Yarl Forum
தலைப்பாகை பரிசு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: தலைப்பாகை பரிசு (/showthread.php?tid=5243)



தலைப்பாகை பரிசு - Vaanampaadi - 02-15-2005

இளவரசர் சார்லசுக்கு மும்பை தொழிலாளர்கள் தலைப்பாகை பரிசு

மும்பை, பிப். 15-

மும்பையில் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் தொழிலாளர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். `டப்பா வாலாக்கள்' என்று அழைக்கப்படும் இவர்கள் தங்களுக்கு என்று சங்கமும் வைத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு மும்பை வந்தபோது இந்த `டப்பா வாலா' தொழிலாளர்களை சந்தித்து அவர்களை பாராட்டினார். அவர்களுக்கு சார்லசை மிகவும் பிடித்துப்போய் விட்டது. சார்லஸ்-கமீலா பார்க்கர் திருமணம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

இந்த திருமணத்திற்காக மும்பை `டப்பா வாலா' தொழிலாளர்கள் சார்லசுக்கு மராட்டிய வேலைப்பாடு அமைந்த தலைப்பாகை ஒன்றை திருமண பரிசாக அனுப்பி வைக்கிறார்கள். அதேபோல கமீலாவுக்கு விலை உயர்ந்த 8 முழ சேலை மற்றும் ஜாக்கெட்டை அனுப்பி வைக்கிறார்கள்.

Maalaimalar


- Kurumpan - 02-15-2005

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதோ!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-15-2005

<b>Kurumpan</b>, இருப்பிடம் கொலண்டோ.........