Yarl Forum
காக்க வைத்தபின்பே புலிகளின் முக்கியஸ்தர்கள் வன்னி செல்ல ... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: காக்க வைத்தபின்பே புலிகளின் முக்கியஸ்தர்கள் வன்னி செல்ல ... (/showthread.php?tid=5223)



காக்க வைத்தபின்பே புலிகளின் முக்கியஸ்தர்கள் வன்னி செல்ல ... - Vaanampaadi - 02-16-2005

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் காக்க வைத்தபின்பே புலிகளின் முக்கியஸ்தர்கள் வன்னி செல்ல அனுமதி

கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், நேற்று திங்கட்கிழமை காலை வன்னி திரும்புவதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது கசப்பான அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

தரை வழியாக வன்னிக்குச் செல்வதற்காக கேணல் ரமேஷ், விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, நகுலன், அன்புமணி உட்பட 22 புலிகள் காலை 10.15 மணியளவில் கறுத்தப்பாலம் ஊடாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் வந்தனர்.

இவர்களது பயணம் பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக அவ்விடத்தில் காக்க வைக்கப்பட்ட பின்பே வன்னிக்காக பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.

வாகனமில்லை, அனுமதி வரவில்லையெனக் கூறி இவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

கண்காணிப்புக் குழுவினர் படை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் தொடர்பு கொண்ட பின்பே, நண்பகல் 12 மணியின் பின்னர் இவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

படையினரின் இந்தச் செயல் குறித்து புலிகள் தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thinakural