![]() |
|
அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு அதிசயங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு அதிசயங்கள் (/showthread.php?tid=5224) |
அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு அதிசயங்கள் - Vaanampaadi - 02-16-2005 கடல்கோளின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம் அம்பாறை மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் அதிசயங்கள் பல ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதனால் மக்கள் பீதியுடனும், பரபரப்புடனும் காணப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக கல்முனை, காரைதீவு பிரதேசங்களில் மாமரங்களில் இருந்து தேன் வடிந்து கொண்டிருக்கின்றது. எஸ்.எம். சுபைர் என்பவரது வீட்டிலும் காரைதீவில் மாணிக்கம் வல்லிபுரம், சாமித்தம்பி வேல்முருகு என்பவர்களது வீட்டிலுள்ள மாமரங்களிலிருந்தே தேன் வடிந்து கொண்டிருக்கின்றது. இம்மாமரங்களில் மழைத்தூறல்களைப் போல் காலை, பகல் நேரத்தில் தேன் தூறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. பூத்தமரம், பூக்காத மரம் என பல மாமரங்களில் இருந்து இத் தேன் வடியும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனை பார்ப்பதற்கென்றே தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. அத்தோடு, அண்மையில் மருதமுனை, கல்முனைக் குடியேற்ற பகுதிகளில் கிணற்றுநீர் கொதித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் நிலம் வெடித்து அதிலிருந்து நீரும் வெளியேறியது. இவை தவிர சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த மாபிள் தள ஓடுகள் மூன்று, நான்கு அடி உயரத்துக்கு மேலெழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்களை இரவு நேரத்தில் வெள்ளைச் சேலை கட்டிய நீண்ட தலைமுடி கொண்ட ஒருபெண் மக்களோடு கதைத்து திரிவதாகவும், அவர் பின்னர் மறைந்து வருவதாகவும் அங்குள்ளவர்களில் சிலர் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். Thinakural - Thaya Jibbrahn - 02-16-2005 இந்த விடயங்களில் எந்தளவு தூரம் உண்மையுள்ளது. மாமரத்தில் தேன் வடிவது போன்ற விடயங்கள் மற்றவர்களால் பார்த்து உண்மை உணரக்கூடியது. மற்றைய விடயங்கள் தனிநபர்களின் கட்டுக்கதைகளாகவும் இருக்கலாம் அல்லவா? எப்பொருள் யார் யார் வாய்கேப்பினும் அப்பொருள்ள மெய்ப்பொருள் காண்பதறிவு- - KULAKADDAN - 02-16-2005 Quote:KULAKADDAN
- kavithan - 02-17-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - vasisutha - 02-17-2005 Quote:பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்களை இரவு நேரத்தில் வெள்ளைச் சேலை கட்டிய நீண்ட தலைமுடி கொண்ட ஒருபெண் மக்களோடு கதைத்து திரிவதாகவும், அவர் பின்னர் மறைந்து வருவதாகவும் அங்குள்ளவர்களில் சிலர் கூறுகின்றனர். ஓ என்ன சொல்ல வருகினம் அது பேயென்றா அல்லது அம்மன் என்றா?வெள்ளை உடுப்போட வந்ததால பேயாத்தான் இருக்கும். அது என்ன பேய் எல்லாம் வெள்ளை உடுப்போட தலைமுடியை விரிச்சு போட்டு வருகினம்??பாவங்கள் பேய்கள் வேற நல்ல உடுப்புகளும் நல்ல சீப்பு ஒன்றும் எடுத்துக் குடுங்கப்பா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 02-17-2005 பேயள் மட்டும் இன்னமும் பழைய கலாச்சாரத்திலையே நிக்குதுகள் ஒரு டீசன் டிசுப்பிளின் மொடர்ண் தெரியாததுகள் எப்பபாத்தாலும் வெள்ளை உடுப்பும் தலையை விரிச்ச படியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-17-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |