| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 372 online users. » 0 Member(s) | 369 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,428
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,530
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ] |
|
Posted by: kavithan - 02-15-2005, 10:23 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (54)
|
 |
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/penninmanthu_kadal_aaninmanthu_thiivu-thumb.PNG' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>பெண்ணின் மனது பெரிய கடல்
ஆணின் மனதோ சிறிய தீவு
கடலலைகள் எப்போதும்
தீவினை அணைத்துக்கொண்டிருக்கும்
ஆனால் அது அணைப்பு அல்ல
அந்த அலைகள் அணைப்பது போல்
நடித்துக்கொண்டிருக்கின்றன.
என்றோ ஒரு நாள் கடல் பெருக்கெடுக்கும்
அன்று அந்த அலைகள்
அந்த தீவினை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
அப்படி தான் பெண்.
நன்றாகா பேசுவாள்
இனிக்க இனிக்க கதை சொல்வாள்.
இனிமையாக சிரிப்பாள்.
இளைமையின் உணர்ச்சிகளை தூண்டுவாள்
இயல்பான வாழ்க்கையை கெடுப்பாள்
அவள் இல்லாவிட்டால் வெறுமை என உணரவைப்பாள்
வேளை தவறாமல் உன்னிடம் வருவாள்
அழகாய் இருப்பாள்
அணையா விளக்காய் இருப்பேன்
ஒளிதருவேன்
ஒற்றுமையாய் இருப்பேன்.
நீ சொல்வதே வேதவாக்கு
சொல்வதை செய்வேன்
எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பேன்.
நான் வேறு நீ வேறு அல்ல
என கதைவசனம் சொல்வாள்
புதுமை பெண்ணாய் நானிருப்பேன்
பூமியாய் உன்னை தாங்கிடுவேன் என
புதுமையாக பேசுவாள்
பூரிப்பாய் இருக்கும்
ஆனால்
இப்படி இருப்பவள்
கடைசியில் ஒரு நாள்
பூகம்பம் போல்
சட்டென
காலை வாரிவிடுவாள்.
குழியினுள் விழுந்தவன்
அன்று தொட்டு
குற்றுயிரும் குலையுயிரும் தான்.
இப்படியும் நடக்கும்
அலையின் தாக்கத்தால்
தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக
குட்டி தீவு மூழ்கி கொண்டிருக்கும்
கடைசியில் ஒரு நாள்
முற்றாகா அது அழிந்துவிடும்.
ஆனால் அலைகள் தொடர்ந்து
அடுத்த தீவை நோக்கியோ
தரையை நோக்கியோ
நகர்ந்து கொண்டிருக்கும்.
அப்படி தான் இதுவும்
ஒரு பெண்ணின் தாக்கத்தால்
ஒரு ஆண் குடி மகன் ஆகிறான்
அன்று தொட்டு அவன்
கொஞ்சம் கொஞ்சமாக
குடியால், புகையால்
தவறான பழக்கவழக்கங்களால்
அழியத்தொடங்குகிறான்
கடைசியில் ஒரு நாள்
இவனும் அழிந்து போகிறான்
ஆனால் பெண்
மீண்டும் ஒரு ஆணை நோக்கி
தன் பார்வைகளை திருப்புகிறாள்
அதனை பார்த்து அவன் மயங்க
அன்று தொடங்கிகிறது
அவன் அழிவு காலம்.</span>
கவிதன்
13/02/2005
இரவு 12.00
மேலும் கவிதைகளுக்கு.............கவிதைத்தோட்டம்
|
|
|
| I get warning why? |
|
Posted by: Velu - 02-15-2005, 10:02 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (10)
|
 |
[[/u] If i like to create a new topic i get the next warning.
" Sorry, but only users granted special access can post topics in this forum"
GR. Velu
|
|
|
| pls help me |
|
Posted by: Velu - 02-15-2005, 09:52 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (62)
|
 |
Can you help me please?
I cannot create a new topic while i have registered at yarl
What is here the problem?
