஜெயில் தண்டனை முடிந்து, கடந்த ஆகஸ்டு மாதம் லெடோர் நிï விடுதலை ஆனார்.

அவர் விலி பவுலாவைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்தத் திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதில் 200 விருந்தினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Dailythanthi

Print this item

  MJக்கு ஆதரவாக நடிகை எலிசபெத் டெய்லர் சாட்சியம்
Posted by: Vaanampaadi - 02-16-2005, 10:57 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

நடிகை எலிசபெத் டெய்லர் சாட்சியம் அளிக்கிறார்
மைக்கேல் ஜாக்சனுக்கு ஆதரவாக


சாண்டாமாரியா, பிப். 16_

உலகப் புகழ் பெற்ற `பாப்' பாடகர் மைக்கேல் ஜாக்ச னுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் உள்பட பல பிரபலங்கள் முன்வந்து உள்ளனர்.

350 சாட்சிகள்

"மைக்கேல் ஜாக்சன் 13 வயது சிறுவனிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக கூறி சாண்டா பார்பரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நடுவர்களை (ஜுரி) நியமிப்பதற்கான தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஜாக்சனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல

350 பேர் கொண்ட பட்டியலை அவரது வக்கீல் டாம் மெசரா தயாரித்து இருக்கிறார்.

2 மகன்கள்

46 வயதான ஜாக்சனின் குழந் தைகளான பாரிஸ், பிரின்ஸ் மைக்கேல் உள்பட அவரது குடும்பத்தினர் 10 பேர் சாட்சியம் சொல்கிறார்கள்.

இவர்கள் தவிர, ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் கூடைப்பந்து விளையாட்டு வீரர் கொபே பிரியண்ட் டி.வி. நட்சத் திரங்கள் லாரிகிங் ஜேலெனோ, வாழும் கலை ஆலோசகர் தீபக் சோப்ரா (இந்தியர்) பாடகர்கள் பாரி ஜிப், டயானா ரோஸ், காமெடி நடிகர் கிறிஸ்டக்கர் ஆகியோர் மைக்கேல் ஜாக்ச னுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க இருக்கிறார்கள்.

சாட்சிகளின் பட்டியலையும் டாம் மெசரா நீதிபதியிடம் கொடுத்தார்.

Dailythanthi

Print this item

  காக்க வைத்தபின்பே புலிகளின் முக்கியஸ்தர்கள் வன்னி செல்ல ...
Posted by: Vaanampaadi - 02-16-2005, 10:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் காக்க வைத்தபின்பே புலிகளின் முக்கியஸ்தர்கள் வன்னி செல்ல அனுமதி

கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், நேற்று திங்கட்கிழமை காலை வன்னி திரும்புவதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது கசப்பான அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

தரை வழியாக வன்னிக்குச் செல்வதற்காக கேணல் ரமேஷ், விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, நகுலன், அன்புமணி உட்பட 22 புலிகள் காலை 10.15 மணியளவில் கறுத்தப்பாலம் ஊடாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் வந்தனர்.

இவர்களது பயணம் பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக அவ்விடத்தில் காக்க வைக்கப்பட்ட பின்பே வன்னிக்காக பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.

வாகனமில்லை, அனுமதி வரவில்லையெனக் கூறி இவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

கண்காணிப்புக் குழுவினர் படை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் தொடர்பு கொண்ட பின்பே, நண்பகல் 12 மணியின் பின்னர் இவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

படையினரின் இந்தச் செயல் குறித்து புலிகள் தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thinakural

Print this item

  அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு அதிசயங்கள்
Posted by: Vaanampaadi - 02-16-2005, 10:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

கடல்கோளின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம்

அம்பாறை மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் அதிசயங்கள் பல ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதனால் மக்கள் பீதியுடனும், பரபரப்புடனும் காணப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக கல்முனை, காரைதீவு பிரதேசங்களில் மாமரங்களில் இருந்து தேன் வடிந்து கொண்டிருக்கின்றது. எஸ்.எம். சுபைர் என்பவரது வீட்டிலும் காரைதீவில் மாணிக்கம் வல்லிபுரம், சாமித்தம்பி வேல்முருகு என்பவர்களது வீட்டிலுள்ள மாமரங்களிலிருந்தே தேன் வடிந்து கொண்டிருக்கின்றது.

இம்மாமரங்களில் மழைத்தூறல்களைப் போல் காலை, பகல் நேரத்தில் தேன் தூறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. பூத்தமரம், பூக்காத மரம் என பல மாமரங்களில் இருந்து இத் தேன் வடியும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனை பார்ப்பதற்கென்றே தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

அத்தோடு, அண்மையில் மருதமுனை, கல்முனைக் குடியேற்ற பகுதிகளில் கிணற்றுநீர் கொதித்துக் கொண்டிருந்தது.

சில இடங்களில் நிலம் வெடித்து அதிலிருந்து நீரும் வெளியேறியது.

இவை தவிர சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த மாபிள் தள ஓடுகள் மூன்று, நான்கு அடி உயரத்துக்கு மேலெழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்களை இரவு நேரத்தில் வெள்ளைச் சேலை கட்டிய நீண்ட தலைமுடி கொண்ட ஒருபெண் மக்களோடு கதைத்து திரிவதாகவும், அவர் பின்னர் மறைந்து வருவதாகவும் அங்குள்ளவர்களில் சிலர் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.


Thinakural

Print this item

  அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி விட்டன
Posted by: Vaanampaadi - 02-16-2005, 10:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மீட்புப் பணிகளுக்காக வந்த அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி விட்டன
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக ளுக்காக இலங்கைக்கு வந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டி~; படைகள் நாட்டைவிட்டு முற் றாக வெளியேறிவிட்டன. கனேடியப் படையினர் நேற்றுமுன்தினம் வெளியேறியிருந்தனர். எஞ்சி யிருக்கும் இந்தியா ஆஸ்திரியா பெல்ஜியம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா போன்ற நாடு களைச் சேர்ந்த படையினர் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியேறிவிடுவர் என்கிறார் இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரத்னநாயக்க.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியதாவது:-
மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் படையினர் தாம் ஏற்ற பணிகளைத் துரிதமாகச் செய்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். இவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக் கின்றோம்.
எஞ்சியிருக்கும் ஏனைய நாட்டுப் படையி னர் தாம் பொறுப்பேற்ற பணிகள் முடிவுறாத தன் காரணமாக இன்னும் வெளியேறாமல் இருக் கின்றனர். அவர்களின் பணிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் முடிந்துவிடும்.
இந்தியாவைச் சேர்ந்த 80 படையினர் பாகிஸ் தானைச் சேர்ந்த 75 படையினர் உட்பட மொத் தம் 345 பேர் மட்டுமே இங்கு எஞ்சியுள்ளனர்- என்றார் அவர்.

Uthayan

Print this item

  சந்திரிகா விஜயத்தை எதிர்க்க முஸ்தீபு
Posted by: Vaanampaadi - 02-16-2005, 10:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஜனாதிபதி, ரணில் அடுத்த வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்வர்
சந்திரிகா விஜயத்தை எதிர்க்க முஸ்தீபு
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த வாரம் நேரில் விஜயம் செய்யவுள்ளார். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த வாரத்தில் அங்கு செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட் டது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக் கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத்திட்ட நிர்மா ணத்துக்கான அடிக்கல்லை நட்டு வைப்பதற் காகவே ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார்.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தை எதிர்ப்பதற்கு அங்குள்ள பொது அமைப்புகள் தயாராகி வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள னர்.இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த வாரத்தில் மட்டக் களப்புக்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளார். ஆழிப்பேரலை அனர்த்தம் பாதித்த பகுதிகளுக் கும் அவர் நேரில் சென்று பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Uthayan

Print this item