Yarl Forum
சர்ச்சையாகும் காதலர் தினம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: சர்ச்சையாகும் காதலர் தினம்...! (/showthread.php?tid=5273)



சர்ச்சையாகும் காதலர் தினம்...! - kuruvikal - 02-14-2005

<b>காதலர் தினம்: சிவசேனா பஜ்ரங்தள் போர்க்கொடி</b>

காதலர் தினத்தை விபச்சார தினமாக அனுசரிக்கப் போவதாக சிவசேனா எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்துக்கு சிவ சேனை, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் வருடாவருடம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்கும் ஆர்ச்சீஸ் உள்ளிட்ட கடைகளை சிவ சேனைத் தொண்டர்கள் உடைத்து எறிவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந் நிலையில் போபாலில் சிவசேனா, பஜ்ரங் தள் அமைப்பினருக்கு பாடம் கற்பிக்க சில மாணவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. காதலர்களை தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்கப் போவதாக என்எஸ்யூஐ மாணவர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்காக காதலர்கள் பொதுவாகக் கூடும் இடங்களில் தங்களது மாணவர் படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனால் அடிதடி தகராறு ஏற்படாமல் தடுக்க போபாலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே காதலர் தினத்தை விபச்சார தினமான அனுசரிக்கப் போவதாக சிவசேனாவின் டெல்லி கிளை அறிவித்துள்ளது. கல்லுõரிகள் அதிகம் அமைந்துள்ள கமலா நகர் பகுதியில் காதலர் தின எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப் போவதாகவும் சிவசேனை கூறியுள்ளது.

இது குறித்து டெல்லி சிவசேனா தலைவர் ஜெய் பகவான் கோயல் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய இளைஞர்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் விஷத்தை செலுத்துகின்றனர். காதலர் தினம் இளைஞர்களை நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டில் இருந்து விலகிச் செல்ல வைக்கிறது.

காதல் தினம் போன்ற விழாக்களால் தான் டெல்லி பள்ளிகளில் எம்.எம்.எஸ். ஆபாச வீடியோக்கள் தோன்றின என்றார்.

தட்ஸ்தமிழ்.கொம்

----------------------------------------

அதுசரி பள்ளி மாணவர்களுக்கு படிப்பு என்ன காதலோ...இல்ல படையமைத்துப் பாதுகாக்கிற அளவுக்கு அதில என்ன முக்கியமோ தெரியல்ல... அவர்களுக்கு காதல் பற்றித் தெரிந்ததென்ன...ஆணும் பெண்ணும் பேசிப் பறைதலும் கட்டிக் கொஞ்சுவதும் தானோ...????!

பார்பர்ணியச் சித்தாந்தங்களுக்காக மறுதரப்பார் குரல் கொடுக்கிறார்கள் போலும்... ஆனால் எங்கள் கருத்து காதலர் தினம் என்ற போர்வையில் காதல் கேளிக்கையாக்கப்படாமல்...உண்மையான உணர்வு நிலைக்காதல் பாதுகாக்கப்பட வேண்டும் அதுதான் மனிதனை வளப்படுத்தும்..நாகரிகம் காக்க வைக்கும்...! :wink: Idea