Gr, Velunayak
[/u]
|
|
|
| இந்திய டென்னிஸ்மங்கை சார்னியாமிர்சா |
|
Posted by: vasisutha - 02-15-2005, 08:07 PM - Forum: விளையாட்டு
- Replies (24)
|
 |
<b>100 வீராங்கனைகளுக்குள் இடம்பிடித்தார் டெனிசில் சானியாமிர்சா-மேலும் ஒரு புதிய சாதனை </b>
<img src='http://img56.exs.cx/img56/153/mir3266i9ko.jpg' border='0' alt='user posted image'>
<b>சானியா மிர்சா </b>
இந்திய டென்னிஸ் மங்கை சார்னியா மிர்சா டென்னிஸ் தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்துள்ளார். இது இவரது சாதனையாகும்.
இந்திய டென்னிஸ் வீராங் கனை சானியா மிர்சா (வயது 18 ) உலக அளவில் பிரகாசிக்க தொடங்கி இருக்கிறhர் அல்லவா? கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 3-வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் கிராண்ட்ஸ் லாம் போட்டியில் இத்தகைய உயர்ந்த நிலையை எட்டிய முதல் வீராங்கனை 2 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் ஓபன் பட்டத்தை வென்று சர்வதேச மகளிர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என அடுத்தடுத்து இரு சாதனை களை புரிந்த மிர்சாவுக்கு தற்போது மேலும் ஒரு கிரிடம் சூட்டப்பட்டு உள்ளது.
சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 134-வது இடம் வகித்து வந்த சானியா மிர்சா, ஐதராபாத் போட்டியில் சாதித்ததன் மூலம் 35 இடங்கள் முன்னேறி 99-வது இடத்தை பெற்று உள்ளார். உலக அளவில் 100-வது இடங்களுக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை சானியா தான். அவர் மொத்தம் 371 புள்ளிகள் பெற்று இருக்கிறார். ஆஸி. ஓபனுக்கு முன்னதாக சானியா 166-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீராங்கனை நிருபமா சஞ்சீவ் 1998-ம் ஆண்டு அதிக பட்சமாக 134-வது தரநிலையில் இருந்தார். அதனை சானியா ஏற்கனவே முறியடித்து விட்டார்.
சானியாவின் தொடர் சாதனைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மற்றொரு இந்திய வீராங்கனை ருஷ்மி சக்ரவர்த்தி 349 இடத்தில் உள்ளார்.
பெண்கள் பிரிவில் அமொpக்காவின் தேவன்போர்டு தொடர்ந்து முதலிடத்தை வகிக்கிறார். ஆஸி. சாம்பியன் அமரிக்காவின் சரினா வில்லியம்ஸ் 2-வது இடத்தில் உள்ளார். பிரான்சின் அமலி மவுரஸ்மோ 3-வது இடம் வகிக்கிறார்.
ஜூனியர் ஆண்கள் தர வாரிசையில் இந்திய இளம் வீரர் ஜவன் நெடுஞ்செழியன் 34-வது இடத்தை பிடித்து உள்ளார். 16 வயதான இவர் சென்னையை சேர்ந்தவர். மற்ற இந்திய ஜூனியர் வீரர்கள் விவேக் ஷேகீன் 43-வது இடமும், சானம்சிங் 89-வது இடமும் பெற்று உள்ளனர்.
<b>சானியாவுக்கு ரூ.2லட்சம் பரிசு </b>
சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் ஓபன் மகளிர் சர்வதேச பட்டத்தை கைப்பற்றிய இந்திய இளம் புயல் சானியா மிர்சாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று கே.கே.பிர்லா பவுண்டேசன் டெல்லியில் அறிவித்து உள்ளது. இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பு மிக்க பெருமை சானியாவுக்கு கிடைத்தது. இதை கவுரவிக்கும் வகையில் இந்த பரிசு தொகை வழங்கப்படுவதாக அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிர்லா கூறினார்.
