Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 538 online users.
» 0 Member(s) | 535 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,422
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  அன்று வந்ததும் அதே நிலா!
Posted by: Vaanampaadi - 02-14-2005, 12:46 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

அன்று வந்ததும் அதே நிலா!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக காத லித்து வந்த கமீலாவை மறுமணம் செய்து கொள்ளப்போகிறார் அல்லவா?

காதலர் தினமான இன்று, இந்த வயது முதிர்ந்த காதலர்கள் பற்றிய ஒரு செய்தி-

1972-ம் ஆண்டு போலோ விளையாட்டின்போதுதான் கமீலாவும், சார்லசும் முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது கமீலா திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். சார்லசும், டயானாவை திருமணம் செய்து இருந்தார். இருந்தபோதிலும் சார்லசும், கமீலா வும் ஒருவரை ஒருவர் விரும்பினார் கள்.

இந்த காதல் ஜோடிகளுக்கு பூர்வ ஜென்ம தொடர்பும் இருந்ததாம். இதை சார்லசே கூறி இருக்கிறார்.

அதாவது கமீலாவின் கொள்ளுப்பாட்டியான அலிஸ் கெப்பலும், சார்லசின் கொள்ளுத்தாத்தாவான 7-வது எட்வர்டு மன்னரும் கள்ளக்காதலர்களாக இருந்தார்களாம். அந்த காதல்தான் இப்போது சார்லஸ்-கமீலாவையும் பற்றிக்கொண்டு விட்டது.

------------

முன்பு சார்லஸ்-டயானா திருமணத்தின்போது இங்கிலாந்து முழுவதும் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.

அதேபோல சார்லஸ்-கமீலாவின் மறு மணத்துக்காக ஏப்ரல் 8-ந்தேதி தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயருக்கு கோரிக்கைகள் வந்தன. கேட்ஸ்ஹெட் என்ற இடத்தில் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. ``விடுமுறை விடக்கூடாது'' என்று மாநாட்டில் பெரும்பாலோர் கருத்து வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து ``சார்லஸ் மறுமணத்துக்காக தேசிய விடுமுறைவிடும் எண்ணம் இல்லை'' என்று டோனிபிளேயர் அறிவித்தார்.

--------------

இங்கிலாந்து அரச பரம்பரையில் காதலைப்போலவே மோதலும் மோசமாக இருந்தது.

இங்கிலாந்து மன்னராக இருந்த 4-ம் ஜார்ஜ×க்கும் அவரது மனைவி கரோலினுக்கும் இடையே எப்போதும் சண்டைதான். கரோலின், 53 வயதில் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலம் லண்டன் நகர வீதிகளில் நடைபெறக்கூடாது என்று மன்னர் 4-ம் ஜார்ஜ் உத்தரவிட்டார். அந்த அளவுக்கு அவர் மனைவியை வெறுத்து இருந்தார்.

---------------

இதுவும் ஒரு காதல் விவகாரம்தான். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் பற்றியது.

சமீபத்தில் இங்கிலாந்தில் பிரபலமான ரிச்சர்டு அண்டு ஜுடி என்ற டெலிவிஷன் நிகழ்ச்சியில் தோன்றிய டோனி பிளேயரின் மனைவி, "எனது கணவர் இதுவரை ஒரு காதலர் தினத்தில் கூட பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியது இல்லை" என்று குறைபட்டுக் கொண்டார்.

மறுவாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோனி பிளேயர், "நான் எனது போக்கை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. மனைவிக்கு பூங்கொத்து கொடுக்க மாட்டேன். ஆனால் காதலை வெளிப்படுத்த வேறு வழிகளும் உள்ளன. அதை நான் நிச்சயம் செய்வேன்" என்றார்.

Dailythanthi

Print this item

  மோசமான சர்வாதிகாரிகள் பட்டியல்
Posted by: Vaanampaadi - 02-14-2005, 12:39 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மோசமான சர்வாதிகாரிகள் பட்டியல்: முஷரப் இடம் பிடித்தார்

வாஷிங்டன் பிப். 14-

உலகில் மோசமாக விளங்கும் சர்வாதிகார குணம் படைத்த ஆட்சியாளர்கள் யார்-யார்? என்ற விவரத்தை அமெரிக்க பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டி யலில் 10 தலைவர்கள் இடம் பெறுவார்கள்.

மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மோச மான சர்வாதிகாரிகள் பட்டி யலில் பாகிஸ்தான் அதிபர் முஷரப் இடம் பெற்று இருக்கிறார். அவருக்கு 7-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு முஷரப் இந்த பட்டியலில் இடம் பெற்ற தில்லை. இப்போது தான் முதல் முறையாக சேர்க்கப்பட்டிருக் கிறார்.

மோசமான சர்வாதிகாரியாக முதல் இடத்தை பிடித்திருப்பவர் சூடானை சேர்ந்த உமர் அல்-பஷ்மிர் ஆவார். கிம் ஜாங் இல்-2 (வடகொரியா) 2-வது இடமும் தான்சுவி (பர்மா) 3-வது இட மும் ஷீ ஜிந்தா (சீனா) 4-வது இடமும் இளவரசர் அப்துல்லா (சவுதி அரேபியா) 5-வது இட மும் கடாபி (லிபியா) 6-வது இடமும் பெற்றுள்ளார்கள்.

முஷரப்புக்கு அடுத்தபடியாக சாபர்முரத் தியாசோவ் (துர்க் மினிஸ்தான்) 8-வது இடத்தை யும் ராபர்ட் முகாபே (ஜிம் பாப்வே) 9-வது இடத்தையும் திடோரோ ஒபியவ் நியுமா (இகிடோரியல்கினியா) 10-வது இடத்தையும் பெற்றிருக்கிறார் கள்.

கடந்த ஆண்டில் வெளியான பட்டியலில் கியுபா நாட்டு ஜனாதிபதி பிடரல் கேஸ்ரோ சுவிட்சர்லாந்து மன்னர் மஸ் வாதி ஆகியோர் இடம் பெற்றி ருந்தார்கள். ஆனால் இந்த முறை அந்த இருவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் கள்.

இதற்கு காரணம் தற்போது இடம் பெற்றுள்ள 10 பேரைவிட அவர்கள் இருவரும் பரவா யில்லை என்பதேயாகும்.

பாகிஸ்தான் அதிபராக இருக் கும் முஷரப் ஜனாதிபதி மற்றும் ராணுவ தளபதி ஆகிய இரு உயர்ந்த பதவிகளை வகிக்கிறார். ராணுவ தளபதி பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்தார். பிறகு பல்டி அடித்து விட்டார். அவருடைய இந்த நிலையற்ற தன்மை காரணமாக சர்வாதி காரி பட்டியலில் இடம்பிடித்த தாக கூறப்படுகிறது.

Maalaimalar

Print this item

  நட்சத்திரங்களின் காதல்
Posted by: Mathan - 02-14-2005, 12:38 PM - Forum: சினிமா - Replies (28)

நட்சத்திரங்களின் காதல் - காதலர்தின ஸ்பெஷல்

<img src='http://gallery.indiainfo.com/tamil/albums/album51/n11a.jpg' border='0' alt='user posted image'>

இன்று காதலுக்கு ரெக்கை முளைக்கும் தினம்! கடவுள் இல்லாத மனிதர்கள் உண்டு. காதல் இல்லாத மனங்கள் இல்லை. அந்த மனங்கள் ஒன்றையொன்று அறிந்து காதலில் ஐக்கியமாகும் தினம் இது. காதலை வளர்க்கும் சினிமா நட்சத்திரங்கள் காதலை குறித்து என்ன சொல்கிறார்கள்?

அஜித்: காதல் என்பது புரிதல். காதலிக்கும் போது மைனஸ் தெரியாது. எல்லாமே 'ப்ளஸ்' ஆக தெரியும். திருமணத்திற்குப் பிறகும் அதே போல் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், அதுதான் உண்மையான காதல். காதலிக்கும் போது இருக்கும் ஆர்வம், காத்திருத்தல் எல்லாமே கல்யாணத்திற்குப் பிறகும் நீடித்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால், காதல் எப்போதுமே புதிதாக இருக்கும்.

thaனுஷ்: பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்குள் வரும் காதல், அம்மா-அப்பா பற்றி யோசிக்காது. முதல் காதல் 90 சதவிகிதம் வெற்றி பெற்றது கிடையாது. அந்த காதல் திருமணத்தில் முடிந்தால் அவன் கொடுத்து வைத்தவன்... அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன்!

பாலாஜி சக்திவேல்: பருவ வயதிற்கு மேல் வரும் காதல் சாதி, மதம், பணம் பார்த்து வருவது. ஆகவே பருவத்துக்குள் வருகிற உணர்வுதான் காதல். அதை காலம் உள்ளவரை மறக்கமுடியாது.

ராதிகா: காதல் புனிதமானது. காதல் இல்லையேல் பூமி இல்லை. காதலுக்கு வயது ஒரு தடையல்ல. தாய்க்கு குழந்தை மீது வருவதும் காதல்தான்.

நமிதா: காதல் ரொம்ப மென்மையானது. காதலர் தினத்தில் பொக்கே, கார்ட்ஸ், கிப்ட் என்று நிறைய வரும். கூடவே மெதுவாக காதலை ஓபன் செய்வாங்க. நான் நாசுக்காக இதை மறுத்திடுவேன். ஏன்னா என் மனதில் ஏற்கனவே வேறொருத்தர் இருக்கார்.

விஜய்: காதல் பொதுவானது. அது காதலர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் என் ரசிக்ர்களிடம் வைத்திருப்பதும் காதல்தான். காற்று இருக்கும் இடமெல்லாம் காதலும் இருக்கும்.

இவர்களைத் தவிர த்ரிஷா, ஹரிணி, சினேகா, அனாமிகா, ரீமாசென், ஜோதிகா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே காதலுக்கு ஜே போடுகிறது.

CineSouth

Print this item

  20 ஆண்டுகளாக மயங்கி கிடந்த பெண்
Posted by: Vaanampaadi - 02-14-2005, 12:30 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/14-2-2005/14health.jpg' border='0' alt='user posted image'>
20 ஆண்டுகளாக மயங்கி கிடந்த பெண்

அமெரிக்காவின் ஹட்சின்சன் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சாரா ஸ்கேன்ட்லின் என்ற பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் இவர். ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் ஒருவர் இந்த பெண் மீது காரை மோதியதால் காயத்துடன் விழுந்த சாராவுக்கு பேச முடியவில்லை.

அவருக்கு பழைய நினைவுகளும் இல்லை. 20 ஆண்டுகளாக பேச முடியாமல், உறவினர்களை அடையாளம் காணக்கூட முடியாத நிலையில் இருந்த சாராவுக்கு இப்போதுதான் ஓரளவு நினைவு திரும்பத் தொடங்கி இருக்கிறது. சாராவின் அருகே அவரது தாய் மற்றும் தந்தை சோகமே உருவாக உட்கார்ந்து இருக்கும் காட்சி.

Maalaimalar

Print this item

  சர்ச்சையாகும் காதலர் தினம்...!
Posted by: kuruvikal - 02-14-2005, 11:56 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<b>காதலர் தினம்: சிவசேனா பஜ்ரங்தள் போர்க்கொடி</b>

காதலர் தினத்தை விபச்சார தினமாக அனுசரிக்கப் போவதாக சிவசேனா எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்துக்கு சிவ சேனை, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் வருடாவருடம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்கும் ஆர்ச்சீஸ் உள்ளிட்ட கடைகளை சிவ சேனைத் தொண்டர்கள் உடைத்து எறிவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந் நிலையில் போபாலில் சிவசேனா, பஜ்ரங் தள் அமைப்பினருக்கு பாடம் கற்பிக்க சில மாணவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. காதலர்களை தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்கப் போவதாக என்எஸ்யூஐ மாணவர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்காக காதலர்கள் பொதுவாகக் கூடும் இடங்களில் தங்களது மாணவர் படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனால் அடிதடி தகராறு ஏற்படாமல் தடுக்க போபாலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே காதலர் தினத்தை விபச்சார தினமான அனுசரிக்கப் போவதாக சிவசேனாவின் டெல்லி கிளை அறிவித்துள்ளது. கல்லுõரிகள் அதிகம் அமைந்துள்ள கமலா நகர் பகுதியில் காதலர் தின எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப் போவதாகவும் சிவசேனை கூறியுள்ளது.

இது குறித்து டெல்லி சிவசேனா தலைவர் ஜெய் பகவான் கோயல் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய இளைஞர்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் விஷத்தை செலுத்துகின்றனர். காதலர் தினம் இளைஞர்களை நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டில் இருந்து விலகிச் செல்ல வைக்கிறது.

காதல் தினம் போன்ற விழாக்களால் தான் டெல்லி பள்ளிகளில் எம்.எம்.எஸ். ஆபாச வீடியோக்கள் தோன்றின என்றார்.

தட்ஸ்தமிழ்.கொம்

----------------------------------------

அதுசரி பள்ளி மாணவர்களுக்கு படிப்பு என்ன காதலோ...இல்ல படையமைத்துப் பாதுகாக்கிற அளவுக்கு அதில என்ன முக்கியமோ தெரியல்ல... அவர்களுக்கு காதல் பற்றித் தெரிந்ததென்ன...ஆணும் பெண்ணும் பேசிப் பறைதலும் கட்டிக் கொஞ்சுவதும் தானோ...????!

பார்பர்ணியச் சித்தாந்தங்களுக்காக மறுதரப்பார் குரல் கொடுக்கிறார்கள் போலும்... ஆனால் எங்கள் கருத்து காதலர் தினம் என்ற போர்வையில் காதல் கேளிக்கையாக்கப்படாமல்...உண்மையான உணர்வு நிலைக்காதல் பாதுகாக்கப்பட வேண்டும் அதுதான் மனிதனை வளப்படுத்தும்..நாகரிகம் காக்க வைக்கும்...! :wink: Idea

Print this item

  காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!
Posted by: kuruvikal - 02-14-2005, 10:54 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (84)

தாம் தமிழர்கள் என்று...நவராத்திரி...தீபத்திருநாள் தீபாவளி....பொங்கல் திருநாள் தைப்பொங்கள்...வருடப் பிறப்பு இவை எதுவுமே தமிழர்கள் திருநாள் அல்ல என்று சாதிக்க நின்றவர்கள் மேற்குலக வியாபாரத் திருநாளான காதலர் தினம் பற்றி மூச்சும் விடாமல் அதைக் அமர்க்களமாய்க் கொண்டாடுகின்றனர்...! Idea

காதலர் தினம் தமிழர்கள் தினமா... கல்வி செல்வம் வீரம் விழுமியம் காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை...! ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை...செலவை ஊக்கிவிக்கவில்லை...காதல் பண்டமல்ல பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை...மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டிவந்தோம் தொன்றுதொட்டு...! இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி...நாம் இப்போ அந்த வழியிலா நிற்கிறோம்...??!

காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு...அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்...! அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்...அதற்கு ஏன் ஒரு விழா...திருநாள்...இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்...???!

மேற்குலக வர்த்தக விளம்பர நோக்கத்துக்காக உருவாகியதை பார்பர்ணிய சித்தாந்தங்களை உணராது உள்வாங்கிக் கொண்டது போல உள்வாங்குவோரே...ஒரு கணம் சிந்தியுங்கள்...<b>காதலர் தினம் தமிழர் திருநாளா என்று</b>....!!!!!!!!!!!!!

Print this item

  &quot;நினைவு நாள்&quot;
Posted by: sri - 02-14-2005, 03:22 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (11)

14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்

Print this item

  காதலே நிம்மதி
Posted by: Mathan - 02-14-2005, 02:49 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (40)

காதல் கசக்குமா...?

"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...
என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.

ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது என்றும் கூறப் படுகிறது.

தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.

வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.

இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.

