![]() |
|
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை கொலை செய்ய ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை கொலை செய்ய ..... (/showthread.php?tid=5258) |
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை கொலை செய்ய ..... - Vaanampaadi - 02-14-2005 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை கொலை செய்ய இலங்கை அரச புலனாய்வுத்துறை திட்டம். திங்கட்கிழமை 14 பெப்ரவரி 2005 நல்லையா குமரகுருபரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொலைசெய்துவிட்டு அதனை ஓர் உள்மோதலாகக் காட்டுவதற்கு இலங்கை அரச புலனாய்வுப்பிரின் தமிழ்ப்பிரிவான கருணா குழு திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியப்படை என்று இலங்கை அரச புலனாய்வுப்பிரிவில் தொழிற்பட்டு வரும் இரகசிய தாக்குதல் படைப்பிரிவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரையும் அரசியலில் இருந்து ஒதுங்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தவறும் பட்சத்தில் கொலை செய்யபடுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை அரச புலனாய்வுபிரிவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவரும் ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக பல கொலைகளுக்கு உரிமை கோரிவரும் இந்த ஆங்கில இணையத்தளமானது வெளியிட்ட இன்றைய செய்திக் குறிப்பொன்றில் இந்தத் தகவலை வெளியி;டுள்ளது. கடந்த காலத்தில் பலர் கொலை செய்யப்படலாம் என்று இந்த இணையத்தளத்தின் ஊடாக எச்சரிக்கப்பட்டு பின்னர் அவை செயல் வடிவம் பெற்றிருந்தமை இவ்வேளை நினைவுகூரத்தக்கதாகும். Source : Nitharsanam http://www.nitharsanam.com/?art=8788 - MEERA - 02-15-2005 மேற்கண்ட செய்தியை படிக்கும் போது ஒன்று நன்றாக தெரிகிறது இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளம் தனது தொடர்பை வெளிக்கட்டுகிறது. - Mathan - 02-15-2005 :roll: |