நன்றி தினகரன்
|
|
|
| 203 பேர் பலி - சீன நிலக்கரி சுரங்கம்புதையுண்ட பயங்கரம் |
|
Posted by: vasisutha - 02-15-2005, 07:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
காஸ் வெடித்தது-203 பேர் பலி - சீன நிலக்கரி சுரங்கம்புதையுண்ட பயங்கரம்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/15/flash/C1144_china.jpg' border='0' alt='user posted image'>
<b><i>சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு போலீசார் ஆயத்தமான காட்சி. </i></b>
சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தக் கோர சம்பவத்திற்கு 203 பேர் பலியாகியுள்ளனர். 22 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி யுள்ளனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வடகிழக்கு சீனாவில் லியோனிங் மாகாணத்தில் புக்சின் நிலக்கரி தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான சுஜpயவான் நிலக்கரி சுரங்கம் உள்ளது. தரை மட்டத்திலிருந்து 794 அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் அமைந்துள்ளது இந்த சுரங்கம். சம்பவம் நடந்த போது 238 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காஸ் சிலிண்டர் எதிர் பாராமல் பயங்கரமாக வெடித்தது. இதில் சுரங்கத்தின் உள்பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன. வெடிவிபத்தினால் ஏற்பட்ட தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி சுமார் 203 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல பேர் காயமடைந்தனர். 13 பேர் உயிருடன் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் மாநில கவர்னர் மற்றும் துணை கவர்னர்கள் இரண்டு பேர் உட்பட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். மீட்புப் பணிகளில் சுமார் 180 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மதியம் மொத்தம் 574 பேர் சுரங்கத்தினுள் பணி செய்து கொண்டிருந்தனர். விபத்து நடப்பதற்கு அரைமணி நேரம் முன்பு 336 பேர் பணிமுடிந்து சுரங்கத்தை விட்டு வெளியேறி விட்டனர். அரைமணி நேரத்திற்கு முன் விபத்து நடந்திருந்தால் உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்திருக்கும்.
சீனாவில் சுரங்க விபத்து நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. கடந்த 2004 ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 6300 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 6000 பேர் இறந்துள்ளனர். சீனாவில் 70 சதவீத மின் உற்பத்திக்கு நிலக்கரியையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் நிலக்கரி சுரங்க உரிமையாளர்களும், அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு அம்சங்களை காற்றில் பறக்க வி;ட்டு தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வருகிறhர்கள். அது மட்டுமல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல நிலக்கரி சுரங்கங்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டன. விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என அரசு எச்சரிப்பதோடு சரி. நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் நிலக்கரி சுரங்க விபத்துகள் அங்கு தொடர்கதையாக உள்ளது.
நன்றி-தினமலர்
|
|
|
| நீங்களும்...... |
|
Posted by: shiyam - 02-15-2005, 07:26 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
சிங்களத்;தலைமை சொல்;லும்;
சின்;னப்; பொடியன்கள் சிலர்;
இரு தசாப்தங்களைக்; கடந்து
இனத்தின்; இன்னல்களுக்கு நிழல் தந்;து
ஆல விருட்சமாய் வளர்ந்து
அகில உலகுமே அதிசயிக்க
புலனாய்வின் நுண்ணிய திறமைகளின்
புதுமைகளை நாளும் காணும்
நாடுகளும்; சற்றே விழிப்படைய
நம் மறவர்களின் சாதனைகளுக்;கு
காலத்துக்குக் காலம் தேவையறிந்து உதவிய
கலிகால மாரியம்மா சந்திரிக்கா அம்மணியே...
அழிக்;க முடியாத தமிழனின்;
அகோர வணக்கங்கள்
நாளும் உன் இனம் பட்டினியில் சாக
நாடு நாடாகக் கையேந்தி
ஆயுதங்களென்றும் கப்பலென்றும்
ஆட்டிலெறி பீரங்கியென்றும் பெற்று
எமககெல்லாம் தேவையறிந்து உதவியவளே
எப்படி நாம் மறப்பது உன்னை.
சமாதானப் புறாவாக இனம் காட்;டி
சாவின்; விளிம்பில் ஐந்து வருடங்கள் வைத்தவளே
சுனாமியால்; வந்த தொகையிலும்;
சுத்துமாத்தில்; வல்லவளென்று காட்டி
நவீனக் கப்பலெனறும்; விமானமென்றும்;
நன்கே வாங்கிக்; குவித்திடும் தாயே
நீ தராதது விமானம்; ஒன்றுதான்;.