நன்றி - சந்திரவதனா

Print this item

  மதம் பிடிக்கும் முறை
Posted by: Mathan - 02-14-2005, 02:38 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (1)

மதம் பிடிக்கும் முறை

சத்தியமாக இது யானை பற்றிய பதிவு கிடையாது.

என்னுடைய அயலில் ஒரு வீட்டிற்குப் போகவேண்டியிருந்தது. அங்கே, என் மகனின் பள்ளியில் படிக்கும் ஒரு பத்து வயதுப் பையன் இருக்கிறான். காரியம் அவனுடன் இல்லை; அவன் தோப்பனாருடன். பெரியவர் வீட்டின் கீழடுக்கில் துணிகளைத் துவைக்க (மெசினுக்குள் போட்டுத்தான்) சென்றிருப்பதாகச் சொல்லி பையன் என்னைக் காத்திருக்கச் சொன்னான். என்னை யாரென்று அவனுக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் உள்ளே வந்து உட்காருங்கள் என்று சொல்லவில்லை.

பெற்றவர் படியேறி வரும்வரை நேரத்தைக் கழிக்க வேண்டுமே, நல்ல வார்த்தையாகப் பையனிடம் ஏதாவது பேசலாம் என்று தோன்றியது.

"உனக்குப் புதுப் பள்ளிக்கூடம் பிடித்திருக்கிறதா?" (இந்தப் பையனும், என் பையன்களும் படிக்கும் அந்தப் பள்ளிக்கூடம் இந்த வருடம்தான் திறக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி இன்னொரு நாள் எழுதியாக வேண்டும்).

"ஆமாம், நல்ல பள்ளிக்கூடம்"

"உன்னுடைய ஆசிரியர் யார்?"

"--- இன்னார்"

"அவர் நன்றாகப் பாடம் நடத்துகிறாரா?"

"பரவாயில்லை"

"கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எல்லாம் உங்கள் பள்ளிக்கூடத்தில் மிக நன்றாக நடந்தன இல்லையா?"

"ம்ம்.. ஓக்கே"

(இந்த நேரத்தில் தோப்பனார் படியேறி வந்துவிட்டிருந்தார். இருந்தும் பையனுடன் உடனே பேச்சை நிறுத்தமுடியவில்லை)

"நான் உன்னைப் பார்த்தேனே, கரோல் பாடும்பொழுது முன்வரிசையில், ரெயின்டீயரைப் போல கொம்பு வைத்த குல்லாய் போட்டுக் கொண்டிருந்தாய் இல்லையா?"

"இல்லை, நான் இல்லை"

"நாலாம் வகுப்புப் பாடலைச் சொல்கிறேன், நீ நாலாம் வகுப்புதானே"

"ஆமாம், நான் நாலாம் வகுப்புதான், ஆனால் நானில்லை"

"என்ன இப்படிச் சொல்கிறாய், பச்சைக் கலரில் மஃப்ளரைக் கழுத்தில் மாலைபோலப் போட்டுக்கொண்டிருந்தாயே?"

"இல்லை, நான் இல்லை, நான் ஒருபொழுதும் கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டத்தில் கலந்துகொள்ளமாட்டேன்"

"ஏன்?"

"நான் ஒரு யூதன்"

"நாங்களும் கூடத்தான் கிறிஸ்துவர்கள் இல்லை, ஆனால் என் மகன் வகுப்பில் பாடினான்"

"யூதர்கள் ஒருபொழுதும் கிறிஸ்துமஸ் போன்ற அபத்ததைக் கொண்டாடுவதில்லை"

(இதைச் சொல்லும் பொழுது அவன் கண்களில் ஒரு பெருமிதம், ஒரு கணம் அவன் அப்பாவைப் பார்த்தேன், அவர் ஈன்ற பொழுதினில் பெரிதுவந்து கொண்டிருந்தார். எனக்குப் பெரும் அதிர்ச்சி).

"இல்லையப்பா, இதில் என்ன இருக்கிறது, எல்லோரும் சந்தோஷமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும்பொழுது நாமும் அவர்கள் சந்தோஷத்தில் கலந்துகொள்ள வேண்டுமில்லையா?"

