![]() |
|
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி விட்டன - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி விட்டன (/showthread.php?tid=5225) |
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி விட்டன - Vaanampaadi - 02-16-2005 மீட்புப் பணிகளுக்காக வந்த அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் முற்றாக வெளியேறி விட்டன ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக ளுக்காக இலங்கைக்கு வந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டி~; படைகள் நாட்டைவிட்டு முற் றாக வெளியேறிவிட்டன. கனேடியப் படையினர் நேற்றுமுன்தினம் வெளியேறியிருந்தனர். எஞ்சி யிருக்கும் இந்தியா ஆஸ்திரியா பெல்ஜியம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா போன்ற நாடு களைச் சேர்ந்த படையினர் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியேறிவிடுவர் என்கிறார் இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரத்னநாயக்க. இதுபற்றி கருத்துத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியதாவது:- மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் படையினர் தாம் ஏற்ற பணிகளைத் துரிதமாகச் செய்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். இவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக் கின்றோம். எஞ்சியிருக்கும் ஏனைய நாட்டுப் படையி னர் தாம் பொறுப்பேற்ற பணிகள் முடிவுறாத தன் காரணமாக இன்னும் வெளியேறாமல் இருக் கின்றனர். அவர்களின் பணிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் முடிந்துவிடும். இந்தியாவைச் சேர்ந்த 80 படையினர் பாகிஸ் தானைச் சேர்ந்த 75 படையினர் உட்பட மொத் தம் 345 பேர் மட்டுமே இங்கு எஞ்சியுள்ளனர்- என்றார் அவர். Uthayan |