அதைத் தருவதற்கென்றே
ஆயத்தங்;களையும்செய்துகொண்டிருக்கிறாய்;.
அடுத்து வரும் சமரிலாவது
அவற்றையும் அன்பளிப்பு செய்வதோடு
நவீனரக கப்பல்களும்;
நங்கூரம்; இட்டுவிடும்; முல்;லைத்தீவில்;.
சந்தோசம்;...
இத்தனை உதவிகள் செய்யும்; உனக்;கு
ஈழத்தில்; வல்லை வெளியில்;
முப்பது அடியில் சிலை எழுப்புகிறோம்;
முடிந்துவிடும்; இந்த ஆண்டு இறுதிக்;குள்;.
கடந்த காலங்களை மறக்காத
கடும் பட்;டினியை கண்ட எம் உறவுகளே
இச் சிலை திறப்பு விழாவிற்கு
இருப்பது விளக்;குமாறானாலும்; கொண்;டுவருக.
வரவேற்கக்; காத்திருக்கும்;
வாழத்; துடிக்;கும்; தமிழன்;.
வரவேற்;பவர்;
த.சு.மணியம்;
நன்றி தமிழ் ஓசை.கொம்
|
|
|
| தலைப்பாகை பரிசு |
|
Posted by: Vaanampaadi - 02-15-2005, 06:50 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
இளவரசர் சார்லசுக்கு மும்பை தொழிலாளர்கள் தலைப்பாகை பரிசு
மும்பை, பிப். 15-
மும்பையில் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் தொழிலாளர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். `டப்பா வாலாக்கள்' என்று அழைக்கப்படும் இவர்கள் தங்களுக்கு என்று சங்கமும் வைத்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு மும்பை வந்தபோது இந்த `டப்பா வாலா' தொழிலாளர்களை சந்தித்து அவர்களை பாராட்டினார். அவர்களுக்கு சார்லசை மிகவும் பிடித்துப்போய் விட்டது. சார்லஸ்-கமீலா பார்க்கர் திருமணம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.
இந்த திருமணத்திற்காக மும்பை `டப்பா வாலா' தொழிலாளர்கள் சார்லசுக்கு மராட்டிய வேலைப்பாடு அமைந்த தலைப்பாகை ஒன்றை திருமண பரிசாக அனுப்பி வைக்கிறார்கள். அதேபோல கமீலாவுக்கு விலை உயர்ந்த 8 முழ சேலை மற்றும் ஜாக்கெட்டை அனுப்பி வைக்கிறார்கள்.
Maalaimalar
|
|
|
| விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல |
|
Posted by: Vaanampaadi - 02-15-2005, 06:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நேற்று இரவு கொம்மந்துரையில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்புநாதன் சசிகரன் (வயது 22) என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல என விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்......
LTTE denies murdered man was member
[TamilNet, February 15, 2005 13:28 GMT]
A man identified as Mr.Sambunathan Sasikaran, 22, was shot dead Monday night around 8.45 in Kommathurai, 17 kilometres north of Baaticaloa. Sri Lanka army spokesman claimed the man was a member of Liberation Tigers. Mr. Sasikaran was riding a motorbike with a friend in Railway Colony in Kommathurai when he was gunned down by two men who came on a motorbike. However, a senior official of the Liberation Tigers said Mr. Sasikaran had nothing to with the LTTE.
Kommathurai is a village garrisoned by the Sri Lanka army.
Mr. Sasikaran was working in the middle east and returned three months ago, Police said.
He is from Vanthaarumoolai, a village, 22 kilometres north of Batticaloa.
His colleague escaped the shooting, Police said.
