Yarl Forum
அன்று வந்ததும் அதே நிலா! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அன்று வந்ததும் அதே நிலா! (/showthread.php?tid=5269)



அன்று வந்ததும் அதே நிலா! - Vaanampaadi - 02-14-2005

அன்று வந்ததும் அதே நிலா!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக காத லித்து வந்த கமீலாவை மறுமணம் செய்து கொள்ளப்போகிறார் அல்லவா?

காதலர் தினமான இன்று, இந்த வயது முதிர்ந்த காதலர்கள் பற்றிய ஒரு செய்தி-

1972-ம் ஆண்டு போலோ விளையாட்டின்போதுதான் கமீலாவும், சார்லசும் முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது கமீலா திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். சார்லசும், டயானாவை திருமணம் செய்து இருந்தார். இருந்தபோதிலும் சார்லசும், கமீலா வும் ஒருவரை ஒருவர் விரும்பினார் கள்.

இந்த காதல் ஜோடிகளுக்கு பூர்வ ஜென்ம தொடர்பும் இருந்ததாம். இதை சார்லசே கூறி இருக்கிறார்.

அதாவது கமீலாவின் கொள்ளுப்பாட்டியான அலிஸ் கெப்பலும், சார்லசின் கொள்ளுத்தாத்தாவான 7-வது எட்வர்டு மன்னரும் கள்ளக்காதலர்களாக இருந்தார்களாம். அந்த காதல்தான் இப்போது சார்லஸ்-கமீலாவையும் பற்றிக்கொண்டு விட்டது.

------------

முன்பு சார்லஸ்-டயானா திருமணத்தின்போது இங்கிலாந்து முழுவதும் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.

அதேபோல சார்லஸ்-கமீலாவின் மறு மணத்துக்காக ஏப்ரல் 8-ந்தேதி தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயருக்கு கோரிக்கைகள் வந்தன. கேட்ஸ்ஹெட் என்ற இடத்தில் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. ``விடுமுறை விடக்கூடாது'' என்று மாநாட்டில் பெரும்பாலோர் கருத்து வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து ``சார்லஸ் மறுமணத்துக்காக தேசிய விடுமுறைவிடும் எண்ணம் இல்லை'' என்று டோனிபிளேயர் அறிவித்தார்.

--------------

இங்கிலாந்து அரச பரம்பரையில் காதலைப்போலவே மோதலும் மோசமாக இருந்தது.

இங்கிலாந்து மன்னராக இருந்த 4-ம் ஜார்ஜ×க்கும் அவரது மனைவி கரோலினுக்கும் இடையே எப்போதும் சண்டைதான். கரோலின், 53 வயதில் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலம் லண்டன் நகர வீதிகளில் நடைபெறக்கூடாது என்று மன்னர் 4-ம் ஜார்ஜ் உத்தரவிட்டார். அந்த அளவுக்கு அவர் மனைவியை வெறுத்து இருந்தார்.

---------------

இதுவும் ஒரு காதல் விவகாரம்தான். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் பற்றியது.

சமீபத்தில் இங்கிலாந்தில் பிரபலமான ரிச்சர்டு அண்டு ஜுடி என்ற டெலிவிஷன் நிகழ்ச்சியில் தோன்றிய டோனி பிளேயரின் மனைவி, "எனது கணவர் இதுவரை ஒரு காதலர் தினத்தில் கூட பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியது இல்லை" என்று குறைபட்டுக் கொண்டார்.

மறுவாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோனி பிளேயர், "நான் எனது போக்கை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. மனைவிக்கு பூங்கொத்து கொடுக்க மாட்டேன். ஆனால் காதலை வெளிப்படுத்த வேறு வழிகளும் உள்ளன. அதை நான் நிச்சயம் செய்வேன்" என்றார்.

Dailythanthi


Re: அன்று வந்ததும் அதே நிலா! - Vasampu - 02-14-2005

Vaanampaadi Wrote:அன்று வந்ததும் அதே நிலா!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக காத லித்து வந்த கமீலாவை மறுமணம் செய்து கொள்ளப்போகிறார் அல்லவா?

காதலர் தினமான இன்று, இந்த வயது முதிர்ந்த காதலர்கள் பற்றிய ஒரு செய்தி-

1972-ம் ஆண்டு போலோ விளையாட்டின்போதுதான் கமீலாவும், சார்லசும் முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது கமீலா திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். சார்லசும், டயானாவை திருமணம் செய்து இருந்தார். இருந்தபோதிலும் சார்லசும், கமீலா வும் ஒருவரை ஒருவர் விரும்பினார் கள்.


Dailythanthi

என்ன வானம்பாடி நீங்களே தவறாக தகவல் தரலாமா ???
சார்ள்ஸ் - டயானா திருமணம் செய்து கொண்டது 1981 இல் திருமணத்திற்கு முன்பிருந்தே சார்ள்ஸ் கமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தார். :roll: :roll: :roll: :roll:


- thamizh.nila - 02-15-2005

அப்படி தான் நானும் ஒரு புத்தகத்தில் படித்தேன்...சார்ள்ஸ் இளைஞராக இருந்த காலத்திலேயே இவவை தெரியுமாமே.. :evil: