Yarl Forum
மரணதண்டனையை வாபஸ் பெற முடியாது ...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மரணதண்டனையை வாபஸ் பெற முடியாது ...... (/showthread.php?tid=5278)



மரணதண்டனையை வாபஸ் பெற முடியாது ...... - Vaanampaadi - 02-14-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/13-2-2005/13rushdie.jpg' border='0' alt='user posted image'>
மரணதண்டனையை வாபஸ் பெற முடியாது: சல்மான் ருஷ்டியை தூக்கில் போடுவோம்- ஈரான் மீண்டும் பிடிவாதம்

தெகரான், பிப். 13_

இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு புத்தகம் எழுதினார். `சாத்தானின் வேதம்' என்ற இந்த புத்தகம் முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது என்று ஈரான் அரசு புகார் கூறியது.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எங்கு இருந்தாலும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் அரசு உத்தரவிட்டது. 16 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது ஈரானின் மதத் தலைவரும், அதிபரும் ஆன அயத்துல்லா கோமேனி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சல்மான் ருஷ்டியை தேடிப்பிடித்து அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கொலையாளிகளும் நாலா பக்கமும் அனுப்பப்பட்டனர். சல்மான் ருஷ்டி தலைக்கு ரூ.13 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஈரானுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனையை நிறைவேற்றாமல் ஈரான் அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் மதத்தலைவர் அயத்துல்லா கோமேனி மரணம் அடைந்து விட்டார். புதிய தலைவராக அயத்துல்லா அலி காமினி பதவி ஏற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

சல்மான் ருஷ்டி மரண தண்டனை பற்றிய பிரச்சினையையும் பல்வேறு நாடுகள் மறந்து விட்டன.

ஆனால் இப்போது அந்த பிரச்சினைக்கு ஈரான் மீண்டும் உயிரூட்டி இருக்கிறது. 1990_ம் ஆண்டு சல்மான் ருஷ்டிக்கு மரணதண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவு இன்னும் அப்படியே இருக்கிறது. அந்த தண்டனையை வாபஸ் பெற முடியாது.

மறைந்த தலைவர் பிறப்பித்த உத்தரவை ஈரான் புரட்சிப்படை நிறைவேற்றியே தீரும் என்று புதிய தலைவர் அலி காமினி கூறி இருக்கிறார்.


- வியாசன் - 02-14-2005

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: