| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 385 online users. » 0 Member(s) | 382 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,423
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஈ-மெயில் மூலம் மலர்ந்த காதல் சினிமாவில் அல்ல யாழ்ப்பாணத்தில் |
|
Posted by: Vaanampaadi - 02-15-2005, 11:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஈ-மெயில் மூலம் மலர்ந்த காதல்;
சினிமாவில் அல்ல யாழ்ப்பாணத்தில்!
நேற்று (14.02.2005) உதயன் பத்திரிகையில் வெளியானது
இன்று அனைத்துலக காதலர் தினம். இன் றைய தினத்தில் காதலர்களுக்கு உதயன்| சார்பாக சுவாரஸ்யமான செய்தி எதையாவது கொடுக்கலாமா என்று சிந்தித்தபோதுதான் இந்தச் செய்தி கிடைத்திருக்கிறது.
இதுவும் ஒரு காதல் கதை|தான் அதுவும் ஈ-மெயில் மூலமாக மலர்ந்த காதல்.
ஈ-மெயில் மூலமான காதல் என்றவுடன் புதிய சினிமாப் படங்களில் வந்த காதல் கதையோ என்று நினைத்தால் அது உங்கள் தவறு. இது ஈ-மெயில் மூலம் மலர்ந்த நிஜக் காதல்.
வெளிநாட்டவர்கள் ஈ-மெயில் மூலமாகத் தமது காதல் ஜோடிகளைத் தேர்த்தெடுப்ப தும் - அந்தக் காதல் சிலவேளைகளில் திரு மணத்தில் முடிவடைவதும் பழைய கதை தானே... இதிலென்ன புதுமை என்று நீங்கள் வியப்பது தெரிகிறது...!
இது வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட விட யம் அல்ல... நம் நாட்டுக் காதல் ஜோடி பற்றியது.
என்ன... நம்பவே முடியவில்லையா? நம் பித்தான் ஆகவேண்டும்! இனி விடயத்துக்கு வருவோம்.
கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜேர்மனில் வசித்துவருகின்றார். அவ ருக்கும் மட்டக்களப்பில் உள்ள யுவதி ஒரு வருக்கும் இடையில் ஈ-மெயில் மூலமாக காதல் மலர்ந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் நேரடி யாகச் சந்திக்காமலேயே ஒருவருடத்தையும் தாண்டி வெற்றி நடைபோட்டது இந்தக் காதல்.
இந்த நிலையில்தான் கடந்த சில வாரங் களுக்கு முன்னர் தனது வீட்டாருக்குத் தெரி யாமல் - கோண்டாவிலில் உள்ள காதலனின் வீட்டுக்கு ஓடிவந்துவிட்டார் காதலி. மட்டக்களப் பிலுள்ள யுவதியின் பெற்றோர் தமது மக ளைக் காணாது தேடி அலைந்தனர்.
எப்படியோ - மகள் யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்ட விடயம் அவர்களுக்குத் தெரிய வந்துவிட்டது. உடனே அவர்கள் விடயத்தை அங்குள்ள பொலீஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
மட்டக்களப்புப் பொலீஸார் கோப்பாய் பொலீஸாருடன் தொடர்புகொண்டு விடயத் தைக் கூறினர்.
கோப்பாய்ப் பொலீஸார் பிரஸ்தாப யுவதி யைப் பிடித்து மட்டக்களப்புக்கு அவளது பெற் றோரிடம் அனுப்பிவைப்பதற்காக கடந்த வியா ழக்கிழமை கோண்டாவில் உள்ள இளைஞ னின் வீட்டுக்குச் சென்றனர்.
...ஐயையோ ஈ-மெயில் காதலி பொலீஸா ரிடம் சிக்கிவிட்டாரோ என்று நீங்கள் அங் கலாய்ப்பது தெரிகிறது.
அதுதான் இல்லை... மட்டக்களப்பில் உள்ள தனது பெற்றோருக்குக் கொடுத்ததைப் போல கோப்பாய்ப் பொலீஸாருக்கும் ஷடிமிக்கி| கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார் யுவதி.ஏமாற்றத்துடன் பொலீஸார் திரும்பிச்சென்றுவிட்டனர். தொடர்ந்தும் விசார ணைகள் நடக்கின்றன.
இ;வ்வளவுதான் விடயம்...
என்ன சுவாரஸ்யமாக இருந்ததா உதய னின் காதல் செய்தி...? அப்படியானால் ஒரு நன்றி...!
Uthayan
|
|
|
| புறாக்களுக்கு உணவு கொடுத்த பெண்ணுக்கு ஜெயில் |
|
Posted by: Vaanampaadi - 02-15-2005, 11:37 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
புறாக்களுக்கு உணவு கொடுத்த பெண்ணுக்கு ஜெயில்
அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதுப் பெண் ஒருத்தி, புறாக்களுக்கு உணவு கொடுத்ததால், ஜெயிலில் அடைக்கப் பட்டாள்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதலே அன்னா ஸ்டாஹன் சிக், புறாக்களுக்கு உணவு தானியங்களை தீனியாக அளித்து வந்தார்.
அதிக அளவில் பறவைகள், உணவு எடுக்க வந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளை அவை அசுத்தப்படுத்தின. இதனால் அண்டை வீட்டார் புறாக்களுக்கு உணவு கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதை அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளாததால் அவர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிபதி பிராங் பிரெஜியாட்டோ, புறாக்களுக்கு உணவு போடவேண்டாம் என்று எச்சரித்தார். அதற்குச் சம்மதம் தெரிவித்த அன்னா, தொடர்ந்து புறாக்களுக்கு உணவு கொடுத்து வரத்தொடங்கினார்.
இதை அக்கம் பக்கத்தினர் வீடியோ படம் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை மீறி, புறாக்களுக்கு உணவு கொடுத்ததற்காக அவருக்கு ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
Dailythanthi
|
|
|
| உழைக்கும் கரங்களும், உதவும் கரங்களும் |
|
Posted by: Vaanampaadi - 02-15-2005, 11:24 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/15-2-2005/15harry.jpg' border='0' alt='user posted image'>
உழைக்கும் கரங்களும், உதவும் கரங்களும்
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரீஸ் இரக்க குணம் உள்ளவர். கொடை உள்ளம் கொண்டவர் என்று பெயர் எடுத்தவர். அதுமட்டு மல்ல அவர் சிறந்த உழைப்பாளி. கடினமாக உழைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கிலாந்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் நிவாரண பொருட்களை இன்னும் அனுப்பி வருகிறது.
பிரிஸ்டல் நகரில் இருந்து இவை அனுப்பப்படுகின்றன. ஹாரீஸ் அந்த குடோனிலேயே கடந்த சில நாட்களாக தங்கி இருக்கிறார். நிவாரண பொருட்களை பெட்டிகளில் அடைப்பது தள்ளு வண்டியில் வைத்து இழுத்துச் செல்வது போன்ற வேலைகளை அவரே செய்கிறார். சாதாரண கூலித்தொழிலாளி போல அவர் கடுமையாக உழைப்பதை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்.
Maalaimalar
|
|
|
| கரட் சாதம் |
|
Posted by: thamizh.nila - 02-15-2005, 05:43 AM - Forum: சமையல்
- Replies (18)
|
 |
கரட் சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
காரட் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
உள்ளி - 2 பல்லு
உப்பு - தேவைக்கு ஏற்ப
காரம் மசாலா - 1/2 தே.க
எண்ணை /நெய் - 1 மே.க
1.காரட்டை சிறிய தூள்களாக்கவும்.
2.இஞ்சி,உள்ளி,கருவா,பச்சை மிளகாயை , சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
3.எண்ணை/நெய் சிறிதளவு ஒரு சட்டியில் இடவும். [அடுப்பை பற்ற வைக்க மறக்க வேண்டாம்].
4.முன்னர் நீங்க அரைத்து எடுத்த கலவையை சட்டியில் இட்டு , கலவையில் பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.
5.காரட் தூள்களை போட்டு கிளறவும். [தண்ணீர் சேர்க்க வேண்டாம்]
உப்பு & காரம் மசால சேர்க்கவும்.
6.கரட் அவிந்ததும், சாதத்தை சேர்க்கவும்.
7.2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து, கொத்த மல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும். [அல்லது நீங்களே சாப்பிடலாம் - இப்படி போடாட்டி கவிதன் அண்ணா கிண்டல் அடிப்பார்].
|
|
|
| குமுறும் லண்டன் தமிழர்கள்! |
|
Posted by: KATPUKKARASAN - 02-15-2005, 04:50 AM - Forum: புலம்
- Replies (19)
|
 |
குமுறும் லண்டன் தமிழர்கள்!
"கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் தமிழ் சினிமாவுலருந்து யாராவது வந்தா, ஆதரிக்க மாட்டோம்...' என்று குமுறியுள்ளார் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர். இவர் இலங்கை தமிழ் மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் அங்கத்தினர். காரணம் கேட்டபோது, "லட்சம், லட்சமா சம்பாதிக்கிற இவங்க சொந்தக் கடனை அடைக்க லண்டன் வந்தப்போ, வாரிக் கொடுத்தோம். இப்போ இலங்கையில எங்கட மக்களை சுனாமியில வாரிக் கொடுத்துட்டு நிற்கிறோம். இவங்க யாரும் இதுக்கு உதவ முன்வரல... இனி தமிழ் திரையுலகத்திலிருந்து யார் வந்தாலும் ஆதரவளிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம். ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்கள் மனநிலையும் இதுதான்...' என்றார் அவர்.
|
|
|
| படங்கள் பாருங்க.......... |
|
Posted by: KULAKADDAN - 02-14-2005, 05:33 PM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
<img src='http://img51.exs.cx/img51/4945/image236.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/9702/image237.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/1274/image238.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/5623/image239.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/8796/image240.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/4020/image241.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/648/image0221.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/3042/image242.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/7558/image024.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/7388/image245.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/4465/image246.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/1584/image247.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/8097/image248.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/2964/image249.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img51.exs.cx/img51/8/image250.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| துணை நடிகையின் கள்ளக் காதலன் தற்கொலை! |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 02:17 PM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
பிப்ரவரி 14, 2005
துணை நடிகையின் கள்ளக் காதலன் தற்கொலை!
சென்னை:
திருமணமான துணை நடிகையுடன் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கிய திருமணமான டப்பிங் ஆர்டிஸ்ட் தற்கொலை செய்து கொண்டார்.
துணை நடிகையான அமிதா (38) திருமணமானவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் சினிமா டப்பிங் பின்னணி குரல் கொடுப்பவரான ராஜசேகருக்கும் (43) இடையே கள்ளக் காதல் இருந்து வந்தது. ராஜசேகரும் திருமணமானவர், இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன் தினம் இருவரும் திருத்தணியில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கினர்.
அமிதா லாட்ஜ் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராஜசேகர் மட்டும் அறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் கதவை ராஜசேகர் திறக்காததால் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார் அமிதா.
அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அமிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியது. அப்போது தெரிய வந்த விவரங்கள்:
10 ஆண்டுகளாக ராஜசேகர்அமிதா இடையில் கள்ளக் காதல் இருந்து வந்தது. இந்த விவரம் அமிதாவின் கணவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து கணவர் அவரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் திருத்தணிக்கு வந்துள்ளனர். இந் நிலையில் தான் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமிதா நெருக்கியதால் தான் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
Thatstamil
|
|
|
| தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை கொலை செய்ய ..... |
|
Posted by: Vaanampaadi - 02-14-2005, 02:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை கொலை செய்ய இலங்கை அரச புலனாய்வுத்துறை திட்டம்.
திங்கட்கிழமை 14 பெப்ரவரி 2005 நல்லையா குமரகுருபரன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொலைசெய்துவிட்டு அதனை ஓர் உள்மோதலாகக் காட்டுவதற்கு இலங்கை அரச புலனாய்வுப்பிரின் தமிழ்ப்பிரிவான கருணா குழு திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியப்படை என்று இலங்கை அரச புலனாய்வுப்பிரிவில் தொழிற்பட்டு வரும் இரகசிய தாக்குதல் படைப்பிரிவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரையும் அரசியலில் இருந்து ஒதுங்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தவறும் பட்சத்தில் கொலை செய்யபடுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை அரச புலனாய்வுபிரிவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவரும் ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக பல கொலைகளுக்கு உரிமை கோரிவரும் இந்த ஆங்கில இணையத்தளமானது வெளியிட்ட இன்றைய செய்திக் குறிப்பொன்றில் இந்தத் தகவலை வெளியி;டுள்ளது.
கடந்த காலத்தில் பலர் கொலை செய்யப்படலாம் என்று இந்த இணையத்தளத்தின் ஊடாக எச்சரிக்கப்பட்டு பின்னர் அவை செயல் வடிவம் பெற்றிருந்தமை இவ்வேளை நினைவுகூரத்தக்கதாகும்.
Source : Nitharsanam
http://www.nitharsanam.com/?art=8788
|
|
|
|