| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 334 online users. » 0 Member(s) | 331 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,208
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பிடிவாதம் பற்றி சில பொன்மொழிகள் |
|
Posted by: Rasikai - 09-06-2005, 01:40 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (9)
|
 |
<b>[b]பிடிவாதம் பற்றி சில பொன்மொழிகள்</b>
பிடிவாதமும் கருத்துக்களை வெளியிடுவதில்
வேகமும் முட்டாள்தனத்தின் நிச்சயமான
நிரூபணங்களாகும்.
-பேகன்
பிடிவாதமானவன், கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.
மாறாக, அவையே அவனைப் பிடித்திருக்கின்றன.
|
|
|
| கிளிநொச்சியில தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு |
|
Posted by: SUNDHAL - 09-06-2005, 01:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
கிளிநொச்சி மாவட்டம், நாலாம் வாய்க்கால், மருதநகர் பகுதியில் பல்லாயிரம் ஆண்டு காலம் பழமை வாய்ந்த தொல்லியல் சான்றுகள் தமிழீழ அரும்பொருள் காப்பகத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
விசுவநாதன் என்பவரது காணியில் புதிதாக கிணறு வெட்டிக் கொண்டிருக்கும் போது மட்பண்டங்கள் தெரியத் தொடங்கியதை அடுத்து, இவ்விடயத்தை தமிழீழ அரும்பொருள் காப்பகத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து தமிழீழ அரும்பொருள் காப்பக பொறுப்பாளர் திரு. ஆதித்தவர்மன், தொல்லியல் ஆர்வலர் திரு.ந.குணரட்ணம் மற்றும் தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. இளங்குமரன் ஆகியோர் அங்கு விரைந்து காலையில் இருந்து மாலை வரை நடாத்திய ஆய்வில் இருந்து நான்கு கால்களையுடைய கருங்கல் அம்மி, சுடுமண்ணினால் ஆன மட்பாண்டங்கள் சமையல் பாத்திரங்கள் முன்னோர் பாவித்த மணிகள் அணிகலங்கள் என பல பொருட்களை மீட்டனர்.
இவ்வாறு எமது பிரதேசங்கள் எங்கும் தொல்பொருள் சான்றுகள் உள்ளதால் அவற்றை காணும் மக்கள் தமிழீழ அரும்பொருள் காப்பகத்திற்கு அறியத்தருமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
|
|
|
| பதவி வரும் போது.... |
|
Posted by: MUGATHTHAR - 09-06-2005, 10:54 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
நண்பர் ஒருவர் மிகவும் முகவாட்டத்துடன் காணப்பட்டார். காரணம் கேட்ட போது, அவருடன் ஒன்றாகப் படித்த பள்ளித் தோழன்(ர்) தற்போது மிக உயர்ந்த பதவியில் இருப்பதாக அறிந்து, அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார். ஒரு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின்னும், அறிமுக அட்டையை உள்ளே கொடுத்தனுப்பிய பின்னும், அழைப்பு வராததால் மனம் சோர்ந்து போய் இருந்திருக்கிறார். பின்னர் அழைக்கப்பட்டு உள்ளே சென்றவர், பழைய பள்ளி நாட்களையும் அந்த நாட்களின் சம்பவங்களையும் பற்றிப் பேச ஆரம்பிக்க அந்த அதிகாரி உடனே அப்பேச்சை விரும்பாத முகபாவத்துடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பட்டும் படாமலும் பேசி, அவரை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தாராம். இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் நண்பர்.
இன்னொரு நண்பர். அவருடன் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கிப் படித்தவருடன் அந்த இரண்டாண்டுக் காலமும் நல்ல நட்பு இருந்தது. ஆனால், படிப்பை முடித்தவுடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லை. எங்காவது கண்டால் மட்டுமே சில முகமன்கள். விசாரிப்புகள்.. அவ்வளவு தான். அதே நண்பர் இவருக்கே மிகப் பெரிய மேலதிகாரியாக வர நேர்ந்த போது, இவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏதோ தனக்கே அப்பதவி கிடைத்தது போல் மகிழ்ந்து போனார். இவரை மற்றவர்கள் பார்த்த பார்வையும், விதமும் மாறிப்போனது. அந்த அதிகாரியிடம் சிபாரிசு செய்யச் சொல்லி ஏகப்பட்ட நச்சரிப்புகள். ஆனாலும், இவர் நண்பராக அவரைச் சென்று பார்த்து விட்டு வரவில்லை. தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அடுத்து கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நின்று விட்டு வாழ்த்தி விட்டு வந்ததோடு சரி. தனக்காக எதையும் அவரிடம் கேட்கக் கூடாது என்ற பிடிவாதம் (வைராக்கியம் என்று கூடச் சொல்லலாம்).
