![]() |
|
இது போராடும் பூமி... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இது போராடும் பூமி... (/showthread.php?tid=5246) |
இது போராடும் பூமி... - hari - 02-15-2005 <span style='color:red'>இது போராடும் பூமி... புலிகளின் காலம்... பிரபாகரன் வழிகாட்டி.!</span> புதுவை இரத்தினதுரை (சித்திரை 1994) இன்றும் எங்கள் வானத்தில் வெள்ளிநிலவு பாலை அள்ளித்தான் சொரிகிறது விண்மீன்கள் கண்தூங்கவில்லை இலுப்பைமரம் பூத்துக் கொட்டுகிறது ஆழக்கிணறேதும் ஊற்றடைத்துப் போகவில்லை. குண்டும் குழியுமான பாதையெனிலும் இன்றும் பயணம் நடக்கிறது இது தமிழீழம் எல்லாம் நடக்கும் விஜேதுங்காவுக்கு ஒரு வினா உன்னால் முடியுமா தம்பி? எங்களுக்கு வித்தே வேண்டாம் நாங்கள் வேரிலிருந்தே முளைவிடும் சாதி எங்களைக் கூட்டிக்குவித்து தீயிடு மறுநாள் சாம்பலிலிருந்து பிறப்போம். வெட்டிச் சரித்துப் புதைத்திடு மூன்றாம் நாள் எங்கள் முகம் தெரியும் இது தமிழ்ச்சாதி இங்கே குண்டு சுமந்து வானூர்தி வட்டமிடும் குழிகள் தேடி எவரும் ஓடுவதில்லை போட்டுவிட்டு "புக்காரா" போகும் புழுதியைத் தட்டிவிட்டு அந்த இடத்திலேயே மீண்டும் பாய்விரிப்போம் சிதறிப்போன சுவரின் கற்களை எடுத்தே அடுப்பு மூட்டி சமையல் தொடங்குவோம். விஜேதுங்கா! என்னடா பொடியா செய்யப் போகிறாய்? இது தமிழ்சாதி தீக்குளித்தும் தோல்கருகாச் சாதி கண்களினால் சுவாசித்து மூக்கினால் பார்க்கும் வித்தியாசமானவர்கள் மலைகளில்லையென்று நாங்கள் தளரவில்லை ஆறுகளில்லையென்று அந்தரித்துப் போகவில்லை ஆழக் கிணறுவெட்டி நீரள்ளிக்குடிகின்றோம் ஆக மூன்றுமாதங்களே இங்கு மழைபொழியும் என்றாலும் பச்சை நிறத்தில் தான் எங்கள் மண் பாவாடை கட்டியுள்ளது இது தமிழ்சாதி தெருப்புழுதியில் கயிறு திரித்து தேரிழுக்கும் சாதி அப்பு விஜேதூங்கா! என்னசெய்யும் உத்தேசம் படைகளை நடத்தி தடகளப் போட்டியா? நல்லது நாளை சந்திப்போம். வெற்றிக் கிண்ணத்துடன் பேசுவோம். எதிரியை வாவென்று கடிதம் எழுதியாச்சு தமிழனே! நீ என்ன செய்கின்றாய். பூச்செடிகளுக்கு முள்ளும் பறவைகளுக்குச் சொண்டும் மிருகங்களுக்குக் கொம்பும் ஏன் கொடுக்கப்பட்டது? போராட வழங்கிய போர்க்கருவிகள் அவை. "அழிக்கவருபவனை அழித்துவிடு" கீதையின் சாரமே இதுதான். நிமிர்ந்து நிற்பவையே நிலைக்கும் விழுந்து கிடப்பன யாவும் மிதிக்கப்படும் தலை நிமிர்ந்த பனைகளைத் தறிக்கக்கூடாது சட்டமே வந்துவிட்டது ஆனால்... முல்லைக்கொடியை மிதிக்கக் கூடாது என்று ஏன் எவரும் குரலெழுப்பவில்லை? காலில் விழுந்து கிடப்பவைகளை எவரும் கணக்கெடுத்துக் கொள்வதில்லை அதனால் தான். மனிதர்களுக்கும் இது பொருந்தும். தமிழனே! மணிமுடிதரித்த உன் தலையில் வெய்யிலுக்குத் தொப்பி போடவும் வெட்கப்படுகின்றாய் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் உலாவந்தவனே! அச்சுமுறிந்த சைக்கிள்தானும் உன்னிடம் இல்லையா? ஊருக்கெல்லாம் துணி நெய்து கொடுத்தவனே! கோமணத்துண்டுக்கும் வழியற்றுப் போனாயா? வாழும் வழிகள் ஆயிரம் சொன்னவனே! ஆளும் உரிமையை மட்டும் யாரிடம் கொடுத்தாய்? கொம்பும், முரசும், பேரிகையும் எங்கே? கவசமும், வேலும், கைவாளும் எங்கே? இவற்றையெல்லாம் எறிந்துவிட்டு அன்னதானமடத்தில் என்னடா செய்கிறாய்? இந்தமண்ணில் உனக்கொரு வரலாறு வேண்டும். இருந்தாய், வாழ்ந்தாய் என்பதற்கு அடையாளம் வேண்டும். உன் தலைமுறைக்கு ஒரு சரித்திரம் இருக்கட்டும். உயிர் என்ன உயிர். அதைக்காட்டு பார்க்கலாம். உருவமற்ற ஒன்றுக்காக ஏன் அச்சப்படுகின்றாய் எத்தனை காலம் வாழ்ந்தாய் என்பதில் பெருமை கிடையாது எப்படி வாழ்ந்தாய் என்பதே மகிமைக்குரியது . குறவணன் புழுவும், கும்புடுபூச்சியும் கூட பூமியில்தான் வாழ்கின்றன. யார்தான் கணக்கில் எடுத்தார்கள்? போருக்கு வாவென்று எதிரிக்குக் கடிதம் போட்டாச்சு நீ புறப்படு. பீளைசாறிய கண்களைத் திறந்துபார் பாயைச் சுருட்டி அசைவிலேபோடு தாயிடம் விடைபெறு உன் தங்கை எங்கே? உனக்குமுன் அவள் களத்துக்குப் போய்விட்டாள் வெளியே பார் வெய்யில் அடிக்கிறது இது போராடும் பூமி... புலிகளின் காலம்... பிரபாகரன் வழிகாட்டி. - sinnappu - 02-15-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><img src='http://img32.exs.cx/img32/5233/thalaivarrrrrrrrrrrrrrrrrrrrrr.jpg' border='0' alt='user posted image'> 1000 மாவது கருத்து எம் தேசம் சம்மந்தமான கருத்து வாழ்த்துக்கள் - tamilini - 02-15-2005 நன்றி அண்ணா கவிதையை இணைத்தமைக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-15-2005 கவிதைக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வியாசன் - 02-15-2005 கவிதையை இணைத்தமைக்கு என் நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-15-2005 நன்றி கவிதைக்கு மன்னா - shanmuhi - 02-15-2005 கவிதையை இணைத்தமைக்கு என் நன்றிகள் |