"ம்ம்.. அவர்கள் சந்தோஷம், என் சந்தோஷமில்லை. கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் சந்தோஷம் என் துயரம்"

"அப்படியா!?"

"ஆமாம், மேலும் யூதர்கள் எல்லோரையும்விட உயர்வானவர்கள். அதனால்தான் அவர்களை எல்லோரும் அழிக்க முற்படுகிறார்கள்"

"அது தெரியாது எனக்கு. நான் யூதனில்லை. நான் பிறந்த இடத்தில் யூதர்கள் கிடையாது"

"உலகத்தில் யூதர்கள் இல்லாத இடமே இல்லை"

"இருக்கலாம், எங்கள் ஊரில்கூட. ஆனால் அதிகம் கிடையாது, எனவே நான் சந்தித்ததில்லை"

"அவர்கள் நல்லவர்கள்"

"ஆமாம், எல்லோரும் நல்லவர்கள்தான்"

...

"பையனுக்கு வரலாறு பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லிக் கொடுக்கிறோம். அது தெரிந்தால்தானே ஏமாறாமல் இந்த உலகில் பிழைக்கமுடியும்"

"ஆமாம், உங்கள் பையன் நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். தெளிவாகப் பேசுகிறான். சரி, இந்தாருங்கள் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய செக்"

"சரி..."

"நன்றி, நான் போய்வருகிறேன்"

பையனைப் போலவே அப்பாவும் அங்கே காலியாகக் கிடந்த நாற்காலியில் உட்காரச் சொல்லவில்லை. எனக்கு அதற்கான தேவையும் இல்லை என்றுதான் தோன்றியது.

* * *

வீட்டிற்கு வந்தால் பாதி விளையாட்டில் வந்து கதவைத் திறந்துவிட்ட சிறிய மகன், "one flame, two flames, three flames,... seven flames, it is Hanukkah" என்று ஒவ்வொரு படியாகக் கத்திக் கொண்டே விளையாட்டைத் தொடர மாடியேறிச் சென்றான்.

venkat

Print this item

  மரணதண்டனையை வாபஸ் பெற முடியாது ......
Posted by: Vaanampaadi - 02-14-2005, 02:34 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/13-2-2005/13rushdie.jpg' border='0' alt='user posted image'>
மரணதண்டனையை வாபஸ் பெற முடியாது: சல்மான் ருஷ்டியை தூக்கில் போடுவோம்- ஈரான் மீண்டும் பிடிவாதம்

தெகரான், பிப். 13_

இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு புத்தகம் எழுதினார். `சாத்தானின் வேதம்' என்ற இந்த புத்தகம் முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது என்று ஈரான் அரசு புகார் கூறியது.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எங்கு இருந்தாலும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் அரசு உத்தரவிட்டது. 16 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது ஈரானின் மதத் தலைவரும், அதிபரும் ஆன அயத்துல்லா கோமேனி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சல்மான் ருஷ்டியை தேடிப்பிடித்து அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கொலையாளிகளும் நாலா பக்கமும் அனுப்பப்பட்டனர். சல்மான் ருஷ்டி தலைக்கு ரூ.13 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஈரானுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனையை நிறைவேற்றாமல் ஈரான் அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் மதத்தலைவர் அயத்துல்லா கோமேனி மரணம் அடைந்து விட்டார். புதிய தலைவராக அயத்துல்லா அலி காமினி பதவி ஏற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

சல்மான் ருஷ்டி மரண தண்டனை பற்றிய பிரச்சினையையும் பல்வேறு நாடுகள் மறந்து விட்டன.

ஆனால் இப்போது அந்த பிரச்சினைக்கு ஈரான் மீண்டும் உயிரூட்டி இருக்கிறது. 1990_ம் ஆண்டு சல்மான் ருஷ்டிக்கு மரணதண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவு இன்னும் அப்படியே இருக்கிறது. அந்த தண்டனையை வாபஸ் பெற முடியாது.

மறைந்த தலைவர் பிறப்பித்த உத்தரவை ஈரான் புரட்சிப்படை நிறைவேற்றியே தீரும் என்று புதிய தலைவர் அலி காமினி கூறி இருக்கிறார்.

Print this item