Tamilnet
|
|
|
| காரைதீவு மாமரங்களில் "தேன் கொட்டும்' அதிசயம் |
|
Posted by: Vaanampaadi - 02-15-2005, 06:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
காரைதீவு மாமரங்களில் "தேன் கொட்டும்' அதிசயம்
செவ்வாய்கிழமை 15 பெப்ரவரி 2005 நல்லையா குமரகுருபரன்
காரைதீவிலுள்ள மாமரங்களில் கடந்த இருதினங்களாக தேன் வடிந்து கொண்ருக்கிறது. காரைதீவிலுள்ள 7 மாமரங்களின் இலைகளிலிருந்து தேன் வடிவதை காண முடிகிறது.பகல் வேளைகளில் மழைதூறல் போன்று தேன் கொட்டுவதை காணக்கூடியதாகவுள்ளது. மாணிக்கம் வல்லிபுரம் என்பவரின் வீட்டிலுள்ள மாமரத்தில் பொலிதீன்பை கட்டியுள்ளனர். அதனுள் 1/4 போத்தல் அளவில் வடிந்துள்ளது. சாமித்தம்பி வேல்முருகு என்பவரின் வீட்டிலுள்ள இரு மாமரங்களிலுமிருந்து தேன் வடிந்து நிலத்தில் படையாகக் காட்சியளிக்கிறது. பூத்த மாமரத்திலிருந்தும் பூக்காத மாமரத்திலிருந்து தேன் கொட்டுகிறது. தொட்டு நக்கிப்பார்த்தால் இனிக்கிறது. அதேவேளை அட்டாளைச்சேனை பகுதியிலும் சில மா மரங்களில் தேன் வடிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுனாமிக்கு பின்னரான இந்த அதிசய நிகழ்வுக்கு தரையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாமோ என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
Source : http://www.nitharsanam.com/?art=8816
|
|
|
| இது போராடும் பூமி... |
|
Posted by: hari - 02-15-2005, 05:20 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
<span style='color:red'>இது போராடும் பூமி...
புலிகளின் காலம்...
பிரபாகரன் வழிகாட்டி.!</span>
புதுவை இரத்தினதுரை
(சித்திரை 1994)
இன்றும் எங்கள் வானத்தில்
வெள்ளிநிலவு பாலை அள்ளித்தான் சொரிகிறது
விண்மீன்கள் கண்தூங்கவில்லை
இலுப்பைமரம் பூத்துக் கொட்டுகிறது
ஆழக்கிணறேதும் ஊற்றடைத்துப் போகவில்லை.
குண்டும் குழியுமான பாதையெனிலும்
இன்றும் பயணம் நடக்கிறது
இது தமிழீழம்
எல்லாம் நடக்கும்
விஜேதுங்காவுக்கு ஒரு வினா
உன்னால் முடியுமா தம்பி?
எங்களுக்கு வித்தே வேண்டாம்
நாங்கள் வேரிலிருந்தே முளைவிடும் சாதி
எங்களைக் கூட்டிக்குவித்து தீயிடு
மறுநாள் சாம்பலிலிருந்து பிறப்போம்.
வெட்டிச் சரித்துப் புதைத்திடு
மூன்றாம் நாள் எங்கள் முகம் தெரியும்
இது தமிழ்ச்சாதி
இங்கே
குண்டு சுமந்து வானூர்தி வட்டமிடும்
குழிகள் தேடி எவரும் ஓடுவதில்லை
போட்டுவிட்டு "புக்காரா" போகும்
புழுதியைத் தட்டிவிட்டு
அந்த இடத்திலேயே மீண்டும் பாய்விரிப்போம்
சிதறிப்போன சுவரின் கற்களை எடுத்தே
அடுப்பு மூட்டி சமையல் தொடங்குவோம்.
விஜேதுங்கா!
என்னடா பொடியா செய்யப் போகிறாய்?
இது தமிழ்சாதி
தீக்குளித்தும் தோல்கருகாச் சாதி
கண்களினால் சுவாசித்து
மூக்கினால் பார்க்கும் வித்தியாசமானவர்கள்
மலைகளில்லையென்று நாங்கள் தளரவில்லை
ஆறுகளில்லையென்று அந்தரித்துப் போகவில்லை
ஆழக் கிணறுவெட்டி நீரள்ளிக்குடிகின்றோம்
ஆக மூன்றுமாதங்களே இங்கு மழைபொழியும்
என்றாலும் பச்சை நிறத்தில் தான்
எங்கள் மண் பாவாடை கட்டியுள்ளது
இது தமிழ்சாதி
தெருப்புழுதியில் கயிறு திரித்து
தேரிழுக்கும் சாதி
அப்பு விஜேதூங்கா!
என்னசெய்யும் உத்தேசம்
படைகளை நடத்தி தடகளப் போட்டியா?
நல்லது நாளை சந்திப்போம்.
வெற்றிக் கிண்ணத்துடன் பேசுவோம்.
எதிரியை வாவென்று கடிதம் எழுதியாச்சு
தமிழனே! நீ என்ன செய்கின்றாய்.
பூச்செடிகளுக்கு முள்ளும்
பறவைகளுக்குச் சொண்டும்
மிருகங்களுக்குக் கொம்பும் ஏன் கொடுக்கப்பட்டது?
போராட வழங்கிய போர்க்கருவிகள் அவை.
"அழிக்கவருபவனை அழித்துவிடு"
கீதையின் சாரமே இதுதான்.
நிமிர்ந்து நிற்பவையே நிலைக்கும்
விழுந்து கிடப்பன யாவும் மிதிக்கப்படும்
தலை நிமிர்ந்த பனைகளைத் தறிக்கக்கூடாது
சட்டமே வந்துவிட்டது
ஆனால்...
முல்லைக்கொடியை மிதிக்கக் கூடாது என்று
ஏன் எவரும் குரலெழுப்பவில்லை?
காலில் விழுந்து கிடப்பவைகளை
எவரும் கணக்கெடுத்துக் கொள்வதில்லை
அதனால் தான்.
மனிதர்களுக்கும் இது பொருந்தும்.
தமிழனே!
மணிமுடிதரித்த உன் தலையில்
வெய்யிலுக்குத் தொப்பி போடவும் வெட்கப்படுகின்றாய்
ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் உலாவந்தவனே!
அச்சுமுறிந்த சைக்கிள்தானும் உன்னிடம் இல்லையா?
ஊருக்கெல்லாம் துணி நெய்து கொடுத்தவனே!
கோமணத்துண்டுக்கும் வழியற்றுப் போனாயா?
வாழும் வழிகள் ஆயிரம் சொன்னவனே!
ஆளும் உரிமையை மட்டும் யாரிடம் கொடுத்தாய்?
கொம்பும், முரசும், பேரிகையும் எங்கே?
கவசமும், வேலும், கைவாளும் எங்கே?
இவற்றையெல்லாம் எறிந்துவிட்டு
அன்னதானமடத்தில் என்னடா செய்கிறாய்?
இந்தமண்ணில் உனக்கொரு வரலாறு வேண்டும்.
இருந்தாய், வாழ்ந்தாய் என்பதற்கு
அடையாளம் வேண்டும்.
உன் தலைமுறைக்கு ஒரு சரித்திரம் இருக்கட்டும்.
உயிர் என்ன உயிர்.
அதைக்காட்டு பார்க்கலாம்.
உருவமற்ற ஒன்றுக்காக ஏன் அச்சப்படுகின்றாய்
எத்தனை காலம் வாழ்ந்தாய் என்பதில்
பெருமை கிடையாது
எப்படி வாழ்ந்தாய் என்பதே மகிமைக்குரியது
. குறவணன் புழுவும், கும்புடுபூச்சியும் கூட
பூமியில்தான் வாழ்கின்றன.
யார்தான் கணக்கில் எடுத்தார்கள்?
போருக்கு வாவென்று
எதிரிக்குக் கடிதம் போட்டாச்சு
நீ புறப்படு.
பீளைசாறிய கண்களைத் திறந்துபார்
பாயைச் சுருட்டி அசைவிலேபோடு
தாயிடம் விடைபெறு
உன் தங்கை எங்கே?
உனக்குமுன் அவள் களத்துக்குப் போய்விட்டாள்
வெளியே பார் வெய்யில் அடிக்கிறது
இது போராடும் பூமி...
புலிகளின் காலம்...
பிரபாகரன் வழிகாட்டி.
|
|
|
|