![]() |
|
ஈ-மெயில் மூலம் மலர்ந்த காதல் சினிமாவில் அல்ல யாழ்ப்பாணத்தில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈ-மெயில் மூலம் மலர்ந்த காதல் சினிமாவில் அல்ல யாழ்ப்பாணத்தில் (/showthread.php?tid=5249) |
ஈ-மெயில் மூலம் மலர்ந்த காதல் சினிமாவில் அல்ல யாழ்ப்பாணத்தில் - Vaanampaadi - 02-15-2005 ஈ-மெயில் மூலம் மலர்ந்த காதல்; சினிமாவில் அல்ல யாழ்ப்பாணத்தில்! நேற்று (14.02.2005) உதயன் பத்திரிகையில் வெளியானது இன்று அனைத்துலக காதலர் தினம். இன் றைய தினத்தில் காதலர்களுக்கு உதயன்| சார்பாக சுவாரஸ்யமான செய்தி எதையாவது கொடுக்கலாமா என்று சிந்தித்தபோதுதான் இந்தச் செய்தி கிடைத்திருக்கிறது. இதுவும் ஒரு காதல் கதை|தான் அதுவும் ஈ-மெயில் மூலமாக மலர்ந்த காதல். ஈ-மெயில் மூலமான காதல் என்றவுடன் புதிய சினிமாப் படங்களில் வந்த காதல் கதையோ என்று நினைத்தால் அது உங்கள் தவறு. இது ஈ-மெயில் மூலம் மலர்ந்த நிஜக் காதல். வெளிநாட்டவர்கள் ஈ-மெயில் மூலமாகத் தமது காதல் ஜோடிகளைத் தேர்த்தெடுப்ப தும் - அந்தக் காதல் சிலவேளைகளில் திரு மணத்தில் முடிவடைவதும் பழைய கதை தானே... இதிலென்ன புதுமை என்று நீங்கள் வியப்பது தெரிகிறது...! இது வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட விட யம் அல்ல... நம் நாட்டுக் காதல் ஜோடி பற்றியது. என்ன... நம்பவே முடியவில்லையா? நம் பித்தான் ஆகவேண்டும்! இனி விடயத்துக்கு வருவோம். கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜேர்மனில் வசித்துவருகின்றார். அவ ருக்கும் மட்டக்களப்பில் உள்ள யுவதி ஒரு வருக்கும் இடையில் ஈ-மெயில் மூலமாக காதல் மலர்ந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் நேரடி யாகச் சந்திக்காமலேயே ஒருவருடத்தையும் தாண்டி வெற்றி நடைபோட்டது இந்தக் காதல். இந்த நிலையில்தான் கடந்த சில வாரங் களுக்கு முன்னர் தனது வீட்டாருக்குத் தெரி யாமல் - கோண்டாவிலில் உள்ள காதலனின் வீட்டுக்கு ஓடிவந்துவிட்டார் காதலி. மட்டக்களப் பிலுள்ள யுவதியின் பெற்றோர் தமது மக ளைக் காணாது தேடி அலைந்தனர். எப்படியோ - மகள் யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்ட விடயம் அவர்களுக்குத் தெரிய வந்துவிட்டது. உடனே அவர்கள் விடயத்தை அங்குள்ள பொலீஸாருக்குத் தெரியப்படுத்தினர். மட்டக்களப்புப் பொலீஸார் கோப்பாய் பொலீஸாருடன் தொடர்புகொண்டு விடயத் தைக் கூறினர். கோப்பாய்ப் பொலீஸார் பிரஸ்தாப யுவதி யைப் பிடித்து மட்டக்களப்புக்கு அவளது பெற் றோரிடம் அனுப்பிவைப்பதற்காக கடந்த வியா ழக்கிழமை கோண்டாவில் உள்ள இளைஞ னின் வீட்டுக்குச் சென்றனர். ...ஐயையோ ஈ-மெயில் காதலி பொலீஸா ரிடம் சிக்கிவிட்டாரோ என்று நீங்கள் அங் கலாய்ப்பது தெரிகிறது. அதுதான் இல்லை... மட்டக்களப்பில் உள்ள தனது பெற்றோருக்குக் கொடுத்ததைப் போல கோப்பாய்ப் பொலீஸாருக்கும் ஷடிமிக்கி| கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார் யுவதி.ஏமாற்றத்துடன் பொலீஸார் திரும்பிச்சென்றுவிட்டனர். தொடர்ந்தும் விசார ணைகள் நடக்கின்றன. இ;வ்வளவுதான் விடயம்... என்ன சுவாரஸ்யமாக இருந்ததா உதய னின் காதல் செய்தி...? அப்படியானால் ஒரு நன்றி...! Uthayan - vasanthan - 02-15-2005 இன்ரநெற் காலத்தில உது சகஜமப்பா! என்னதானிருந்தாலும் சின்னப்புவினதும் சின்னாச்சியினதும் றொக்கேற்காதல்(கொப்பிப்பேப்பரில்செய்து விட்டது) அந்தகாலத்தில பெரிய விசயமப்பா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|