![]() |
|
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ] - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ] (/showthread.php?tid=5237) |
கடல் என்னும் பெண்ணும் தீவென்னும் ஆணும் [ கவிதன் ] - kavithan - 02-15-2005 <img src='http://kavithan.yarl.net/kavithan_img/penninmanthu_kadal_aaninmanthu_thiivu-thumb.PNG' border='0' alt='user posted image'> <span style='font-size:21pt;line-height:100%'>பெண்ணின் மனது பெரிய கடல் ஆணின் மனதோ சிறிய தீவு கடலலைகள் எப்போதும் தீவினை அணைத்துக்கொண்டிருக்கும் ஆனால் அது அணைப்பு அல்ல அந்த அலைகள் அணைப்பது போல் நடித்துக்கொண்டிருக்கின்றன. என்றோ ஒரு நாள் கடல் பெருக்கெடுக்கும் அன்று அந்த அலைகள் அந்த தீவினை ஆக்கிரமித்துக்கொள்ளும். அப்படி தான் பெண். நன்றாகா பேசுவாள் இனிக்க இனிக்க கதை சொல்வாள். இனிமையாக சிரிப்பாள். இளைமையின் உணர்ச்சிகளை தூண்டுவாள் இயல்பான வாழ்க்கையை கெடுப்பாள் அவள் இல்லாவிட்டால் வெறுமை என உணரவைப்பாள் வேளை தவறாமல் உன்னிடம் வருவாள் அழகாய் இருப்பாள் அணையா விளக்காய் இருப்பேன் ஒளிதருவேன் ஒற்றுமையாய் இருப்பேன். நீ சொல்வதே வேதவாக்கு சொல்வதை செய்வேன் எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பேன். நான் வேறு நீ வேறு அல்ல என கதைவசனம் சொல்வாள் புதுமை பெண்ணாய் நானிருப்பேன் பூமியாய் உன்னை தாங்கிடுவேன் என புதுமையாக பேசுவாள் பூரிப்பாய் இருக்கும் ஆனால் இப்படி இருப்பவள் கடைசியில் ஒரு நாள் பூகம்பம் போல் சட்டென காலை வாரிவிடுவாள். குழியினுள் விழுந்தவன் அன்று தொட்டு குற்றுயிரும் குலையுயிரும் தான். இப்படியும் நடக்கும் அலையின் தாக்கத்தால் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக குட்டி தீவு மூழ்கி கொண்டிருக்கும் கடைசியில் ஒரு நாள் முற்றாகா அது அழிந்துவிடும். ஆனால் அலைகள் தொடர்ந்து அடுத்த தீவை நோக்கியோ தரையை நோக்கியோ நகர்ந்து கொண்டிருக்கும். அப்படி தான் இதுவும் ஒரு பெண்ணின் தாக்கத்தால் ஒரு ஆண் குடி மகன் ஆகிறான் அன்று தொட்டு அவன் கொஞ்சம் கொஞ்சமாக குடியால், புகையால் தவறான பழக்கவழக்கங்களால் அழியத்தொடங்குகிறான் கடைசியில் ஒரு நாள் இவனும் அழிந்து போகிறான் ஆனால் பெண் மீண்டும் ஒரு ஆணை நோக்கி தன் பார்வைகளை திருப்புகிறாள் அதனை பார்த்து அவன் மயங்க அன்று தொடங்கிகிறது அவன் அழிவு காலம்.</span> கவிதன் 13/02/2005 இரவு 12.00 மேலும் கவிதைகளுக்கு.............கவிதைத்தோட்டம் - KULAKADDAN - 02-15-2005 ஆகா... அப்ப நல்ல ஒரு களமமைத்திருக்கிறீர்கள்.... :wink: வாழ்த்துக்கள்......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-15-2005 ம் அங்க ஒரு கவிப்போரே நடந்திச்சு.. வாழ்த்துக்கள் தம்பி.. மச்சாளுக்கு ஒரு கவிதையும் எழுதலையோ..?? ஓ அது ரகசியக்கவிதையோ அப்ப சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 02-15-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->ஆகா... அப்ப நல்ல ஒரு களமமைத்திருக்கிறீர்கள்.... :wink: வாழ்த்துக்கள்......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> வாழ்த்துக்கு நன்றி நீங்கள் குடிலுக்கு வந்திருந்தீர்கள் நன்றி.. உங்கள் கருத்துக்களையும் கூறி இருக்கலாமே.... அங்கு ஒலிக்கும் பாடல்கள் காதல் படத்திலிருந்து வெளிவந்தவை. களம் அமைத்தால் காணாது .. அதுக்கு சரியா பிழையா என்று கருத்து சொல்லணும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-15-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ம் அங்க ஒரு கவிப்போரே நடந்திச்சு.. வாழ்த்துக்கள் தம்பி.. மச்சாளுக்கு ஒரு கவிதையும் எழுதலையோ..?? ஓ அது ரகசியக்கவிதையோ அப்ப சரி :lol: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->கவிப்போர் நிறைவடைந்து புதிய கவிதைகள் வரதொடங்கி விட்டது .. பார்க்கவில்லையோ.... அதோடை மச்சாளுக்கு கவிதை எதுக்கு அவ உங்கை யாழிலை வாற எல்லா கவிதிஅயையும் தானே வாசிக்கிறா.... ம்ம்.. இந்த கவிதைக்கு கருத்தை சொல்லேல்லையே. நைசா.. காய் வெட்டீட்டு போறியள்.. அப்ப சரி என்றா சொல்கிறீர்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 02-15-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பெண்ணின் மனது பெரிய கடல் ஆணின் மனதோ சிறிய தீவு <!--QuoteEnd--><!--QuoteEEnd--> þÃ× 12.00 Á½¢ìÌ ¯¾¢ò¾ ¸üÀ¨É ¦Àñ½¢ý Áɨ¾ ¦Àâ ¸¼Ä¡¸×õ, ¬½¢ý Áɨ¾ º¢È¢Â ¾£Å¡¸×õ Å÷½¢ò¾ Å¢¾õ «Õ¨Á. Å¡úòÐì¸û... - kavithan - 02-15-2005 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> பெண்ணின் மனது பெரிய கடல் ஆணின் மனதோ சிறிய தீவு <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <b>þÃ× 12.00 Á½¢ìÌ ¯¾¢</b>ò¾ ¸üÀ¨É ¦Àñ½¢ý Áɨ¾ ¦Àâ ¸¼Ä¡¸×õ, ¬½¢ý Áɨ¾ º¢È¢Â ¾£Å¡¸×õ Å÷½¢ò¾ Å¢¾õ «Õ¨Á. Å¡úòÐì¸û...<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கு நன்றி அக்கா - KULAKADDAN - 02-15-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->[களம் அமைத்தால் காணாது .. அதுக்கு சரியா பிழையா என்று கருத்து சொல்லணும்.... :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இன்னும் ஒரு பெண்ணும் எனக்கு ஒண்டுமே சொல்லலை...அனுபவம் பத்தாதக்கும்.... :wink: ஆனா வர்ணிப்பு பிடிச்சிருக்கு..... 8) - kavithan - 02-15-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin-->[களம் அமைத்தால் காணாது .. அதுக்கு சரியா பிழையா என்று கருத்து சொல்லணும்.... :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இன்னும் ஒரு பெண்ணும் எனக்கு ஒண்டுமே சொல்லலை...அனுபவம் பத்தாதக்கும்.... :wink: ஆனா வர்ணிப்பு பிடிச்சிருக்கு..... 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஏதோ நமக்கு அனுபவம் ஆக்கும்... சும்மா கற்பனையிலை சொல்லுங்கள் :wink: அக்கா தங்கைகளிடம்.. வாங்கி கட்டாமல் எஸ்கேப் ஆகிற பிளானோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-15-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ம்ம்.. இந்த கவிதைக்கு கருத்தை சொல்லேல்லையே. நைசா.. காய் வெட்டீட்டு போறியள்.. அப்ப சரி என்றா சொல்கிறீர்கள் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் பாவம் வீனான பிரச்சனை என்று விட்டேன். காதலிப்பவர்கள் அதனை அனுபவித்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் கம்முண்டு இருக்கிறார்கள். உங்களை மாதிரி கற்பனைக்காரர்கள் தான் கண்ட படி எழுதுகிறார்கள். சிலருக்கு பெண்களைப்பற்றி தாழ்வாக கவிதை எழுதுவுது தான் அவர்களுக்கு இயலும் கற்பனைகள் அப்படித்தான் அவர்களிற்கு வருகின்றன. அதில நீங்களும் விதிவிலக்கல்ல என்று தான் தெரயுது. பெண்கள் பற்றியும் காதல் பற்றியும். பல இடங்களில் வேண்டிய அளவிற்கு கதைச்சதால் விட்டுவிட்டம். பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று. உங்களுக்கு தெரியும் ஏன் தெரிந்தும் காதலிக்கிறியள். தெரியாமல் தான் கேக்கிறன். பெண்ணிற்காய் புகைக்கிறியள் தண்ணியடிக்கிறியள். சரி காதல் தோல்வியில்லாமல் தண்ணியடிக்கிறவை ஏன் அடிக்கிறினம். நீங்கள் செய்கிற தப்புகளிற்கு. உங்களின் இயலாமைக்கு பெண்கள் என்ற ஒரு சொல்லைப்பயன்படுத்திறியள் இதைவிட என்ன சொல்ல முடியும். கண்ணே மணியே தேனே என்டுவியள். அப்படியே நாயே பேயே. என்டுவியள் உதுகளிற்கெல்லாம் பெண்கள் மயங்கிய காலம் கப்பல் ஏறிவிட்டது. நீங்கள் காதலிக்கிற பெண் உங்களைக்காதலிக்க வேணும் என்று எப்படி எதிர்பார்க்கிறியள். காதலிக்கலை என்று சொன்னால் உடனை ஏமாற்றிப்போட்டாள் என்றுவியள். நம்மைப்பொறுத்த வரை காதல் தோல்வி என்று சொல்லி தண்ணியடிக்கிறவனும். புகைக்கிறவர்களும். தங்களது இயலாமையை மற்றவர்களிற்கு தெரியப்படுத்தி அவர்களின் மு}லம் அனுதாபம் தேடுவதற்காய் செய்வது தான் இதுகள். ஒரு பெண்ணையோ ஒரு ஆணையோ ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது சாதாரணமாய் நடப்பது உண்மை நடக்கிறது. அதற்காய் ஒரு பெண் ஏமாற்றியதற்காய் எல்லாப்பெண்களையும். ஒரு ஆண் ஏமாற்றியதற்காய் எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லவது என்பது. குற்றம் போடுறுவையின் பகுத்தாய்ந்து அறிய முடியாத தன்மை அப்படி என்று தான் சொல்லுவம். - Kurumpan - 02-15-2005 மின்னுவதெல்லாம் பொன்னென்று நம்பவைத்தது யார் குற்றம் உங்கள் குற்றமா, நம்பசொன்ன கண்களின் குற்றமா! ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை பழுது என்பதால் முழு சோற்றையும் கொட்ட நினைப்பது யார் குற்றம். சோற்றின் குற்றமா? இல்லை அதை தரம்பிரித்ததறியாத மனம் கொண்ட உங்களின் குற்றமா? விதியை எதிர்த்து போராடும் பெண்களும் இங்குதான் உள்ளார்கள், விலைமாதாய் வஞ்சிக்கும் பெண்களும் இங்குதான் உள்ளார்கள். காதலில் காமம் மிஞ்சும் போது காதலும் கசக்கிறது. அதற்காக யார் குற்றம் என அறியமுன் தண்டனை கொடுப்பது முறையல்லவே. வரிகள் அழகாக இருக்கலாம், ஆண் பெண் சமநிலைப்படுத்தும் காலத்தில் ஆணாதிக்க வரிகளில் (ஆணை தாழ்த்துவது கூட) கவி வடித்திருப்பது கவலைக்குரியதே! ஒருவர் செய்த பிழைக்காக ஒட்டு மொத்த சமுகத்தினை சாடுவது முறையல்லவே!!! :oops: :oops: :oops: :wink: - வியாசன் - 02-16-2005 பெரும்பாலும் பெண்கள் பெற்றேருக்கு அஞ்சி காதலை தூக்கி எறிந்துவிடுகின்றனர் - aswini2005 - 02-16-2005 viyasan Wrote:பெரும்பாலும் பெண்கள் பெற்றேருக்கு அஞ்சி காதலை தூக்கி எறிந்துவிடுகின்றனர் பெற்றோர் என்ற பதத்தில் ஆணாகிய அப்பாவும் அடக்கம்தானே. அப்போ ஆணாகிய அப்பா ஏன் மகளின் காதலை எதிர்க்க வேண்டும் ? - aswini2005 - 02-16-2005 கவிதன் உங்கள் கவிதை கற்பனையானது என்பது பொய். காரணம் ஆண்களின் சிந்தனையோட்டமே உங்கள் கவிதையின் கருவாகவும் கருத்தோட்டமாகவும் உள்ளது. (குவியண்ணா வந்தா கூவத்துவங்கிவிடுவார்) அதென்ன கவிதன் ஆண்களின் கற்பனைக்குள் ஏன் பெண்களை பலியாக்கும் புத்தியை உங்களுக்குள் படைத்து வைத்துள்ளீர்கள். ஒருவேளை பெண்கள் ஆண்களை இப்படியெல்லாம் எழுதாமைக்குக் காரணம் இல்லாத ஒன்றை ஏன் கற்பனை செய்து எழுத்தையும் கருத்தையும் விரயமாக்குவான் என்றுகூட இருக்கலாம். நீங்கள் வயதால் இளையவர் ஆனால் உங்களது ஆள்மனத்திலும் மூளைக்குள்ளும் ஆள வேரூன்றியிருக்கும் ஆதிக்க மனப்பாங்கை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கும் உங்கள் கவிதையின் நிலைப்பாட்டுடன்தான் ஆண்கவிஞர்கள் ää கலைஞர்கள் ஓரிரண்டு விதிவிலக்கானவர்களை தவிர்த்து மற்றைய உங்கள் சிந்தனை முழுவதும் உங்களுக்குள் பெண் பற்றிய கருத்தூட்டமானது இன்னும் ஆதிக்கப்போக்கையே கடைப்பிக்கிறதும் ää காட்டுவதுமாகவுள்ளது. இளைஞர் ஆகிய நீங்கள்கூட இப்படியான சகதிக்குள் மூழ்கிக்கிடப்பது வேதனை தருகிறது. எத்தனைதான் நீங்கள் பெண்பகளுக்கு உரிமைகள் கொடுத்து விட்டோம் எதை இன்னும் கேட்கிறார்கள் என்று கத்தினாலும் உங்கள் உள் மனங்களில் இன்னும் பெண் இன்றுவரை இந்த நொடிவரையும் சதைதானே தவிர. மனிதசீவன் அல்ல. யாரும் யாரினதும் மனசின் ஆழத்தை அளந்துவிட முடியாது. சும்மா உங்கள் கவிதைகள் பெண் மனசு ஆளம் அகலமென்றெல்லாம் வார்த்தைகளை அளக்கலாமே தவிர ஆண் பெண் இருவருக்குள்ளும் இருப்பதை யாரும் யாராலும் அறியவோ அழக்கவோ முடியாது. சினிமாகாலக் கனவுகளை விட்டு யதார்த்தத்தை புரிந்து கொண்டு கவிதை எழுதுங்கள். காலத்தை பதிகின்ற கவிஞரும் ää கலைஞரும்தான் காலங்களையும் வென்று வாழும் ää வெற்றிக்குரியவர்கள். மற்றெல்லாம் அன்றன்றே வாழ்ந்துவிட்டுச் செத்த பிணங்களே. இளைஞர்களின் சிந்தனைகள் மாற்றம்காண வேண்டும் என்பதன் விருப்பிலேயே இக்கருத்தை இங்கு பகிர்ந்துள்ளேன் கவிதன். - shiyam - 02-16-2005 நகைச்சுவைகவிதைக்கு நன்றி கவிதன் (சும்மாயிருந்த பெண்களை சீண்டி விட்டிட்டீர் இனி உம்மகதி என்னாக போகுதோ)தமிழினியும் அஸ்வினியும் களத்திலை நிக்கினம் பாப்பம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-16-2005 அக்காவா அண்ணாவா நீங்கள் என்று எனக்கு தெரியாது.. பெண்களுக்கு எதிராக நான் எழுதி இருக்கிறேன் இந்த கவிதையை என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இது கற்பனை அல்ல கற்பனை கலந்த உண்மை... இது நியத்தில் நடக்கும் ஒரு பக்கம் இன்னும் பல பக்கங்கள் உண்டு அந்த பக்கங்களில் நான் என் கவிதையை திருப்பவில்லை அந்த பக்கங்களையும் இனி வரும் காலங்களில் சொல்வேன். ஆணாதிக்கம் என்று சொல்கிறீர்களே .. நான் எத்தனையோ கவிதை பெண்களை பற்றி தான் சொல்லி இருகிக்றேன் அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் தான் எழுதி இருக்கிறேன்... ஆனால் அங்கும் தவறோ பிழையோ நடக்கிறது அதையும் சொல்ல வேண்டும் அதற்காக தான் இக் கவிதை.... இந்த கவிதை எழுதிய சந்தர்ப்பம் கேட்டால் அது எப்படி என்று உங்களுக்கே புரியும் ஆனால், அதை சொல்ல விரும்பவில்லை. கொஞ்சம் கற்பனை மிகுதி நியம்.... ஒரு பெண்ணின் நிலையை சித்தரிக்கும் போது தான் மேலும் பல நல்ல பெண்களின் கருத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஏன் தமிழினி அக்கா.. நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம் ... நான் எப்போதாவது பெண்களுக்கு எதிராய் கருத்து சொன்னேனா... கவிதை எழுதினேனா.... இதுவும் அவர்களுக்கு எதிராய் இல்லையே... இப்படி இருப்பவர்களீடம் ஆண்களே விழிப்பாய் இருங்கள் என்ற எச்சரிக்கை... ஏன் பெண்கள் கூட அவர்களிடம் விழிப்பாய் இருக்க வேண்டும். இப்படி பெண்களை விழிப்பாய் இருங்கள் என்றும் கவிதை தோட்டத்தில் எழுதிய கவிதைகள் இருக்க வேண்டும் தற்போது நேரம் இன்மையால் அதனை இங்கே தேடி கொண்டு வந்து இட முடியவில்லை. நான் பெண்களுக்கு எதிரானவனா இருந்தால் அப்படி கவிதையை எழுத வேண்டிய அவசியமோ பிரசுரிக்க வேண்டிய அவசியமோ தேவை இல்லை. கவிதை எழுதுபவர்கள் எப்போதும் ஒரே கருத்தை சொல்வதை விட பல சம்பவங்களை வைத்தும் சொல்ல வேண்டும் அப்போது தான் அவர்கள் உங்களை போன்றோரிடம் இருந்து நல்ல கருத்துக்களை பெற்று கொள்ளமுடியும். எல்லோரும் என்னையே குறை சொல்கிறீர்களே...... இப்படி நியத்தில் எதுவும் நடக்கவே இல்லையா? உண்மையைக் கூறுங்கள். பெண்களாகவோ ஆண்களாகவோ பார்க்காமல் நீங்கள் அறிந்தவற்றில் அனுபவித்தவற்றில் இருந்து கூறுங்கள் - shiyam - 02-16-2005 ஆம் கவிதன் சொன்னது போல் பாதிப்பு என்பது ஒரு பாலாருக்குமே மட்டும் சொந்தமானது அல்ல அது இருபாலாருக்கும் எப்போதும் வௌ;வேறு வடிவங்களில் வரக்கூடிய ஒன்றுதான் ஆனால் ஆனால் அது உறவுகளிற்கோ அல்லது நண்பர் களிற்கோ வரும்போது அதிகமாக பாதிப்பதில்லை சிலநாட்களிற்கு கவலை பின்னர் சரி ஆனால் காதல் எனும்போதுதான் பலர் மனம் உடைந்து போகிறார்கள் அது தற்கொலைவரை போகிறது அல்லது பழிவாங்கலாகிறது ஏன் காரணம் காதல் தான் ஒரு சராசரி மனிதனை அதிகம் பாதிக்கிறது அது இருபாலாருக்கும் பொருந்தும் .ஆண்கள் தண்ணியடிப்பது புகைப்பது தாடிவிடுவது இதெல்லாம் ஒரு உளவியல் ரீதியில்தங்களிற்கு சோகம் என காட்டிகௌ;வதற்கே.ஆண்களில்வெகு சிலரே தற்கொலை செய்கின்றனர். இதில் பொண்களின் வீதமே அதிகம் தற்கொலை ஏன் ??தற் கொலையால்உங்கள் பக்க நியாயம் நிருபிக்கபடுகின்றதா??தண்ணியடிப்பதால் ஆண்களின் சோகம் அந்த தண்ணியில் கழுவபடுகின்றதா?? நிச்சயமாக இல்லை.ஒரு முடிவு என்பது இன்னெரு உதயத்திற்கான ஆரம்பம் வீழ்ச்சி என்பது என்ன இன்னொரு எழுச்சி எனவே இளைஞர்களே யுவதிகளே எதையும் தோல்வியாக எடுத்து துவண்டு போகாமல் புதிதாய் பிறப்போம்
- Kurumpan - 02-16-2005 கவிதன்! வாழ்வில் பல சம்பவங்கள் நடப்பதுண்டு. ஒருவருடைய நடப்பினை வைத்து அந்த வம்சத்தினை வஞ்சிப்பது முறையன்று. ஒரு பெண் குற்றமிளைத்தால் பெண்களே குற்றமிளைத்ததாக பொருள் படாது. கொலைகாரனின் மகன்/மகள் அண்ணல் காந்தி போன்றொ, அன்னை தெரேசா போன்று கூட இருக்கலாம். அதற்காக கொலைகார/ரி யாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அதுபோல காதலை ஒருத்தி அவமதித்தற்காக பெண்களே அப்படித்தான் என கூறமுடியாது. தண்டிக்கத் தெரிந்தவன் இறைவன் மன்னிக்கத்தெரிந்தவன் மனிதன். இறைவனாக இல்லா விடினும் மனிதனாக இருக்க முயற்சிப்போம். - shiyam - 02-16-2005 Quote:கொலைகாரனின் மகன்ஃமகள் அண்ணல் காந்தி போன்றொகுறும்பன் காந்தியை பற்றி வடிவாக தெரிந்து கொண்டு கதைக்கவும் காந்தி நீங்கள் நினைப்பது போல் ஒண்டும் சுத்தமான உதாரணம் காட்ட கூடியவர்:அல்ல - Kurumpan - 02-16-2005 shiyam Wrote:Quote:கொலைகாரனின் மகன்ஃமகள் அண்ணல் காந்தி போன்றொகுறும்பன் காந்தியை பற்றி வடிவாக தெரிந்து கொண்டு கதைக்கவும் காந்தி நீங்கள் நினைப்பது போல் ஒண்டும் சுத்தமான உதாரணம் காட்ட கூடியவர்:அல்ல அண்ணாச்சி.... யாரும் வாழ்வில் முழுமையான(100%) பரிசுத்தமானவர்கள் கிடையாது. மற்றவரை விட சிலவேளைகளில் இன்னொருவர் பரவாயில்லை எனத்தோன்றும் அந்த எண்ண ஓட்டத்தில் தான் இது எழுதப்பட்டுள்ளதே தவிர மற்றவரது வாழ்க்கையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என கருதுபவன் அடியேன்.... |