இவ்வளவு ஆண்டுகளும் ஆத்மார்த்தமான சிநேகத்துடன் தொடர்பு வைத்திருந்தால், இப்போதும் அதே நட்புடன் சென்று பார்ப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால், இருபது வருடங்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது போய் ஒட்டிக் கொள்வது தவறு. அது `காரிய நட்பு' என்று இவர் வியாக்கியானம் பேசுவார். இப்போதும் இவர் யாரிடமும் அந்த அதிகாரியின் கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசுவது இல்லை. நம்பமுடியாத உண்மை இது. மனிதர்களில் தான் எத்தனை ரகம்?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல காலகட்டங்கள் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்தின் போதும், அந்தந்த வயதிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நட்பு வட்டமும், உறவு வட்டமும் ஏற்படுவது இயல்பு. பள்ளிப் பருவத்தின் போது மிகவும் அந்நியோன்யமான நட்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆனால், கல்லூரி வாழ்க்கையில் நெருக்கமான நட்பும், பகிர்தலும் அவசியமாகப் போகிறது. பெற்றவர்களிடமும், உடன் பிறந்தவர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பல மன உளைச்சல்களையும், அந்தப் பருவத்திற்கேயுரிய படபடப்புகளையும் நண்பர்களிடம் தான் மனம் திறந்து பேச முடியும். கல்லூரி நட்பு சிலசமயம் தொடரும். பல சமயம் விட்டுப்போகும். வேலையில் சேர்ந்த பின்னர் புதிய நட்பு வட்டம் ஏற்படுகிறது. இதில் `பழையன கழிதலும், புதியன புகுதலும்' இயல்பு தானே! அதனால் நம் வாழ்க்கையில் நமக்குப் பரிச்சயமான எல்லோருக்கும் `செய்வது' என்பது எப்படி சாத்தியமாகும்? பெரிய பதவியுயர்வு கிடைத்ததைக் கேட்டு ஆனந்தமடைவதற்குப் பதில் வருத்தமாக இருந்தார் ஒருவர். காரணம், இனி நிறையப் பேரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள நேருமே என்பது தான். நம் மக்கள் இலேசுப்பட்டவர்களா என்ன? யாரைப் பிடித்தால் எதை, எப்படி சாதிக்கலாம் என்று தானே அலைந்து கொண்டிருக்கிறார்கள்? தன் நண்பர் மிகப்பெரிய பதவியில் இருக்கிறார் என்பதால் விடாமல் அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அவரால் பல பயன்களை அடைய முடியும் என்ற இலாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்துப் பழகுகிறார்கள்.
இப்படி நிழல் போல் அவரைத் தொடர்பவர்கள் அவரது பதவிக்குச் சோதனை வரும் போதும், சங்கடம் ஏற்படும் போதும் தன்னை அவருடன் இணைத்துக் கொண்டால் ஏதாவது சிக்கல் வரலாம் என்று கற்பனை செய்து கொண்டு அவருடன் பழகுவதைக் கத்தரித்துக் கொள்கின்றனர். அவருக்கு அப்போது ஆறுதல் சொல்லவோ அல்லது பக்கபலமாக இருந்து தைரியமும், நம்பிக்கையும் தருவதற்கோ அவர்கள் முன்வருவதில்லை. அந்தச் சமயத்தில் தான் உண்மையாகப் பழகியவர்கள் யார்? காரியவாதிகள் யார்? கபடவேடதாரிகள் யார்? என்று அந்த நபருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பு உண்டு. இப்படி ஒதுங்கிக் கொள்பவர்கள், அவர் மீது சாட்டப்பட்ட பழி நீங்கினாலோ அல்லது அவருக்கு மீண்டும் நல்ல பதவி கிடைத்தாலோ கிஞ்சித்தும் நாணமின்றி வந்து ஒட்டிக் கொள்ள முயல்வது தான் வேடிக்கை.
நமக்கு ஓரளவே தான் பழக்கமானவர் என்றாலும் கூட அவர் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை அல்லவா? செய்யாவிட்டால் தூற்றுகிறார்கள். ஓர் அதிகாரிக்கோ, அரசியல் தலைவருக்கோ, கல்லூரி தாளாளருக்கோ எவ்வளவு பேரைத் தெரியுமோ- அவர்களுக்கு எவ்வளவு நெருங்கிய அல்லது ஒன்றுவிட்ட, விடாத சொந்தங்கள் இருக்குமோ அவ்வளவு பேருக்கும் செய்ய முடியுமா? சங்கடத்தையும், விரோதத்தையும் தவிர்க்கத்தான் அவர்கள் யாருடனும் சட்டென்று பழகுவதில்லை. உதவி கேட்பதில்லை. சிறு உதவி செய்யத் தவமாய் தவமிருந்து, சந்தர்ப்பம் கிட்டாதா எனக் காத்திருந்து, வலிந்து சென்று உதவி விட்டுப் பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாக ஏதாவது கேட்டு வைப்பர்.
`பதவி கிடைத்ததும் மனிதர் மாறிவிட்டார். முன்பு போல் நன்றாகப் பழகுவதில்லை. நல்ல வாய் வார்த்தைக்குக் கூடவா பஞ்சம்?' என்றெல்லாம் விபரம் புரியாதவர்கள் அங்கலாய்க்கிறார்கள். கொஞ்சம் இறங்கி வந்து பழகினால், தோள் மீது கை போட்டுக் கொள்வார்களே! இந்த எச்சரிக்கை உணர்வுதான், அவர்கள் மனிதிற்குள் மணியடித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு சம்பவம். ஓர் அதிகாரியைப் பார்ப்பதற்காக, அவர் வீட்டு வரவேற்பறையில் மஞ்சள் பையுடன் மணிக்கணக்காகக் காத்திருந்தார் ஏழ்மைக் கோலத்தில் இருந்த ஒருவர். அவர் ஏதோ, பண உதவி கேட்கத்தான் வந்திருக்கிறார் என நினைத்து அவரை அழைக்கத் தயங்கி காலம் கடத்தினார் அந்த மனிதர். `மஞ்சள் பையும்' அடமாக அமர்ந்திருக்க வேறு வழியின்றி உள்ளே அழைத்தார். வந்தவரோ பணம் எதுவும் கேட்கவில்லை. தன் பெண்ணின் திருமண அழைப்பைக் கொடுத்தபோது, அந்த அதிகாரியின் நிலை எப்படி இருந்திருக்கும்? ஆனால், அந்தக் குற்ற உணர்ச்சி சிறிது நேரம் தான் இருந்திருக்கும். அவர் என்ன மாறி இருக்கவா போகிறார்? அவர் கற்றுக்கொண்ட பாடம் தான் அவரை இவ்வாறு மாற்றியிருக்கும்.
சாதாரண நிலையில் உள்ள நாம், யாரிடமும் கொஞ்சம் சிரித்துப் பேசினாலும் வந்தது ஆபத்து. ஏதாவது உதவி கேட்டு (அதுவும் பெரிய நம் சக்திக்கு மீறிய உதவி) வந்து தொல்லை பண்ணுகிறார்களே! நம்மால் ஆகக்கூடிய நியாயமான உதவியாக இருந்தாலும் செய்து விட்டுப் போகலாம். தவறு ஒன்றுமில்லை. ஆனால், நாம் போய் வேறு ஒருவரைத் தொல்லை செய்ய வேண்டுமென்றால், அது சரியா? நமக்கே இப்படி என்றால் பிரபலங்கள் என்ன செய்வார்கள்? எனவே தான் போலியாகவாவது தன் முகத்தில் ஒரு கடுமையை வரவழைத்துக் கொள்கிறார்கள். ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டு, அந்த வளையத்திற்குள் எவரும் அத்துமீறி நுழைந்து விடாதபடி எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தேவையற்ற நச்சரிப்பும்
தொல்லையும் அவர்களின் இயல்பையே மாற்றி விடுகிறது.
யார் நமக்குச் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ அவருடைய வெற்றிக்கும், உயர்நிலைக்கும் நாம் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறோமோ என்று யோசித்துப் பார்த்தால், அவரைத் தொல்லை செய்ய மனம் வராது; மனச்சாட்சி கொஞ்சமாவது இடித்துரைக்கும். சிபாரிசுத் தொல்லை இல்லை என்றால் தகுதி மட்டுமே அரியணை ஏறும்.
Thanks-Thinakkural
|
|
|
| Three LTTE cadres killed, five injured in Vaharai |
|
Posted by: வினித் - 09-06-2005, 10:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Three LTTE cadres killed, five injured in Vaharai
[TamilNet, September 06, 2005 09:29 GMT]
Three Liberation Tigers cadres were killed when a group of armed men wearing military fatigues raided a sentry post at Kattumurivu inside Liberation Tigers controlled Vaharai area Tuesday morning around 8:45 a.m. Five cadres were injured in the raid, LTTE officials in Sampoor said. Meanwhile, SLA sources in Welikanda told local reporters that a 40 mm grenade launcher, four T-56 rifles, ten grenades, two claymore mines and three LTTE uniform kits were captured by the attackers, claiming that the raid was carried out by "Mangalan Master", a Karuna loyalist.
The LTTE officials alleged that the raid was carried out by a heavily armed group of Sri Lanka Army soldiers and said that the attackers retreated to the Sri Lanka Army garrison in Singapura, 3 km west of Kattumurivu which is located between Vaharai and Kathiraveli.
Liberation Tigers accuse the Sri Lanka army for employing Karuna loyalist cadres as paramilitary cadres in the remote interior villages on the Polannaruwa-Batticaloa border to carry out a proxy war against them in the east.
A paramilitary camp at Theevuchenai, an interior hamlet near the Batticaloa-Polannaruwa district border, in the SLA-held area of the Polonnaruwa district was exposed by the Sunday Leader, a Colombo-based English newspaper, in March this year.
The Sri Lanka army (SLA) spokesman in Colombo denied the Sunday Leader report.
A few days later, on 21 June, three paramilitary cadres of the Karuna Group, including 'Mangalan Master' were wounded in a predawn attack by gunmen suspected to be Liberation Tigers in Theevuchenai. The wounded paramilitary cadres were admitted to Polannaruwa Base Hospital.
There are sixteen SLA camps between Batticaloa and Welikanda – a distance of about 60 kilometres.
www.tamilnet.com
|
|
|
| மூளையைத் தூங்க விடாதீர்கள் |
|
Posted by: Rasikai - 09-06-2005, 12:38 AM - Forum: மருத்துவம்
- Replies (29)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>மூளையைத் தூங்க விடாதீர்கள்</b></span>
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3, புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க X சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
|
|
|
| சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள் |
|
Posted by: வினித் - 09-05-2005, 09:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஜே.வி.பி. ஆதரவு: உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 17:55 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை கைவிடுதல்,
சிறிலங்கா என்ற ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு,
2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தல்,
அமைதி முயற்சிகளில் நோர்வை அனுசரணையாளர் பங்களிப்பை மறுபரிசீலனை செய்தல்,
உள்ளிட்ட 12 நிபந்தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது.
1. ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. முன்னைய பொதுக்கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை அரசினூடாக மேற்கொள்ளப்படும் வகையில் புதிய செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது இதர கட்சிகளுடனும் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தன்னாட்சி அதிகார சபை உள்ளிட்ட எதுவித அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை அளிக்கும் வகையில் அப்பேச்சுகள் இருக்கக் கூடாது.
3. இனப்பிரச்சனைக்கு முன்வைக்கப்படுகிற எந்தத் தீர்வும் சிறிலங்கா என்கிற ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.
4. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறிலங்காவின் அரசியல் சாசனத்துக்கு ஏற்பில்லாத, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் அனைத்தையும் அதிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும்.
5. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அனுசரணையாளராக செயற்பட்டு வரும் நோர்வே தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்க சார்பாக செயற்பட்டு வருகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பணியில் கண்காணிப்புக் குழு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
6. தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளை முதன்மைப் பணியாகக் கொண்டு சிறிலங்காவில் மூவின மக்களும் எவ்வித அச்சமுமின்றி வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இம்மாகாணங்களில் அனைத்து ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகளும் செயல்படும் வகையில் பல கட்சி அரசியல் முறையை மீளவும் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
7. சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாராம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையானது சிறிலங்காவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடியது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையை நீக்குவதை முதன்மைப் பணியாக கொள்ள வேண்டும். இதை 2005 ஆம் ஆண்டு தொடங்க உள்ள 6 ஆவது அரசுத் தலைவரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே செயற்படுத்த வேண்டும்.
8. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரக் கொள்கையானது சமச்சீரான பொருளாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும்.
9. தேசியப் பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிற துறைமுகங்கள், விமான தளங்கள், பெற்றோலியக் கூட்டுத் தாபனம், அரச வங்கிகள், சிறிலங்கா மின்சார சபை உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நீர், கனிம வளங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கக் கூடாது. தனியார்மயமாக்கல் தொடர்பாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும்.
10. அனைவருக்குமான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குகிற முயற்சிகள் மற்றும் 1981-இல் கல்வி தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை கைவிட வேண்டும். கல்வி மேம்பாடு குறித்து புத்திஜீவிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது கருத்துகளை கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.
11. தேசிய உற்பத்திக்குப் பங்காற்றுகிற அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் உள்ளிட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜே.வி.பி. முன் வைக்கிற செயற்திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
12. சிறிலங்கா அரசின் வெளியுவுக் கொள்கையானது அணிசேரா கொள்கையாக இருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை குறிப்பாக தெற்காசிய பிராந்தியம் மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிற வகையில் இருக்க வேண்டும்.
ஜே.வி.பி.யின் இந்த நிபந்தனைகள் குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து எதுவித கருத்துகளும் வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஐந்து நாள் சீனப் பயணத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்சவும், ஜே.வி.பியினரும் பல சுற்று இரகசியப் பேச்சுக்களை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாட்டில் மேற்கொண்டனர்.
இந்த இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பான படங்களை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஊடகங்கள் அம்பலப்படுத்திய நிலையிலேயே ஜே.வி.பி. இன்று தனது நிபந்தனைகளுடனான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் தமக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட்டது குறித்து மிகக் கடும் கோபத்தில் இருக்கும் சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பியுடனான இந்த ரகசியப் பேச்சுகள் குறித்தும் அதிருப்தியில் இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
|
|
|
| 'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது' |
|
Posted by: AJeevan - 09-05-2005, 08:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050902100123singaporelion203.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது'</b>
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழியின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதாக சிங்கப்பூரின் கல்வியமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் கவலை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்கு தமிழை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அருகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பேசுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தக் கூற்றை ஆமோதிக்கும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் கருத்தரங்கின் ஏற்பாட்டாளரான வீ.ஆர்.பி. மாணிக்கம் அவர்கள், இலங்கை மற்றும் தமிழ்நாடு தவிர தமிழர் வாழும் ஏனைய நாடுகளில் தமிழின் புழக்கம் மிகவும் குறைந்து வருவதாகக் கூறுகிறார்.
சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கின்ற போதிலும், அங்கே ஆங்கில மொழியின் மோகம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் தமிழின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் மாணிக்கம் கூறுகிறார்</span>
-BBC tamil
|
|
|
| பிரபல பின்னணிப் பாடகர் ஹாரீஸுக்கு வந்த சோதனை..! |
|
Posted by: kuruvikal - 09-05-2005, 07:50 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
<b>வரதட்சணையை மீட்டுத் தரக் கோரி பாடகர் மீது மனைவி புகார்</b>
பிரபல பின்னணிப் பாடகர் ஹாரீஸ் ராகவேந்திராவுக்கு திருமணத்தின்போது கொடுத்த வரதட்ணைப் பணத்தையும், பொருட்கள், நகைகளையும் மீட்டுத் தருமாறு கோரி சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார்.
ஹாரீஸ் ராகவேந்திராவுக்கும், அவரது மனைவி உமாதேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரசவத்திற்காக மலேசியாவில் உள்ள தாய் வீட்டுக்கு போன உமா தேவி திரும்பவும் சென்னைக்கு வரவிலலை.
இதையடுத்த எனது மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கோரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் ஹாரீஸ் ராகவேந்திராவின் வீட்டில் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறி உமாதேவி பதில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா தேவி மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எங்களது திருமணத்தின்போது 50 பவுன் நகை, 15 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை எனது பெற்றோர் வரதட்சணையாக தந்தனர். அவற்றை என்னிடம் திருப்பித் தர ராகவேந்திரா மறுக்கிறார். அவற்றை மீட்டுத் தர வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் உமாதேவி.
இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்ஸ்தமிழ்.கொம்
|
|
|
|